என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூலை 20–26. ஆல்மா 36–38: “தேவனைப் பார்த்து பிழைத்திரு”


“ஜூலை 20–26 ஆல்மா 36–38: ‘தேவனைப் பார்த்து பிழைத்திரு’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூலை 20–26. ஆல்மா 36–38,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஒருவர் ஜெபித்தல்

ஒருவர் ஜெபித்தலைப்பற்றிய விளக்கம்–ஜோஷுவா டென்னிஸ்

ஜூலை 20–26

ஆல்மா 36–38

“தேவனைப் பார்த்து பிழைத்திரு”

“சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிற மகிழ்ச்சியை நீங்கள் உணரும்போது, நீங்கள் கற்றவற்றைப் பிரயோகிக்க விரும்புவீர்கள்” (என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் [2004], 19) நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற சத்தியங்களை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் பதிவு செய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தன்னைச் சுற்றிலும் துன்மார்க்கத்தை ஆல்மா கண்டபோது, அவன் ஆழ்ந்த “வருத்தத்தாலும்,” “பாடுகளாலும்” “ஆத்தும வியாகுலம்” அடைந்தான் (ஆல்மா 8:14). சோரமியரைப்பற்றி அவன் சொன்னான், “இந்த ஜனத்துக்குள்ளே துன்மார்க்கம், என் ஆத்துமாவை வேதனைப்படுத்துகிறது” (ஆல்மா 31:30). சோரமியர்களிடம் அவனுடைய ஊழியத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, அது போன்ற ஒன்றை அவன் உணர்ந்தான். “ஜனங்களுடைய இருதயங்கள் கடினப்பட்டு, வார்த்தையின் கண்டிப்பினிமித்தம் அவர்கள் இடறலடையத் துவங்கியதையும்” அவன் கண்டான், “இது அவனது இருதயத்தை மிகவும் துக்கப்படுத்தியது” (ஆல்மா 35:15). அவன் கண்டதையும் உணர்ந்ததையும்பற்றி ஆல்மா என்ன செய்தான்? அவன் வெறுமனே சோர்வடையவோ அல்லது உலகத்தின் நிலைமை குறித்து கோபமடையவோயில்லை. மாறாக “தன் குமாரர்களை ஏகமாய்க் கூடும்படி செய்து,” “நீதிக்கேற்ற காரியங்களைக் குறித்து அவர்களுக்கு” போதித்தான் (ஆல்மா 35:16). அவன் அவர்களுக்கு போதித்ததாவது, “மனுஷன் கிறிஸ்துவினாலும் அவர் மூலமுமேயன்றி வேறெந்த வழியினாலும் முறையினாலும் இரட்சிக்கப்பட முடியாது. … இதோ, அவரே சத்தியம் மற்றும் நீதியின் வார்த்தையானவர்” (ஆல்மா 38:9).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 36

நான் தாழ்மையாய் இருப்பதாலும் மனந்திரும்புவதாலும் நான் தேவனால் பிறக்க முடியும்.

ஆல்மாவின் மனமாற்றம் போல சிலரே விசேஷித்த அனுபவம் பெறுவார்கள். ஆனால் நாமனைவரும் கற்று பயன்படுத்தக்கூடிய கொள்கைகள் அவனது அனுபவத்திலிருக்கின்றன, ஏனெனில் ஒவ்வொருவரும் “தேவனால் ஜெனிப்பிக்கப்பட” வேண்டும். (ஆல்மா 36:23). நீங்கள் ஆல்மா 36 வாசிக்கும்போது, நீங்கள் பயன்படுத்தக்கூடிய கொள்கைகளைத் தேடவும். உதாரணமாக, தேவனால் பிறந்த ஒருவர் பாவத்தைப்பற்றி என்ன உணர்கிறார்? தேவனால் பிறந்த ஒருவரின் நமபிக்கைகள் மற்றும் செயல்களில் பார்க்க நீங்கள் எதிர்பார்க்கிற மாற்றங்களையும் நீங்கள் தேடலாம்.

மோசியா 5:7; 27:25–26; ஆல்மா 5:14; 22:15; ஏலமன் 3:35; “Conversion,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 36

இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்தார்.

இந்த அதிகாரத்தில் அவனது மனமாற்றத்தைப்பற்றிய ஆல்மாவின் விவரம் திரும்ப கூறப்படுவதை நீங்கள் காணலாம். அது ஏனெனில்,ஆல்மா 36 கியாஸ்மஸ் என அழைக்கப்பட்ட எபிரேய கவிதை வடிவின் பெரிய உதாரணம். அதில் வார்த்தைகளும் கருத்துக்களும் ஒரு மையக்கருத்துக்கு வழிநடத்துகிற, குறிப்பிட்ட முறையில் வழங்கப்பட்டு, பின் மாற்று முறையில் திரும்பக் கூறப்படுகிறது. ஆல்மா 36ல், வசனம் 3ல் உள்ள கருத்து வசனம் 27ல் திரும்பக் கூறப்பட்டுள்ளது, வசனம் 5ல் உள்ள கருத்து, வசனம் 26ல், திரும்பக் கூறப்பட்டுள்ளது, மேலும் பல. கியாஸ்மஸின் மையக் கருத்து, மிக முக்கியமான செய்தி. வசனங்கள் 17–18ல் மையக் கருத்தை நீங்கள் காண முடியுமா என பார்க்கவும். “இந்த நினைவைப் பற்றிக் கொண்டது” எப்படி ஆல்மாவைப் பாதித்து அவனது வாழ்வை மாற்றியது என்பதைக் கவனிக்கவும். இந்த சத்தியம் எப்படி உங்களை பாதித்திருக்கிறது? இந்த பாகத்தில் திரும்ப கூறப்பட்ட எந்தக் கருத்துக்களை நீங்கள் காண்கிறீர்கள்?

இந்த மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பைப்பற்றிய விவரம் ஆல்மாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும் இரட்சகரிடம் திரும்பவும் எவ்வாறு உங்களுக்கு உணர்த்துகிறது?

கியாஸ்மஸைப்பற்றிய அதிக தகவல்களுக்கு Book of Mormon Student Manual (Church Educational System manual [2009], 232–33) பார்க்கவும்.

ஆல்மா 37

வேதங்கள் “ஒரு ஞானமான நோக்கத்துக்காக” பாதுகாக்கப்பட்டுள்ளன.

வேதங்களை இன்று பெற்றிருப்பது எவ்வளவு அதிசயம் மற்றும் ஆசீர்வாதம் என்பதைப்பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா ? “பரிசுத்தமான இவைகளை தேவன் [நம்மிடத்தில்] ஒப்படைத்தார் என்று நினைவுகொள்”(ஆல்மா 37:14). நீங்கள் ஆல்மா 37 வாசிக்கும்போது, வேதங்களைப் பெற்றிருப்பதால் வரும் ஆசீர்வாதங்களைத் தேடவும். இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் எவ்வாறு அனுபவித்திருக்கிறீர்கள்? “[தேவனின்] வல்லமையை வருங்காலத் தலைமுறையினருக்குக் காண்பிக்க,” உதவ நாம் எவ்வாறு வேதங்களைப் பயன்படுத்த முடியும் ?(ஆல்மா 37:18).

ஆல்மா 37:38–47ல், ஆல்மா “கிறிஸ்துவின் வார்த்தையை” லியஹோனாவுக்கு ஒப்பிடுகிறான். இந்த ஒப்பீடைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, “நாளுக்கு நாள்” கிறிஸ்துவின் போதனைகளின் அற்புதம் மற்றும் வல்லமையை நீங்கள் அனுபவித்த வழிகளைப்பற்றி சிந்தியுங்கள் (ஆல்மா 37:40).

D. Todd Christofferson, “The Blessing of Scripture,” Ensign or Liahona, May 2010, 32–35 ஐயும் பார்க்கவும்.

படம்
பெண் வேதங்களை வாசித்தல்

தேவனை எப்படி பின்பற்றலாம் என வேதங்கள் நமக்கு போதிக்கின்றன.

ஆல்மா 37:6–7

“அற்பமும் சொற்பமும் ஆனவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன”.

தீர்வுகள் பெரியதாயும் குழப்பமானதாகவும் இருக்கும்படியாக நமது பிரச்சினைகள் மிகப்பெரிதும் குழப்பமானதுமாக இருக்கிறது என சிலசமயங்களில் நாம் உணரலாம். இருப்பினும் மீண்டும் மீண்டும் தன் பணியை நிறைவேற்றவும் தன் பிள்ளைகளின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும் (ஆல்மா 37:6) “அற்பமும் சொற்பமுமானவற்றை” பயன்படுத்த கர்த்தர் தேர்ந்துகொள்கிறார். நீங்கள் ஆல்மா 37:6–7 வாசிக்கும்போது, இந்தக் கொள்கை உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்யும் வழிகளை சிந்தித்து பதிவு செய்யவும். உங்களை ஆசீர்வதிக்கவும், அவரது கிரியையை நிறைவேற்றவும் கர்த்தர் பயன்படுத்துகிற அற்பமும் சொற்பமும் ஆன காரியங்களில் சில யாவை?

ஆல்மா 37:41–46; Dallin H. Oaks, “Small and Simple Things,” Ensign or Liahona, May 2018, 89–92 யும் பார்க்கவும்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 36:5–26.

ஆல்மாவின் அனுபவம் அசாதாரணமானதாக இருந்தாலும், அவனது மனமாற்றம் நம் அனைவருக்கும் பொருந்துகிற பல கொள்கைகளை விளக்குகிறது. “தேவனால் பிறத்தலைப்பற்றி” போதிக்கிற ஆல்மா 36:5–26லிருந்து ஒரு வசனத்தை தேர்ந்தெடுக்க குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் அழைக்கவும். இந்த வசனங்களில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? ஆல்மா விவரித்த கொள்கைகளை அவர்கள் எப்படி பயன்படுத்தினர் என ஒருவேளை உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆல்மா 36:18–21, 24.

மனந்திரும்புதல் ஒரு ஆனந்தமான அனுபவம், பயங்கரமானதல்ல என பார்க்க ஒருவருக்கு உதவ நாம் இந்த வசனங்களை எப்படி பயன்படுத்தலாம்? பிறருடன் சுவிசேஷத்தைப் பகிர மனந்திரும்புதல் நமக்கு எப்படி உணர்த்த முடியும்?

ஆல்மா 37:6–7, 38–46

நமது வாழ்க்கையில் பெரிய காரியங்களைக் கொண்டு வருகிற சில “அற்பமும் சொற்பமுமானவை” (ஆல்மா 37:6) யாவை? என்ன வழிகளில் கிறிஸ்துவின் வார்த்தை லியஹோனா போலிருக்கிறது? வேதங்களை அதிக கருத்தாக படிக்க நாம் ஒருவருக்கொருவர் எப்படி உதவ முடியும்?

ஆல்மா 37:35

“[நமது] வாலிபத்தில்” கட்டளைகளைக் கைக்கொள்ள கற்பது ஏன் ஞானமானது”?

ஆல்மா 38:12

உங்கள் குடும்பத்தினருக்கு கடிவாளம் என்றால் என்ன என தெரியுமா? அதன் படத்தை நீங்கள் அவர்களுக்கு காட்டலாம் மற்றும் ஒரு விலங்கை கட்டுப்படுத்த அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப்பற்றி பேசலாம். “[நமது] ஆசைகளுக்கு கடிவாளமிடுதல்” என்றால் என்ன? நமது ஆசைகளுக்கு கடிவாளமிடுதல் நாம் “அன்பால் நிரப்பப்பட” எப்படி நமக்கு உதவுகிறது?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். ஆவிக்குரிய உணர்வுகளை நீங்கள் பதிவு செய்யும்போது, அவரது வழிகாட்டுதலை நீங்கள் மதிக்கிறீர்கள் என கர்த்தருக்கு காட்டுகிறீர்கள் மற்றும் அதிக தொடர்ந்த வெளிப்படுத்தல்களால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் படிக்கும்போது, உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். (இரட்சகரின் வழியில் போதித்தல், 12, 30 பார்க்கவும்.)

படம்
ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தோன்றுதல்

ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தோன்றுதல்–க்ளார்க் கெல்லி ப்ரைஸ்