என்னைப் பின்பற்றி வாருங்கள்
பெப்ருவரி 10–16. 2 நேபி 6–10: “நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!”


“பெப்ருவரி 10–16. 2 நேபி 6–10: ‘நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

பெப்ருவரி 10–16. 2 நேபி 6–10,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
கெத்செமனேயில் இயேசு ஜெபித்தல்

என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக,–ஹேரி ஆன்டர்சன்

பெப்ருவரி 10–16

2 நேபி 6–10.

“நம் தேவனின் திட்டம் எவ்வளவு மகத்தானது!”

நீங்கள் 2 நேபி 6–10ஐப் படிக்கும்போது, கர்த்தர் உங்களுக்கு என்ன போதிக்க முயற்சி செய்கிறார் என்பதை சிந்தியுங்கள். நீங்கள் இந்த சத்தியங்களை இனம்காணும்போது, அவற்றைப் பதிவுசெய்து, நீங்கள் கற்றுக்கொண்டிருப்பவைகளுக்கு ஏற்ப எவ்வாறு உங்களால் செயல்பட முடியும் என்பதை ஜெபத்தோடு எண்ணிப்பாருங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

லேகியின் குடும்பம் எருசலேமை விட்டுச் சென்று குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் ஆகியிருந்தன. எருசலேமிலிருந்தும், மீதியாக இருந்த தேவனின் உடன்படிக்கையின் ஜனங்களையும் விட்டுப் பாதி உலகைத் தாண்டி அவர்கள் ஓர் அந்நியமான புதிய தேசத்தில் இருந்தார்கள். லேகி மரித்துப்போனான், மேலும் அவனது சந்ததியார் “தேவனுடைய எச்சரிக்கைகளையும், வெளிப்படுத்தல்களையும் விசுவாசித்த” நேபியர்களுக்கும், விசுவாசிக்காத லாமானியர்களுக்குமிடையில் ஒரு நூற்றாண்டு நீளக்கூடிய பிணக்கை, ஏற்கெனவே தொடங்கியிருந்தனர்.(2 நேபி 5:6). இந்தச் சூழ்நிலைகளில், நேபியின் இளைய சகோதரனும், தற்போது நேபியர்களுக்கு ஒரு போதகராக நியமிக்கப்பட்டவனுமான யாக்கோபு, தேவன் ஒருபோதும் அவர்களை மறக்கமாட்டார், ஆகையால் அவர்கள் அவரை ஒருபோதும் மறக்கக்கூடாது என உடன்படிக்கையின் ஜனங்கள் அறியவேண்டும் என்று விரும்பினான். உடன்படிக்கைகள் சிறுமைப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தல்கள் மறுதலிக்கப்படுகிற, நம்முடைய உலகத்தில் நிச்சயமாக தேவையானது இந்தச் செய்தியே. “அவரை நாம் நினைவுகூருவோமாக, … நாம் தூர தள்ளிவிடப்படாததனிமித்தம். … கர்த்தரின் வாக்குத்தத்தங்கள் மகத்துவமானதாய் இருக்கின்றன” அவன் பிரகடனம் செய்தான்(2 நேபி 10:20–21). அந்த வாக்குத்தத்தங்களுக்கு மத்தியில், மரணத்தையும் பாதாளத்தையும் வெற்றிகொள்ள “முடிவற்ற பாவநிவர்த்தியை” விட பெரிதானது வேறொன்றில்லை (2 நேபி 9:7). “ஆகவே,” “உங்கள் இருதயங்களில் திடன்கொள்ளுங்கள்” எனச் சொல்லி யாக்கோபு முடித்தான்,! (2 நேபி 10:23).

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்திற்கான ஆலோசனைகள்

2 நேபி 6–8

கர்த்தர் தமது ஜனத்திடம் இரக்கம் உள்ளவர், தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார்.

அவர்கள் இஸ்ரவேல் வீட்டாரின் பகுதி என்றும் தேவனையும் அவரது வாக்குத்தத்தங்களையும் நம்பலாம் என்றும் தன்னுடைய ஜனங்கள் புரிந்துகொள்ள உதவும்படியாக, 2 நேபி 6–8ல் பதிவுசெய்யப்பட்ட ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை யாக்கோபு மேற்கோள் காட்டினான். இஸ்ரவேல் சிதறடிக்கப்படுதலையும், இரட்சகரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தன் ஜனங்களின் கூடிச்சேர்தலையும், மீட்பையும் ஏசாயா விவரித்தான். நீங்கள் வாசிக்கும்போது, பின்வருவதைப் போன்ற கேள்விகளை சிந்திக்கவும்:

  • என் மீது இரட்சகரின் மீட்கும் அன்பைப்பற்றி நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

  • அவரைத் தேடுபவர்களுக்கு இரட்சகர் என்ன ஆறுதலை அளிக்கிறார்?

  • இரட்சகருக்காகவும் அவருடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களுக்காகவும் அதிக விசுவாசத்தோடு “காத்திருக்க” நான் என்ன செய்ய முடியும்?

2 நேபி 9:1–26

தமது பாவநிவிர்த்தியின் மூலம், இயேசு கிறிஸ்து அனைத்து ஜனங்களையும் சரீர மற்றும் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து விடுவிக்கிறார்.

மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்க ஓர் இரட்சகரின் இன்றியமையாத தேவையைப்பற்றி ஒருவரிடம் எடுத்துரைக்க என்ன வார்த்தைகள் அல்லது படங்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள்? யாக்கோபு “பயங்கரமான” மற்றும் “கொடிய மிருகம்” என்ற சொற்களைப் பயன்படுத்தினான். “மரணமும் பாதாளமுமாகிய அந்த கொடியவன்” மற்றும் தேவன் நமக்காக ஆயத்தப்படுத்திய “தப்பித்தலைப்பற்றி” யாக்கோபு என்ன போதித்தான்? (2 நேபி 9:10). நீங்கள் 2 நேபி 9:1–26 வாசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு என்ன நடக்கும் என்பதை ஒரு வண்ணம் கொண்டு அடையாளப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். பின்னர், இன்னொரு வண்ணத்தில், இரட்சகரின் பாவநிவிர்த்தியின்மூலம் நாம் என்ன பெறலாம் என்பதையும் நீங்கள் அடையாளப்படுத்தலாம். உங்களை “தேவனுடைய ஞானம், இரக்கம் மற்றும் கிருபையை” புகழும்படிச் செய்த இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியைப்பற்றிய என்ன சத்தியங்களை நீங்கள் காண்கிறீர்கள்? (2 நேபி 9:8).

“Atonement of Jesus Christ,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும் .

2 நேபி 9:27–54.

நான் கிறிஸ்துவினண்டை வந்து அவருடைய பாவநிவிர்த்தியின் மகிமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

“மனுஷர் யாவரும் அவருடைய சத்தத்துக்கு செவிகொடுப்பார்களெனில், அவர்களை இரட்சிக்கும்படியாகவே இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார்“ (2 நேபி 9:21; italics added). வேறு வார்த்தைகளெனில், அவர் அருளும் மீட்பின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நாம் மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். மீட்பின் மாபெரும் திட்டத்தை விவரித்த பின்னர், பாவநிவிர்த்தியின் ஆசீர்வாதத்தைப் பெற நமக்கு உதவிசெய்வதற்காக யாக்கோபு 2 நேபி 9:27–54ல், காணப்படும் முக்கியமான எச்சரிக்கைகளையும் அழைப்புகளையும் கொடுத்தான், இது போன்ற ஓர் விளக்கப்படத்தில் அவற்றைப் பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும்:

எச்சரிக்கைகள்

அழைப்புகள்

எச்சரிக்கைகள்

அழைப்புகள்

எச்சரிக்கைகள்

அழைப்புகள்

இந்த எச்சரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்கு பதில்வினைச் செய்வதில் என்ன செய்யவேண்டும் என ஆவியால் தூண்டப்படுவதாக நீங்கள் உணர்கிறீர்கள்?

2 நேபி 10:20, 23–25

இயேசு கிறிஸ்துவின் பலியினிமித்தம், நான் என் இருதயத்தை “திடன்படுத்திக் கொள்ள” முடியும்.

யாக்கோபின் செய்தி மகிழ்ச்சி தரும் ஒன்று. அவன் கூறினான், “நீங்கள் களிகூறும்படிக்கும், உங்கள் தலைகளை எப்போதும் உயர்த்தும்படிக்கும் நான் இவைகளை உங்களிடம் பேசுகிறேன்.” (2 நேபி 9:3). நீங்கள் 2 நேபி 10:20, 23–25 ஐ வாசிக்கும்போது, உங்களுக்கு எது நம்பிக்கையை அளிப்பதாகக் காண்கிறீர்கள்? உங்களுக்கு நம்பிக்கை அளித்ததாக நீங்கள் 2 நேபி 9–10 ல் வேறு எதைக் கண்டீர்கள்? நீங்கள் ஊக்கமிழந்தவராக உணரும்போது இந்த காரியங்களை நினைவில் வைத்திருக்க என்ன செய்வீர்கள்?

யோவான் 16:33ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

2 நேபி 8:3–7

நீங்கள் 2 நேபி 8:3 ஐ வாசிக்கும்போது, நீங்கள் ஒரு வனாந்தரம் மற்றும் ஒரு தோட்டத்தின் படங்களைக் காட்டலாம். நம் வாழ்க்கையின் வனாந்தரங்களை கர்த்தர் எவ்வாறு தோட்டங்களாக மாற்றுகிறார்? வசனங்கள் 4–7ல், வசனம் 3 ல் விவரிக்கப்பட்ட மகிழ்ச்சியை அடையும்படியாக நாம் என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் ஆலோசனை கூறுகிறார்?

2 நேபி 8:24–25

இயேசு கிறிஸ்துவின் மிகவும் உண்மையுள்ள சீஷர்களாகுவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளில் சீயோன் ஜனங்களுக்கு ஏசாயாவின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் எவ்வாறு வலிமைப்படுத்தக் கூடும்? ஆவிக்குரிய பிரகாரமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதற்கு விழித்து எழுவதும் ஆடை அணிவதும் எவ்வாறு ஒப்பாகிறது?

2 நேபி 9:1–26

இயேசு கிறிஸ்துவின் “எல்லையில்லா பாவநிவிர்த்தியின்” மாபெரும் பரிமாணத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள உங்கள் குடும்பம் என்ன செய்யலாம்? (வசனம் 7). ஒருவேளை அவர்கள் எண்ணிக்கையில் அளவற்றதாக இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாம் அல்லது அவற்றைப்பற்றி சிந்திக்கலாம்—ஒரு வயலில் உள்ள புல்லிதழ்கள், ஒரு கடற்கரையின் மணல் துகள்கள், அல்லது வானத்து நட்சத்திரங்கள். இரட்சகரின் பாவநிவிர்த்தி எவ்வாறு எல்லையற்றதாக இருக்கிறது? 2 நேபி 9ல் எந்த சொற்றொடர்கள் இரட்சகர் நமக்காக செய்தவற்றுக்காக நமது நன்றியறிதலை ஆழப்படுத்துகிறது?

2 நேபி 9:27–44

ஒருவேளை இந்த வாரத்தில் ஒரு நாள் உங்கள் குடும்பம் எச்சரிக்கைகளை தேடி (“ஐயோ”க்கு முன்னதாக). 2 நேபி 9:27–38ல் தேடலாம், இவற்றில் எது உங்கள் குடும்பம் கலந்துரையாட குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் காணப்படுகிறது? இன்னொரு நாள், யாக்கோபு தன் ஜனங்கள் நினைவில் வைத்துக் கொள்ள அழைத்ததை 2 நேபி 9:39–44ல், தேடலாம்.

2 நேபி 9:28–29, 50–51

“மனுஷனுடைய வீணான, பெலனற்ற, மதியீனத்தைப்பற்றிய சில எடுத்துக்காட்டுகள் யாவை? (வசனம் 28). தேவ காரியங்கள் மேல் அதிகமாகவும், உலக விஷயங்கள் மேல் குறைவாகவும் மதிப்பை வைக்க நாம் என்ன செய்யலாம்?

2 நேபி 9:45

ஒரு காகிதச் சங்கிலியை கோர்த்தும் பின்னர் முறைவைத்து அணிந்தும், உதறியும் உங்கள் குடும்பம் மகிழலாம். பாவங்கள் எவ்வாறு சங்கிலிகளைப் போன்றவை? அவற்றை உதறிவிட இரட்சகர் எவ்வாறு நமக்கு உதவுகிறார்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், ஆரம்ப வகுப்புக்காக ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

கிடைக்கப்பெறுபவராகவும் அணுகக்கூடியவராகவும் இருங்கள். “சில சிறந்த போதிக்கும் தருணங்கள் ஒரு [குடும்ப] அங்கத்தினரின் இருதயத்தில் ஒரு கேள்வி அல்லது அக்கறையாகத் தொடங்குகிறது. … உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் நீங்கள் அவர்கள் கூறுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளச் செய்யுங்கள்” (இரட்சகரின் வழியில் போதித்தல்,16).

படம்
இயேசு ஜனங்களை குணமாக்குகிறார்

“அவர்கள் தம்முடைய சத்தத்துக்கு செவிகொடுப்பார்களேயானால்” அனைத்து தேவனின் பிள்ளைகளையும் இரட்சகர் இரட்சிப்பார்(2 நேபி 9:21). அநேக பலவிதமான நோயாளிகளை அவர் குணமாக்கினார், ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்