என்னைப் பின்பற்றி வாருங்கள்
பெப்ருவரி 17–23. 2 நேபி 11–25: “நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்”


“பெப்ருவரி 17–23. 2 நேபி 11–25: ‛நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“பெப்ருவரி 17–23. 2 நேபி 11–25,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஏசாயா சுருள்களில் எழுதுதல்

பெப்ருவரி 17–23

2 நேபி 11–25

“நாங்கள் கிறிஸ்துவில் களிகூருகிறோம்”

ஏசாயாவின் வார்த்தைகள் “தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்பட்ட அனைவருக்கும் அவை தெளிவானதாய் இருக்கிறது” என்று நேபி போதித்தான் (2 நேபி 25:4). நீங்கள் வாசிக்கும்போது, தீர்க்கதரிசன ஆவியை நாடி, ஆவியானவர் கூறுவதைக் கேட்டு, உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்து உங்களை ஆவிக்குரிய பிரகாரமாக ஆயத்தம் செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

உலோகத் தகட்டில் பொறிப்பது எளிதானது அல்ல, மேலும் நேபியின் சிறு தகடுகளில் இடமும் குறைவாக இருந்தது. ஆகவே அதிக அளவிலான ஏசாயாவின் எழுத்துக்களைத் தன்னுடைய பதிவில் நகலெடுக்க நேபி ஏன் களைப்பூட்டும் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்? “இந்த வார்த்தைகளைப் பார்க்கிறவர்கள், தங்கள் இருதயங்களை உயர்த்தி, களிகூரத்தக்கதாக” இதைச் செய்தான்(2 நேபி 11:8). ஒரு விதத்தில், ஏசாயாவின் எழுத்துக்களைப் படிப்பதற்கான அழைப்பு என்பது களிகூருவதற்கான ஓர் அழைப்பே. இஸ்ரவேலர்கள் கூட்டிச் சேர்க்கப்படுதல், மேசியாவின் வருகை, மற்றும் நீதிமான்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆயிரம் வருஷ சமாதானம் ஆகியவற்றைப்பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களால், நேபியைப் போலவே நீங்களும் மகிழ்ச்சி அடையலாம். “இக்கட்டும் அந்தகாரமும்” நிறைந்த நாட்களிலும் நீங்கள் “பெரிய வெளிச்சத்தைக் கண்டதற்காக” நீங்கள் களிகூரலாம். (2 நேபி 18:22; 19.2). “இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து தண்ணீர் எடுக்க” முடியும் என்பதற்காக நீங்கள் களிகூரலாம் (2 நேபி 22:3). வேறு வார்த்தைகளிலெனில், உங்களால் “கிறிஸ்துவில் களிகூர” முடியும் (2 நேபி 25:26).

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்திற்கான ஆலோசனைகள்

2 நேபி 11–25

நான் எவ்வாறு ஏசாயாவின் போதனைகளை சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும்?

சிலருக்கு “ஏசாயாவின் வார்த்தைகள் தெளிவற்றதாக இருக்கும்” என்பதை நேபி ஒப்புக்கொண்டான்(2 நேபி 25:4). நேபியைப் போலவே பழங்கால யூத கலாச்சாரத்தையும் பூகோளத்தையும் அறிந்திருக்காதவர்களுக்கு இது நிச்சயமாக உண்மையானதே ( 2 நேபி 25:6பார்க்கவும்). ஆனால் ஏசாயாவின் எழுத்துக்களின் அர்த்தத்தை நாம் காண உதவ நேபியும் ஆலோசனை அளித்தான்:

உங்களோடு “அவருடைய வார்த்தைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்” (2 நேபி 11:2).ஏசாயாவின் பல போதனைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியமான அர்த்தங்களும் பிரயோகமும் இருக்கின்றன. உதாரணமாக, இஸ்ரவேலர் சிதறுண்டு போதலையும், கூட்டிச் சேர்க்கப்படுதலையும்பற்றிய அவருடைய எழுத்துக்கள், நீங்களும் இரட்சகரிடத்தில் திரும்பவும் “கூட்டிச்சேர்க்கப்பட” வேண்டிய அவசியத்தைப்பற்றி உங்களைச் சிந்திக்கத் தூண்டும்.

“தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்படுவதை” நாடுங்கள் (2 நேபி 25:4).ஆவியானவரிடம் இருந்து உணர்த்துதல் பெறுவதே ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி. ஆவிக்குரிய வழிகாட்டுதலுக்காக ஜெபிக்கவும். உடனடியாக நீங்கள் அனைத்தையுமே ஒரே நேரத்தில் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் இன்று உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அறிந்துகொள்ள கற்றுக்கொள்வதற்கு ஆவியானவர் உங்களுக்குதவ முடியும்.

அடிக்குறிப்பு, அதிகாரத் தலைப்பு, வேத வழிகாட்டி போன்ற வேதங்களிலுள்ள தியான உதவிகளை பார்ப்பது உதவிகரமாக இருப்பதை நீங்கள், காணலாம்.

2 நேபி 11:2–8; 25:19–29

“கிறிஸ்துவை நம்புவதே சரியான வழி.”

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அவனுடைய சாட்சியை தெரிவித்து, ஏசாயாவின் மேற்கோள்களை நேபி அறிமுகம் செய்து முடிக்கிறான் ( 2 நேபி 11:2-8; 25:19–29 பார்க்கவும்). அவனுடைய சாட்சியைக் குறித்து உங்களைக் கவர்வது என்ன? இந்த வாரம் நீங்கள் தியானிக்கும்போது, “கிறிஸ்துவில் விசுவாசிக்கவும், தேவனோடு ஒப்புரவாகவும் … (2 நேபி 25:23), “[அவரது] பிள்ளைகளுக்கு வலியுறுத்தும்” நேபியின் விருப்பத்தை சிந்தியுங்கள் மேலும் வலியுறுத்தி கிறிஸ்துவை விசுவாசித்து பின்பற்றும் வாசகங்களை கவனிக்கவும்.

இரட்சகரைப்பற்றிய ஏசாயாவின் அநேக போதனைகள் அடையாளங்கள் மூலமாகவே தெரிவிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுவது உதவியாக இருக்கும். உதாரணமாக, ஒரு திராட்சைத் தோட்டக்காரர் ( 2 நேபி 15:1–7பார்க்கவும்), ஒரு கல் ( 2 நேபி 18:14பார்க்கவும்), மற்றும் ஒரு வெளிச்சம்(2 நேபி 19:2பார்க்கவும் ), போன்ற அடையாளங்களில் நீங்கள் இரட்சகரைக் காணலாம் இந்த அதிகாரங்களில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி வேறு என்ன அடையாளங்களைக் காண்கிறீர்கள்? அவரைப்பற்றி இந்த அடையாளங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?

2 நேபி 12–13.

மேட்டிமையானவர்களும் உலகப்பிரகாரமானவர்களும் தாழ்மையாக்கப்படுவார்கள்.

பெருமை தன் ஜனங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நேபி முன்னறிந்தான் (2 நேபி 12:19 பார்க்கவும் ). ஆகவே, பெருமைக்கு எதிரான ஏசாயாவின் தொடர் எச்சரிக்கைகளை நேபி தன் ஜனங்களுக்கு பகிர்ந்துகொண்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேட்டிமை மற்றும் அகந்தை. போன்ற பெருமையை விவரிக்க ஏசாயா பயன்படுத்திய வார்த்தைகளை அதிகாரம்12 மற்றும்13 ல், தேடவும் பின்னர், பெருமையைப்பற்றி உங்களை நீங்களே எச்சரித்துக் கொள்ள ஒரு செய்தியை எழுதுவது போல, நீங்கள் இந்த எச்சரிக்கைகளை உங்கள் சொந்த வார்த்தைகளைக் கொண்டு சாராம்சமாக எழுத முயற்சி செய்யவும்.

Chapter 18: Beware of Pride” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 229–40).ஐயும் பார்க்கவும்.

2 நேபி 12:2–5; 21:9–12; 22; 24:1–3

ஆயிரம் வருஷ அரசாட்சியில், தேவனின் ஜனம் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

நேபி மற்றும் அவனுடைய ஜனங்களின் இடத்தில் உங்களை வைத்து கற்பனை செய்வது உங்களுக்கு உதவியாய் இருப்பதை காணலாம். எருசலேம் அழிக்கப்படுவதற்கு சற்று முன் நீங்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் (2 நேபி 25:10பார்க்கவும் ), மேலும் நீங்கள் இப்போது சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலின் பகுதியாக இருக்கிறீர்கள். எதிர்காலத்தில் இஸ்ரவேலர் கூட்டிச் சேர்க்கப்படுவதையும் ஒரு சமாதானமான ஆயிரம் வருஷத்தையும்பற்றிய ஏசாயாவின் போதனைகளை வாசிப்பது எவ்வாறு இருந்திருக்கும்? கிறிஸ்துவின் ஆயிரம் வருஷ அரசாட்சிக்காக ஆயத்தம் செய்வதில், பிற்காலத்தில் தேவனின் ஜனத்தைக் கூட்டிச் சேர்ப்பதில் உதவியாயிருக்க, பிற்கால பரிசுத்தவான்களாக, நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நீங்கள் இந்த வசனங்களை வாசிக்கும்போது, அவர்கள் விவரிக்கும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற நீங்கள் எவ்வாறு உதவிசெய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப்பாருங்கள். தேவனுடைய ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பதில் உதவிசெய்ய நீங்கள் என்ன செய்வதற்கு தூண்டப்பட்டதாக உணர்கிறீர்கள்?

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

2 நேபி 12:1–3.

நீங்கள் ஆலயத்துக்கு சென்றிருந்தீர்கள் என்றால்“, கர்த்தரின் வீடாகிய பர்வதம்”, “[கர்த்தரின்] பாதைகளில் நடக்க” ஆலய உடன்படிக்கைகள் எவ்வாறு உதவுகின்றன என்று உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஆலயத்துக்கு சென்றதில்லை என்றால், இந்த வசனங்களை சேர்ந்து படிப்பது நீங்கள் எவ்வாறு ஆலய ஆசீர்வாதங்களுக்கு ஆயத்தமாகலாம் என்பதைப்பற்றிய கலந்துரையாடலுக்குத் தூண்டலாம்.

2 நேபி 15:18–23

இந்த வசனங்கள் விவரிக்கும் நீதியற்ற ஆலோசனைகளுக்கான தற்கால எடுத்துக்காட்டுகளை உங்கள் குடும்பத்தால் சிந்திக்க முடியுமா? நன்மை மற்றும் தீமைபற்றிய தவறான கருத்துக்களால் ஏமாற்றப்படுவதை எவ்வாறு நாம் தவிர்க்கலாம்?

2 நேபி 21

இந்த அதிகாரத்தைப் புரிந்து கொள்ள உங்கள் குடும்பத்துக்கு உதவி தேவைப்பட்டால் (ஏசாயா 11 பற்றிக்கு ஒத்திருக்கிற), ஏசாயா 11 பற்றி தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிற கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113:1–6 ல் நீங்கள் நுண்ணறிவுகளைப் பெறலாம். இந்த வசனங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்?

2 நேபி 21:9

“கர்த்தரைப்பற்றிய அறிவால்” உலகத்தை நிரப்ப நாம் செய்யக்கூடிய சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் எவை?

2 நேபி 25:23–26

“கிறிஸ்துவில் களிகூர” உங்கள் குடும்பத்துக்கு எவ்விதம் நீங்கள் உதவலாம்? தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இரட்சகரைப்பற்றிய விஷயங்களை ஒரு காகிதத் துண்டில் எழுத நீங்கள் அவர்களை அழைக்கலாம். பின்னர், எதிர்வரும் குடும்ப இல்ல மாலைகளில் அல்லது குடும்ப வேத தியானத்தின்போது, ஒருவர் ஒரு சீட்டை வாசிக்கலாம். ஆண்டு முழுவதும் குடும்ப அங்கத்தினர்கள் சீட்டை சேர்க்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட தியானத்தை மேம்படுத்துதல்

மாதிரிகளைத் தேடுங்கள். கர்த்தர் எவ்வாறு கிரியை செய்கிறார் என நமக்குக் காட்டும் மாதிரிகளை வேதங்களில் நாம் பார்க்க முடியும். உதாரணமாக, பின்வரும் 2 நேபி 11–25ல், கர்த்தர் எவ்விதம் எச்சரிக்கிறார் மற்றும் மன்னிக்கிறார் என்று காட்டும் மாதிரிகளை நீங்கள் பார்க்கலாம்.

படம்
பனாமா சிட்டி பனாமா ஆலயம்

பனாமா சிட்டி பனாமா ஆலயம். “பர்வதங்களின் முடியிலே, கர்த்தருடைய ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு, … எல்லா தேசங்களும் அதற்குள் ஓடிவருவார்கள்.” (2 நேபி 12:2).