என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 20–26. 1 நேபி 11–15: “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்“


“ஜனுவரி 20–26. 1 நேபி 11–15: ‘நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜனுவரி 20–26. 1 நேபி 11–15,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஜனங்கள் ஜீவவிருட்சத்தின் கனியை உண்கிறார்கள்

எல்லா மதுரத்தையும் விட மதுரமானது, மிகேல் ஏஞ்சல் கோன்சலஸ் ரோமெரோ

ஜனுவரி 20–26

1 நேபி 11–15

“நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்“

1 நேபி 11–15ல் உங்களை நீங்களே பார்க்க முடியுமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எந்த பத்திகள் பெரு மதிப்பு வாய்ந்தவை?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

அவருடைய தீர்க்கதரிசி செய்வதற்காக தேவன் ஒரு நினைவுச் சின்ன வேலையை வைத்திருந்தபோது, அவருடைய பிள்ளைகளுக்கான தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவியாக, அந்தத் தீர்க்கதரிசிக்கு அவர் பெரும்பாலும் ஒரு மகத்தான தரிசனத்தை கொடுக்கிறார். “இந்த பூமியையும் அதிலுள்ள குடிகளையும், வானங்களையும்பற்றி” ஒரு தரிசனத்தை மோசே கண்டான் (மோசே 1:36). அப்போஸ்தலனாகிய யோவான் உலக வரலாற்றையும் இரட்சகரின் இரண்டாவது வருகையையும் கண்டான் (வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தைப் பார்க்கவும்). ஜோசப் ஸ்மித், பிதாவையும் குமாரனையும் கண்டார் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:17–18 பார்க்கவும்). இரட்சகரையும் அவருடைய அன்பையும் நோக்கி நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை சித்திரிக்கும் ஒரு தரிசனத்தை லேகி கண்டான்.

1 நேபி 11–14 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது போல, இரட்சகரின் ஊழியத்தையும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் லேகியின் சந்ததியினரின் எதிர்காலத்தையும், தேவ கிரியைகளின் பிற்கால நிலையையும் நேபி கண்டான். அவனுக்கு முன் இருக்கும் பணிக்காகத் தன்னை ஆயத்தப்படுத்த நேபிக்கு இந்த தரிசனம் உதவியது, மேலும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் இது உங்களுக்கு உதவும், ஏனென்றால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலை அவரிடம் உண்டு. நேபியால் காணப்பட்ட “ஆட்டுக்குட்டியானவரின் சபையின் பரிசுத்தவான்களில்“ நீங்கள் ஒருவராக இருக்கிறீர்கள் அவர்கள், “பூமியின் பரப்பின்மீது சிதறடிக்கப்பட்டார்கள்; அவர்கள் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்“ (1 நேபி 14:14).

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

1 நேபி 11

தேவன் தன் அன்பின் வெளிப்பாடாக இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.

அவனுடைய தகப்பன் கண்ட விருட்சத்தின் பொருளைப் புரிந்துகொள்ள நேபிக்கு உதவ, ஒரு தேவதூதன் அவருக்கு “நித்திய பிதாவின் குமாரனை“ காட்டினான் (1 நேபி 11:21). விருட்சம் தேவனின் அன்பை பிரதிபலிக்கிறது என்ற முடிவுக்கு வர நேபியை இது நடத்தியது. ஆனால் தரிசனம் இன்னும் முடியவில்லை. 1 நேபி 11 ஐ நீங்கள் வாசித்து தியானிக்கும்போது, தேவனின் அன்பின் இறுதி வெளிப்பாடாக ஏன் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு எது உதவுவதாகக் காண்கிறீர்கள்?

லேகியின் கனவிலுள்ள மற்ற அடையாளங்களைப்பற்றி அறிய, 1 நேபி 11:35–36; 12:16–18; மேலும் 15:21–30 பார்க்கவும்

யோவான் 3:16 ஐயும் பார்க்கவும்.

1 நேபி 12–13

மறுஸ்தாபிதத்திற்கான வழியைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தினார்.

நேபி தனது தரிசனத்தில் கண்டவற்றில் பெரும்பானவற்றை நேரில்காண ஒருபோதும் உயிர்வாழ மாட்டான். இந்த காரியங்களை அறிந்துகொள்வது நேபிக்கு விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? இந்த காரியங்களை அறிந்துகொள்வது உங்களுக்கு ஏன் விலைமதிப்பற்றதாக இருக்கிறது? நேபி தனது தரிசனத்தில் பார்த்த ஒன்றைப்பற்றி ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கக் கூடும்.

நேபி கண்ட சில நிகழ்வுகள் இங்கே: அவனுடைய ஜனங்களின் எதிர்காலம் (அத்தியாயம் 12), அமெரிக்காவின் காலனித்துவம் மற்றும் அமெரிக்கப் புரட்சி பார்க்கவும் (அத்தியாயம் 13: 12–19), மாபெரும் மதமாறுபாடு(அத்தியாயம் 13: 20–29), மற்றும் நற்செய்தியின் மறுஸ்தாபிதம் பார்க்கவும் (அத்தியாயம் 13: 32–42 பார்க்கவும்).

1 நேபி 13:1–9; 14:9–11

நேபி கண்ட “பெரிதும் அருவருப்புமான சபை” என்றால் என்ன?

நேபியால் விவரிக்கப்பட்ட ”பெரிதும் அருவருப்புமான சபை” என்பது “தேவன் மேல் உள்ள நம்பிக்கையை எதிர்க்கிற எந்த தத்துவத்தையும் அல்லது நிறுவனத்தையும் பிரதிபலிக்கிறதென்று மூப்பர் டாலின் ஹெச்.ஓக்ஸ் விளக்கினார். இந்த ‘சபை’ எந்த ‘சிறையிருப்புக்குள்’ பரிசுத்தவான்களைக் கொண்டுவர நாடுகிறதோ அது தவறான கருத்துக்களின் சிறைபிடிப்பை விட அதிக உடல்ரீதியான சிறைவாசமாக இருக்காது“ (“Stand as Witnesses of God,” Ensign, Mar. 2015, 32).

1 நேபி 13:12

”திரளான தண்ணீர்களின்மீது பயணம் செய்ய” பரிசுத்த ஆவியால் “கிரியை செய்யப்பட்ட” நேபி கண்ட மனிதன் யார்?

அமெரிக்காவுக்கு தன் புகழ் பெற்ற கப்பல் பயணத்தை மேற்கொள்ள கிறிஸ்டோபர் கொலம்பசை பரிசுத்த ஆவியானவர் ஊக்குவிப்பாரென நேபி கண்டான். மார்ச் 14, 1493ல், இந்தக் கப்பல் பயணத்தைப்பற்றி கொலம்பஸ் எழுதினார்: “இந்த மாபெரும் மற்றும் அற்புதமான வெற்றி என்னுடைய திறமையால் கிடைத்தது என்று கருதக்கூடாது…; ஏனெனில் அதை மனிதனின் உதவி பெறாத அறிவால் திசை காட்ட முடியாது, மனிதனின் முயற்சிக்கு தேவனின் ஆவி அருள் பாலித்தது, ஏனெனில் தேவன் தம் கற்பனையை நேசிக்கின்ற ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்க விரும்புகிறார் அது சாத்தியமற்றதாக இருந்தாலும் சாத்தியமாக்குவதற்காக” (The Annals of America [Encyclopedia Britannica, Inc., 1976], 1:5).

1 நேபி 13:20–42

பிற்கால வேதம் “தெளிவான விலையேறப்பெற்ற காரியங்களை” மீட்டமைக்கிறது.

வேதாகமம்—அதை அவர் “யூதர்களின் ஒரு பதிவு” என்று விவரித்தார்— “[அதில்] இருந்து பல தெளிவான விலையேறப்பெற்ற காரியங்கள் அகற்றப்படுவதை” நேபி தரிசனத்தில் கண்டான் (1 நேபி 13:23, 28). இருப்பினும், தேவன் “பிற புஸ்தகங்கள்”—மார்மன் புஸ்தகம் மற்றும் பிற பிற்கால வேதம் மூலம் இந்த காரியங்களை மீட்டமைப்பார் என்றும் அவர் கண்டார் (1 நேபி 13:39–40பார்க்கவும்). எந்த சில விலையேறப்பெற்ற உண்மைகளை நாம் சிறந்த முறையில் புரிந்து கொள்ளுவதற்கு மார்மன் புஸ்தகம் நமக்கு உதவுகிறது? இந்த தெளிவான விலையேறப்பெற்ற காரியங்கள் மீட்டமைக்கப்பட்டதனால் உங்கள் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

படம்
வெவ்வேறு மொழிகளில் மார்மன் புஸ்தகத்தின் நகல்கள்

மதமாறுபாட்டின் காலத்தில் இழந்துபோன சுவிசேஷ சத்தியங்களை மார்மன் புஸ்தகம் மீட்டமைக்கிறது.

மேலும் “Plain and Precious Truths,” Ensign, Mar. 2008, 68–73; Russell M. Nelson, “The Book of Mormon: அது இல்லாமல் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?ஐயும் பார்க்கவும்“ Ensign or Liahona, Nov. 2017, 60–63.

1 நேபி 15:1–11

நான் மென்மையான இருதயத்துடன் கேட்டால் கர்த்தர் எனக்குப் பதில் அளிப்பார்.

நீங்கள் எப்போதாவது தனிப்பட்ட வெளிப்படுத்தலைப் பெறுவதில்லை என்று உணர்ந்ததுண்டா, அதாவது தேவன் உங்களுடன் பேசுவதில்லை என்று? இதைப்போன்று நேபியின் சகோதரர்கள் உணர்ந்தபோது அவர்களுக்கு அவன் என்ன ஆலோசனையளித்தான்? உங்கள் வாழ்க்கையில் நேபியின் ஆலோசனையை எவ்வாறு கடைபிடிக்கலாம், மேலும் பிறருக்கு உதவி செய்ய அவனுடைய ஆலோசனையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?

யாக்கோபு 4.8; ஆல்மா 5:46; 26:21–22 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும்படியாக எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

1 நேபி 11–14

இந்த அத்தியாயங்களை உங்கள் குடும்பம் வாசிக்கும்போது, அவ்வப்போது நிறுத்தி இது போன்ற கேள்விகளைக் கேட்கவும்: அவனுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணம் நேபி தன் தரிசனத்தில் என்ன கண்டான்? அவனை எது துக்கப்படுத்தியிருக்கும்? ஏன்?

1 நேபி 13:20–42.

மார்மன் புஸ்தகத்திலுள்ள “எளியதும் விலையேறப்பெற்றதுமான” சத்தியங்களின் மதிப்பைக் குடும்ப அங்கத்தினர்கள் புரிந்துகொள்ளுவதற்கு உதவ, ஒரு தெளிவாக எழுதப்பட்ட செய்தியுடன் ஒரு கிறுக்கப்பட்ட செய்தியை ஒப்பிடவும். பரலோக பிதா ஏன் தமது சத்தியங்கள் தெளிவாகப் போதிக்கப்பட வேண்டும் என்று விரும்ப வேண்டும்? குடும்ப அங்கத்தினர்கள் தாங்கள் மார்மன் புஸ்தகத்தில் இருந்து கற்றுக்கொண்ட சில “தெளிவான விலையேறப்பெற்ற” சத்தியங்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.

1 நேபி 14:12–15.

தேவனோடு நாம் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாக வாழும்போது நாம் ஏன் “நீதியினாலும் தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தவர்களாக” இருக்கிறோம்?

1 நேபி 15:8–11

“தேவனைப்பற்றி கேட்டு அறிந்தவர்களாக” இருக்கும்போது உங்கள் குடும்ப அங்கத்தினர்களால் என்ன அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியும்? நேபியின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக ல் இந்த வாரத்தின் குறிப்பு.பார்க்கவும்.

தனிப்பட்ட தியானத்தை மேம்படுத்தல்

தியான உதவிகளைப் பயன்படுத்தவும். அடிக்குறிப்புகள், பாட வழிகாட்டி, மற்றும் பிற தியான உதவிகள் வேதத்திற்குள் நுண்ணறிவை வழங்குகின்றன. உதாரணமாக, அடிக்குறிப்புகள் எதைப்பற்றிப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகின்றன 1 நேபி 14:20–21?

படம்
மரியாள் மற்றும் குழந்தை இயேசுவைப்பற்றிய நேபியின் தரிசனம்

மரியாளைப்பற்றிய நேபியின் தரிசனம், ஜேம்ஸ் ஜான்சன்