என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜனுவரி 27–பெப்ருவரி 2. 1 நேபி 16–22: “நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்”


“ஜனுவரி 27–பெப்ருவரி 2. 1 நேபி 16–22: ‘நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜனுவரி 27–பெப்ருவரி 2. 1 நேபி 16–22,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
லியஹோனாவை லேகி பார்த்தல்

லேகியும் லியஹோனாவும், ஜோசப் பிரிக்கி

ஜனுவரி 27–பெப்ருவரி 2

1 நேபி 16–22

“நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்“

நீங்கள் 1 நேபி 16–22 ஐ வாசிக்கும்போது, உங்களைக் கவரும் வாசகங்களைத் தேடுங்கள். சிலர் தங்கள் வேதங்களில் இத்தகைய வசனங்களை வண்ணமிட விரும்புவார்கள்; மற்றவர்கள் பக்க ஓரத்தில் குறிப்பு எழுதுவார்கள். நீங்கள் பெறும் உணர்த்துதலை எவ்வாறு நீங்கள் பதிவுசெய்வது என்று எண்ணுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

லேகியின் குடும்பம் வாக்குத்தத்த தேசத்தை நோக்கி பயணம் சென்றபோது, கர்த்தர் இந்த வாக்குறுதியை அவர்களுக்கு அளித்தார்: “நீங்கள் என் கற்பனைகளைக் கைக்கொண்டால், நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்” (1 நேபி 17:13). தெளிவாக, அந்த வாக்குறுதியினால் அவர்களுடைய பயணம் எளிதாக இருக்கும் என்பது பொருள் அல்ல, குடும்ப அங்கத்தினர்கள் இன்னும் சம்மதிக்கவில்லை, விற்கள் உடைந்தன, மேலும் மக்கள் போராடி மரித்தனர், மற்றும் கச்சாப் பொருட்களிலிருந்து அவர்கள் ஒரு கப்பலைக் கட்ட வேண்டியதாயிற்று. இருப்பினும், குடும்பம் துன்பங்களை அல்லது சாத்தியமற்றதாகத் தோன்றும் பணிகளை எதிர்கொண்டபோது, கர்த்தர் ஒருபோதும் தூரத்தில் இல்லை என்பதை நேபி அறிந்தான். தேவன் “[விசுவாசிகளை] போஷித்து, பெலப்படுத்தி, தாம் அவர்களுக்கு கட்டளையிட்ட காரியத்தை அவர்கள் நிறைவேற்றும்படியான வழியை அவர்களுக்கு அளிப்பார்” என்பதை அவன் அறிந்தான். (1 நேபி 17:3). நேபியும் அவனது குடும்பமும் போன்ற நல்ல மனிதர்களுக்கு ஏன் மோசமான காரியங்கள் நடக்கின்றன என்று எப்போதாவது நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டானால், நீங்கள் இந்த அதிகாரத்தில் உள்ளுணர்வுகளைக் காண முடியும். ஆனால் மோசமான காரியங்கள் நடக்கும்போது நல்ல மக்கள் யார் என்பதை உங்களால் காணமுடியுமென்பது மிக முக்கியமானது.

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்திற்கான ஆலோசனைகள்

1 நேபி 16–18

நான் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, சவால்களை சந்திக்க தேவன் எனக்கு உதவிசெய்வார்.

ஓர் வில் உடைந்துபோனதை சமாளிப்பது உட்பட பல சவால்களை நேபியின் குடும்பம் சந்தித்ததை 1 நேபி அதிகாரங்கள் 16–18 விவரிக்கின்றன (1 நேபி 16:17–32பார்க்கவும்), இஸ்மவேலின் மரணம் ( 1 நேபி 16:34–39பார்க்கவும்), ஒரு கப்பலைக் கட்டுதல் ( 1 நேபி 17:7–16; 18:1–4 பார்க்கவும்), மற்றும் குடும்ப கருத்து வேறுபாடு(1 நேபி 18:9–22 பார்க்கவும்). இந்த சவால்களுக்கு நேபியின் பதில்கள் அவனது குடும்ப அங்கத்தினர் சிலரின் பதில்களிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது? இந்த பதில்களின் விளைவுகள் என்ன?

நீங்கள் காண்பதை ஓர் அட்டவணையில் பின்வருமாறு தலைப்பிட்டு பதிவு செய்தால் உதவியாக இருக்கும்: “சவால்,” “நேபியின் பதில்,” “பிறரின் பதில்கள்,” மற்றும் “விளைவுகள்.” மற்றவர்கள் விசுவாசமில்லாமலிருந்தபோது நேபியால் இருக்க முடிந்தது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் சவால்களை எதிர்கொள்ள நேபி மற்றும் அவனது குடும்பத்தின் எடுத்துக்காட்டு எவ்விதம் உதவ முடியும் என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

தொடர்புள்ள காணொலிகளை மார்மன் புஸ்தகம் காணொலி தொகுப்பில் ChurchofJesusChrist.org அல்லது சுவிசேஷ நூலகச் செயலியிலும் பார்க்கவும்.

1 நேபி 16:10–16, 23–31; 18:11–22

கர்த்தர் சிறியதும் எளியதுமான வழிகள் மூலம் என்னை வழிநடத்துகிறார்.

லேகியின் குடும்பத்தைத் தேவன் வனாந்தரத்தில் வழிநடத்தியபோது, வாக்குத்தத்தத்தின் தேசத்துக்குச் செல்ல அவர்களுக்கு ஒரு விவரமான பயணத்திட்டத்தை அவர் வழங்கவில்லை. ஆனால் லேகி தினமும் தன் குடும்பத்தை இலக்கை நோக்கி வழிநடத்த அவனிடம் லியஹோனாவை அவர் கொடுத்தார். வழிகாட்டவும் திசைகாட்டவும் பரலோக பிதா உங்களுக்கு என்ன வழங்கி இருக்கிறார்? “சிறிய காரியங்களால் கர்த்தர் பெரிய காரியங்களைக் கொண்டுவரமுடியும்” என்பதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்?1 நேபி 16:29).

நீங்கள் 1 நேபி 16:10–16, 23–31 மற்றும் 18:11–22 வாசிக்கும்போது, தேவன் தம் பிள்ளைகளை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை விவரிக்கும் கொள்கைகளின் பட்டியலை உருவாக்குவதை கருத்தில் கொள்ளுவது (உதாரணமாக, 1 நேபி 16:10 தேவன் சிலவேளைகளில் நம்மை எதிர்பாராத வழிகளில் வழிநடத்துகிறார் என்பதை போதிக்கலாம்). இந்த கொள்கைகளைக் கொண்டு என்ன அனுபவங்களை நீங்கள் பெற்றீர்கள்?

ஆல்மா 37:7, 38–47; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33–34 பார்க்கவும்.

படம்
லேகி லியஹோனாவைப் பயன்படுத்துதல்

நீங்கள் ஆயத்தமாயிருந்தால் பயப்படமாட்டீர்கள், கிளார்க் கெல்லி பிரைஸ்

1 நேபி 19:23–24, 20; 20–22

என்னால் என்னோடு. “எல்லா வேதங்களையும் ஒப்பிடமுடியும்”.

இஸ்ரேவேலின் பிள்ளைகள் அனைவருக்கும் ஏசாயா எழுதினான், மேலும் குறிப்பாக, இதில் தன்னுடைய குடும்பமும் அடங்கியுள்ளதை நேபி கண்டான்—அது உங்களையும் உள்ளடக்கியுள்ளது ( 1 நேபி 19:23–24 பார்க்கவும்). ஏசாயாவை நேபி மேற்கோள் காட்டியுள்ளது குறித்து தலைவர் ஹென்றி பி. ஐரிங் கூறினார், “நான் ஏசாயாவின் வார்த்தைகளைப் படித்தேன் … ஏசாயாவின் அந்தப் பகுதிகளை நேபி தேர்ந்தெடுத்ததாகக் கொண்டு நான், அதன் கற்பனையைப்பற்றி கவலைப்படாமல், எனது இருதயத்துக்குள் நேரடியாக கர்த்தர் என்னோடு பேசுவதாக எடுத்துக்கொள்ளமுடியும்” (“The Book of Mormon Will Change Your Life,” Ensign, Feb. 2004, 10).

தலைவர் ஐரிங்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு, பின்வருவன போன்ற கேள்விகளை அதிகாரங்கள் 20–22 ஐ வாசிக்கும்போது எண்ணிப்பாருங்கள்:

1 நேபி 20:1–9.இந்த வசனங்களில் எந்த சொற்றொடர்கள் இஸ்ரவேல் ஜனங்களை விவரிக்கின்றன? லாமானையும் லெமுவேலையும் அவர்கள் எவ்வாறு விவரிக்கிறார்கள்? நீங்கள் உங்களுக்காக என்ன எச்சரிக்கைகளையும் பிரயோகத்தையும் காண்கிறீர்கள்?

1 நேபி 20:17–22.கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வாறு வழிநடத்தினார்? அவர் லேகியின் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்தினார்? அவர் உங்களை எவ்வாறு வழிநடத்துகிறார்?

கர்த்தர் உங்களோடு பேசிக்கொண்டிருந்ததாக உங்களை உணரவைக்கிற 1 நேபி 20–22 ல், வேறு எதைக் காண்கிறீர்கள்? அதிகாரம் 22லிருக்கும் நேபியின் விளக்கம், ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்து கொள்ள எவ்வாறு உங்களுக்கு உதவுகிறது?

1 நேபி 21

இஸ்ரவேல் வீட்டார் மற்றும் புறஜாதியார் என்பவர்கள் யார்?

கர்த்தரால் இஸ்ரவேல் என்ற பெயர் கொடுக்கப்பட்ட இஸ்ரவேல் வீட்டார் என்போர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான யாக்கோபின் சந்ததியார் (Genesis 32:28; 35:10 பார்க்கவும்; Bible Dictionary, “Israel”)ஐயும் பார்க்கவும். கர்த்தர் இஸ்ரவேலுடன் சில உடன்படிக்கைகள் செய்தார், மற்றும் அவனது சந்ததியார் தேவனின் உடன்படிக்கையின் ஜனம் என்று கருதப்பட்டனர். இருப்பினும், தலைமுறைகள் கழித்து, அவர்களில் பலர் கர்த்தரை விட்டு விலகி விட்டனர் மற்றும் அதன் விளைவாக அவர்கள் உலகெங்குமிலும் சிதறிப்போயினர்.

இந்த பாகங்களிலுள்ள இந்தச் சொல்லான புறஜாதியார் என்பது, இன்னமும் சுவிசேஷத்தை அறியாத மக்களைக் குறிக்கிறது ( Bible Dictionary, “Gentile”பார்க்கவும்). பிற்காலங்களில் புறஜாதியாருக்கு சுவிசேஷம் கொடுக்கப்படும் என்றும் மற்றும் இஸ்ரவேல் வீட்டாருக்கு போதிப்பதிலும் கூட்டிச்சேர்ப்பதிலும் கருவியாயிருக்கவும் ஏசாயா போதித்தான் (1 நேபி 21:22; 22:8–12 பார்க்கவும்; ஏசாயா 60; 66:18–20ஐயும் பார்க்கவும்).

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

1 நேபி 17:1–6, 17–22

ஒருவேளை வனாந்தரத்தில் பயணம் செய்த நேபியின் விவரத்திலிருந்து ( 1 நேபி 17:1–6பார்க்கவும்) அவருடைய சகோதரன் எழுதிய விவரம் உங்கள் குடும்பத்துக்கு முரணாகத் தோன்றலாம் ( 1 நேபி 17: 17–22பார்க்கவும்). அவர்கள் ஒரே நிகழ்வுகளை மிக வித்தியாசமாக பார்த்தார்களென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? ஒரு விசுவாசமுள்ள மனநிலை கொண்டிருப்பதைப்பற்றி நேபியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

1 நேபி 17:17–22; 18:9–16

ஒரு குடும்பத்தில் பொறாமை, போட்டி, மற்றும் புகார் கூருதல் ஆகியவற்றின் விளைவுகள் என்ன? இந்தப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

1 நேபி 19:22–24

“அது [அவர்களுடைய] ஆதாயத்துக்கும் கற்றுக்கொள்வதற்காகவும் இருக்கக்கூடும்” (1 நேபி 19:23) என அவனுடைய குடும்பத்துக்கு வேதங்களை ஒப்பிட்டான். உங்களோடு உங்கள் குடும்பம் ஒப்பிடக் கூடிய ஏராளமான கதைகள் 1 நேபி 16–18 ல் உள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றை நீங்கள் நடித்துக் காட்டி அது உங்கள் குடும்பத்துக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று கலந்துரையாடலாம்.

1 நேபி 21:14–16.

இந்த வசனங்களில் உள்ள செய்தி தாம் மறக்கப்பட்டுவிட்டதாக உணரும் ஒருவருக்கு எவ்வாறு உதவக்கூடும்?

பிள்ளைகளுக்கு கற்பிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்புபார்க்கவும்.

தனிப்பட்ட தியானத்தை மேம்படுத்தல்

கர்த்தரிடம் உதவி கேட்கவும். வெளிப்படுத்தல் மூலம் வேதங்கள் அளிக்கப்பட்டன, மேலும் அவற்றை உண்மையில் புரிந்துகொள்ள நமக்கு வெளிப்படுத்தல் தேவை. கர்த்தர் வாக்குத்தத்தம் அளித்துள்ளார், “நீங்கள்…விசுவாசத்திலே என்னிடம் கேட்டால்… மெய்யாகவே இந்தக் காரியங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்” (1 நேபி 15:11).

படம்
படகில் நேபியும் அவனது குடும்பமும்

அவர்கள் என்னை மிகக் கடுமையாக நடத்தினர், வால்ட்டர் ரானே