என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 6–12. 1 நேபி 1–7: “நான் போய் செய்வேன்”


“ஜனுவரி 6–12. 1 நேபி 1–7: ‘நான் போய் செய்வேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜனுவரி 6–12. 1 நேபி 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
லேகியின் குடும்பம் வனாந்தரத்தில் பயணம்செய்கிறது

லேகி செங்கடல் அருகில் பயணம் செய்கிறான் கேரி ஸ்மித்

ஜனுவரி 6–12

1 நேபி 1–7

“நான் போய் செய்வேன்”

“தேவனின் காரியங்களை” நேபி பதிவுசெய்தான் (1 நேபி 6:3). நேபியின் பதிவைப் படிக்கும்போது, நீங்கள் காணும் தேவனின் காரியங்களில், குறிப்பாக ஆவியானவரிடம் இருந்து வரும் வலியுறுத்தல்களில் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஓர் உண்மைக் குடும்பம் அனுபவிக்கும் உண்மையான போராட்டங்களின் வரலாற்றைக் கொண்டு மார்மனின் புஸ்தகம் ஆரம்பிக்கிறது. இது கி.மு. 600ல் நிகழ்ந்தது, ஆனால் இன்றைய குடும்பங்களுக்கும் பரிச்சயமாகத் தோன்றும் இந்த வரலாற்றைப்பற்றிய காரியங்களும் இருக்கின்றன. பொல்லாப்பு பெருகிவந்த ஓர் உலகத்தில் இந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது, ஆனால் அவர்கள் தம்மைப் பின்பற்றுவதாக இருந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு நடத்திச் செல்வதாக கர்த்தர் வாக்குறுதி அளித்தார். செல்லும் வழியில் அவர்களுக்கு நல்ல நேரங்களும் கெட்ட நேரங்களும் வாய்த்தன; அவர்கள் மகா ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் அனுபவித்தனர், ஆனால் அவர்களுக்கிடையில் பெரிய அளவில் வாதங்களும் பிணக்குகளும் எழுந்தன. சுவிசேஷத்தின்படி வாழ முயற்சி செய்த ஒரு குடும்பத்தைப்பற்றிய இத்தகைய நீண்ட வரலாறு வேதத்தில் அரிதாகவே உள்ளது: தன்குடும்பத்தில் விசுவாசத்தை ஊக்குவிக்கப் போராடும் ஒரு தகப்பன், அவனை நம்புவதா வேண்டாமா என்று முடிவெடுக்க முயலும் குமாரர்கள், தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகப் பயப்படும் தாய், மேலும் பொறாமை மற்றும் பிணக்குகளோடு செயல்படும், சிலசமயம் ஒருவரை ஒருவர் மன்னிக்கும் சகோதரர்கள். மொத்தத்தில், அவர்களிடம் குறைபாடுகளிருந்தபோதிலும் விசுவாசத்தின் உதாரணங்களைப் பின்பற்றுவதில் உண்மையான ஆற்றல் இருக்கிறது என்பதை இந்தக் குடும்பம் நிருபித்துக்காட்டியது.

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

1 நேபி 1–6

வேதங்கள் பெரு மதிப்புள்ளது.

மார்மன் புஸ்தகத்தின் முதல் ஆறு அத்தியாயங்கள் பரிசுத்த புஸ்தகங்கள், பரிசுத்தப் பதிவுகள், மற்றும் கர்த்தரின் வார்த்தையின் பல குறிப்புகளை கொண்டுள்ளது. நீங்கள் 1 நேபி 1–6 ஐ வாசிக்கும்போது, தேவ வார்த்தை ஏன் “பெரு மதிப்புள்ளது” என்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? (1 நேபி 5–21). வேதங்களைப்பற்றி இந்த வாசகங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? வேதங்களை அதிக அர்ப்பணிப்புடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று உங்களை எது தூண்டுவதாகக் காண்கிறீர்கள்?

“Scriptures Legacy” (video, ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.

1 நேபி 1:7–15.

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்கிறது.

அதன் தலைப்புப் பக்கத்தில் கூறிய நோக்கத்துக்கு உண்மையாக, இயேசுவே கிறிஸ்து என்று அனைவரையும் நம்பவைக்க, லேகி பெற்ற இரட்சகரின் அற்புத தரிசனத்துடன் மார்மன் புஸ்தகம் ஆரம்பிக்கிறது. லேகி கண்டதிலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? உங்கள் வாழ்க்கையில் இரட்சகரின் “பெரிதும் அதிசயமுமான” சில செயல்கள் என்ன?? (1 நேபி 1:14).

1 நேபி 2

கர்த்தரை நாடி, அவரை நம்பும்போது, அவரால் என் இருதயத்தை மென்மையாக்க முடியும்.

லாமான், லேமுவேல் மற்றும் நேபி அனைவரும் ஒரே குடும்பத்தில் வளர்ந்து ஒரே விதமான அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், இந்த அத்தியாயத்தில் அவர்களுடைய தகப்பன் பெற்ற தெய்வீக வழிகாட்டுதலுக்கு அவர்களின் பதில்வினைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன. நீங்கள் 1 நேபி 2 ஐ வாசிக்கும்போது, நேபியின் சகோதரர்களின் இருதயங்கள் மென்மையாகாதபோது அவனுடைய இருதயம் மட்டும் ஏன் மென்மையானது என்று உங்களால் அறிய முடிகிறதா என்று பார்க்கவும். பரிசுத்த ஆவியானவர் அல்லது அவருடைய தீர்க்கதரிசி, யார் மூலம் கர்த்தரின் வழிகாட்டுதல் வந்தாலும் உங்களுடைய பதில்வினையைப்பற்றி கூட நீங்கள் சிந்திக்கலாம். கர்த்தருடைய வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் மிக விருப்பத்தோடு ஏற்கும்படி கர்த்தர் உங்கள் இருதயத்தை மென்மையாக்கியதை எப்போது நீங்கள் உணர்ந்தீர்கள்?

1 நேபி 3–4

அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தேவன் எனக்கு ஒரு வழியை ஆயத்தப்படுத்துவார்.

லாபானிடம் இருந்து பித்தளைத் தகட்டை பெறும்படி கர்த்தர் லேகி மற்றும் அவர் குடும்பத்துக்கு கட்டளையிட்டபோது, அவர் தமது கட்டளையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பான அறிவுறுத்தல்களை அளிக்கவில்லை. இது தேவனிடமிருந்து நாம் பெறும் பிற கட்டளைகள் அல்லது தனிப்பட்ட வெளிப்படுத்தல்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் உண்மையாகும், மேலும் இது அவர் “ஒரு கடினமான காரியத்தை” எதிர்பார்க்கிறாரோ என்ற உணர்வுக்கு நம்மை நடத்தலாம். (1 நேபி 3:5). 1 நேபி 3:7, 15–16 ல் காணப்படுவதில் எது கர்த்தருடைய கட்டளைக்கு நேபி கீழ்ப்படிந்ததில் உங்களுக்கு ஊக்கத்தை அளித்தது ? “போய் செய்வதில்” உங்களை ஈர்த்ததாக நீங்கள் உணர்ந்தது ஏதாவது இருகிறதா?

நீங்கள் 1 நேபி 1–7ஐ வாசிக்கும்போது, லேகிக்கும் அவனது குடும்பத்துக்கும் தேவன் ஆயத்தம் செய்த வழியில் வழிகளைத் தேடவும். இதை அவர் உங்களுக்கு எவ்வாறு செய்தார்?

நீதிமொழிகள் 3:5–6; 1 1 நேபி 17:3; “கீழ்ப்படிதல்,“ சுவிசேஷப் பாடப்பொருள்கள், topics.ChurchofJesusChrist.org; மார்மன் புஸ்தகம் காணொலிகளின் தொகுப்பு ChurchofJesusChrist.org ல் அல்லது சுவிசேஷ நூலகச் செயலி ஐயும் பார்க்கவும் .

1 1 நேபி 4:1–3; 5:1-8; 7:6-21

தேவனின் செயல்களை நினைவுகூர்தல் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் விசுவாசத்தை எனக்கு அளிக்க முடியும்.

லாமானும் லேமுவேலும் முறுமுறுப்பதைப்போல உணர்ந்தபோது, அவர்களை ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தவும் எப்போதுமே நேபியும் லேகியும் அருகில் இருந்தனர். முறுமுறுப்பதைப்போல உணர்வு உங்களுக்கு ஏற்படும்போது, நேபி மற்றும் லேகியின் வார்த்தைகளை வாசிப்பது விலைமதிப்பற்ற ஆலோசனையையும் தோற்றத்தையும் அளிக்க முடியும். தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தேவன் மேல் விசுவாசத்தை வளர்க்க நேபியும் லேகியும் எவ்வாறு உதவி செய்ய முயன்றார்கள்? (1 நேபி 4:1–3; 5:1–8; 7:6–21பார்க்கவும்). அடுத்த முறை முறுமுறுக்க அல்லது கலகம் செய்ய உங்களுக்கு தோன்றும்போது உங்களுக்கு உதவி செய்ய அவர்களின் எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும்படியாக எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

1 நேபி 1–7

1 நேபி 1–7 முழுவதிலும், லேகி மற்றும் சரயாவின் குடும்ப அங்கத்தினர்களுக்கு இடையில் இருக்கும் பரஸ்பரங்களைக் கவனிக்கச் சொல்லி குடும்ப அங்கத்தினர்களை உங்களால் ஊக்கப்படுத்த முடியும். இந்த உறவுகளில் இருந்து நமது குடும்பத்துக்கு உதவக்கூடிய எதை நாம் கற்றுக்கொள்ள முடியும்?

படம்
நேபியும் அவனது குடும்பமும் தகடுகளை ஆராய்கிறார்கள்

நேபியும் அவனது குடும்பமும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை கனம்பண்ணினார்கள்.

1 நேபி 2:20

1 நேபி 2:20ல் உள்ள கொள்கை பெரும்பாலும் மார்மன் புஸ்தகம் முழுவதும் திரும்பத்திரும்ப வருகிறது. இந்த ஆண்டு, ஒன்றாக நீங்கள் மார்மன் புஸ்தகத்தை தியானிக்கும்போது எவ்வாறு உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்த முடியும்? இந்த வசனத்தின் அம்சமாக இருக்கும் கர்த்தரின் வாக்குறுதியை நீங்கள் இணைந்து ஒரு சுவரொட்டியாக உருவாக்கி அதை உங்கள் வீட்டில் காட்சியாக வைக்க முடியும். கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொண்டபோது அவர் உங்கள் குடும்பத்தைச் செழிக்கச் செய்தார் என்பதை எவ்வாறு கண்டீர்கள் என்பதைப்பற்றி அவ்வப்போது உரையாட இது ஒரு நினைவூட்டலாகப் பயன்படும். இந்த அனுபவங்களை சுவரொட்டியில் குறித்துவைக்க கருத்தில் கொள்ளுங்கள்.

1 நேபி 2:11–13; 3:5–7

கர்த்தருடைய கட்டளைகளுக்கு லாமனும் லேமுவேலும் கீழ்ப்படிந்த விதத்துக்கும், நேபியின் கீழ்ப்படிதலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைக் கவனிப்பதிலிருந்து ஒருவேளை உங்கள் குடும்பம் பலனடையக் கூடும். 1 நேபி 2:11–13; 3:5–7 லிருந்து முறுமுறுப்பைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நாம் விசுவாசத்தைக் கடைபிடிக்கும்போது என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?

1 நேபி 3:19–20; 5:10–22;6

உங்கள் வாழக்கையிலிருந்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களின் ஒரு பதிவைப் பேண இந்த வசனங்கள் உங்கள் குடும்பத்தை ஊக்குவிக்க முடியும். நேபியும் லேகியும் தங்கள் குடும்பத்தின் அனுபவங்களைப்பற்றிய பதிவை வைத்திருந்தது போல நீங்களும் ஒரு குடும்ப நாட்குறிப்பை எழுதத் தொடங்கலாம். உங்கள் குடும்ப பதிவில் நீங்கள் எதை சேர்க்கலாம்?

1 நேபி 7:19–21

இந்த வசனங்களில் நேபியின் எடுத்துக்காட்டில் நம்மை ஈர்ப்பது என்ன? நாம் ஒருவரை ஒருவர் “வெளிப்படையாக” மன்னிக்கும்போது நமது குடும்பம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறது?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்

நமதுபோதித்தலை மேம்படுத்துதல்

வேதவசனங்ளைத் தொடர்ந்து தியானிக்கவும். வீட்டில் ஓர் அர்த்தமுள்ள போதித்தலை உருவாக்க ஒரு முக்கிய வழி உங்கள் குடும்பத்துக்கு தொடர்ந்த கற்றுக்கொள்ளுதலின் வாய்ப்புகளை உருவாக்குதலே ஆகும். தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்த்தார், “அன்றாட வாசிப்பு மற்றும் வேதத்தை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல் போன்று, குறுகிய கால பாட திட்டம் அதிக ஆற்றலுள்ளதாக இருப்பதில்லை” (“Be Your Best Self,” Ensign or Liahona, May 2009, 68).

படம்
குடிபோதையில் இருக்கும் லாபானின் அருகில் நிற்கும் நேபி

ஆவியானவரின் குரலுக்கு நான் கீழ்ப்படிந்தேன், வால்டர் ரேன்