என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஆகஸ்ட் 10–16. ஆல்மா 53–63: “அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு”


“ஆகஸ்ட் 10–16. ஆல்மா 53–63: ‘அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஆகஸ்ட் 10–16 ஆல்மா 53–63,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
இரண்டாயிரம் இளம் போர் வீரர்கள்

இரண்டாயிரம் இளம் போர் வீரர்கள்–அர்னால்ட் ப்ரீபெர்க்

ஆகஸ்ட் 10–16

ஆல்மா 53–63

“அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்பட்டு”

ஆல்மா 53–63லுள்ள விவரங்கள் சுவிசேஷ சத்தியங்களின்படி வாழுதல் அல்லது அவற்றை புறக்கணித்தலின் விளைவுகளை பார்க்க உங்களுக்கு உதவ முடியும். ஆல்மா 53–23 வாசிக்கும்போது, உணர்த்துதல்களைப் பதிவுசெய்து, நீங்கள் அறிந்துகொள்கிற சத்தியங்களின்படி வாழக்கூடிய வழிகளை சிந்தியுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

லாமானிய சேனைகளோடு ஒப்பிடும்போது, ஏலமனின் 2000 இளம் நேபியர்களைக் கொண்ட “சிறிய சேனை”(ஆல்மா 56:33} வென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது. எண்ணிக்கையில் குறைவு மட்டுமல்லாமல், ஏலமனின் போர் வீரர்கள் “அனைவரும் இளைஞர்கள்” மற்றும் “அவர்கள் என்றுமே யுத்தம் பண்ணியதில்லை”(ஆல்மா 56:46–47). சில விதங்களில், சாத்தான் மற்றும் உலகத்தின் தீய சக்திகளுக்கு எதிரான நமது பிற்காலப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டதாகவும் தாங்கமுடியாததாகவும் சிலசமயங்களில் நினைக்கிற நமக்கு அவர்களின் சூழ்நிலைகள் பரிச்சயமாகத் தோன்றலாம்.

ஆனால் எண்ணிக்கை அல்லது ராணுவ திறனில் எந்த தொடர்புமில்லாமல், லாமானியர்மேல் ஏலமனின் சேனைக்கு சில அனுகூலகங்கள் இருந்தன. அவர்களை வழிநடத்த தீர்க்கதரிசியாகிய ஏலமனை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் (ஆல்மா 53:19), “தாங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் தங்களை விடுவிப்பார் என்று அவர்கள் தங்கள் அன்னையரால் போதிக்கப்பட்டிருந்தார்கள்” (ஆல்மா 56:47), “தாங்கள் போதிக்கப்பட்டவற்றின் மீது அவர்கள் மிகுந்த விசுவாசம் வைத்திருந்தனர்.” அதன் விளைவாக, அவர்கள் “தேவனுடைய அற்புதமான வல்லமையால்”(ஆல்மா 57:26) பாதுகாக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் யுத்தத்தில் காயப்பட்டாலும், “அவர்களில் ஒரு ஆத்துமாவாகிலும் அழிந்து போகவில்லை” (ஆல்மா 57:25). ஆகவே வாழ்க்கை நம் ஒவ்வொருவர் மீதும் ஆவிக்குரிய காயங்களை ஏற்படுத்தும்போது, நாம் தைரியமடையலாம், ஏலமனின் சேனையின் செய்தியாவது “நியாயமுள்ள தேவன் ஒருவர் உண்டென்றும், சந்தேகிக்காமல் இருக்கிற எவரும் அவருடைய அற்புதமான வல்லமையினாலே காக்கப்படுவார்கள்” (ஆல்மா 57:26).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 53:10–22; 56:43–48, 55–56; 57:20–27; 58:39–40

நான் தேவனில் விசுவாசத்தைப் பிரயோகிக்கும்போது, அவரது அற்புதமான வல்லமையால் அவர் என்னை ஆசீர்வதிப்பார்.

அவைகள் மிக சாத்தியமற்றவைகளாகத் தோன்றுவதால், ஏலமனின் இளம் போர்வீரர்களின் வெற்றிகள் போன்ற அற்புதமான கதைகள், ஒப்பிட கடினமானவையாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கதைகள் வேதங்களில் இருக்கும் ஒரு காரணம், நமக்கு விசுவாசம் இருக்கும்போது, தேவன் நமது வாழ்க்கையில் அற்புதங்கள் செய்ய முடியும் என நமக்கு காட்டுவதற்கே. பின்வரும் வசனங்களில் இளம் போர்வீரர்களைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, அவர்கள் தேவனில் தங்கள் விசுவாசத்தை எப்படி பிரயோகித்தார்கள் அவர்களது விசுவாசத்தை எது பெலமாக்கியது, இந்த அற்புதங்களை எது சாத்தியமாக்கியது என்பதைப்பற்றிய தடயங்களுக்காக தேடவும்: ஆல்மா 53:10–22; 56:43–48, 55–56; 57:20–27; மற்றும் 58:39–40. பின்வரும் அட்டவணை நீங்கள் காண்பவற்றை பதிவு செய்ய ஒரு வழியை ஆலோசனையளிக்கிறது.

ஏலமனின் போர்வீரர்களின் தன்மைகள்:

அவர்கள் என்ன போதிக்கப்பட்டார்கள்:

அவர்கள் என்ன செய்தார்கள்:

அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்கள்:

இந்த வசனங்களைத் தியானித்த பின்பு, உங்கள் விசுவாசத்தைப் பிரயோகிக்க என்ன உணர்த்தப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

இளம் போர்வீரர்களின் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதில் அன்னையரின் பங்கை ஏலமன் குறிப்பிட்டான்(ஆல்மா 56:47–48; 57:20–27 பார்க்கவும்). உங்கள் விசுவாசத்தைக் கட்டுவதில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களும் பிறரும் என்ன பங்காற்றியிருக்கிறார்கள்? உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் விசுவாசத்தைப் பெலப்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும்?

படம்
இளம் போர்வீரர்கள் தங்கள் அன்னையருடன்

அவர்கள் சந்தேகப்படவில்லை–ஜோசப் ப்ரிக்கி

ஆல்மா 58:1–12, 31–3761

பிறரின் நன்மையை நினைத்து, காயப்படுத்தாமலிருக்க நான் தேர்ந்தெடுக்கலாம்.

புண்படுத்தப்பட ஏலமனுக்கும் பகரோனுக்கும் நல்ல காரணங்கள் இருந்தன. தனது சேனைக்கு போதுமான ஆதரவை ஏலமன் பெறவில்லை, அந்த ஆதரவை பகரோன் தடுத்து வைத்திருந்ததாக மரோனியால் பகரோன் தப்பாக குற்றஞ்சுமத்தப்பட்டான் (ஆல்மா 58:4–9, 31–3260 பார்க்கவும்). ஆல்மா 58:1–12, 31–37 மற்றும் ஆல்மா 61ல் அவர்களது பிரதிக்கிரியைப்பற்றி எது உங்களைக் கவர்கிறது? அதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களது எடுத்துக்காட்டை நீங்கள் எப்படி பின்பற்றலாம்?

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் போதித்தார்: “ சில விதமாக, சில நேரத்தில் இந்த சபையில் ஒருவர் புண்படுத்தலை ஏற்படுத்துவதாக கருதப்படுகிற ஒன்றை சொல்லலாம் அல்லது செய்யலாம். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக நடக்கும், அது கண்டிப்பாக ஒருமுறைக்கு மேல் நடக்கும். … நீங்களும் நானும் மற்ற ஜனங்களின் நோக்கத்தை அல்லது நடத்தையை கட்டுப்படுத்த முடியாது. எனினும் நாம் எப்படி செயல்படுவோம் என்பதை நாம் தீர்மானிக்கிறோம். நீங்களும் நானும் ஒழுக்க சுயாதீனத்தால் தரிப்பிக்கப்பட்ட சுயாதீனர்கள், புண்படுத்தப்படாமலிருக்க நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பதை தயவுசெய்து நினைவில் வைத்திருங்கள்” (“And Nothing Shall Offend Them,” Ensign or Liahona, Nov. 2006, 91).

நீதிமொழிகள் 16:32; மரோனி 7:45; David A. Bednar, “Meek and Lowly of Heart,” Ensign or Liahona, May 2018, 30–33 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 53:10–17

அந்தி–நேபி–லேகியர் இரத்தம் சிந்தாமலிருக்க உடன்படிக்கை செய்தனர். நாம் தேவனுடன் என்ன உடன்படிக்கைகள் செய்திருக்கிறோம்? நமது உடன்படிக்கைகளுக்கு அதிக விசுவாசமாயிருக்க உணர்த்துகிற எதை ஆல்மா 53:10–17ல் நாம் வாசிக்கிறோம்?

ஆல்மா 53:20–21

நாம் எப்படி ஏலமனின் இளைஞர்கள் போல அதிகமாக ஆக முடியும்? இந்த வசனங்களிலுள்ள சில சொற்றொடர்களின் அர்த்தம் என்ன என கலந்துரையாடுதல் உதவலாம், உதாரணமாக “பெலனிலும் செயலிலும் துடிப்பாக” இருத்தல் என்றால் என்ன? [தேவனுக்கு] முன்பாக “தலைநிமிர்ந்து நடத்தல்” என்றால் என்ன?

ஆல்மா 58:9–11, 33, 37

மிகவும் தேவையுள்ள நேரங்களில் நேபிய போர்வீரர்கள் போல நாம் பரலோக பிதாவிடம் திரும்புகிறோமா? அவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் எப்படி பதிலளித்தார்? நமது ஜெபங்களுக்கு அவர் எப்படி பதிலளித்தார் ?

ஆல்மா 61:2, 9, 19

நாம் தப்பாக குற்றஞ்சுமத்தப்படும்போது, எப்படி பதிலளிப்பது என நாம் பகரோனிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

ஆல்மா 62:39–41.

நமது சோதனைகளால் “கடினப்படுத்தப்பட” அல்லது “மென்மையாக்கப்பட” நாம் தேர்ந்தெடுக்கலாம் என்பதை புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்துக்கு உதவக்கூடிய ஒரு பொருள்சார் பாடம் இங்கே: கொதிக்கிற நீருள்ள பானையில் ஒரு உருளைக் கிழங்கையும் ஒரு முட்டையையும் போடவும். உருளைக்கிழங்கும் முட்டையும் நம்மைக் குறிக்கின்றன, தண்ணீர் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளைக் குறிக்கிறது. உருளைக்கிழங்கும் முட்டையும் வேகும்போது, உங்கள் குடும்பம் எதிர்கொள்ளுகிற சில சோதனைகளைப்பற்றி நீங்கள் பேசலாம். இது போன்ற சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் சில வழிகள் யாவை? ஆல்மா 62:41ன்படி, சோதனைகளுக்கு நமது எதிர்வினைகள் நம்மை எப்படி பாதிக்கின்றன? உருளைக்கிழங்கும் முட்டையும் முழுவதுமாக வெந்தபிறகு, அதே சோதனை உருளைக்கிழங்கை மென்மையாக்கி, முட்டையை கடினமாக்குகிறது என காட்ட உருளைக்கிழங்கையும் முட்டையையும் உடைக்கவும். நமது சோதனைகள் நம்மை தாழ்மையாக்கி, தேவனுக்கு நெருக்கமாக கொண்டு வருவதை உறுதி செய்ய நமது குடும்பத்தினர் என்ன செய்யலாம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

பிள்ளைகள் தங்கள் உருவாக்கும் திறனை தெரிவிக்கட்டும். “சுவிசேஷக் கொள்கைகளுக்கு தொடர்புடைய ஒன்றை [உங்கள்] பிள்ளைகள் உருவாக்க நீங்கள் அழைக்கும்போது, அவர்கள் கொள்கையை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் அழைக்கிறீர்கள், மற்றும் அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரு கண்கண்ட நினைவை நீங்கள் கொடுக்கிறீர்கள். அவர்களை கட்டவும், வரையவும், வண்ணமிடவும், எழுதவும், உருவாக்கவும் அனுமதிக்கவும்” (Teaching in the Savior’s Way, 25).

படம்
இரண்டாயிரம் இளம் போர்வீரர்கள்

இது உண்மை, ஐயா, அனைவரும் இருக்கின்றனர், எண்ணப்பட்டுவிட்டனர்– க்ளார்க் கெல்லி ப்ரைஸ்.