என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 13–19. 1 நேபி 8–10: “வந்து, கனியைப் புசியுங்கள்”


“ஜனுவரி 13–19. 1 நேபி 8–10: ‘வந்து கனியைப் புசியுங்கள்,’“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜனுவரி 13–19. 1 நேபி 8–10,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஜீவ விருட்சத்தைப்பற்றிய லேகியின் தரிசனம்

லேகியின் கனவு, ஸ்டீவன் லாய்ட் நீல்

ஜனுவரி 13–19

1 நேபி 8–10.

“வந்து கனியைப் புசியுங்கள்”

நீங்கள் 1 நேபி 8–10 ஐ படிக்கும்போது,லேகியின் தரிசனத்தில் இருந்து என்ன செய்தி உங்களுக்குப் பொருந்துகிறது என்று எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் ஆவிக்குரிய உந்துதல்களை உங்கள் வேதங்களில், ஒரு குறிப்பேட்டில் அல்லது இந்த ஆதார புஸ்தகத்தில் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

லேகியின் கனவு—இருப்புக் கோல், இருள் மூடுபனி, விசாலமான கட்டிடம், மற்றும் “மிக மதுரமான” கனிகள் கொண்ட விருட்சம் ஆகியவற்றோடு—இரட்சகரின் அன்பு மற்றும் பாவநிவாரண பலியின் ஆசீர்வாதங்களைப் பெற, ஓர் உணர்த்துதலான அழைப்பு ஆகும். இருப்பினும், லேகிக்கு, இந்த தரிசனம் அவனுடைய குடும்பத்தைப்பற்றியதும்தான்: “நான் கண்ட காரியத்தினிமித்தம், நேபி மற்றும் சாமைப்பற்றி கர்த்தருக்குள் களிகூர எனக்குக் காரணமுண்டு. … ஆனால் இதோ, லாமான், லெமுவேலே, உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுகிறேன்” (நேபி 8:3-4). லேகி தமது தரிசனத்தை விவரித்து முடித்தபோது, அவன் லாமான் மற்றும் லெமுவேலிடம், “அவரின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை கர்த்தர் அவர்களுக்கு இரக்கமாய் இருப்பார் என்றும்”கெஞ்சினான்(1 நேபி 8:37). நீங்கள் பலமுறை லேகியின் தரிசனத்தை தியானத்திருந்தாலும், இந்த முறை லேகியைப் போல சிந்தியுங்கள்—நீங்கள் நேசிக்கும் ஒருவரைப்பற்றி சிந்தியுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும்போது, இருப்புக்கோலின் பாதுகாப்பு, விசாலமான கட்டிடத்தின் அபாயங்கள், மற்றும் கனியின் மதுரம் யாவும் புதிய அர்த்தத்தைப் பெறும். மேலும் இந்த அற்புதமான தரிசனத்தைப் பெற்ற “மென்மையான பெற்றோரின் எல்லா உணர்வுகளையும்” இன்னும் ஆழமாக நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள்.

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்திற்கான ஆலோசனைகள்

1 நேபி 8

தேவ வார்த்தை என்னை இரட்சகரிடத்தில் நடத்தி அவரது அன்பை உணர உதவி செய்கிறது.

இரட்சகரை அறியவும் அவரது அன்பை உணரவுமான உங்கள் தனிப்பட்ட பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கே செல்கிறீர்கள் என்பதைக் குறித்து சிந்திக்க லேகியின் தரிசனம் ஓர் அழைப்பை வழங்குகிறது. தலைவர் பாய்ட் கே. பாக்கர் போதித்தார்: “லேகியின் கனவு அல்லது தரிசனம் உங்களுக்கு எந்த சிறப்பான அர்த்தமும் உடையதல்ல என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அர்த்தமிருக்கிறது. நீங்கள் அதில் இருக்கிறீர்கள்; நாம் அனைவரும் அதில் இருக்கிறோம் ( 1 நேபி 19:23 பார்க்கவும்). இருப்புக் கோலைப்பற்றிய லேகியின் கனவு அல்லது தரிசனத்தில் ஒரு … பிற்காலப் பரிசுத்தவான் வாழ்க்கையின் சோதனையைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டிய எல்லாம் அதிலிருக்கிறது” (“Lehi’s Dream and You,” New Era, Jan. 2015, 2).

தியானிக்க ஒரு வழி 1 நேபி 8 இங்கு காட்டப்பட்டிருப்பதைப்போல் ஓர் அட்டவணையை நிரப்புவதாக இருக்கலாம். அடையாளங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள, தனது தகப்பனின் தரிசனத்தைப் புரிந்து கொள்ள நேபி ஜெபித்தபோது அவனுக்குக் கிடைத்த தரிசனத்தைக் குறிக்க இது உதவியாக இருக்கும்—விசேஷமாக 1 நேபி 11:4–25, 32–36; 12:16–18; மற்றும் 15:21–33, 36பார்க்கவும். நீங்கள் லேகியின் தரிசனத்தை தியானிக்கும்போது, நீங்கள் என்ன கற்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்.

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

விருட்சமும் அதன் கனிகளும் (1 நேபி 8:10–12)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

தேவ அன்பை புசிக்க பிறரை அழைக்க நான் என்ன செய்துகொண்டு இருக்கிறேன்?

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

நதி (1 நேபி 8:13)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

இருப்புக் கோல் (1 நேபி 8:19–20, 30)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

இருள் மூடுபனி (1 நேபி 8:23)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

பெரிய விசாலமான கட்டிடம் (1 நேபி 8:26–27, 33)

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

லேகியின் தரிசனத்தில் இருந்து அடையாளம்

அர்த்தங்கள்

சிந்திப்பதற்கு கேள்விகள்:

David A. Bednar, “Lehi’s Dream: Holding Fast to the Rod,” Ensign or Liahona, Oct. 2011, 33–37 ஐயும் பார்க்கவும்.

படம்
ஜீவ விருட்சத்தின் கனியை லேவி புசித்தல்

ஜீவ விருட்சத்தின் கனியை லேவி புசித்தல் ஜீவ விருட்சம், மார்கஸ் ஆலன் வின்சென்ட்

1 நேபி 9

நேபி ஏன் இரண்டு வகை தகடுகளைச் செய்தான்?

நேபி இரு பதிவுகளை உருவாக்கிய, கர்த்தரின் “ஞானமான நோக்கம்” நூற்றாண்டுகளுக்குப் பின்னர் துலங்கியது. மார்மன் புஸ்தகத்தின் 116 பக்கங்களை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்த்த பின்னர், அவர் அந்தப் பக்கங்களை மார்ட்டின் ஹாரிஸிடம் கொடுத்தார். அவர் அந்தப் பக்கங்களைத் தொலைத்துவிட்டார். ( கோ&உ 10:1-23).பார்க்கவும் ஆனால் நேபியின் இரண்டாவது தகடுகளின் வகை அதே கால கட்டத்தின் பதிவாக இருந்தது. இழந்து போனதை மறுபடியும் மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக இந்தத் தகடுகளை மொழிபெயர்க்குமாறு ஜோசப் ஸ்மித்துக்குக் கர்த்தர் கட்டளையிட்டார் (D&C: 10:38–45பார்க்கவும்).

1 1 நேபி 9 ல் குறிப்பிடப்பட்டுள்ள தகடுகளைப்பற்றி மேலும் அறிய,“மார்மன் புஸ்தகம்பற்றிய ஒரு குறுகிய விளக்கம்“; 1 நேபி 19:1–5; 2 நேபி 5:29–32; மற்றும் மார்மனின் வார்த்தைகள் 1:3–9 பார்க்கவும்.

1 நேபி 10:2–16.

பூர்வகால தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைப்பற்றி அறிந்தார்கள் மற்றும் அவரைக் குறித்து சாட்சி அளித்தார்கள்.

லேகியின் தரிசன விவரம் நிச்சயமாக அவர் குடும்பத்தின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் இரட்சகரின் ஊழியத்தைப்பற்றி அவர்களுக்கு போதிக்க அவரிடம் இன்னும் பிற நித்திய சத்தியங்கள் இருந்தன. நீங்கள் 1 நேபி 10:2–16 படிக்கும்போது, லேகியின் குடும்பமும், நாம் யாவரும்—இந்த சத்தியங்களை அறிய வேண்டும் எனக் கர்த்தர் ஏன் விரும்ப வேண்டும் என்று சிந்திக்கவும். இரட்சகரிடத்தில் திரும்பும்படி நீங்கள் நேசிப்பவர்களை அழைக்க அவர்களிடம் என்ன கூறுவீர்கள் என்று எண்ணிப் பார்க்கவும். லேகியின் தரிசனம் மற்றும் போதனைகளை தியானித்த பின்னர், நேபியைப் போல, நீங்களும் ”பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால்” கற்கத் தூண்டப்பட்டவைகள் என்ன?? (1 நேபி 10:17).

1 நேபி 10:17–19

நான் அதைக் கருத்தாய் தேடினால் தேவன் உண்மையை வெளிப்படுத்துவார்.

உங்களால் புரிந்துகொள்ளாத ஒரு சுவிசேஷக் கொள்கையை எதிர்கொண்டால் அதை எவ்விதம் பிரதிவினை ஆற்றுவீர்கள்? லேகியின் தரிசனத்துக்கு நேபி பிரதிவினை ஆற்றிய முறைக்கும் (1 நேபி 10:17–19; 11:1பார்க்கவும்) மற்றும் லாமானும் லெமுவேலும் பிரதிவினையாற்றிய முறைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைக் கவனிக்கவும் ( 1 நேபி 15:1பார்க்கவும் 10 பார்க்கவும்). அவர்கள் ஏன் இந்த முறைகளில் பிரதிவினை ஆற்றினார்கள், மேலும் அவர்களுடைய பிரதிவினைகளின் விளைவுகள் என்ன?

ஒரு சுவிசேஷ போதனை உண்மையா என்று நீங்கள் அறிய விரும்பிய ஒரு நேரத்தைப்பற்றி எழுதுவதை எண்ணிப்பாருங்கள். நேபி என்ன செய்தானோ அதனுடன் நீங்கள் பின்பற்றிய முறை எவ்விதம் ஒப்பிடக் கூடியதாக இருக்கிறது?

1 நேபி 2:11பார்க்கவும் 19; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:1–3 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும் போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

1 நேபி 8

லேகியின் தரிசனத்தைத் திருப்பி நடித்துக்காட்டுவது அல்லது படங்கள் வரைவது மற்றும் அந்த படங்களைப் பயன்படுத்தி அதைப்பற்றி கூறுவது ஆகியவற்றின் மூலம் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் மகிழலாம். அல்லது நீங்கள் இந்தப் பாடத்துடன் இணைக்கப்பட்டுள்ள லேகியின் தரிசனத்தைப்பற்றிய ஓவியத்தைக் காட்டி, அதன் விவரங்களைச் சுட்டிக்காட்டுமாறும் அவைகள் எதைக் குறிக்கின்றன என்பதைப்பற்றிய வசனங்களைத் தேடுமாறும் குடும்ப அங்கத்தினர்களை அழைக்கலாம். “The Iron Rod” (Hymns, no. 274) என்ற பாடல் இந்த அத்தியாயத்துடன் நன்கு ஒன்றி வருகிறது. நீங்கள் லேகியின் தரிசனத்தை சித்திரிக்கும் ஒரு காணொலியைக் கூட பார்க்கலாம் (மார்மன் புஸ்தகம் காணொலி தொகுப்பை ChurchofJesusChrist.org ல் அல்லது சுவிசேஷ நூலக செயலியில் பார்க்கவும்).

1 நேபி 8:10–16

இயேசு கிறிஸ்துவண்டை நெருங்கி வரவும் அவரது அன்பின் மதுரத்தை உணரவும் நாம் யாரை அழைக்கலாம்? அவர்களை [அழைக்க] நாம் என்ன செய்ய முடியும்”?

1 நேபி 9:5–6

அதற்கான காரணத்தை முழுவதுமாக அறியாமலேயே நாம் ஒரு கற்பனையை எப்போது பின்பற்றி இருக்கிறோம்? நாம் எவ்விதம் ஆசீர்வதிக்கப்பட்டோம்?

1 நேபி 10:20–22

உடல்ரீதியாக தூய்மையில்லாமல் இருப்பது எவ்விதம் ஆவிக்குரியத் தூய்மையின்மைக்கு ஒத்ததாகும்? நாம் ஆவிக்குரிய தூய்மையில் நிலைத்திருப்பதை நிச்சயப்படுத்த நாம் என்ன செய்ய முடியும்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

வேதங்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது? வேதத்தின் ஒரு பத்தியை வாசித்த பின்னர், அந்த பத்தி அவர்களுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று குடும்ப அங்கத்தினர்களைப் பகிர்ந்து கொள்ள அழையுங்கள். உதாரணமாக, உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் 1 நேபி 8:33 ஐ வாசிக்கும்போது, “இகழும்படியான விரலை” காட்டுவோருக்கு எவ்வாறு செவிகொடுக்காமலிருப்பது என்பதைப்பற்றி அவர்கள் பேசலாம்.

படம்
லேகியின் தரிசனம்

ஜீவ விருட்சம், ஏவன் ஓக்கேசன்