என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஆகஸ்ட் 3–9. ஆல்மா 43–52: “கிறிஸ்துவின் விசுவாசத்தில் நிலையாய் நிற்போம்”


“ஆகஸ்ட் 3–9 ஆல்மா 43–52: ‘கிறிஸ்துவின் விசுவாசத்தில் நிலையாய் நிற்போம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஆகஸ்ட் 3–9. ஆல்மா 43–52,”, என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
மரோனியும் உரிமைக்கொடியும்

உரிமையின் ஆசீர்வாதங்கள்–ஸ்காட் எம். ஸ்நோ

ஆகஸ்ட் 3–9

ஆல்மா 43–52

“கிறிஸ்துவின் விசுவாசத்தில் நிலையாய் நிற்போம்”

ஆல்மா43–52ல் விளக்கப்பட்டிருக்கிற நிகழ்வுகள் குறிப்பாக உங்களுக்கு பொருத்தமில்லாததாகத் தோன்றலாம். ஆனால் வேதங்கள் முழுவதிலுமுள்ளதைப்போல கர்த்தர் உங்களுக்கு ஒரு செய்தியை வைத்திருக்கிறார். ஜெபத்துடன் அதை நாடுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஆல்மா அதிகாரம் 43ன் ஆரம்பத்தில் “இப்பொழுது, நேபியருக்கும் லாமானியருக்கும் இடையேயான யுத்தங்களின் விவரத்திற்குத் திரும்புகிறேன்” என்ற இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும்போது, தகடுகளில் குறைவான இடமிருந்தபோது இந்த யுத்தக் கதைகளை ஏன் மார்மன் சேர்த்தான் என வியப்புறுவது இயற்கையே. (மார்மனின் வார்த்தைகள் 1:5 பார்க்கவும்). பிற்காலங்களின் யுத்தங்களில் நமது பங்கிருக்கிறதென்பது உண்மை, ஆனால் யுத்தத்தின் போர்த்தந்திரம் மற்றும் சோகங்களின் விளக்கங்களுக்கு அப்பால் அவனுடைய வார்த்தைகளில் மதிப்பிருக்கிறது. “நாம் அனைவரும் பட்டியலிடப்பட்டுள்ளோம்” (Hymns, no. 250) என்பதில், தீய சக்திகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் நாம் போராடிக்கொண்டிருக்கிற யுத்தத்திற்கு அவனுடைய வார்த்தைகள் நம்மை ஆயத்தப்படுத்துகிறது, இந்த யுத்தம் மிக நிஜமானது, அதன் விளைவு நமது நித்திய வாழ்க்கையைப் பாதிக்கிறது. நேபியர்களைப்போல, “நமது தேவன், நமது மதம், விடுதலை, நமது சமாதானம், நமது [குடும்பங்கள்]” என்பதான “ஒரு சிறந்த காரண நோக்கத்தால்” நாம் உணர்த்தப்பட்டிருக்கிறோம். இதை “கிறிஸ்தவர்களினுடைய நோக்கம் என மார்மன் அழைத்தான், இதே நோக்கத்திற்காகத்தான் இன்று நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் (ஆல்மா 43:45; 46:12, 16).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 43–52

தீமைக்கு எதிரான என்னுடைய யுத்தங்களைப்பற்றி மார்மன் புஸ்தகத்திலுள்ள யுத்தங்கள் எனக்குப் போதிக்கின்றன.

உங்களுடைய தனிப்பட்ட ஆவிக்குரிய யுத்தங்களுக்கு இணையானவைகளை நீங்கள் தேடினால், நேபியர்களுக்கும் லாமானியர்களுக்குமிடையிலுள்ள யுத்தங்களைப்பற்றி வாசித்தல், உங்களுக்கு அதிக அர்த்தமுள்ளவையாக இருக்கக்கூடும். ஆல்மா 43–52ஐ நீங்கள் வாசிக்கும்போது, அவர்களை வெற்றியடையச் செய்த (அல்லது தோல்வியடையச் செய்த) எதை நேபியர்கள் செய்தார்களென்பதைக் கவனிக்கவும். பின்னர் உங்களுடைய ஆவிக்குரிய போராட்டங்களில் வெற்றிபெற உங்களுக்குதவ நீங்கள் கற்றுக்கொண்டதை எவ்வாறு நீங்கள் பயன்படுத்தமுடியுமென சிந்திக்கவும். பின்வருவதைப்போன்ற, வசனங்களை நீங்கள் படிக்கும்போது நேபியரின் எடுத்துக்காட்டை நீங்கள் எவ்வாறு பின்பற்றமுடியுமென்பதைப்பற்றி உங்கள் சிந்தனைகளை எழுதவும்.

  • ஆல்மா 43:19 ஆயுதத்துடன் நேபியர்கள் ஆயத்தமானார்கள் (ஆவிக்குரிய ஆயுதத்துடன் என்னை ஆயத்தப்படுத்த நான் முயற்சிக்கமுடியும்.)

  • ஆல்மா 43:23–24 தீர்க்கதரிசியின் வழிகாட்டுதலை அவர்கள் நாடினார்கள்

  • ஆல்மா 44:1–4

  • ஆல்மா 45:1

  • ஆல்மா 46:11–20.

  • ஆல்மா 48:7–9.

  • ஆல்மா 49:3, 12–14.

லாமானியர்களும், நேபியரின் கலகக்காரர்களும் நேபியரைத் தோற்கடிக்க எவ்வாறு முயற்சித்தார்கள் என்பதையும் கவனிக்கவும். சத்துரு எவ்வாறு உங்களைத் தாக்க முயற்சிக்கக்கூடும் என்பதைப்பற்றி இந்தக் காரியங்கள் உங்களை எச்சரிக்கலாம். நீங்கள் படிக்கும்போது இதைப்போன்ற வழிகளில் சாத்தான் எவ்வாறு உங்களை தாக்கக்கூடுமென எழுதவும்:

  • ஆல்மா 43:8 அவனுடைய ஜனங்கள்மேல் சாரகெம்னா அதிகாரம் கொண்டிருக்கும்படியாக அவர்களைக் கோபப்படச் செய்வதை அவன் நாடினான். (மற்ற ஜனங்களுடன் எனக்குக் கோபம்வரும்போது சாத்தான் என் மேல் அதிகாரம் செலுத்துகிறான்.)

  • ஆல்மா 43:29 நேபியர்களை அடிமைத்தனத்திற்குள் கொண்டுவர லாமானியர் விரும்பினர்.

  • ஆல்மா 46:10

  • ஆல்மா 47:10–19

படம்
நேபியர்கள் லாமானியர்களுடன் போராடுகிறார்கள்

மினர்வா • கே டெய்சர்ட் (1888–1976), நேபியரின் ஒரு பட்டணத்தின் பாதுகாப்பு, 1935, oil on masonite, 36 x 48 inches. பிரிகாம் யங் பல்கலைக் கழக கலை அருங்காட்சியகம்.

ஆல்மா 46:11–28; 48:7–17

மரோனியைப்போல விசுவாசமுள்ளவனாயிருக்க நான் முயற்சிக்கும்போது நான் இரட்சகரைப் போலாகுவேன்.

இரட்சகரைப்போலாக முடிந்து, உங்கள் வாழ்க்கையில் சத்துருவின் வல்லமை குறைவாயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? ஆல்மா 48:17லிலுள்ள புத்திமதியைப் பின்பற்ற ஒருவழி, “மரோனியைப்போலாகுவதே”. ஆல்மா 43–52 முழுவதிலும் விளக்கப்பட்டிருக்கிற மரோனியின் பண்புகளுக்கும் செயல்களுக்கும் கவனம் செலுத்தவும், ஆனால் குறிப்பாக 46:11–28 மற்றும் 48:7–17க்கு கவனம் செலுத்தவும். இந்த “பராக்கிரமான மனிதனைப்பற்றி” உங்களுக்கு எது உணர்த்துகிறது? அவனைப் போன்ற பண்புகளும் செயல்களும் உங்கள் வாழ்க்கையில் பிசாசானவனின் வல்லமையை எவ்வாறு பலவீனப்படுத்த முடியும்? மரோனியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், இரட்சகரைப்போலாகவும் நீங்கள் என்ன செய்யவேண்டுமென உந்தப்பட்டதாக உணருகிறதை சிந்திக்கவும்.

ஆல்மா 47

சிறிதுசிறிதாக சாத்தான் நம்மை சோதிக்கிறான், ஏமாற்றுகிறான்.

பெரிய பாவங்களைச் செய்ய அல்லது பெரிய பொய்களை நம்பவும் நம்மில் அநேகருக்கு விருப்பமில்லை என சாத்தானுக்குத் தெரியும். ஆகவே, சிறிய பாவங்களாகத் தோன்றுகிறதிற்கு நம்மை நடத்துகிற தந்திரமான பொய்களையும் சோதனைகளையும் அவன் பயன்படுத்துகிறான், முடிந்தவரை நம்மில் பலர் ஏற்றுக்கொள்வோம் என அவன் நினைக்கிறான் நீதியாய் வாழுவதின் பாதுகாவலிலிருந்து வெகுதூரம் நாம் விலகிப்போகும்வரை இதை அவன் தொடர்ந்து செய்கிறான்.

ஆல்மா 47ல் காணப்படுகிற அமலேக்கியா, லேகோன்தியை ஏமாற்றுகிற விவரத்தில் இந்த மாதிரியை நீங்கள் காணலாம். மூப்பர் ராபர்ட் டி. ஹாரிஸால் விளக்கப்பட்டதைப்போல, நீங்கள் படித்து, சிந்திக்கும்போது சாத்தான் உங்களை எப்படி ஏமாற்ற முயற்சித்துக்கொண்டிருக்கலாம் என சிந்தியுங்கள்.

துரோகியான அமலேக்கியா, பள்ளத்தாக்கில் தன்னை வந்து சந்திக்க லேகோன்தியை வற்புறுத்தினான். ஆனால், லேகோன்தி உயரத்திலிருந்து வந்தபோது, அவன் சாகும்வரை கொஞ்சங்கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டு அவனுடைய இராணுவம் அமலேக்கியாவின் கைகளுக்குள் விழுந்தார்கள்.(ஆல்மா 47பார்க்கவும்). விவாதங்களாலும், குற்றச்சாட்டுகளாலும் சில ஜனங்கள் நம்மை உயரத்திலிருந்து இறங்க தூண்டில் போடுவார்கள். ஒளி இருக்கிற இடம் உயரமானது. … இது பாதுகாவலான இடம்” (“Christian Courage: The Price of Discipleship,” Ensign or Liahona, Nov. 2008, 74).

2 நேபி 26:22; 28:21–22 ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 50–51

ஒற்றுமை பாதுகாப்பைக் கொண்டுவருகிறது.

ஆல்மா 50ன் ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சூழ்நிலைகளில், நேபியர்களுக்கு எதிராக லாமானியர்களுக்கு எந்த வாய்ப்புமில்லை எனத் தோன்றுகிறது. ஆயுதம், அரண்கள் மற்றும் நேபியர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவர்களை வெல்லமுடியாதவர்களாக்கியது என தோன்றுகிறது (ஆல்மா 49:28–30 பார்க்கவும்). ஆனால், லாமானியர் மரோனி அரண் அமைத்தவைகளையும் சேரத்து, அவர்களுடைய அநேக பட்டணங்களை விரைவிலேயே கைப்பற்றினார்கள்(ஆல்மா 51:26–27 பார்க்கவும்). அது எப்படி நடந்தது? இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது பதில்களைத் தேடவும் (குறிப்பாக ஆல்மா 51:1–12 பார்க்கவும்). உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இந்த விவரத்தில் என்ன எச்சரிக்கைகளிருக்கலாம் என சிந்திக்கவும்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 45:2–8.

ஏலமனுடன் ஆல்மா செய்ததைப்போல, குடும்ப அங்கத்தினர்களுடன் சுவிசேஷ உரையாடல்களை ஒருவருக்கொருவர் நடத்த, ஒன்றுசேர்ந்து இந்த வசனங்களை வாசித்தல் உங்கள் குடும்பத்தினருக்கு உணர்த்தக்கூடும்.

ஆல்மா 46:12–22

தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் தங்களுடைய விசுவாசத்தைத் தற்காத்துக்கொள்ளவும் உரிமைக் கொடி நேபியர்களுக்கு உணர்த்தியது. இதையே செய்ய நம்மை எது உணர்த்துகிறது? ஒருவேளை உங்களுடைய குடும்பம், ஒவ்வொரு நாளும் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள உங்களை நினைவுபடுத்துகிற வார்த்தைகள் அல்லது உருவங்களுடன் ஒரு கொடி அல்லது பதாகையுடன் உங்களுடைய சொந்த உரிமைக்கொடியை உருவாக்கலாம்.

ஆல்மா 48:7–9; 49:1–9; 50:1–6

நேபியர்களின் அரண்களைப்பற்றி உங்கள் குடும்பம் வாசிக்கிறபோது, சத்துருவுக்கு எதிராக எவ்வாறு உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் அரண்களை ஏற்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றி நீங்கள் கலந்துரையாடலாம். நாற்காலிகள், போர்வைகள் போன்ற பொருட்களால் ஒரு அரணை அமைப்பதில், அல்லது நேபியர்களின் அரண்கள் எப்படியிருந்ததென அவர்கள் கற்பனை செய்வதை அவர்கள் வரைவதில் பிள்ளைகள் மகிழலாம்

ஆல்மா 51:1–12.

நம்மிடம் பிணக்குகளிருக்கும்போது நமது குடும்பங்களுக்குள் என்ன நடக்கலாம் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கிறது? நமது ஒற்றுமையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

படிக்கும்போதே கேள்விகளைக் கேளுங்கள் வேதங்களை நீங்கள் படிக்கும்போது, வாசிப்பதால் நீங்கள் எவ்வளவு நன்றாக வாழுகிறீர்கள் என்பதைப்பற்றி சிந்திக்க உங்களுக்குதவ உங்களையே நீங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

படம்
மரோனி உரிமைக் கொடியை பிடித்திருத்தல்

உரிமைக் கொடி– லாரி கோன்ராட் வின்போர்க்