என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 2–8. மார்மன் 7–9: “நீங்கள் அங்கிருந்ததைப்போல நான் உங்களிடத்தில் பேசுகிறேன்”


“நவம்பர் 2–8. மார்மன் 7–9: ‘நீங்கள் அங்கிருந்ததைப்போல நான் உங்களிடத்தில் பேசுகிறேன்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“நவம்பர் 2–8. மார்மன் 7–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
மரோனி தங்கத் தகடுகளின் மேல் எழுதுதல்

மரோனி தங்கத் தகடுகளின் மேல் எழுதுதல்–டேல் கில்பர்ன்

நவம்பர் 2–8

மார்மன் 7–9

“நீங்கள் அங்கிருந்ததைப்போல நான் உங்களிடத்தில் பேசுகிறேன்”

பிற்காலங்களில் வாழுபவர்களுக்கு அவர்களுடைய பதிவேடு உணர்த்தும் என மார்மனுக்கும் மரோனிக்கும் விசுவாசமிருந்தது. மார்மன் 7–9,ஐ நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் கற்றுக்கொள்ளுவனவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவதென்பதைப்பற்றி உங்களுக்கு வருகிற எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஒரு துன்மார்க்க உலகத்தில் தனியாயிருப்பது எப்படியிருக்குமென்பதை மார்மனும் மரோனியும் அறிந்திருந்தனர். யுத்தத்தில் மரோனியின் தகப்பன் மரித்த பின்பும் நேபியர் அழிக்கப்பட்ட பின்பும் அவனுக்கு குறிப்பாக தனிமை மிக மோசமாக இருந்திருக்கக்கூடும். அவன் எழுதினான் “நான் மாத்திரம் மிஞ்சியிருக்கிறேன்”. “எனக்கு நண்பர்களோ, போவதற்கு இடமோ இல்லை” (மார்மன் 8:3, 5). காரியங்கள் நம்பிக்கையற்றதாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் இரட்சகரிடத்திலுள்ள சாட்சியிலும், “கர்த்தருடைய நித்திய நோக்கங்கள் தொடரும்” (மார்மன் 8:22) என்ற அவனுடைய அறிவிலும் மரோனி நம்பிக்கையைக் கண்டான். அந்த நித்திய நோக்கங்களில் முக்கிய பங்கு, இப்போது அவன் சிரத்தையோடு நிறைவுசெய்துகொண்டிருக்கும் பதிவேடான, ஒருநாள் “இருளிலிருந்து பிரகாசித்து” “கிறிஸ்துவின் ஞானத்திற்கு” அநேக ஜனங்களைக் கொண்டுவரும் பதிவேடான மார்மன் புஸ்தகத்தால் நடைபெறும் என மரோனி அறிந்தான்(மார்மன் 8:16; 9:36). இந்த வாக்குறுதிகளில் மரோனியின் விசுவாசம், இந்த புஸ்தகத்தின் வருங்கால வாசகர்களுக்கு, “நீங்கள் அங்கிருந்ததைப்போல நான் உங்களிடத்தில் பேசுகிறேன்” மற்றும் “நீங்கள் என் வார்த்தைகளைப் பெறுவீர்கள், என்று நான் அறிந்திருக்கிறேன்” என அறிவிக்க அவனுக்கு சாத்தியமாக்கிற்று (மார்மன் 8:35; 9:30). இப்போது, நமக்கு அவனது வார்த்தைகளிருக்கின்றன, கர்த்தருடைய பணி பகுதியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது ஏனெனில் மார்மனும் மரோனியும் தனிமையிலிருந்தாலும் தங்களுடைய ஊழியத்திற்கு உண்மையாயிருந்தார்கள்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மார்மன் 7

இயேசு கிறிஸ்துவில் நான் நம்பிக்கை வைத்து அவருடைய சுவிசேஷத்தை “ஏற்றுக்கொள்ளவேண்டும்”.

மார்மன் 7ல் காணப்படுகிற மார்மனின் பதிக்கப்பட்ட கடைசி வார்த்தைகள், லாமானியர்களின் பிற்கால சந்ததியருக்கு கூறப்பட்டவை, ஆனால் நம்மனைவருக்குமான அவைகளில் சத்தியங்கள் அடங்கியிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் மார்மனின் செய்தி உங்களுக்கு என்ன போதிக்கிறது? அவனுடைய எழுத்துக்களை நிறைவுசெய்ய மார்மன் ஏன் இந்த செய்தியை தேர்ந்தெடுத்தான்?

மார்மன் 7:8–10; 8:12–22; 9:31–37

மார்மன் புஸ்தகம் மிகத் தகுதியானது.

தலைவர் ரசல் எம்.நெல்சன் கேட்டார்: “உங்களுக்கு வைரங்கள் அல்லது மாணிக்கங்கள் அல்லது மார்மன் புஸ்தகம் வழங்கப்பட்டால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? நேர்மையாக எது உங்களுக்கு மிகத் தகுதியாய் இருக்கிறது?” (“மார்மன் புஸ்தகம்: இது இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்?Ensign அல்லது Liahona, Nov. 2017, 61).

மார்மனும் மரோனியும் பாதுகாத்துக்கொண்டிருந்த பதிவேடு நமது நாளில் மிகத் தகுதியுள்ளதாக இருக்கும் என அறிந்திருந்தார்கள், ஆகவே இதை ஆயத்தப்படுத்தவும் பாதுகாக்கவும் அவர்கள் மிகுந்த தியாகங்களைச் செய்தார்கள். மார்மன் 7:8–10; 8:12–22; மற்றும் 9:31–37, நீங்கள் வாசிக்கும்போது. நமது நாளில் பதிவேடு ஏன் மிகவிலைமதிப்புள்ளதாக இருக்கிறதென்பதைக் கருத்தில் கொள்ளவும். 1 நேபி 13:38–41; 2 நேபி 3:11–12; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:16; 42:12–13ல் கூடுதலான உள்ளுணர்வுகளை நீங்கள் காணக்கூடும். மார்மன் புஸ்தகம் மிகத் தகுதியானதென அறிந்துகொள்ள என்ன அனுபவங்கள் உங்களுக்குதவின?

படம்
வெவ்வேறு மொழிகளில் மார்மன் புஸ்தகத்தின் நகல்கள்

மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளின் எழுத்துக்கள் நமக்கு பொருத்தமாயிருக்கின்றன.

மார்மன் 8:26–41; 9:1–30

நமது நாளுக்காக மார்மன் புஸ்தகம் எழுதப்பட்டது.

மார்மன் புஸ்தகம் வெளிவந்தபோது என்ன நடந்துகொண்டிருக்கும் என்பதை மரோனிக்கு இயேசு கிறிஸ்து காண்பித்தார் (மார்மன் 8:34–35 பார்க்கவும்), மேலும், மரோனி பார்த்தவை நமது நாளுக்கான தைரியமான எச்சரிக்கைகளைக் கொடுக்க அவனை நடத்தியது. மார்மன் 8:26–41 மற்றும் 9:1–30,ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் இந்த அணுகுமுறைகள் மற்றும் செயல்களுக்கான எந்த அடையாளங்களாவது இருக்கின்றனவா என சிந்திக்கவும். வித்தியாசமாக நீங்கள் என்ன செய்யமுடியும்?

உதாரணமாக, அவன் நமது நாளில் பார்த்த இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பரவலான நம்பிக்கை குறைபாட்டுக்கு பதிலாக மரோனியின் செய்தி மார்மன் 9:1–30ல் அடங்கியிருக்கிறது. பின்வருபவற்றைப்பற்றி அவனுடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பதிவுசெய்வதைக் கருத்தில்கொள்ளவும்:

  • கிறிஸ்துவை நம்பாமலிருப்பதன் விளைவுகள் (வசனங்கள் 1–6, 26)

  • வெளிப்படுத்தல் மற்றும் அற்புதங்களின் தேவனில் நம்பிக்கை வைப்பதின் முக்கியத்துவம் (வசனங்கள் 7–20)

  • நமக்காக மரோனியின் ஆலோசனை (வசனங்கள் 21–30)

பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் நெருக்கமாக மற்றவர்களைக் கொண்டுவர உங்களுக்குதவக்கூடிய எதை மரோனியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மார்மன் 7:5–7, 10; 9:11–14

பரலோக பிதாவின் திட்டத்தையும் நமக்கு ஏன் ஒரு இரட்சகர் தேவையாயிருக்கிறார் என்பதைப்பற்றியும் இந்த வசனங்கள் நமக்கு எதைப் போதிக்கின்றன?

மார்மன் 7:8–10

வேதாகமத்தில் நம்முடைய நம்பிக்கையைப் பெலப்படுத்த உதவிய, இந்த ஆண்டில் மார்மன் புஸ்தகத்தை படித்ததில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்க, ஆல்மா 7:11–13 மற்றும் ஏசாயா 53:3–5 அல்லது 3 நேபி 15:16–24 மற்றும் யோவான் 10:16 போன்ற, அதே மாதிரியான சத்தியங்களைப் போதிக்கிற மார்மன் புஸ்தகம் மற்றும் வேதாகமத்திலிருந்து சில வசனங்களை நீங்கள் ஒன்றுசேர்ந்து வாசிக்கலாம்.

மார்மன் 8:1–9

மரோனியைப்போல தனியாக இருப்பது எப்படி உணரப்பட்டிருக்கும்? அவன் நிறைவேற்றின பணியில் நம்மை எது கவர்கிறது?

மார்மன் 8:12, 17–21; 9:31

ஒரு குடும்பமாக இந்த வசனங்களை வாசிக்கவும். பின்னர், மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலன்ட்டின் பின்வரும் உரையை வாசிப்பதையும் கருத்தில் கொள்ளவும்: “பரிபூரணமான அவருடைய ஒரே பேறான குமாரனைத் தவிர பரிபூரணமில்லாத அனைவருடனும் தேவன் கிரியை செய்யவேண்டியதிருந்தது. … பரிபூரணமின்மையை நீங்கள் பார்க்கும்போது பணியின் தெய்வீகத்தில் வரையறையில்லை என்பதை நினைவுகூரவும்” (“Lord, I Believe,” Ensign or Liahona, May 2013, 94). மார்மன் புஸ்தகத்தை எழுதியவர்களையும் சேர்த்து மற்றவர்களிடத்திலுள்ள பரிபூரணமில்லாமையில் கவனம் செலுத்துதல் ஏன் அபாயகரமானது?

மார்மன் 8:36–38

இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன? இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அவன்மீது அல்லது அவள்மீது தரித்துக்கொள்ள சிலர் ஏன் வெட்கப்படக்கூடும்? இரட்சகரைப்பற்றிய நமது சாட்சிகளில் நாம் எவ்வாறு தைரியமாக இருக்க முடியும்?

மார்மன் 9:16–24

ஒரு விஞ்ஞான பரிசோதனை அல்லது சமையலை வெற்றிகரமாகச் செய்ய சில குறிப்பிட்ட பொருட்கள் தேவை. ஒரு குடும்பமாக மார்மன் 9:16–24ஐ வாசிப்பதற்கு முன்பாக ஒரு பரிசோதனையைச் செய்ய அல்லது பிடித்தமான உணவைத் தயாரிப்பதைக் கருத்தில் கொள்ளவும். வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது (குறிப்பாக வசனங்கள் 20–21), அற்புதங்களை சாத்தியமாக்குகிற அவசியமான “பொருட்களைத்” தேடவும். நம்மையும் நமது குடும்பத்தையும் சுற்றிலுமுள்ள உலகத்தில் என்ன அற்புதங்களை நம்மால் பார்க்கமுடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

அதிகாரப்பூர்வ சபை ஆதாரங்களைப் பார்க்கவும். உங்களுக்கு சுவிசேஷ கேள்விகளிருந்தால், பதில்களுக்கான சிறப்பான ஆதாரங்கள், ஜெபம், வேதங்கள், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள், பிற அதிகாரப்பூர்வ சபை வெளியீடுகள் (Teaching in the Savior’s Way, 17–18, 23–24 பார்க்கவும்).

படம்
மார்மன் தங்கத்தகடுகளை சுருக்கி எழுதுதல்

மார்மன் தகடுகளை சுருக்கி எழுதுதல்–ஜோன் மாக்நாட்டன்