சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
சகோதர சகோதரிகளே, இப்போது, ஆதரவு வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் நான் முன்வைப்பேன்.
நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.
டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.
பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் உலிசஸ் சோயர்ஸ்.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.
பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.
எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.
பின்வரும் பிரதேச எழுபதின்மர் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்: மார்க் டி. எடி, ரியான் கே. ஓல்சன், ஜோனத்தான் எஸ். ஷ்மிட் மற்றும் டெனெல்சன் சில்வா.
இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.
பின்வருகிறபடி ஆகஸ்ட் 1, 2022லிருந்து நாங்கள் ஒத்தாசைச் சங்க பொது தலைமையை விடுவித்திருக்கிறோம்: தலைவராக ஜீன் பி. பிங்காம், முதலாம் ஆலோசகராக ஷாரன் யூபங்க், இரண்டாவது ஆலோசகராக ரெய்னா ஐ. அபுர்ட்டோ.
பின்வருகிறபடி ஆகஸ்ட் 1, 2022லிருந்து நாங்கள் ஆரம்ப வகுப்பு பொது தலைமையை விடுவித்திருக்கிறோம்: தலைவராக கமில்லா எல். ஜான்சன், சூசன் எச். போர்ட்டர், முதலாம் ஆலோசகராகவும், எமி ஏ. ரைட், இரண்டாவது ஆலோசகராக.
இச்சகோதரிகளுக்கு அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
பொது அதிகாரி எழுபதின்மராக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: மார்க் டி. எடி, ஜேம்ஸ் டபிள்யூ. மெக்கன்கி III, ஐசக் கே. மோரிசன், ரியான் கே. ஓல்சன், ஜோனத்தான் எஸ். ஷ்மிட் மற்றும் டெனெல்சன் சில்வா.
சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.
மார்ச் 31, வியாழன் அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டங்களில் 45 புதிய பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், பின்னர் இந்த வார தொடக்கத்தில் newsroom.ChurchofJesusChrist.org இல் அறிவிக்கப்பட்டது.
அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.
சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.
ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒத்தாசைச் சங்க பொதுத்தலைமையாக பின்வருவோரை நாங்கள் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: கமில்லா என். ஜான்சன் தலைவராகவும், ஜீனி அனெட் டென்னிஸ் முதல் ஆலோசகராகவும், கிறிஸ்டின் மே யீ இரண்டாவது ஆலோசகராகவும்.
சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.
புதிய ஆரம்ப வகுப்பு பொதுத் தலைமையாக பின்வருவோரை ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது, மேலும் ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்: சூசன் எச். போர்ட்டர் தலைவராகவும், ஏமி ஏ. ரைட் முதல் ஆலோசகராகவும், ட்ரேசி ஒய். பிரவுனிங் இரண்டாவது ஆலோசகராகவும்.
சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.
தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.
சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.
எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.
சபைத் தலைவர்கள் சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்
பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:
எல்சிமார் கோவியா டி அல்புகர்க், ரோனால்ட் ஜே. பாக், ரால் பாரன், ப்ரூனோ வி. பாரோஸ், எரிக் பாஸ்டர், ஆஸ்கர் பெட்ரிகல், ஜோப் பூம், மைக்கல் பி. ப்ராடி, ராண்டல் ஏ. ப்ரௌன், கென்னடி எப். கானுட்டோ, ஸ்டீபன் கே. க்ரிஸ்டன்சன், நேத்தன் ஏ. கிரெய்க், மார்க் அந்தோனி டன்டன், ஃபேவியோ எம். டுரன், அமான்டியோ ஏ. ஃபீஜோ, கிளாட் ஆர். கமியெட், ஸ்காட் எல். ஹைமாஸ், ஜேசன் சி. ஜென்சன், ராபர்டோ ஜி. எஃப். லீட், ஜான் டபிள்யூ. லூயிஸ், பாலோ ரெனாடோ மரின்ஹோ, பிளேன் ஆர். மேக்ஸ்ஃபீல்ட், எட்வர்டோ ஆர். மோரா, டேவிட் நாகபிசெல், ஜோனோ லூயிஸ் ஓப்பே, ஜஸ்டிஸ் என். ஒட்டுயோனி, இமானுவேல் பெட்ரிக்னானி, டேனியல் பைரோஸ், டேனியல் பிரோஸ் டபிள்யூ. ஜே. ரெய்சைட், நெல்சன் ராமிரெஸ், அலெக்ஸி வி. சமய்கின், ஜோஸ் அன்டோனியோ சான் கேப்ரியல், ஜோஸ் எஸ்டுவார்டோ சாசோ, ஸ்டீவன் டி. ஷம்வே, ஓஸ்வால்டோ ஜே. சோட்டோ, மார்க் ஜி. ஸ்டீவர்ட், ஸ்காட் என். டெய்லர், ரோஸ்வெல்ட் டி பினா டீக்ஸீரா . டிரெட்வே, ஹரோல்ட் ட்ரூக், நிகோலாய் உஸ்ட்யுஜானினோவ், கார்லோஸ் எர்னஸ்டோ வெலாஸ்கோ, கைல் ஏ. வெஸ்ட், செர்ஜியோ வில்லா, மின் சூ வாங்