என்னைப் பின்பற்றி வாருங்கள்
அக்டோபர் 26–நவம்பர் 1. மார்மன் 1–6: “அனைவரும் மனந்திரும்பி … ஏவிட நான் விரும்புகிறேன்”


“அக்டோபர் 26–நவம்பர் 1. மார்மன் 1–6: ‘அனைவரும் மனந்திரும்பி … ஏவிட நான் விரும்புகிறேன்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“அக்டோபர் 26–நவம்பர் 1. மார்மன் 1–6: “ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
தங்கத் தகடுகளின் மேல் மார்மன் எழுதுதல்

மார்மன் தகடுகளை சுருக்கி எழுதுதல்–டாம் லோவல்

அக்டோபர் 26–நவம்பர் 1

மார்மன் 1–6

“அனைவரும் மனந்திரும்பி … ஏவிட நான் விரும்புகிறேன்”

நீங்கள் மார்மன் 1–6 வாசிக்கும்போது, மார்மனின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என சிந்திக்கவும். நீங்கள் செய்யுமாறு உணர்த்தப்பட்டவைகளை பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நேபியருக்கு மத்தியில் தான் கண்ட துன்மார்க்கத்தின் “அருவருப்பான காட்சியையும்” இரத்தம் சிந்துதலின் “முழு குறிப்பையும்” மார்மன் நமக்கு கொடுத்தான் (மார்மன் 2:18; 5:8). ஆனால் அவன் மார்மன் 1–6ல் பதிவு செய்தது நீதியான ஜனம் எவ்வளவாய் வீழ்ந்து போகலாம் என நமக்கு நினைவூட்ட போதுமானது. அப்படிப்பட்ட பரவுகிற துன்மார்க்கத்துக்கு மத்தியிலும், சோர்வடைந்து அதைரியமடைந்ததைப்பற்றி மார்மனை யாரும் குற்றம் சாட்ட முடியவில்லை. ஆயினும் அவன் பார்த்த அனுபவித்த அனைத்தின் மூலம், அதைப் பெற மனந்திரும்புதலே வழி என தேவனின் மாபெரும் இரக்கத்தையும் தன் ஒப்புக்கொடுத்தலின் உணர்வையும் அவன் ஒருபோதும் இழந்துபோகவில்லை. மனந்திரும்புமாறு அவன் கெஞ்சிய அழைப்புகளை மார்மனின் சொந்த ஜனமே நிராகரித்தாலும் வற்புறுத்த அவனுக்கு பெரிய கூட்டம் இருந்தது என அவன் அறிந்தான். அவன் அறிவித்தான், “இதோ பூமியின் கடையாந்திரம் அனைத்துக்கும் எழுதுகிறேன்.” வேறு வார்த்தைகளிலெனில், அவன் உங்களுக்கு எழுதினான் (மார்மன் 3:17–20 பார்க்கவும்). இன்று உங்களுக்கு அவனது செய்தி, அவர்களது நாளில் நேபியர்களை காப்பாற்றியிருக்கக்கூடிய அதே செய்திதான்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிக்கவும். … மனந்திரும்பி கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன்பாக நிற்க ஆயத்தப்படுவதே” (மார்மன் 3:21–22).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மார்மன் 1

என்னைச் சுற்றிலும் துன்மார்க்கம் இருப்பினும் நான் நீதியாக வாழ முடியும்.

மார்மனின் முதல் அதிகாரத்தில் தொடங்கி, மார்மனுக்கும் அவனைச் சுற்றியிருந்த ஜனத்துக்குமிடையே பெரிய வித்தியாசங்களை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் மார்மன் 1 வாசிக்கும்போது, அந்த தன் ஜனத்துடன் மார்மனின் குணங்களையும் வாஞ்சைகளையும் எதிராக்குவதை கருத்தில் கொள்ளவும். அவனுக்கும் அவர்களுக்கும் வந்த விளைவுகளை கவனிக்கவும் (வசனங்கள் 14–15ல் ஒரு எடுத்துக்காட்டை நீங்கள் காண்பீர்கள்). துன்மார்க்க உலகில் நீதியாக வாழ உங்களுக்கு உணர்த்துகிற எதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?

நீங்கள் மார்மன் 2–6 வாசிக்கும்போது, அவனைச் சுற்றியிருந்த தீய செல்வாக்குகளிருந்தாலும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவில் தன் விசுவாசத்தை மார்மன் எவ்வாறு செயலில் காட்டினான் என தொடர்ந்து தேடவும்.

படம்
நேபியரும் லாமானியரும் ஒருவரோடொருவர் யுத்தம் செய்தல்

யுத்தம்–ஜோர்ஜ் கோகோ

மார்மன் 2:10–15

தேவ துக்கம் உண்மையான நீடித்த மாற்றத்துக்கு நடத்துகிறது.

தன் ஜனத்தின் துயரத்தை மார்மன் பார்த்தபோது, அவர்கள் மனந்திரும்புவார்கள் என அவன் நம்பினான். ஆனால் அவர்களது துக்கம் மனந்திரும்புதலுக்கேதுவாய் இருக்கவில்லை (மார்மன் 2:13), உண்மையான மாற்றத்துக்கு வழிநடத்துகிற விதமான தேவ துக்கம் அதுவல்ல (2 கொரிந்தியர் 7:8–11 பார்க்கவும்). மாறாக, நேபியர் உலகப்பிரகார துக்கத்தை உணர்ந்தனர் (மார்மன் 2:10–11 பார்க்கவும்). தேவ துக்கத்துக்கும் உலகப்பிரகார துக்கத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள, இந்த இருவித துக்கங்களைப்பற்றி, மார்மன் 2:10–15லிருந்து நீங்கள் கற்றவற்றை நீங்கள் பதிவுசெய்யும் விதமாக ஒரு அட்டவணை செய்வதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் அட்டவணை இதைப்போல இருக்கலாம்:

தேவ துக்கம்

உலகப்பிரகார துக்கம்

தேவ துக்கம்

இயேசுவிடம் வருதல் (வசனம் 14)

உலகப்பிரகார துக்கம்

தேவனை சபித்தல் (வசனம் 14)

தேவ துக்கம்

உலகப்பிரகார துக்கம்

தேவ துக்கம்

உலகப்பிரகார துக்கம்

நீங்கள் கற்றுக்கொள்பனவற்றை நினைக்கும்போது, பாவத்தை மேற்கொள்ள உங்கள் முயற்சிகளில் அது எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்த முடியும் மற்றும் பரலோக பிதா மற்றும் இரட்சகரைப் போல அதிகமாக மாறமுடியும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

டியட்டர் எப். உக்டர்ப் “You Can Do It Now!” ஐயும் பார்க்கவும். Ensign or Liahona, Nov. 2013, 55–57.

மார்மன் 3:3, 9

என் வாழ்க்கையில் எப்போதும் தேவனின் கரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நேபியரிடம் மார்மன் பார்த்த பெலவீனங்களை பதிவு செய்தான்: கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்திருக்கிற விதங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறினர். “தேவனின் தயவை அடையாளம் கண்டு நினைவுகூரும் வழிகளை காண, …தலைவர் ஹென்றி பி. ஐரிங் நம்மை ஊக்குவித்தார். ஜெபித்து சிந்தித்து, கேள்விகளைக் கேளுங்கள்: எனக்காகவே தேவன் ஒரு செய்தியை அனுப்பினாரா? என் வாழ்க்கையில் அல்லது என் பிள்ளைகளின் வாழ்க்கையில் அவரது கரத்தை நான் பார்த்தேனா? … நம்மில் அநேகர் இன்னும் அடையாளம் காணாததை விட அதிகமாக அவர் நம்மை நேசிக்கிறார் மற்றும் ஆசீர்வதிக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன்” (“O Remember, Remember,” Ensign or Liahona, Nov. 2007, 67, 69).

நீங்கள் மார்மன் 3:3, 9 வாசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் தேவனின் செல்வாக்கை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறீர்கள் என நீங்கள் சிந்திக்கலாம். அவரது செல்வாக்கை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன? அவரை ஏற்காவிட்டால் விளைவுகள் யாவை? (மார்மன் 2:26 பார்க்கவும்).

மார்மன் 5:8–24; 6:16–22

என்னை வரவேற்க இயேசு கிறிஸ்து திறந்த கரங்களோடு நிற்கிறார்.

மார்மனின் போதனைகளை நேபியர் புறக்கணித்தனர், ஆனால் அவனது பதிவேடு உங்களில் செல்வாக்கு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. நீங்கள் மார்மன் 5:8–24 மற்றும் 6:16–22 வாசிக்கும்போது, பாவங்களின் விளைவுகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் பாவம் செய்யும்போதுகூட, உங்கள் மீது பரலோக பிதா மற்றும் இயேசுவின் உணர்வுகளைப்பற்றி இந்த பகுதியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? திறந்த கரங்களுடன் இயேசு கிறிஸ்து உங்களிடம் வருவதைப்பற்றி நீங்கள் எப்படி உணர்ந்திருக்கிறீர்கள்? அதன் விளைவாக செய்ய தூண்டுகிற எதை நீங்கள் உணருகிறீர்கள்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மார்மன் 1:2

“புரிந்துகொள்வதில் விவேகமுள்ளவன்” என்பதற்கு அர்த்தமென்ன? மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் கட்டுரையில் நீங்கள் உள்ளுணர்வுகளைக் காணலாம் “Quick to Observe” (Ensign, Dec. 2006, 30–36). புரிந்துகொள்வதில் விவேகமுள்ளவனாயிருப்பதின் வரம் மார்மனுக்கு எவ்வாறு ஒரு ஆசீர்வாதமாக இருந்தது? அது நமக்கு எவ்விதம் ஆசீர்வாதமாக இருக்க முடியும்?

மார்மன் 1:1–6, 15; 2:1–2

அவர்கள் இளைஞர்களானாலும் அவர்கள் பெரிய ஆவிக்குரிய தன்மைகளையும் வல்லமையையும் அவர்கள் மேம்படுத்த முடியுமென உங்கள் குடும்பத்து பிள்ளைகள் புரிந்துகொள்கிறார்களா? மார்மனின் எடுத்துக்காட்டு அவர்களுக்கு உதவ முடியும். மார்மன் 1:1–6, 15 மற்றும் 2:1–2ல் கொடுக்கப்பட்டுள்ள வயதுகளையும் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தி, மார்மன் பிள்ளைப் பருவம் மற்றும் இளமையின் காலக்கோட்டை வரைவதைக் கருத்தில் கொள்ளவும். மார்மனின் குணங்களையும் அனுபவங்களையும் நீங்கள் கலந்துரையாடும்போது, உங்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உணர்த்தியிருக்கிற உங்கள் பிள்ளைகளுக்கிருக்கிற குணங்களை சுட்டிக் காட்டவும்.

மார்மன் 2:18–19

அவன் வாழ்ந்த உலகத்தை விவரிக்க மார்மன் என்ன வார்த்தைகளை உபயோகித்தான்? அவனைச் சுற்றிலும் துன்மார்க்கமிருந்தாலும் அவன் எப்படி நம்பிக்கையைக் காத்துக்கொண்டான்? நமது குடும்பமும் அதையே எப்படிச் செய்ய முடியும்?

மார்மன் 3:12

அவர்கள் துன்மார்க்கராயிருந்தாலும் அவனைச் சுற்றியுள்ள ஜனங்களைப்பற்றி மார்மன் எவ்வாறு உணர்ந்தான்? அவனுக்கிருந்த அவ்வகையான அன்பை நாம் எப்படி விருத்தி செய்ய முடியும்?

மார்மன் 5:2

நாம் போராடிக்கொண்டிருக்கும்போது, பரலோக பிதாவை அழைக்க நாம் ஏன் தயங்க வேண்டும்? அதிகமாக பரலோக பிதாவைச் சார்ந்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

மார்மன் 5:16–18

“காற்றினால் பதறடிக்கப்படுகிற பதரைப்போல” என்றால் என்ன என கற்பனை செய்ய உங்கள் குடும்பத்துக்கு உதவிசெய்ய, (வசனம் 16), சிறு காகிதத்தை சிறு துண்டுகளாக கிழித்து, அவற்றை குடும்ப அங்கத்தினர்கள் ஊதிப்பறக்க செய்ய விடவும். பதர் விதையிலிருந்து பிரிகிற உமி, ஊதிப்பறக்க வைக்க அது மிருதுவானது என விளக்கவும். “உலகில் கிறிஸ்துவும் தேவனுமில்லாதிருப்பது” (வசனம் 16) எவ்வாறு காற்றில் பதரைப்போலிருப்பது போலிருக்கிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

தெளிவான எளிதான கோட்பாட்டை போதிக்கவும். அதன் எளிமையில் கர்த்தரின் சுவிசேஷம் அழகாயிருக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 133:57 பார்க்கவும்). அளவுக்கதிகமான பாடங்களால் உங்கள் குடும்பத்தை மகிழ்விக்க முயல்வதைவிட, நீங்கள் போதிப்பது தூய்மையான எளிய கோட்பாட்டை மையமாகக் கொண்டது என்பதை உறுதிசெய்யவும்.

படம்
நேபியர் மற்றும் லாமானிய யுத்த களத்தை மார்மன் பார்த்தல்

மார்மனின் அற்புதமான புஸ்தகம்–ஜோசப் பிரிக்கி