என்னைப் பின்பற்றி வாருங்கள்
தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள்


“தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020

தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள்

மார்மன் புஸ்தகத்தை தியானித்தல் உங்களை மாற்றும். அது உங்கள் குடும்பத்தை மாற்றும். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மறுஸ்தாபிதமானதிலிருந்து மார்மன் புஸ்தகத்தின் வல்லமையைப்பற்றி பிற்கால தீர்க்கதரிசிகள் வாக்குத்தத்தங்களை செய்திருக்கின்றனர். பின்வரும் கூற்றுகளை சிந்தித்து, அவற்றைத் தொடர்ந்து பரிசீலனை செய்யுங்கள். இந்த ஆசீர்வாதங்களில் நீங்கள் எதைப் பெறவிரும்புகிறீர்கள்? நீங்கள் மார்மன் புஸ்தகத்தை வாசிக்கும்போது, இந்த வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேறுகிறது என்பதைப் பதிவுசெய்து பிறரோடும் பகிர்ந்துகொள்வதைப்பற்றி சிந்தியுங்கள்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்: “உலகில் இருக்கும் புஸ்தகங்களில் மார்மன் புஸ்தகமே மிகவும் சரியானது என்றும், நம் மதத்தின் மையக்கல் என்றும், பிற புஸ்தகங்களை விட இந்தப் புஸ்தகத்தின் கட்டளைகளில் நிலைத்திருப்பதன் மூலம் ஒருவர் தேவனுக்கு மிக அருகில் நெருங்கி வருவார் என்றும் நான் சகோதரர்களுக்குக் கூறினேன்” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 64).

தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் “உண்மையில் மார்மன் புஸ்தகம் நமக்கு சத்தியத்தையே போதிக்கிறது என்றாலும் அதைமட்டுமே நமக்கு அது போதிக்கவில்லை. மார்மன் புஸ்தகம் உண்மையில் கிறிஸ்துவுக்கு சாட்சியையும் பகர்கிறது என்றாலும் அதை மட்டுமே அது செய்வதில்லை. ஆனால் இன்னும் சில கூடுதல் காரியங்கள் உள்ளன. இந்த புஸ்தகத்தை தீவிரமாக நீங்கள் தியானிக்க ஆரம்பித்தவுடன் உங்கள் வாழ்க்கைக்குள் பாய ஆரம்பிக்கிற ஒரு வல்லமை இந்த புஸ்தகத்திலுள்ளது. இச்சையை அடக்கும் அதிக வல்லமையை நீங்கள் காண்பீர்கள். வஞ்சனையைத் தவிர்க்கும் வல்லமையை நீங்கள் காண்பீர்கள். இடுக்கமும் நெருக்கமுமான பாதையில் நிலைத்து நிற்கும் வல்லமையைக் காண்பீர்கள். ‘வாழ்க்கையின் வார்த்தைகள்’ என வேதங்கள் அழைக்கப்படுகின்றன (கோ&உ 84:85), மார்மன் புஸ்தகத்தைத் தவிர வேறு எங்கும் இது அதிக உண்மையானது அல்ல. அந்த வார்த்தைகளின் மேல் பசியும் தாகமுள்ளவர்களாயிருக்க நீங்கள் ஆரம்பிக்கும்போது நீங்கள் அதிகதிகமான அளவில் வாழ்வைக் கண்டடைவீர்கள்” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 141).

தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி: “சகோதர சகோதரிகளே, இதற்கு முன் எத்தனை முறை படித்திருந்தாலும் சரி, மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு படித்தீர்கள் என்றால், கர்த்தருடைய ஆவி இன்னும் அதிக அளவில் உங்கள் இருதயங்களுக்குள் வரும் என்பதை எந்தவித நிபந்தனையுமின்றி நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற வலிமையான தீர்மானம் எழும், மேலும் தேவனுடைய குமாரனின் ஜீவிக்கும் உண்மைக்கு ஒரு வலிமையான சாட்சியும் உருவாகும்” (Teachings of Presidents of the Church: Gordon B. Hinckley [2016], 233).

தலைவர் ரசல் எம்.நெல்சன்: “என் அருமை சகோதர சகோதரிகளே, மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு தினமும், நீங்கள் படிக்கும்போதுஒவ்வொரு நாளும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள் என நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நீங்கள் தியானிப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் கிடைக்கும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும் என்று நான் வாக்களிக்கிறேன். மார்மன் புஸ்தகத்தில் தினமும் உங்களை நீங்களே மூழ்கடித்தீர்கள் என்றால், பற்றிப்பிடிக்கும் கொள்ளை நோயான இனக்கவர்ச்சி ஆபாசங்களின் மனதை மறக்கச் செய்யும் போதைகள் உட்பட அந்தந்த நாட்களின் தீமைகளுக்கு எதிராக இருந்து தற்காக்கப்படுவீர்கள்”(“The Book of Mormon: What Would Your Life Be Like without It?Ensign or Liahona, Nov. 2017, 62–63).