என்னைப் பின்பற்றி வாருங்கள்
நவம்பர் 16–22. ஏத்தேர் 6–11: “அந்தப் பொல்லாப்பு முற்றுப்பெற”


“நவம்பர் 16–22. ஏத்தேர் 6–11: ‘அந்தப் பொல்லாப்பு முற்றுப்பெற’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 2020

“நவம்பர் 16–22. ஏத்தேர் 6–11,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
கடலில் யாரேதியரின் கலங்கள்

ஆழங்களிலிருந்து நான் உங்களை மீண்டும் மேலே கொண்டு வருவேன்–ஜோனத்தான் ஆர்தர் க்ளார்க்

நவம்பர் 16–22

ஏத்தேர் 6–11

“அந்தப் பொல்லாப்பு முற்றுப்பெற”

யாரேதிய பதிவேட்டைப்பற்றி பேசும்போது, இந்தக் குறிப்பிலே எழுதப்படுகிற காரியங்கள் எல்லாவற்றையும் குறித்து சகல ஜனங்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது” (மோசியா 28:19) என மார்மன் குறிப்பிட்டான். நீங்கள் ஏத்தேர் 6–11 வாசிக்கும்போது, இதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கும் நீங்கள் நேசிப்பவர்களுக்கும் இவை ஏன் அவசியமானவை, அல்லது பிரயோஜனமானவை?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

யாரேதியர் அழிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப்பின், அவர்களது பூர்வகால நாகரீகத்தின் அழிவுகளை நேபியர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த அழிவுகளுக்கிடையே ஒரு ஆச்சரியமிக்க பதிவேடு இருந்தது, அது, “முழுவதுமாய் வரையப்பட்ட,” “பொன்னாலான” தகடுகள் (மோசியா 8:9). நேபிய இராஜாவான லிம்கியால், இந்தப் பதிவேடு முக்கியமானது என உணர முடிந்தது: “சந்தேகமின்றி இத்தகடுகள் மகா இரகசியங்களைக் கொண்டிருக்கின்றன,” என அவன் சொன்னான் (மோசியா 8:19). இன்று உங்கள் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அது ஏத்தேரின் புஸ்தகம் என்றழைக்கப்படுகிற பதிவேட்டின் சுருக்கமாக உங்களிடமிருக்கிறது. நேபியர் வாசிக்க “அளவுக்கதிகமாய் வாஞ்சையுள்ளவர்களாய் இருந்த” அதே பதிவேட்டிலிருந்தே அது வந்தது, அவர்கள் வாசித்தபோது, “அவர்கள் துக்கத்தால் நிரப்பப்பட்டார்கள், இருப்பினும் அது அவர்களுக்கு அதிக ஞானத்தைக் கொடுத்தது, அதனிமித்தம் அவர்கள் களிகூர்ந்தார்கள்” (மோசியா 28:12, 18). யாரேதியரின் எழுச்சி மற்றும் பரிதாபமான வீழ்ச்சியைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் அநேக துக்கமான தருணங்களை காண்பீர்கள். ஆனால் இந்த வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்பதன் மகிழ்ச்சியை தவற விடாதீர்கள். இருப்பினும் மரோனி எழுதியபடி, “இவைகள் உங்களுக்குக் காண்பிக்கப்பட வேண்டியது தேவனுடைய ஞானமாயிருக்கிறது” (ஏத்தேர் 8:23), ஏனெனில் யாரேதியரின் தோல்விகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் நாம் கற்க வேண்டுமானால், “பொல்லாப்பு முற்றுப்பெறவும், மனுபுத்திரரின் இருதயங்களின் மேல் சாத்தானுக்கு எந்த வல்லமையும் இல்லாத சமயம் வரவேண்டும்” (ஏத்தேர் 8:26).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஏத்தேர் 6:1–12

வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி கர்த்தர் என்னை நடத்துவார்.

அநித்தியத்தினூடே உங்கள் பயணத்துடன், கடல் கடந்த யாரேதியரின் பயணத்தை நீங்கள் ஒப்பிட்டால், நீங்கள் ஆவிக்குரிய உள்ளுணர்வுகளைப் பெறுவீர்கள். உதாரணமாக, யாரேதியரின் கலங்களிலிருந்த கற்களைப் போல உங்கள் பாதைக்கு ஒளிகாட்ட கர்த்தர் என்ன கொடுத்திருக்கிறார்? கலங்களையும் அல்லது “வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி வீசிய” காற்றையும் எது குறிக்கக்கூடும்?(ஏத்தேர் 6:8). பயணத்துக்கு முன்பும், பயணத்தின் போதும், அதன் பின்பும், யாரேதியரின் செயல்களிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி உங்களை கர்த்தர் எவ்வாறு வழிநடத்துகிறார்?

படம்
யாரேதியர் பிராணிகளுடன் பயணித்தல்

மினர்வா• கே. Teichert (1888–1976), Journey of the Jaredites across Asia, 1935, oil on linen on masonite, 35 x 48 inches. பிரிகாம் யங் பல்கலைக்கழக கலையருங்காட்சியகம்.

ஏத்தேர் 6:5–18, 30; 9:28–35; 10:1–2

நான் தாழ்மையாயிருக்கும்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிக்கிறார்.

பெருமையும் துன்மார்க்கமும் யாரேதிய வரலாற்றில் மேலோங்குவதாகத் தெரிந்தாலும் இந்த அதிகாரங்களில் தாழ்மையின் எடுத்துக்காட்டுகளும் உள்ளன, விசேஷமாக ஏத்தேர் 6:5–18, 30; 9:28–35; மற்றும் 10:1–2. பின்வரும் கேள்விகளை சிந்திப்பது, இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள உதவ முடியும்: இந்த சூழ்நிலைகளில் இந்த யாரேதியர் தங்களையே ஏன் தாழ்மைப்படுத்தினார்கள்? தங்கள் தாழ்மையைக் காட்ட அவர்கள் என்ன செய்தார்கள்? அதன் விளைவாக அவர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? சிலர் விஷயத்தில், அவர்களது சூழ்நிலைகளில் தாழ்மையாயிருக்க ஜனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பதைக் கவனிக்கவும். தாழ்மையாக இருக்க கட்டாயப்படுத்தப்படுவதைவிட, (மோசியா 4:11–12; ஆல்மா 32:14–18 பார்க்கவும்) கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாய் நடக்க விருப்பமுடன் நீங்களாகவே என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் (ஏத்தேர் 6:17).

Humility,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

ஏத்தேர் 7–11

நீதியான தலைவர்கள் தாங்கள் வழிநடத்தும் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்கள்.

ஏத்தேர் அதிகாரங்கள் 7–11 குறைந்தது 28 தலைமுறைகளை அடக்கியுள்ளது. இச்சிறு பகுதியில் அதிக விவரம் கொடுக்கப்பட முடியாவிட்டாலும், ஒரு மாதிரி விரைவாக எழுகிறது: நீதியான தலைமை ஆசீர்வாதங்களுக்கும் முன்னேற்றத்துக்கும் வழிநடத்துகிறது, துன்மார்க்க தலைமை சிறைத்தனத்துக்கும் அழிவுக்கும் நடத்துகிறது.

கீழே இந்த அதிகாரங்களிலுள்ள சில இராஜாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். தொடர்புடைய வசனங்களை வாசித்து, தலைமையைப்பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறை எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் என்ன கற்க முடியும் என பாருங்கள். அப்படிச் செய்யும்போது, உங்கள் வீட்டிலும், சமுதாயத்திலும், சபை அழைப்பிலும், பிறவற்றிலும் பிறரை வழிநடத்தவும் அல்லது செல்வாக்கு ஏற்படுத்தவும் சந்தர்ப்பங்களைப்பற்றி சிந்திக்கவும்.

ஏத்தேர் 8:7–26

இரகசிய சங்கம் என்றால் என்ன?

இருவர் அல்லது அதிகமானோர் தங்கள் துன்மார்க்க செயல்களை இரகசியமாக வைக்க சதிசெய்தால், அவர்கள் இரகசிய சங்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி வல்லமை அல்லது ஐஸ்வர்யங்களுக்கான வாஞ்சையால் தூண்டப்படுகிறார்கள். ஏத்தேர் 8:7–18ல் விவரிக்கப்பட்டுள்ள இரகசிய சங்கங்களோடு, ஏலமன் 1:9–12; 2:2–11; 6:16–30; மற்றும் மோசே 5:29–33ல் பிற எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. ஏத்தேர் 8:18–26ல் இரகசிய சங்கங்களின் விளைவுகளை மரோனி விவரிக்கிறான்(ஏத்தேர் 9:4–12 ஐயும் பார்க்கவும்), மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது என நம்மை எச்சரிக்கிறான்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஏத்தேர் 6:2–12

வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு யாரேதியரின் பயணத்தை உங்கள் குடும்பத்தினர் நடிக்க விரும்புவார்களா? ஒரு இருட்டறையை ஒரு கலமாக நீங்கள் பயன்படுத்தலாம், மின்னுகிற கற்களாக கைவிளக்குகளைப் பயன்படுத்தலாம். “சமுத்திரத்தின் ஆழங்களில் புதைக்கப்படுவார்கள்” என அறிந்தும் கலங்களில் ஏறி கர்த்தரில் தங்கள் விசுவாசத்தை யாரேதியர் எப்படி காட்டினர் என்பதைப்பற்றி நீங்கள் பேசலாம் (ஏத்தேர் 6:6). வசனம் 9 வாசித்தபிறகு, குடும்ப அங்கத்தினர்கள் விருப்பமான துதிப்பாடல்களைப் பகிர்ந்து, அவற்றை ஒன்றாகப் பாடலாம். நமது வீடுகள் எவ்வாறு யாரேதியரின் கலங்களுக்கு ஒப்பிடப்படலாம்? வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி நமது குடும்பத்தை கர்த்தர் நடத்துகிற அது எங்கிருக்கிறது?

ஏத்தேர் 6:22–23

இந்த வாரம் முழுவதிலும் எவ்வாறு யாரேதின் சகோதரனின் தீர்க்கதரிசன எச்சரிக்கை நிறைவேறியது என உங்கள் குடும்பத்தினர் கவனிக்கலாம். சபைத் தலைவர்கள் நமக்கு கொடுத்துள்ள எச்சரிக்கைகள் யாவை? அவர்களுடைய ஆலோசனையை தள்ளுவது எந்த வழிகளில் சிறைத்தனத்துக்கு நடத்தும்?

ஏத்தேர் 8:23–26

இந்த வசனங்களின்படி, இரகசிய சங்கங்களைப்பற்றி இவற்றை எழுத மரோனி ஏன் கட்டளையிடப்பட்டான்? ஏத்தேர் 8:23. வசனம் 26ல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களைப் பெற நமக்கு உதவ, ஏத்தேரின் புஸ்தகத்திலிருந்து நாம் என்ன கற்றிருக்கிறோம்?

ஏத்தேர் 9:11

நமது வாஞ்சைகள் நமது தேர்ந்தெடுப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன? நாம் தேவனுக்குரிய காரியங்களை வாஞ்சிக்கிறோம் என்பதை உறுதிசெய்ய குடும்பமாக நாம் என்ன செய்யலாம்?

ஏத்தேர் 11:8

மனந்திரும்புபவர்களுக்கு கர்த்தரின் இரக்கத்தைப்பற்றி அதிகம் கற்றுக்கொள்ள நீங்கள் பின்வருவனவற்றை வாசிக்கலாம் மோசியா 26:29–30; 29:18–20; ஆல்மா 34:14–16; அல்லது மரோனி 6:8. ஒருவேளை குடும்பத்தினர் வேதங்களிலிருந்து அல்லது அவர்களது சொந்த வாழ்க்கையிலிருந்து தேவனின் இரக்கத்தைப்பற்றிய எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நீங்கள் கற்றுக்கொள்ளுவதன்படி செயல்படவும். வாசிப்பதையும் சிந்திப்பதையும் விட சுவிசேஷம் கற்பதில் அதிகம் அடங்கும். வேதங்களிலுள்ள சத்தியங்கள்படி செயல்பட்டு, நாம் அடிக்கடி அதிகம் கற்றுக்கொள்கிறோம். (யோவான் 7:17 பார்க்கவும்). ஏத்தேர் 6–11ல் நீங்கள் வாசிக்கிறவற்றை பயன்படுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்?

படம்
கடலில் யாரேதிய கலங்கள்

யாரேதிய கலங்கள்–காரி எர்னஸ்ட் ஸ்மித்