என்னைப் பின்பற்றி வாருங்கள்
டிசம்பர் 30–ஜனுவரி 5. மார்மன் புஸ்தகம்: “இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு” முன்னுரைப் பக்கங்கள்


“டிசம்பர் 30–ஜனுவரி 5. மார்மன் புஸ்தகம்: ‘இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு,’முன்னுரைப் பக்கங்கள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“டிசம்பர் 30– ஜனுவரி 5. மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
Mormon writes on the gold plates

டிசம்பர் 30–ஜனுவரி 5

மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்

“இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு”

1 நேபிக்கு முன்வரும் பக்கங்களில் இருந்து வாசிக்க ஆரம்பித்தால் மார்மன் புஸ்தகத்தின் உங்கள் தியானம் வளம்பெறும். உங்கள் சாட்சியை பலப்படுத்துவதாக எதை நீங்கள் காண்கிறீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நீங்கள் 1 நேபி அத்தியாயம் 1, க்குள் புகுவதற்கு முன்னரே மார்மன் புஸ்தகம் ஒரு சாதாரண புஸ்தகம் இல்லை என்பது தெளிவாகிறது. அதன் முன்னுரைப் பக்கங்கள்—தூதர்களின் வருகை, ஒரு மலையருகில் பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த ஒரு பழைய பதிவேடு, மற்றும் பிரபலமற்ற ஒரு விவசாயி அந்தப் பதிவேடுகளை தேவ வல்லமையால் மொழிபெயர்த்தல் ஆகிய மற்ற எதையும் போல் அல்லாத முன்கதையை விவரிக்கிறது. மார்மன் புஸ்தகம் பழைய அமெரிக்க நாகரிகத்தைப்பற்றிய ஒரு வரலாறு மட்டுமே அல்ல. “நித்திய சுவிசேஷத்தின் முழுமை” (மார்மன் புஸ்தகத்திற்கான முன்னுரை), மற்றும் தேவன் தாமே அதன் வெளிவருதலை வழிநடத்தியது—எவ்வாறு அது எழுதப்பட்டது, எவ்வாறு அது பாதுகாக்கப்பட்டது, மற்றும் அது எவ்வாறு நமது நாட்களில் கிடைக்க வழிசெய்யப்பட்டது ஆகியவற்றை அது உள்ளடிக்கியிருக்கிறது. இந்த ஆண்டு, நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும்போது, அதைப்பற்றி ஜெபித்து, அதன் போதனைகளை நடைமுறைப்படுத்தும்போது, அதன் வல்லமையை உங்கள் வாழ்க்கைக்குள் வரவேற்பீர்கள், மூன்று சாட்சிகள் தங்கள் சாட்சியில் கூறியது போல், “இது [என்]கண்களுக்கு அற்புதமாக இருக்கிறது.” எனக்கூற உணர்வீர்கள்,

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்

இயேசு கிறிஸ்துவில் என் விசுவாசத்தை மார்மன் புஸ்தகம் பலப்படுத்த முடியும்.

மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம் ஒரு தலைப்பை விட அதிகமாக வழங்குகிறது. பிற விஷயங்களுக்கு மத்தியில், இந்த பரிசுத்தப் பதிவேட்டின் ஏராளமான நோக்கங்களை அது பட்டியலிடுகிறது. இந்த நோக்கங்களைத் தேடுங்கள், பின்பு இந்த ஆண்டு மார்மன் புஸ்தகத்தை நீங்கள் தியானிக்கும்போது, இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதாக நீங்கள் உணரும் பகுதிகளை குறியிடுங்கள். உதாரணமாக, எந்தப் பகுதிகள் “இயேசுவே நித்திய தேவனாகிய கிறிஸ்து” என உங்களை உறுதிசெய்ய உதவுகின்றன.

மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை

மார்மன் புஸ்தகம் “இரட்சிப்பின் திட்டத்தைக் கோடிட்டுக்காட்டுகிறது.”

இரட்சிப்பின் திட்டம், அவரது பிள்ளைகள் அவரைப் போலவே மேன்மை அடையவும் அவர் அனுபவிக்கும் ஆனந்தத்தை அடையவும் உதவும் பரலோக பிதாவின் திட்டம் (2 நேபி 2:25–26 பார்க்கவும் ). இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி இந்தத் திட்டத்தை சாத்தியமாக்குகிறது, மற்றும் ஒவ்வொரு கோட்பாடும், நியமமும், உடன்படிக்கையும், தேவனால் கொடுக்கப்பட்ட கற்பனையும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவுவதற்கே.

இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் வாசிக்க, மார்மன் புஸ்தகத்தை விட சிறந்த புஸ்தகம் வேறில்லை. 20 தடவைகளுக்கும் மேல் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி, அது தேவ திட்டத்தை, குறிப்பிடுகிறது. இந்த ஆண்டில் நீங்கள் தியானிக்கும் வேளையில், தேவனின் திட்டம் குறிப்பிடப்படும்போதும் அல்லது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படும்போதும், அதைப்பற்றி மார்மன் புஸ்தகம் என்ன கூறுகிறது என்றும் கவனிக்கவும்.

இங்கே, நீங்கள் தொடங்குவதற்கான ஒரு பயிற்சி. பின்வரும் பகுதிகளை வாசித்து, தேவ திட்டத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பெயர்களைப் பட்டியலிடவும்: 2 நேபி 9:13; 11:5; மற்றும் ஆல்மா 12:32–34; 24:14; 41:2; 42:15–16. பிதாவின் திட்டத்தைப்பற்றி இவற்றில் ஒவ்வொரு பெயரும் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

மூன்று சாட்சிகளின் சாட்சி”; “எட்டு சாட்சிகளின் சாட்சி

மார்மன் புஸ்தகத்துக்கு நானும் ஒரு சாட்சியாக முடியும்.

மூன்று சாட்சிகள் மற்றும் எட்டு சாட்சிகளைப் போல நீங்கள் தங்கத் தகடுகளைப் பார்க்கவில்லை என்றாலும் கூட மார்மன் புஸ்தகம் உண்மையானது என பரிசுத்த ஆவி உங்களுக்கு சாட்சி பகர முடியும். அவர்களது சாட்சிகள் உங்கள் சாட்சியை எவ்விதம் பலப்படுத்துகிறது? மார்மன் புஸ்தகத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்பதை “உலகுக்கு சாட்சியாகப் பகரும்படி [உங்கள் பெயரை] உலகுக்கு எவ்வாறு அளிக்க முடியும்”? (“ எட்டு சாட்சிகளின் சாட்சிகள்”).

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சி

மார்மன் புஸ்தகம் வெளிவந்தது ஒரு அற்புதமாகும்.

மார்மன் புஸ்தகம் எங்கிருந்து வந்தது என்று உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டு வந்ததில் கர்த்தருடைய கரம் இருந்ததை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்? மார்மன் புஸ்தகம் வெளிப்பட்டதை ஜோசப் ஸ்மித் எவ்வாறு விளக்கினார்?

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சி

மார்மன் புஸ்தகம் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது?

மார்மன் புஸ்தகம் “தேவனின் வரத்தாலும் வல்லமையாலும்” மொழிபெயர்க்கப்பட்டது. அந்த அற்புதமான மொழிபெயர்ப்பு முறையைப்பற்றி நமக்குப் பல விவரங்கள் தெரியவில்லை, ஆனால் ஒரு ஞானதிருஷ்டிக்காரராகிய ஜோசப் ஸ்மித்துக்கு தேவன் உருவாக்கிய கருவிகளால் உதவி செய்யப்பட்டார்: கண்ணாடி போன்ற கற்களான ஊரிம் மற்றும் தும்மீம் மற்றும் ஞானதிருஷ்டிக்காரர் கல் என்று அழைக்கப்பட்ட மற்றொரு கல். தகடுகளில் இருந்த எழுத்துருக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஜோசப் இந்தக் கற்களில் கண்டு மொழிபெயர்ப்பை உரக்க வாசிக்க அதை ஒரு எழுத்தர் பதிவுசெய்தார். ஜோசப்பின் இரு எழுத்தர்களும் இந்தப் பரிசுத்த பணியின் மொழிபெயர்ப்பில் தேவ வல்லமை வெளிப்பட்டது என்று சாட்சி பகர்ந்தனர்.

“மார்மன் புஸ்தக மொழிபெயர்ப்பு,” சுவிசேஷத் தலைப்புகள், topics.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும் போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை சந்திக்க எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்

ஒருவேளை உங்கள் குடும்பம் மார்மன் புஸ்தகத்திலிருந்து “இயேசுவே கிறிஸ்து” என்ற உங்கள் விசுவாசத்தைக் கட்டி எழுப்பிய வசனங்களைப் பட்டியலிடத் தொடங்கி ஆண்டு முழுவதும் அதில் சேர்க்கலாம். மார்மன் புஸ்தகத்தை வாசிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுக்க இதுவே ஒரு சரியான சமயமாகக் கூட இருக்கலாம்: எங்கு எப்போது நீங்கள் வாசிப்பதற்காகக் கூடலாம்? எவ்விதம் ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் பங்கேற்பார்கள்? கூடுதல் உதவிக்காக, “உங்கள் குடும்ப வேத தியானத்தை மேம்படுத்த ஆலோசனைகள்” இந்தப் பாட ஆதாரத்தின் தொடக்கத்தில் பார்க்கவும்.

மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை

ஒரு மூலைக்கல் என்பது ஒரு கட்டிட வில்வளைவின் உச்சியில் பிற கற்களை ஒன்றாகப் பூட்டி இணைக்கும் ஓர் ஆப்பு–வடிவக் கல்லாகும். “நமது மதத்தின் மூலைக்கல்” மார்மன் புஸ்தகமே என்பதை உங்கள் குடும்பம் புரிந்துகொள்ள உதவ நீங்கள் ஒரு மூலைக்கல்லை உச்சியில் கொண்ட ஒரு வில்வளைவை கட்டலாம் அல்லது வரையலாம். மூலைக்கல் அகற்றப்பட்டால் என்ன நேரிடுகிறது? நமக்கு மார்மன் புஸ்தகம் இல்லையென்றால் என்ன நடக்கும்? இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்துக்கு மார்மன் புஸ்தகத்தை நாம் எவ்வாறு மூலைக்கல்லாக்கலாம்?

படம்
ஒரு மூலைக்கல்லை ஆதாரமாகக் கொண்ட ஒரு கல் வளைவு

மார்மன் புஸ்தகமே நமது மதத்தின் மூலைக்கல்.

மூன்று சாட்சிகளின் சாட்சி”; “எட்டு சாட்சிகளின் சாட்சி

மார்மன் புஸ்தகத்தைப்பற்றி உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் சாட்சியை எழுதி, அதில் தங்கள் பெயரைக் கையொப்பமிட்டு, பிறரிடம் தங்கள் சாட்சிகளை பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து யோசிக்கலாம்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சி

ஜோசப் ஸ்மித் எழுதிய விவரத்தில், மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொணர்வதில் தேவன் ஈடுபடுத்தப்பட்டார் என்பதற்கு என்ன சான்றை நாம் காண்கிறோம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்புக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்புக்கு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்தல்

ஒரு தீர்க்கதரிசன வாக்குத்தத்தம். தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “நீங்கள் [மார்மன் புஸ்தகத்தில்] தியானித்ததை சிந்திக்கும்போது, பரலோகத்தின் பலகணிகள் திறக்கும், மற்றும் நீங்கள் உங்கள் சொந்தக் கேள்விகளுக்குப் பதிலையும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலையும் பெறுவீர்கள் என்று நான் வாக்களிக்கிறேன்” (“The Book of Mormon: What Would Your Life Be Like without It?Ensign or Liahona, Nov. 2017, 62–63).

படம்
தங்தக் தகடுகளை மரோனியிடம் இருந்து ஜோசப் பெறுதல்

மரோனி தங்கத் தகடுகளை அளித்தல், -கேரி எல் காப்