என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஆகஸ்ட் 17–23. ஏலமன் 1–6: “நம் மீட்பராகிய கன்மலை”


“ஆகஸ்ட் 17–23. ஏலமன் 1–6: ‘நம் மீட்பராகிய கன்மலை’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஆகஸ்ட் 17–23. ஏலமன் 1–6: ”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020

படம்
பாறைகளில் மோதுகிற அலைகள்

ஆகஸ்ட் 17–23

ஏலமன் 1–6

“நம் மீட்பராகிய கன்மலை”

குறிப்பிலுள்ள இந்த கொள்கைகள் ஏலமன் 1–6ஐ நீங்கள் படிக்க உங்களை வழிநடத்த உதவலாம், ஆனால் அவை உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்களுக்கு உங்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துவார்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் மத்தியில் நடந்த வெற்றிகளையும் சோகங்களையும் ஏலமன் புஸ்தகம் பதிவுசெய்கிறது. நேபியர்களின் ஜனங்களுக்குள்ளே “ஓர் கடுமையான பிரச்சனையுடன் இது ஆரம்பிக்கிறது” (ஏலமன் 1:1), பதிவேடு முழுவதும் இந்த பிரச்சினை வந்துகொண்டேயிருக்கிறது. அரசியல் சூழ்ச்சி, கள்ளர்கூட்டங்கள், தீர்க்கதரிசிகளை நிராகரித்தல், தேசமுழுவதிலுள்ள பெருமை மற்றும் அவநம்பிக்கைகளைப்பற்றி இங்கே நாம் வாசிக்கிறோம். ஆனால் நேபி, லேகி போன்றவர்களின் எடுத்துக்காட்டுகளையும், பிழைத்தவர்களாக மட்டுமல்ல, ஆவிக்குரியவிதமாக செழிப்பானவர்களான, ஜனங்களில் மிகுந்த தாழ்மையுடைய பகுதியினரையும்கூட நாம் காணலாம் (ஏலமன் 3:34). இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அவர்களுடைய நாகரீகம் சரிந்து, விழ ஆரம்பித்தபோது அவர்கள் எவ்வாறு வலிமையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்கள்? “அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷர் கட்டினால் அவர்கள் விழுந்துபோகாதிருக்கிற, தேவ குமாரனாகிய கிறிஸ்துவும் … நமது மீட்பருமானவரின் கன்மலையின் மேல் நமது வாழ்க்கையைக் கட்டினால்“ [நம்மீது] அடிக்கப்பட” பிசாசானவன் அனுப்புகிற “பெரும் புயலில் அதே மாதிரியான வழியில் நம்மில் எவரும் வலிமையுள்ளவர்களாக நிலைத்து நிற்கிறோம்” (ஏலமன் 5:12).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஏலமன் 1–6

கர்த்தருடைய ஆவியிலிருந்தும் பெலத்திலிருந்தும் பெருமை என்னைப் பிரிக்கிறது.

ஏலமன் 1–6ஐ நீங்கள் வாசிக்கும்போது, மார்மன் புஸ்தகம் முழுவதும் நேபியர்களின் நடத்தையில் நீங்கள் ஒரு மாதிரியைக் கவனிக்கலாம்: நேபியர்கள் நீதியுள்ளவர்களாக இருக்கும்போது, அவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார், அவர்கள் செழிக்கிறார்கள். ஒரு காலத்திற்குப் பின்பு அவர்கள் பெருமையுள்ளவர்களாயும், துன்மார்க்கர்களுமாகி, அழிவுக்கும் வேதனைக்கும் நடத்திய தேர்ந்தெடுப்புகளைச் செய்தவர்களுமாயினர். பின்னர் தாழ்த்தப்பட்டு, மனந்திரும்ப உணர்த்தப்பட்டு, மீண்டும் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த மாதிரி அடிக்கடி சில ஜனங்கள் அதை “பெருமை சுற்றென” அழைக்கும்படியாக மீண்டும் மீண்டும் வருகிறது.

படம்
பெருமை சுற்று

“பெருமை சுற்று”

இந்த சுற்றைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது எடுத்துக்காட்டுகளை தேடுங்கள். அவைகளைக் கண்டுபிடிக்கும்போது எடுத்துக்காட்டுகளைக் குறியிடவும் நீங்கள் விரும்பக்கூடும். இந்த மாதிரியை நீங்கள் புரிந்துகொள்ள உதவவும் அது உங்களுக்கு எவ்வாறு பொருந்துகிறதென்பதைப் பார்க்கவும். இங்கே சில கேள்விகள்:

  • நேபியர்களுக்கு மத்தியில் பெருமையின் என்ன நிருபணங்களை நீங்கள் பார்க்கிறீர்கள்? ( உதாரணமாக, ஏலமன் 3:33–34; 4:11–13 பார்க்கவும்). உங்களுக்குள் இதைப்போன்ற பெருமையின் எடுத்துக்காட்டுகளை நீங்கள் பார்க்கிறீர்களா?

  • பெருமை மற்றும் துன்மார்க்கத்தின் விளைவுகள் என்ன? (ஏலமன் 4:23–26). தாழ்மை மற்றும் மனந்திரும்புதலின் விளைவுகள் என்ன? (ஏலமன் 3:27–30, 35; 4:14–16 பார்க்கவும்).

  • அவனுடைய குமாரர்கள் எதை நினைவில்வைத்திருக்க ஏலமன் விரும்பினான்? (ஏலமன் 5:4–12 பார்க்கவும்) பெருமைக்காரராகுவதிலிருந்து தவிர்க்க இந்த சத்தியங்களை நினைவுகூருதல் எவ்வாறு உங்களுக்குதவுகிறது?

டியட்டர் எப். உக்டர்ப் “Pride and the Priesthood,” Ensign or Liahona, Nov. 2010, 55–58 ஐயும் பார்க்கவும்.

ஏலமன் 3:24–35

தேவனிடத்தில் என்னுடைய இருதயத்தை நான் ஒப்புடைக்கும்போது நான் பரிசுத்தமாக்கப்படலாம்.

சபையின் தலைவர்கள் ஆச்சரியப்படும் விதமாக சபை மிகவும் செழிப்படைந்து ஆசீர்வதிக்கப்பட்டிருந்தபோதுள்ள ஒரு நேரத்தைப்பற்றி ஏலமன் 3ல் மார்மன் விவரித்தான் (வசனங்கள் 24–32 பார்க்கவும்). இறுதியாக சில ஜனங்கள் பெருமையுள்ளவர்களானார்கள், மற்றவர்கள் “தங்கள் தாழ்ச்சியில் பெலனாயும் தங்கள் இருதயங்களில் சுத்திகரிப்பினால் சுத்திகரிக்கப்படுமளவிற்கும் வளர்ந்தார்கள்” (ஏலமன் 3:35). சுத்திகரிக்கப்பட அதிக தாழ்மையுள்ள ஜனங்கள் என்ன செய்தார்கள் என்பதை வசனங்கள் 34–35ல் கவனிக்கவும். அதிகம் சுத்திகரிக்கப்பட்டவர்களாக ஆக இந்தக் காரியங்கள் எவ்வாறு உங்களுக்குதவும்? வேத வழிகாட்டி (scriptures.ChurchofJesusChrist.org) பாவத்திலிருந்து விடுதலை, தூய்மை, சுத்தம், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் தூய்மையாதல் முறையை பரிசுத்தமாதல் வரையறுக்கிறது என அறிந்துகொள்ள இது உதவுகிறது. இந்த சீஷர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றும்படி செய்ய எது உணர்த்தியதென்று நீங்கள் உணருகிறீர்கள்? தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஒப்படைக்க நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

ஏலமன் 5:14–52

“[நான்] பெற்ற “சாட்சியங்களின் முக்கியத்துவத்தினிமித்தம்” என்னுடைய விசுவாசம் பெலப்படுத்தப்படுகிறது.

தங்களுடைய விசுவாசத்தில் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஒருமுறை மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் சொன்னார்: “‘சாட்சியங்களின் முக்கியத்துவம் என மார்மன் புஸ்தகம் அழைப்பதால், உங்களால் செய்யமுடியுமென நீங்கள் நினைப்பதைவிட உங்களுக்கு அதிக விசுவாசமிருக்கிறது’ [ஏலமன் 5:50]. … சுவிசேஷத்தின்படி வாழுதலின் பலன் எங்கெங்கிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் நிரூபணமாயிருக்கிறது” (“Lord, I Believe,” Ensign or Liahona, May 2013, 94). இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுக்குக் கர்த்தர் கொடுத்த நிரூபணத்தைப்பற்றி சிந்திக்கவும். உதாரணமாக, கர்த்தருடைய குரலை நீங்கள் நிஜத்தில் கேட்காதிருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியிடமிருந்து “ஆத்துமாவை ஊடுருவிச் சென்ற” “ஒரு மெல்லிய குரலை” நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? (ஏலமன் 5:30; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:66 ஐயும் பார்க்கவும்). ஒருவேளை அதிக விசுவாசத்திற்காக நீங்கள் இருளிலிருந்து கூக்குரலிட்டிருக்கலாம், “சொல்லமுடியாத சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டிருக்கலாம்” (ஏலமன்5:40–47). கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் உங்களுடைய விசுவாசத்தை வேறு என்ன பிற அனுபவங்கள் வலுப்படுத்தியது?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஏலமன் 3:27–30

பரிசுத்த பதிவுகளை தீர்க்கதரிசி மார்மன் சுருக்கி எழுதியபோது, முக்கியமான சத்தியங்களை வலியுறுத்த “அப்படியாக நாம் காண்கிறோம்” என்ற சொற்றொடரை அவன் எப்போதாவது பயன்படுத்தினான். ஏலமன் 3:27–30ல் நாம் என்ன பார்க்கவேண்டுமென அவன் விரும்பினான்? குடும்ப அங்கத்தினர்கள் வாசித்தவற்றைக்குறித்து “அப்படியாக நாம் பார்க்கிறோம்” என்ற சொற்றொடரை அவர்கள் எவ்வாறு நிறைவுசெய்வார்கள் என அவர்களைக் கேட்க, இந்த வாரத்தில் உங்களுடைய படிப்பு முழுவதிலும், நீங்கள் எப்போதாவது நிறுத்தக்கூடும். எந்த சத்தியங்களை வலியுறுத்த அவர்கள் விரும்புகிறார்கள்?

ஏலமன் 5:6–7

தலைவர் ஜார்ஜ் ஆல்பெர்ட் ஸ்மித்தின் தாத்தாவான ஜார்ஜ் எ.ஸ்மித் ஒரு கனவில் அவருக்குத் தோற்றமளித்து, “என்னுடைய பெயரை வைத்து நீ என்ன செய்தாய் என நான் அறியவிரும்புகிறேன்” எனக் கேட்டார் “நீங்கள் வெட்கப்படும்படியாக நான் உங்கள் பெயரை வைத்து எதுவும் செய்யவில்லை” என தலைவர் ஸ்மித் பதிலளித்தார் (in Teachings of Presidents of the Church: George Albert Smith [2011], xxvi). ஏலமன் 5:6–7ஐ வாசித்தபின்பு, இரட்சகரின் பெயரையும் சேர்த்து நாம் சுமக்கிற பெயர்களை நினைவில் வைத்திருப்பதையும், கனம்பண்ணுகிறதையும்பற்றி ஒருவேளை உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் நீங்கள் பேசலாம்.

ஏலமன் 5:12.

“ஒரு உறுதியான அஸ்திபாரத்தைக்” கொண்டிருப்பது என்றால் என்னவென உங்கள் குடும்பத்திற்கு காட்சிப்படுத்த உதவ, ஒருவேளை நீங்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கட்டமைப்பை உருவாக்கி, வெவ்வேறு வகையான அஸ்திபாரங்கள் மேல் நீங்கள் அதை வைக்கலாம். பின்னர், அதன்மேல் தண்ணீரைத் தெளித்து, “பலத்த புயலை” உருவாக்க, ஒரு மின்விசிறி அல்லது முடிஉலர்த்தியைப் பயன்படுத்தி பெரும் புயலை நீங்கள் உருவாக்கலாம். வெவ்வேறு அஸ்திபாரங்களின் மேல் அது இருந்தபோது கட்டமைப்புக்கு என்ன நேர்ந்தது? நமது வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து எவ்வாறு “ஒரு உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார்”?

ஏலமன் 5:29–33

நமது வாழ்க்கையில் தேவனின் குரலை அடையாளம் காணும்போது என்ன அனுபவங்கள் நமக்கிருந்தது?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்களிடம் பொறுமையாயிருங்கள். ஒரு நேரத்தில் ஒரு துண்டாக விசுவாசத்தின் அஸ்திபாரம் கட்டப்படுகிறது. இப்போது, புரிந்துகொள்ளுவதற்கு கடினமான குறிப்பிட்ட கோட்பாடுகளை நீங்கள் கண்டால், பொறுமையாயிருங்கள். விசுவாசத்தை கையாளுவதாலும் கருத்தாய் வேதத்தைப் படிப்பதாலும் இயேசு கிறிஸ்துவின்மேல் நீங்கள் உங்களுடைய அஸ்திபாரத்தைக் கட்டும்போது புரிந்துகொள்ளுதல் வருமென நம்புங்கள்.

படம்
நேபியும் லேகியும் சிறையில்

© The Book of Mormon for Young Readers, Nephi and Lehi Encircled by a Pillar of Fire, by Briana Shawcroft; பிரதி எடுக்கப்படக் கூடாது