என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 9–15. ஏத்தேர் 1–5: “அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி”


“நவம்பர் 9–15. ஏத்தேர் 1–5: ‘அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“நவம்பர் 9–15. ஏத்தேர் 1–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
வனாந்தரத்தின் வழியே யாரேதியர் பயணித்தல்.

யாரேதியர் பாபேலை விட்டுப் போகுதல்–ஆல்பின் வெசல்கா

நவம்பர் 9–15

ஏத்தேர் 1–5

“அவிசுவாசமென்னும் அந்த திரையைக் கிழி”

நேபியருக்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வந்தடைந்த யாரேதியரின் பதிவேடே ஏத்தேர் புஸ்தகம். இது நமது நாளுக்குப் பொருத்தமாயிருப்பதால், ஏத்தேரின் பதிவுகளை மார்மன் புஸ்தகத்தில் சேர்க்க தேவன் மரோனிக்கு உணர்த்தினார். உங்கள் வாழ்க்கைக்கு இது பொருத்தமானதென்பதை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நம்முடைய வழிகளைவிட தேவனுடைய வழிகள் மேலானவை என்பது உண்மையாயிருக்கும்போது, நாம் எப்போதும் அவருடைய சித்தத்திற்கு அடிபணியவேண்டும், நாமாக சிந்திக்கவும் செயல்படவும் அவர் நம்மை ஊக்குவிக்கிறார். அந்த ஒரு பாடத்தை யாரேதும் அவனுடைய சகோதரனும் கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, “பூமியின் மேலுள்ள சகல தேசங்களிலும் சிறந்த” ஒரு புதிய தேசத்திற்கு பயணமாகும் எண்ணம் யாரேதின் மனதில் தொடங்கியதாகத் தோன்றுகிறது, மற்றும் கர்த்தர் “மனதுருகி,” “நீ என்னிடத்தில் இதுவரைக்கும் நீண்ட நேரம் கூக்குரலிட்டதினிமித்தம், இதை நான் உனக்குச் செய்வேன்” எனச் சொல்லி கோரிக்கையை வழங்குவதாக வாக்களித்தார் (ஏத்தேர் 1:38–43 பார்க்கவும்). தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்களை எடுத்துச் செல்கிற தோணிகள் எவ்வளவு இருட்டாயிருக்கிறதென்பதை யாரேதின் சகோதரன் உணர்ந்தபோது, நாம் வழக்கமாக அவரைக் கேட்கிற “நான் என்ன செய்யவேண்டுமென நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டு ஒரு தீர்வை வழங்க கர்த்தர் அவனை அழைத்தார். (ஏத்தேர் 2:23). எல்லாக் காரியங்களிலும் தேவன் நமக்குக் கட்டளையிடுவார் என நாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதே செய்தி எனத் தோன்றுகிறது. நம்முடைய சொந்த சிந்தனைகளையும் எண்ணங்களையும் அவரோடு நாம் பகிர்ந்துகொள்ளலாம் மற்றும் அவர் செவிகொடுத்து உறுதியளிக்கிறார் அல்லது இல்லையெனில் நமக்கு ஆலோசனை வழங்குகிறார். சிலநேரங்களில் நாம் நாடுகிற ஆசீர்வாதங்களிலிருந்து நம்மை பிரிக்கிற ஒரே காரியம் நம்முடைய “அவநம்பிக்கையின் திரையே” மற்றும் அந்த திரையை நாம் “கிழிக்க முடியுமானால்,”(Ether 4:15) கர்த்தர் நமக்காக என்ன செய்ய வாஞ்சையாயிருக்கிறார் என்பதைப்பற்றி நாம் ஆச்சரியப்படலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 1:33–43

நான் கர்த்தரை நோக்கி கூக்குரலிடும்போது அவர் என்மீது மனதுருக்கமாயிருப்பார்.

ஏத்தேர் 1:33–43 யாரேதின் சகோதரனின் மூன்று ஜெபங்களைப்பற்றி கூருகிறது. இந்த ஜெபங்கள் ஒவ்வொன்றுக்கும் கர்த்தருடைய பதிலிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஜெபத்தில் நீங்கள் அவரிடத்தில் கூக்குரலிட்டபோது, கர்த்தருடைய மனதுருக்கத்தை அனுபவித்த ஒரு நேரத்தைப்பற்றி சிந்தியுங்கள். இந்த அனுபவத்தை நீங்கள் பதிவுசெய்து, உங்கள் சாட்சியைக் கேட்க விரும்புகிற ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள நீங்கள் விரும்பலாம்.

ஏத்தேர் 2; 3:1–6; 4:7–15

என்னுடைய வாழ்க்கைக்கான வெளிப்படுத்தலை என்னால் பெறமுடியும்.

தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்: “வெளிப்படுத்தலைப் பெறுவதற்கு உங்களுடைய ஆவிக்குரிய திறனை அதிகரிக்க நான் உங்களிடம் வேண்டுகிறேன். … பரிசுத்த ஆவியின் வரத்தை அனுபவிக்கவும், பரிசுத்த ஆவியின் குரலை மிக அடிக்கடியும் மிக தெளிவாகவும் கேட்கவும் தேவையான ஆவிக்குரிய பணியைச் செய்ய தேர்ந்தெடுக்கவும்” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or Liahona, May 2018, 96).

ஏத்தேர் 2; 3:1–6; மற்றும் 4:7–15,ஐ நீங்கள் படிக்கும்போது, தனிப்பட்ட வெளிப்படுத்தலை எவ்வாறு நாடுவதென்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்குதவும் என்ன சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? யாரேதின் சகோதரனுக்கிருந்த அக்கறைகளையும், அவைகளைப்பற்றி அவன் என்ன செய்தான் என்பதை ஒரு நிறத்திலும், கர்த்தர் அவனுக்கு உதவினார் மற்றும் அவருடைய சித்தத்தை எவ்வாறு அறியச் செய்தார் என்பதை மற்றொரு நிறத்திலும் நீங்கள் குறிக்கலாம். கர்த்தரோடு யாரேதின் சகோதரன் உரையாடிய விதத்தில் உங்களை எது கவர்ந்தது மற்றும் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தலின் பொழிவை எவ்வாறு அதிகரிப்பதென்பதைப்பற்றி இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

ஏத்தேர் 2:16–25

என்னுடைய “பெரும் ஆழத்தைக்” கடக்க கர்த்தர் என்னை ஆயத்தப்படுத்துவார்.

வாக்களிக்கப்பட்ட தேசத்தை வந்தடைய, “பெரும் ஆழத்தை”(ஏத்தேர் 2:25) கடத்தல் என்ற ஒரு பெரிய தடங்கலை யாரேதியர் எதிர்கொண்டனர். “பெரும் ஆழம்” என்ற சொற்றொடர் சிலசமயங்களில் நமது சோதனைகளையும் சவால்களையும் நாம் உணர்கிற விதத்தை விவரிக்க பொருத்தமான விதமாக இருக்க முடியும். சில சமயங்களில், யாரேதியர்களைப் போலவே, நம்முடைய சொந்த “பெரும் ஆழத்தை” கடந்து செல்வது நமக்கான தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரே வழியாகும். ஏத்தேர் 2:16–25ல் உங்கள் வாழ்க்கையின் ஒற்றுமைகளை நீங்கள் காண்கிறீர்களா? உங்கள் சவால்களுக்காக கர்த்தர் எவ்வாறு உங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்? வருங்காலத்தில் நீங்கள் செய்யவேண்டுமென அவர் விரும்புகிறதற்காக ஆயத்தப்படுத்த இப்போது நீங்கள் என்ன செய்யவேண்டுமென உங்களை அவர் கேட்கக்கூடும்?

ஏத்தேர் 3

தேவனின் சாயலில் நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன்.

சேலீம் மலையில் யாரேதின் சகோதரன் தேவனைப்பற்றியும் தன்னைப்பற்றியும் அதிகமானவற்றை அறிந்துகொண்டான். தேவனின் ஆவிக்குரிய மற்றும் சரீரத்துக்குரிய தன்மையைப்பற்றி ஏத்தேர் 3லிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்? உங்களுடைய தெய்வீக அடையாளம் மற்றும் திறனைப் புரிந்துகொள்ள எவ்வாறு இந்த சத்தியங்கள் உங்களுக்கு உதவுகிறது?

படம்
ஒரு பெண்ணும் இரண்டு பிள்ளைகளும் கடற்கரையில் விளையாடுதல்

நாம் அனைவரும் தேவனின் பிள்ளைகள்.

ஏத்தேர் 3:6–16

கர்த்தரைக் கண்ட முதல் நபர் யாரேதின் சகோதரனா?

யாரேதின் சகோதரனுக்கு முன்பே பிற தீர்க்கதரிசிகளுக்கு தேவன் தன்னைக் காட்டியிருந்தார் (உதாரணமாக, மோசே 7:4, 59 பார்க்கவும்), ஆகவே “மனுஷனுக்கு என்னை நான் என்றுமே காண்பித்ததில்லை” என கர்த்தர் அவனுக்கு ஏன் சொன்னார்? (ஏத்தேர் 3:15). மூப்பர் ஜெப்ரி ஆர் ஹாலன்ட் இந்த சாத்தியமான விளக்கத்தைக் கொடுத்தார்: “யாரேதின் சகோதரனுக்கு கிறிஸ்து சொன்னார், ‘மனுஷனுக்கு என்னை நான் இந்த வகையில் என்னுடைய விருப்பமில்லாமல், பார்ப்பவர்களின் விசுவாசத்தினாலே மட்டுமே இயக்கப்பட்டு என்றுமே காண்பித்ததில்லை’” (Christ and the New Covenant [1997], 23).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஏத்தேர் 1:34–37

மற்றவர்களுக்காக ஜெபித்தலைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? ஜெபத்தைப்பற்றி என்ன பிற சத்தியங்களை இந்த வசனங்கள் சித்தரிக்கின்றன?

ஏத்தேர் 2:16–3:6

நமது பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டுபிடிப்பதைப்பற்றி யாரேதின் சகோதரனின் எடுத்துக்காட்டு நமக்கு என்ன போதிக்கிறது? அவர்கள் எப்போது நாடினார்கள், கர்த்தரிடமிருந்து எப்போது பதில்களைப் பெற்றார்கள் என்ற அனுபவங்களை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

ஏத்தேர் 4:11–12

இந்த வசனங்களை வாசித்த பின்னர், குடும்ப அங்கத்தினர்கள் (திரைப்படங்கள், பாடல்கள், விளையாட்டுகள், அல்லது ஜனங்கள் போன்ற) உங்கள் குடும்பத்தைக் கவர்ந்த சில அன்றாட காரியங்களை துண்டுகாகிதங்களில் எழுதி அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கலாம். பின்னர் அவர்கள் முறைவைத்து, ஒரு காகிதத்துண்டை எடுத்து, அது “நன்மை செய்யுமாறு [அவர்களை]வற்புறுத்துகிறதா” (ஏத்தேர் 4:12) இல்லையா என கலந்துரையாடலாம். என்ன மாற்றங்களைச் செய்ய உங்கள் குடும்பத்தினர் உணர்த்தப்பட்டதாக உணருகிறார்கள்?

ஏத்தேர் 5

ஒரு பொருளை அல்லது சிற்றுண்டியை ஒரு பெட்டியில் நீங்கள் மறைத்துவைத்து, ஒரு குடும்ப அங்கத்தினரை அழைத்து உள்ளே பார்க்கும்படியாக சொல்லி, அது என்னவென்று யூகிக்க மீதியுள்ள குடும்பத்தினருக்குதவ தடயங்களைக் கொடுக்கவும். ஏத்தேர் 5ஐ ஒன்றுசேர்ந்து நீங்கள் வாசிக்கும்போது, அவருடைய பணியில் ஏன் கர்த்தர் சாட்சிகளைப் பயன்படுத்துவது முக்கியம் என கலந்துரையாடவும். மார்மன் புஸ்தகத்தைப்பற்றி நமது சாட்சியை மற்றவர்களிடத்தில் நாம் எவ்வாறு பகிர்ந்துகொள்ள முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

எப்போதும் தயாராயிருங்கள். “முறைசாரா போதித்தலின் தருணங்கள் விரைவில் கடந்து செல்கின்றன, ஆகவே, அவைகள் எழும்போது அவைகளை அனுகூலப்படுத்துவது முக்கியமானது. … உதாரணமாக, ஒரு கடினமான தீர்மானத்தை எடுக்கவிருக்கிற ஒரு குமரப்பருவத்தினன் தனிப்பட்ட வெளிப்படுத்தலை எவ்வாறு பெறுவதென்பதைப்பற்றி கற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கலாம்” (Teaching in the Savior’s Way, 16).

படம்
யாரேதின் சகோதரனுக்கு முன்பாக இயேசு பதினாறு கற்களைத் தொடுதல்

இதற்கும் அதிகமாய் நீ கண்டாயோ?– மார்கஸ் ஆலன் வின்சென்ட்