என்னைப் பின்பற்றி வாருங்கள்
பிற்சேர்க்கை B: “தெளிவும், மிக்க விலையேறப்பெற்றதுமான சத்தியங்கள்”


பிற்சேர்க்கை B: ‘தெளிவும், மிக்க விலையேறப்பெற்றதுமான சத்தியங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“பிற்சேர்க்கை B,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

பிற்சேர்க்கை B

“தெளிவும், மிக்க விலையேறப்பெற்றதுமான சத்தியங்கள்”

கோட்பாட்டைக் குறித்த பரவலான குழப்பம், அல்லது தேவனின் நித்திய சத்தியத்தின் காலமான கடைசி நாட்களில் வரும்படியாக மார்மன் புஸ்தகம் ஆயத்தப்படுத்தப்பட்டது. நேபி முன்கண்டபடி, அந்த புஸ்தகத்தின் ஒரு பகுதி தெய்வீக நோக்கமானது, “[வேதாகமத்தின்] சத்தியத்தை நிறுவுவது,” நூற்றாண்டுகளாகத் தொலைந்து கிடந்த “தெளிவும், மிக்க விலையேறப்பெற்றதுமான காரியங்களை அறியவைப்பது” மற்றும் “எல்லா இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் தேவ ஆட்டுக்குட்டியானவர் நித்திய பிதாவின் குமாரன், உலகத்தின் இரட்சகர் என்று அறியவைப்பது” (1 நேபி 13:40).

மார்மன் புஸ்தகம் மதமாறுபாட்டின் காலத்தில் இழந்துபோன நித்திய சத்தியங்களை வெளிப்படுத்துகிறது மற்றும் வேதாகமத்தில் போதிக்கப்பட்ட பல சத்தியங்களுக்கு ஒரு இரண்டாம், தெளிவுபடுத்தும் சாட்சியை சேர்க்கிறது. இங்கே அந்த சத்தியங்களில் சில. நீங்கள் மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது இவற்றையும் பிற தெளிவும், மிக்க விலையேறப்பெற்றதுமான சத்தியங்களைத் தேடுங்கள்.

தெய்வம்

  • பரலோக பிதா, இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் தனித்தனி நபர்கள் ஆனால் நோக்கத்தில் ஒன்றானவர்கள் ( 3 நேபி 11:32, 36பார்க்கவும்).

  • உயிர்த்தெழுந்த கிறிஸ்து தொட்டுணரக்கூடிய சரீரம் கொண்டவர் (3 நேபி 11:10–17பார்க்கவும்).

தெய்வத்தைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 2 நேபி 31:6–8; ஏத்தேர் 12:41

இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தி

  • நமக்கு எவ்வாறு ஒத்தாசை செய்யவேண்டும் என்பதை அறிவதற்காக இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்கும் துன்பங்களுக்குமாக பாடுபட்டார் (ஆல்மா 7:11–13 பார்க்கவும்).

  • இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக நாம் பரிபூரணமாகலாம் (மரோனி 10:32–33பார்க்கவும்).

இரட்சகரின் பாவநிவித்தியைப்பற்றிய கூடுதல் வேதவசனங்கள்: 1 நேபி 10:6: 2 நேபி 2:6–9; யாக்கோபு4:11–12; மோசியா3:1–19; ஆல்மா34:8–16

இரட்சிப்பின் திட்டம்

  • ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி பரலோக பிதாவின் திட்டத்தின் ஒரு இன்றியமையாத பகுதியாகும் (2 நேபி2:22–27பார்க்கவும்).

  • சுயாதீனத்தை பிரயோகப்படுத்த உதவ நமக்கு எதிர்ப்பு தேவையாக இருந்தது (2 நேபி 2:11–16பார்க்கவும்).

  • நமது கிரியைகள் மற்றும் நமது இருதயத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப நாம் நியாயந்தீர்க்கப்படுவோம் (ஆல்மா 41:3–7பார்க்கவும்).

  • “அக்கினி மற்றும் கந்தக ஏரி” என்பது மனம்திரும்பாதவர்களின் துயரத்தின் குறியீடு (2 நேபி 9:16–19; மோசியா 3:24–27பார்க்கவும் ).

இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றிய கூடுதல் வேதவசனங்கள்: 2 நேபி 9:11–26; ஆல்மா 22:12–14; 34:31–35; 42:1–26

மதமாறுபாடு மற்றும் மறுஸ்தாபிதம்

  • பொல்லாப்பு மற்றும் அவநம்பிக்கை காரணமாகப் பெரும் மதமாறுபாடு நிகழ்ந்தது (மார்மன் 8:28, 31–41பார்க்கவும்).

  • வேதாகமத்தில் போதிக்கப்பட்டுள்ள சத்தியங்களை மார்மன் புஸ்தகம் நிலைநிறுத்துகிறது (1 நேபி 13:19–41; 2 நேபி 3:12பார்க்கவும் ).

  • கிறிஸ்துவின் சபை அவருடைய நாமத்திலேயே அழைக்கப்பட வேண்டும் (3 நேபி 27:3–9பார்க்கவும்).

மதமாறுபாட்டைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 1 நேபி 13:1–9, 24–29; 2 நேபி 27–28

மறுஸ்தாபிதத்தைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 1 நேபி 14:7–12; 22:7–11; 2 நேபி 3:7–24; 25:17–18

தீர்க்கதரிசிகளும் வெளிப்படுத்தலும்

  • எல்லா தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி கொடுக்கிறார்கள் (மோசியா 13:33–35பார்க்கவும்).

  • ஆவிக்குரிய சத்தியத்தைப்பற்றிய அறிவு பரிசுத்த ஆவியானவர் மூலம் வருகிறது (ஆல்மா 5:45–47பார்க்கவும்).

  • வேதாகமத்தில் தேவ வார்த்தைகள் அனைத்தும் அடங்கியிருக்கவில்லை (2 நேபி 29:10–13பார்க்கவும்)

  • நமது நாட்களிலும் தேவனின் வெளிப்படுத்தல்கள் நின்றுவிடவில்லை (மார்மன் 9:7–9பார்க்கவும்).

தீர்க்கதரிசிகளைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 1 நேபி 22:1–2; மோசியா 8:16–18; ஏலமன் 13:24–33

வெளிப்படுத்தலைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: யாக்கோபு 4:8; ஆல்மா 12:9–11; 17:2–3; மரோனி 10:5

ஆசாரியத்துவம்

  • ஆசாரியத்துவதைத் தரித்திருப்பவர்கள் உலக தோற்றம் முதற்கொண்டு அழைக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்பட்டவர்கள் (ஆல்மா 13:1–3பார்க்கவும்).

  • ஒருவர் சுவிசேஷத்தை பிரசங்கிக்க தேவனிடம் இருந்து அதிகாரத்தைப் பெற வேண்டும் (மோசியா 23:17பார்க்கவும்).

ஆசாரியத்துவத்தைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: மோசியா 18:17–20; ஆல்மா 13; ஏலமன் 10:7

நியமங்களும் உடன்படிக்கைகளும்

  • நித்திய ஜீவனை அடைய ஞானஸ்நானம் இன்றியமையாதது (2 நேபி 31:4–13, 17–18பார்க்கவும்).

  • முழுகுதல் மூலமே ஞானஸ்நானம் நடப்பிக்கப்பட வேண்டும் (3 நேபி 11:23–27பார்க்கவும்).

  • சிறு பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் நடப்பிக்கப்பட தேவையில்லை (மரோனி 8:8–12பார்க்கவும் ).

  • கிறிஸ்துவின் கட்டளைகளின்படி தகுந்த அதிகாரம் பெற்ற ஒருவரால் நியமங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும் (மோசியா 18:17–18; 3 நேபி 11:21–27; மரோனி 4:1பார்க்கவும்).

நியமங்களைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: மோசியா 18:8–17; 21:33–35; ஆல்மா 13:16; 3 நேபி 18:1–11; மரோனி 2–6; 8:4–26

உடன்படிக்கைகளைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 2 நேபி 11:5; மோசியா 5:1–9; ஆல்மா 24:17–18

திருமணமும் குடும்பமும்

  • கணவன்மார்களும் மனைவிமார்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும் (யாக்கோபு 3:5–7பார்க்கவும்).

  • பெற்றோர்கள் தேவனுக்குள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் (1 நேபி 7:1பார்க்கவும்).

திருமணத்தையும் குடும்பத்தையும்பற்றிய கூடுதல் வேதங்கள்: 1 நேபி 1:1; 2 நேபி 25:26; யாக்கோபு 2:23–28; ஏனோஸ் 1:1; மோசியா 4:14–15; 3 நேபி 18:21

கட்டளைகள்

  • அவருடைய கட்டளைகளை நிறைவேற்ற கர்த்தர் ஒரு வழியை நமக்கு ஆயத்தப்படுத்துவார் (1 நேபி 3:7 பார்க்கவும்).

  • நாம் அவருடைய கட்டளைகளைக் கைகொள்ளுவோமானால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பதாக வாக்குத்தத்தம் கொடுக்கிறார் (மோசியா 2:22–24பார்க்கவும்).

கட்டளைகளைப்பற்றிய கூடுதல் வேதங்கள்: 1 நேபி 17:3; 22:30–31; ஆல்மா 37:13, 35; 50:20