பொது மாநாடு
உங்கள் அயலாரை நேசியுங்கள்
அக்டோபர் 2023 பொது மாநாடு


உங்கள் அயலாரை நேசியுங்கள்

இரக்கம் கிறிஸ்துவின் ஒரு குணாதிசயம். இது பிறர் மீதான அன்பினால் உருவானது அதற்கு எல்லைகள் கிடையாது.

இன்று காலை, ஆப்பிரிக்க பயணத்தில் என்னுடன் சேர உங்களை அழைக்கிறேன் . நீங்கள் சிங்கங்கள், வரிக்குதிரைகள் அல்லது யானைகளைப் பார்க்க மாட்டீர்கள், ஆனால் பயணத்தின் முடிவில், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கிறிஸ்துவின் இரண்டாவது பெரிய கட்டளையாகிய “உங்கள் அயலாரை நேசியுங்கள்” என்ற தனித்துவமான வழியில் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். (மாற்கு 12:31)

ஆப்பிரிக்காவின் கிராமப்புற, சிவப்பு மண்ணை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். பல ஆண்டுகளாக எந்த அளவிலும் மழை பெய்யவில்லை என்பதை நீங்கள் வறண்ட மற்றும் தரிசு நிலத்தின் மூலம் பார்க்கிறீர்கள். உங்கள் பாதையை எலும்பும் தோலுமாய் கடக்கும் சில கால்நடைகள், அவைகள் ஒரு போர்வையை போர்த்திய கரமஜோங் மேய்ப்பரால் மேய்க்கப்படுகின்றன, அவர் வாரணிந்த செருப்பு கால்களுடன், பசுந் தாவரங்களையம் நீரையும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் பிரயாசையுடன் நடந்து செல்கின்றார்.

கரடுமுரடான மற்றும் பாறைகள் நிறைந்த சாலையில் நீங்கள் செல்லும்போது, ​​​​பல குழுக்களின் அழகான குழந்தைகளைப் பார்க்கிறீர்கள், அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று வியக்கிறீர்கள். குழந்தைகள் புன்னகைக்கிறார்கள் மற்றும் கை அசைக்கிறார்கள், நீங்கள் கண்ணீர் மற்றும் புன்னகையுடன் அவர்களை நோக்கி கை அசைக்கிறீர்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் பார்க்கும் இளைய குழந்தைகளில் தொண்ணூற்றிரண்டு சதவீதம் பேர் உணவின்றி உழல்கிறார்கள், உங்கள் மனம் வேதனையால் கலங்குகிறது.

உங்களுக்கு முன்னால், ஒரு தாய் பத்தொன்பது லிட்டர் தண்ணீர் குடுவையை தன் தலையில் ஒன்றும் கையில் ஒன்றுமாக நிலையாக மற்றும் கவனமாக சுமந்து செல்வதைக் காண்கிறீர்கள். இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடும்பங்களில் ஒரு பெண்ணை அவள் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள், இங்கு பெண்கள், இளம்பெண்கள் மற்றும் வயதானவர்கள், ஒவ்வொரு நாளும் தங்கள் குடும்பத்திற்கான நீர் ஆதாரத்திற்கு முப்பது நிமிடங்களுக்கு மேல் நடந்து செல்கிறார்கள். துக்கத்தினால் நீங்கள் துவண்டு விடுகிறீர்கள்.

படம்
ஆப்பிரிக்க பெண் தண்ணீர் சுமந்து செல்லுதல்

இரண்டு மணிநேரத்திற்கு பின்பு, நீங்கள் ஒரு ஒதுக்குபுரமான நிழலான சுத்தப்படுத்திய இடத்திற்கு வருகிறீர்கள். கூட்டம் கூடும் இடம் ஒரு அறை அல்லது கூடாரம் அல்ல, மாறாக, கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மைக் காக்கும் ஒரு சில பெரிய மரங்களின் நிழல் அது. இந்த இடத்தில், தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, மேற்கத்திய கழிப்பறை இல்லை. நீங்கள் சுற்றிப் பார்க்கிறீர்கள், நீங்கள் கர்த்தரை நேசிக்கும் மக்களின் மத்தியில் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள், மேலும் அவர்கள் மீது தெய்வீக அன்பை உடனடியாக உணர்கிறீர்கள். உதவி மற்றும் நம்பிக்கையைப் பெற அவர்கள் கூடியுள்ளனர், அதைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் வந்துள்ளீர்கள்.

4.7 கோடி மக்கள் வசிக்கும் மத்திய ஆப்பிரிக்காவின் உகாண்டாவில், ​​நமது ஒத்தாசைச் சங்க பொதுத் தலைவர் சகோதரி கேமில் ஜான்சன் அவரது கணவர் டக் மற்றும் சபையின் மனிதாபிமான சேவைகளின் இயக்குநரான சகோதரி ஷரோன் யூபாங்க் ஆகியோரோடு சகோதரி ஆர்டெர்னும் நானும் பயணம் செய்த பொது எங்களின் பயணமும் இவ்வாறாகவே இருந்தது. அன்று, மரங்களின் நிழலில், சபையின் மனிதாபிமான சேவைகள், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) மற்றும் உகாண்டா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் இணைந்து நிதியளிக்கும் சமூக சுகாதார திட்டத்தை பார்வையிட்டோம். இவை நம்பகமான அமைப்புகள், சபை உறுப்பினர்களின் நன்கொடை மனிதாபிமான நிதிகள் விவேகத்துடன் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவை.

படம்
ஆப்பிரிக்க குழந்தை கவனிப்பு பெறுதல்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளையும், காசநோய், மலேரியா மற்றும் இடைவிடாத வயிற்றுப்போக்கின் பாதிப்புகளையும் பார்க்கும்போது இதயம் வலித்தது போல இருந்தாலும், நாங்கள் சந்தித்தவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மேலோங்கியது.

படம்
தாய் குழந்தைக்கு பாலூட்டுதல்

சபையின் மனிதாபிமான முயற்சிக்கு நேரத்தையும் பணத்தையும் நன்கொடையாக வழங்கும் உலகெங்கிலும் உள்ள சபையின் உறுப்பினர்களின் தயவின் மூலம் அந்த நம்பிக்கை வந்தது. நோயுற்றவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் உதவி பெற்று உயர்த்தப்படுவதைக் கண்டு நன்றியுடன் தலை வணங்கினேன். அந்த நேரத்தில், ராஜாதிராஜா சொன்னதன் அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாகப் புரிந்தது.

“வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்… :

“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்.” (மத்தேயு 25:34–35).

நமது இரட்சகர் வேண்டுகிறதாவது, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16, மேலும் வசனங்கள் 14–15 பார்க்கவும்). பூமியின் தொலைதூர மூலையில், உங்கள் நற்செயல்கள் வாழ்க்கையை பிரகாசமாக்குகிறது மற்றும் நம்பிக்கை இழந்த மக்களின் சுமையை குறைக்கிறது, தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்.

அந்த சூடான மற்றும் தூசி நிறைந்த நாளில், தேவனுக்கு துதி மற்றும் நன்றியுடன் அவர்களின் ஜெபங்களை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் தங்கள் தாய்மொழியான கரமஜோங்கில் “அழகரா” என்று என் மூலமாக உங்களிடம் கூறுவார்கள். உங்களுக்கு நன்றி!

எங்கள் பயணம் நல்ல சமாரியன் உவமையை எனக்கு நினைவூட்டியது, அவனுடைய பயணம் அவனை ஒரு தூசி நிறைந்த பாதையில் அழைத்துச் சென்றது, நான் விவரித்ததைப் போலல்லாமல், எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்ற ஒரு சாலையைப் போலிருந்தது. “உங்கள் அயலாரை நேசிப்பதன்” அர்த்தம் என்ன என்பதை இந்த சமாரிய ஊழியன் போதிக்கிறான்.

“ஒரு மனுஷன் … கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனதை அவன் கண்டான்.” லூக்கா 10;30 சமாரியன் அவனைக் கண்டு, மனதுருகினான் (லூக்கா 10:33).

இரக்கம் கிறிஸ்துவின் ஒரு குணாதிசயம். இது பிறர் மீதான அன்பினால் உருவானது அதற்கு எல்லைகள் கிடையாது. உலக இரட்சகராகிய இயேசு மனதுருக்கத்தின் மறுவடிவம். “இயேசு கண்ணீர் விட்டார்”.(யோவான் 11:35)என்று வாசிக்கும்போது, ​​மரியாள் மற்றும் மார்த்தாவைப் போலவே, நாமும் அவருடைய மனதுருக்கத்திற்கு சாட்சிகளாக இருக்கிறோம், இது அவரை முதலில்ஆவியிலே கலங்கித் துயரமடைய வைத்தது (யோவான் 11:33 ஐப் பார்க்கவும்) கிறிஸ்துவின் மனதுருக்கத்தின் மார்மன் புஸ்தக, உதாரணத்தில் இயேசு திரளான மக்களுக்குத் தோன்றி இவ்வாறு கூறினார்:

“உங்களுள் முடவராயோ, குருடராயோ, … செவிடராயோ, எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவராயோ எவரேனும் உண்டோ? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள் நான் அவர்களை சுகப்படுத்துவேன், ஏனெனில் நான் உங்கள்மேல் மனதுருக்கமாயிருக்கிறேன். …

“… அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார்.” (3 நேபி 17:7, 9).

நமது ஒவ்வொரு முயற்சியிலும், நீங்களும் நானும் அனைவரையும் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆனால் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்க முடியும். ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொடுத்தது ஒரே ஒரு குட்டி சிறுவன். அந்த அப்பங்களையும் மீன்களையும் பார்த்து சீஷனாகிய அந்திரேயா கேட்டது போல், “அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்?” என்று நம்முடைய காணிக்கையை நாம் கேட்கலாம். (யோவான் 6:9). நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்; உங்களால் இயன்றதைக் கொடுப்பது போதுமானது, பின்னர் கிறிஸ்துவை உங்களுடைய முயற்சியை மேப்படுத்த அனுமதிப்பது போதுமானது.

இந்தக் கட்டத்தில், மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் நம்மை அழைத்தார், “பணக்காரனோ அல்லது ஏழையோ, மற்றவர்கள் தேவைப்படும்போது ‘நம்மால் முடிந்ததைச் செய்வோமாக’.” பிறகு அவர் என்னைப் போலவே சாட்சியமளித்தார், தேவன் “[உங்கள்] மனதுருக்கமுள்ள சீஷத்துவத்தின் செயல்களில் உங்களுக்கு உதவுவார், வழிநடத்துவார்” (“Are We Not All Beggars?,” Liahona, Nov. 2014, 41).

அந்த தொலைதூர தேசத்தில், அந்த மறக்க முடியாத நாளில், நான் அப்போது நின்றுகொண்டு, ஏழை பணக்காரர் என இருபாலரும் சபை உறுப்பினர்களின் ஆத்துமாவைத் தூண்டும் மற்றும் வாழ்க்கையை மாற்றும் இரக்கத்தின் சாட்சியாக இப்போது நிற்கிறேன்.

நல்ல சமாரியனின் உவமையில் “[மனிதனின்] காயங்களைக் கட்டி அவனைப் பராமரித்தான்” என தொடர்கிறது.(லூக்கா 10:34). நம்முடைய சபையின் மனிதாபிமான முயற்சிகள் இயற்கை பேரழிவுகளுக்கு விரைவாக உதவி செய்து, உலகில் விரிவடைந்து வரும் நோய், பசி, ஊட்டச்சத்து குறைபாடு, இடப்பெயர்ச்சி மற்றும் அடிக்கடி வெளிப்படையாக காணப்படாத மனச்சோர்வு, ஏமாற்றம் மற்றும் விரக்தியின் காயங்களைக் கட்டுகிறது.

சமாரியன் “இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள்” என்றான் (லூக்கா 10:35). ஒரு சபையாக, நமது மனிதாபிமான முயற்சிகளில் உதவுவதற்கு மற்ற “பங்காளர்கள்” அல்லது கத்தோலிக்க நிவாரண சேவைகள், UNICEF மற்றும் செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறை போன்ற அமைப்புகள் ஒத்துழைப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்கள் “இரண்டு பென்ஸ்” அல்லது இரண்டு யூரோக்கள், இரண்டு பெசோக்கள் அல்லது இரண்டு ஷில்லிங்கிற்கு நாங்கள் சமமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இது உலகெங்கிலும் பலர் சுமக்க வேண்டிய சுமையைக் குறைக்கிறது. உங்கள் நேரம், டாலர்கள் மற்றும் நாணயங்களைப் பெறுபவர்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் மனதுருக்கத்திற்கு அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை; நாம் அவர்களை நேசிப்பது மட்டுமே தேவைப்படுகிறது.

தலைவர் நெல்சன், “நாம் தேவனை முழு இருதயத்தோடு நேசிக்கும்போது, அவர் நம் இருதயங்களை மற்றவர்களின் நல்வாழ்வுக்கு திருப்புகிறார்” என்பதை எங்களுக்கு நினைவூட்டியதற்கு நன்றி. (“The Second Great Commandment,” Liahona, Nov. 2019, 97). மற்றவர்களின் நலனுக்காக நம் இதயங்களைத் திருப்ப வேண்டும் என்ற தலைவர் நெல்சனின் அழைப்புக்கும், “இந்த சபையிலோ அல்லது வேறு எந்த சபையிலோ அல்லது அவர்களை எங்கிருந்தாலும் [நாம் கண்டால்] பசித்தோருக்கு உணவளிக்கவும், நிர்வாணிகளுக்கு ஆடை அணிவிக்கவும், விதவைக்கு உணவளிக்கவும், அனாதையின் கண்ணீரை உலர்த்தவும், [மற்றும்] பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்,” ஜோசப் ஸ்மித்தின் வேண்டுகோளுக்கு நாம் பதிலளிக்கும்போது, நம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, பணிவு மற்றும் அன்பு அதிகரிக்கும் என்று நான் சாட்சி கூறுகிறேன். (“Editor’s Reply to a Letter from Richard Savary,” Times and Seasons, Mar. 15, 1842, 732).

படம்
மூப்பர் ஆர்டெர்ன் மற்றும் தலைவர் காமில் என். ஜான்சன் ஆப்பிரிக்க குழந்தைகளுடன்.

சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் ஒரு வறண்ட மற்றும் தூசி நிறைந்த சமவெளியில் பட்டினியிலிருப்போர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டோம், அவர்கள் கண்கள், உதவிக்காக கெஞ்சுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் திரும்பும் வழியில், ஆவியிலே கலங்கித் துயரமடைந்தோம் ( யோவான் 11:33 பார்க்கவும்), ஆனால் சபை உறுப்பினர்கள் இரக்கத்துடன் பசியுள்ளவர்களுக்கு உணவளித்ததையும், விதவைகளுக்கு வழங்கப்பட்டதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கப்பட்டதையும் அவர்களின் கண்ணீர் வற்றியதையும் பார்த்தபோது அந்த உணர்வுகள் தணிந்தன.

நாம் என்றென்றும் மற்றவர்களின் நல்வாழ்வைக் கவனித்து, “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்க தயாராக இருக்கிறோம்” (மோசியா 18:8), “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்களைக் கட்டுவோம்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:42) என்பதை வார்த்தையிலும் செயலிலும் காட்டுவோம், மற்றும் “உங்கள் அயலானி்டத்திலும் அன்புகூருங்கள்” என்ற கிறிஸ்துவின் இரண்டாவது பெரிய கட்டளையைக் கைக்கொள்ளுவோம்.(மாற்கு 12:31). இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.