என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூலை 27–ஆகஸ்ட் 2 ஆல்மா 39–42: “மகா மகிழ்ச்சியின் திட்டம்”


“ஜூலை 27–ஆகஸ்ட் 2 ஆல்மா 39–42: ‘மகா மகிழ்ச்சியின் திட்டம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூலை 27–ஆகஸ்ட் 2 ஆல்மா 39–42,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
இயேசுவும் மரியாளும்

ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?–மார்க் ஆர். பூ

ஜூலை 27–ஆகஸ்ட் 2

ஆல்மா 39–42

“மகா மகிழ்ச்சியின் திட்டம்”

நீங்கள் ஆல்மா 39–42, வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் நடைபெறுகிற காரியங்களைப்பற்றி, உங்களுக்கு உள்ளுணர்வுகளைக் கொடுக்க முடியும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நாம் நேசிக்கிற ஒருவர் ஒரு கடுமையான தவறு செய்யும்போது, எப்படி பதிலளிப்பது என அறிவது கடினமாக இருக்கலாம். அவனது சொந்த கொடிய பாவங்களுக்காக ஒரு சமயம் மனந்திரும்பிய, கிறிஸ்துவின் சீஷனாகிய ஆல்மா அப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி கையாண்டான் என வெளிப்படுத்துகிற ஆல்மா 39–42 பகுதி மிக மதிப்புடையதாக்குகிறது. ஆல்மாவின் குமாரனாகிய கொரியாந்தன் பாலியல் பாவம் செய்து விட்டான், அவன் அடிக்கடி செய்ததுபோல, மனந்திரும்புதலை ஊக்குவிக்க உண்மையான கோட்பாட்டின் வல்லமையை ஆல்மா நம்பினான். (ஆல்மா4:19; 31:5 பார்க்கவும்). இந்த அதிகாரங்களில், பாவத்தை கடிந்துகொள்வதில் ஆல்மாவின் தைரியத்தையும், கொரியாந்தன் மீது அவனது இளகிய மனதையும் அன்பையும் நாம் கவனிக்கிறோம். முடிவில், மனந்திரும்புவர்களுக்கு “[பாவங்களை] சுமந்து தீர்க்கவும் இரட்சிப்பைப்பற்றிய நற்செய்திகளை அறிவிக்கவும் இரட்சகர் வருவார்” என்ற ஆல்மாவின் தன்னம்பிக்கையை உணர்கிறோம்.(ஆல்மா 39:15). அதன் விளைவாக கொரியாந்தன் ஊழியப்பணிக்கு திரும்புவான் என்ற உண்மை, (ஆல்மா 49:30 பார்க்கவும்) நமது சொந்த பாவங்களுக்காக அல்லது நாம் நேசிக்கிற ஒருவரின் பாவங்களின் மன்னிப்புக்கான நம்பிக்கையையும், நாம் துன்பப்படும்போது மீட்பையும் நமக்கு கொடுக்க முடியும் (ஆல்மா 42:29).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 39

கர்த்தரின் பார்வையில் பாலியல் பாவம் அருவருப்பானதாகும்.

பாலியல் பாவத்தின் கடுமையை தன் குமாரனுக்கு உணர்த்த, “கர்த்தரின் பார்வையில் இக்காரியங்கள் அருவருப்பானவை” (ஆல்மா 39:5) என ஆல்மா போதித்தான். உங்களுக்கு கற்புடைமை ஏன் முக்கியமானதாயிருக்கிறது? கர்த்தருக்கு இது ஏன் முக்கியமானதாயிருக்கிறது? மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்டின் பின்வரும் விளக்கம் உதவியாக இருக்கலாம்:

“ஒருவன் எப்படி உலகத்தில் வருகிறான், ஒருவன் எவ்வாறு இதை விட்டுப் போகிறான் என்பவை அநித்தியத்தைப்பற்றிய அவரது மாபெரும் அக்கறைகளுக்கு மத்தியில் ஒன்று என்பது தெளிவு. இந்தக் காரியங்களில் அவர் மிக கண்டிப்பான வரையறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்.

“ … மனித நெருக்கம் திருமணமான தம்பதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது முழு இணைப்பின் முடிவான அடையாளம், தேவனால் நியமிக்கப்பட்டு, வறையறுக்கப்பட்ட முழுமையும் இணைப்புமாகும். … ஆண் மற்றும் பெண்ணின் முழுமையான இணைப்பை திருமணம் குறிக்கும் நோக்கமுடையது. … அதன் நித்திய வாக்குத்தத்தத்தை தெரிவிக்க முத்திரி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தும், அப்படிப்பட்ட முழுமையின் இணைப்பாகும்” (“Personal Purity,” Ensign, Nov. 1998, 76).

ஆல்மா 39:8–15ல், ஆல்மா கொரியாந்தனுக்கு கொடுத்த ஆலோசனையைக் கருத்தில் கொள்ளவும். கற்புடைமை நியாயப்பிரமாணத்தின் முக்கியத்துவத்தையும், சோதனையையும் எப்படி மேற்கொள்வது என்பதைப்பற்றியும் அதிகமாய் புரிந்துகொள்ளவும் இது உங்களுக்கு எப்படி உதவுகிறது? நாம் மனந்திரும்பும்போது நம்மை மன்னிக்க கர்த்தர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் மற்றும் நம் அனைவருக்கும் நம்பிக்கையிருக்கிறது எனவும் ஆல்மாவின் போதனைகள் காட்டுகின்றன. இந்த வாரம் ஆல்மா 39–42 வாசிக்கும்போது, தேவனின் இரக்கத்தின் ஆதாரத்தைத் தேடுங்கள். தேவனின் இரக்கம் உங்களை எப்படி ஆசீர்வதித்திருக்கிறது?

பாலியல் தூய்யமை,” இளைஞர்களின் பெலனுக்காக, 35–37 யும் பார்க்கவும்.

ஆல்மா 40–41

நான் உயிர்த்தெழுந்து நியாயந் தீர்க்கப்பட தேவனின் முன்பு நிற்பேன்.

உயிர்த்தெழுதலைப்பற்றி கொரியாந்தனிடம் கேள்விகள் உண்டு என ஆல்மா கவனித்தபோது, நாம் மரித்த பின் என்ன நிகழ்கிறது என்பதைப்பற்றி அவனுக்கு போதித்தான். கொரியாந்தனுக்கும், பாவஞ்செய்த எவருக்கும்---புரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கக்கூடிய அதிகாரங்கள் 40–41ல், என்ன சத்தியங்களை ஆல்மா போதித்தான். ஆல்மா கூறுகிற தலைப்புக்களை அடையாளம் கண்டு, நீங்கள் கற்கிற (ஆவி உலகம், உயிர்த்தெழுதல், மற்றும் மறுஸ்தாபிதம் போன்றவற்றை) ஒவ்வொன்றையும்பற்றி ஆல்மா என்ன போதிக்கிறான் என எழுதி, நீங்கள் ஒழுங்குபடுத்தலாம். நீங்கள் சோதிக்கப்படுவதாக உணர்கிறபோது, அல்லது மன்னிப்பை நாடும்போது, இந்த சத்தியங்களை நினைவுகொள்வது, உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

ஆல்மா 40

எனது சுவிசேஷக் கேள்விகளுக்கு விசுவாசத்துடன் நான் பதில்களைத் தேட முடியும்.

எல்லா சுவிசேஷ கேள்விகளுக்கும் தீர்க்கதரிசிகள் பதிலை அறிந்திருக்கிறார்கள் என சிலசமயங்களில் நாம் நினைக்கலாம். ஆனால், வாழ்க்கைக்குப் பிறகு மரணத்தைப்பற்றிய பதிலளிக்கப்படாத ஏராளமான கேள்விகள் அதிகாரம் 40 முழுவதும் ஆல்மாவுக்கு இருந்தன என்பதைக் கவனியுங்கள், பதில்களைக் கண்டுபிடிக்க அவன் என்ன செய்தான்? அவனிடம் பதில்களில்லாதபோது, அவன் என்ன செய்தான்? உங்களிடம் இருக்கிற சுவிசேஷ கேள்விகளுக்கு ஆல்மாவின் எடுத்துக்காட்டு எவ்வாறு உதவக்கூடுமென கருத்தில் கொள்ளவும்.

படம்
பெண் ஜெபித்தல்

சுவிசேஷக் கேள்விகளுக்கு நாம் பதில்கள் காணக்கூடிய ஒரு வழி ஜெபமாகும்.

ஆல்மா 42

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மீட்பின் திட்டத்தை சாத்தியமாக்குகிறது.

பாவங்களுக்கான தண்டனை நியாயமற்றது என கொரியாந்தன் நம்பினான்.(ஆல்மா 42:1 பார்க்கவும்). ஆனால் பாவம் நம்மில் வைக்கிற “துர்பாக்கிய நிலையிலிருந்து” தப்பிக்க ஒரு வழியிருக்கிறது என ஆல்மா போதித்தான்: இரக்கமும் நீதியுமானதான மனந்திரும்புதல் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியில் விசுவாசம் (ஆல்மா 42:15 பார்க்கவும்.). நீங்கள் ஆல்மா 42 வாசிக்கும்போது, இரக்கம் நியாயத்தைக் “களவாடாமல்”, இரக்கம் பெற இரட்சகரின் பாவநிவர்த்தி எப்படி சாத்தியமாக்குகிறது என தேடவும். (வசனம் 25) அவரது இரக்கத்தை உணர உதவுகிற என்ன சத்தியங்களை இந்த அதிகாரத்தில் காண்கிறீர்கள்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 39:1–9.

கற்புடைமை நியாயப் பிரமாணத்தைப்பற்றிய கலந்துரையாடலிலிருந்து உங்கள் குடும்பம் நன்மை பெறுமா? அப்படியானால், உங்களுடைய குடும்ப தேவைகளின்படி, பின்வரும் ஆதாரங்களை பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்: ஆல்மா 39:1–9; “Sexual Purity,” For the Strength of Youth, 35–37; “Chastity,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org; overcomingpornography.org; and the videos “What Should I Do When I See Pornography?” and “I Choose to Be Pure” (ChurchofJesusChrist.org). கற்புடைமையின் ஆசீர்வாதங்களையும், திருமணத்தில் நெருக்கத்தையும் உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள நீங்கள் எப்படி உதவ முடியும் என சிந்தியுங்கள் (உதாரணமாக, ChurchofJesusChrist.org ல் “How to Talk to Your Kids about Intimacy” என்ற காணொலியைப் பார்க்கவும்).

ஆல்மா 39:9–15.

பாவத்தை எப்படி தவிர்ப்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்கிறோம்?

ஆல்மா 42:4

கிறிஸ்து போன்ற தன்மைகள் அல்லது சுவிசேஷக் கொள்கைகள் எழுதப்பட்ட அறையைச் சுற்றிலும் சிதறப்பட்ட காகிதத்துண்டுகளுடன் நீங்கள் ஒரு விளையாட்டை ஆடலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் குடும்ப அங்கத்தினர்களை எத்தனை காகிதத் துண்டுகளை சேகரிக்க முடியும் என நீங்கள் பார்த்து, பின்னர் தேவனைப் போல அதிகமாக ஆக காகிதங்களில் எழுதப்பட்டவை எவ்வாறு நமக்கு உதவ முடியும் என கலந்துரையாடவும். பூமியில் நமக்குக் “கொடுக்கப்பட்ட நேரம்” எப்படி இந்த விளையாட்டில் ஒதுக்கப்பட்ட நேரம் போல இருக்கிறது? இரட்சகர் போல அதிகமாக ஆக பூமியில் “சோதிக்கப்படும் காலத்தை” நாம் எப்படி பயன்படுத்த முடியும்?

ஆல்மா 42:12–15, 22–24.

நாம் பாவம் செய்யும்போது தராசுக்கு என்ன நடக்கிறது, என்பது போன்ற கேள்விகளைக் கலந்துரையாட ஒரு எளிய தராசை வரைந்து, நியாயத்துக்கும் இரக்கத்துக்கும் இடையே உள்ள உறவை ஒருவேளை நீங்கள் விளக்க முடியும். தராசு சமநிலையாயிருக்க, நியாயத்துக்கு என்ன தேவை? இரட்சகர் எப்படி நியாயத்தின் கோரிக்கைகளை எதிர்கொண்டு, இரக்கத்தை சாத்தியமாக்குகிறார்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும் கொள்கைகளில் கவனம் செலுத்தவும். தேவ வார்த்தையை நீங்கள் ஜெபத்துடன் படிக்கும்போது, உங்களையே கேளுங்கள், என் குடும்பத்துக்கு விசேஷமாக அர்த்தமிக்கதாக உள்ள எதை நான் காண்கிறேன்? இந்த சத்தியங்களை உங்கள் குடும்பத்தினர் கண்டுபிடிக்க உதவுவது எப்படி என சிந்திக்கும்போது ஆவியின் வழிநடத்துதலை நாடவும்.

படம்
ஆல்மாவும் கொரியாந்தனும்

இவர் என் குமாரன்–எல்ஸ்பெத் கெய்ட்லின் யங்