என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூலை 6–12. ஆல்மா 30–31: “தேவ வார்த்தையின் நன்மை”


“ஜூலை 6–12. ஆல்மா 30–31: ‘தேவ வார்த்தையின் நன்மை’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூலை 6–12. ஆல்மா 30–31,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
கோரிகோருக்கு ஆல்மா போதித்தல்

சகல காரியங்களும் ஒரு தேவனிருப்பதைக் குறிக்கின்றன (ஆல்மாவும் கோரிகோரும்) –வால்டர் ரானே

ஜூலை 6–12

ஆல்மா 30–31

“தேவ வார்த்தையின் நன்மை”

தேவ வார்த்தையின் “வல்லமையான பயனைக்குறித்து” ஆல்மா சாட்சியளிக்கிறான்(ஆல்மா 31:5). ஆல்மா 30–31ஐ நீங்கள் வாசிக்கும்போது உங்களிடத்தில் தேவ வார்த்தையின் வல்லமையான பயனை நீங்கள் உணரும்போது உங்கள் எண்ணங்களை பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தீமைக்காகவும், நன்மைக்காகவும் வார்த்தைகளின் பயனை ஆல்மா 30–31லிலுள்ள விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. கோரிகோர் என்ற பெயருடைய ஒரு பொய்யான போதகனின் “இச்சகமாயும்” , “உரக்கப்பேசுவதினாலும்” “அநேக ஆத்துமாக்களை அழிவிற்காகக் கொண்டுவரப்போவதாக” பயமுறுத்தினான் ( ஆல்மா 30:31, 47). இதே போன்று பிரிந்துபோன ஒரு நேபியனான சோரோம் என்ற பெயருடையவனின் போதனைகள் “பெரும் குற்றத்தினுள் விழவும்” , “கர்த்தருடைய வழிகளைப் புரட்டவும்” ஜனங்களின் ஒரு பெரிய பிரிவை நடத்தியது” (ஆல்மா 31:9, 11).

மாறாக, தேவ வார்த்தை, பட்டயம் அல்லது, கோரிகோர் மற்றும் சோரமின் வார்த்தைகளையும் சேர்த்து, ஜனங்களுக்கு ஏற்பட்ட யாதொன்றைக் காட்டிலும், அது ஜனங்களின் மனதில் ஒரு வல்லமையான தாக்கத்தை உண்டாக்கும் என ஆல்மாவுக்கு அசைக்கமுடியாத விசுவாசமிருந்தது(ஆல்மா 31:5) ஆல்மாவின் வார்த்தைகள் நித்திய சத்தியத்தை வெளிப்படுத்தி கோரிகோரை ஊமையாக்க (ஆல்மா 30:39–50 பார்க்கவும்) வானத்தின் வல்லமைகளை இழுத்துக்கொண்டான், சத்தியத்திற்குள் சோரமியர்களைத் திரும்பக்கொண்டுவர அவனோடு சென்றவர்கள்மேல் வானங்களின் ஆசீர்வாதங்களை அவர்கள் அழைத்தார்கள் (ஆல்மா 31:31–38பார்க்கவும்). “மிக உரக்கப்பேசுகிற வார்த்தைகளும்” , “பெரும் தவறுகளும்” ஜனங்களின் மனங்களில் மீண்டும் ஒரு ஆற்றலுள்ள தாக்கமாயிருக்கிறபோது இன்று இவைகள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு மதிப்புமிக்க எடுத்துக்காட்டுகளாயிருக்கின்றன. (ஆல்மா 30:31; 31:9). ஆனால், “தேவ வார்த்தையின் நன்மையை” ( ஆல்மா 31:5) ஆல்மா செய்ததைப்போல நம்புவதால் சத்தியத்தை நாம் கண்டுபிடிக்கலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 30:6, 12.

அந்தி-கிறிஸ்து என்றால் என்ன?

ஆல்மா 30ல் கோரிகோர் “அந்தி-கிறிஸ்து” என்றழைக்கப்படுகிறான் (வசனம் 6) ஒரு அந்தி-கிறிஸ்து என்பது கிறிஸ்துவின் வேஷத்தால் கருதப்பட்டு, ஆனால் நிஜத்தில் கிறிஸ்துவுக்கு எதிராயிருப்பது (1 யோவான் 2:18–22; 4:3–6; 2 யோவான் 1:7). ஒரு பரந்த பொருளில், “உண்மையான சுவிசேஷத்தை அல்லது இரட்சிப்பின் திட்டத்தை போலியாக்குகிற யாரும் அல்லது எதுவும் மற்றும் வெளிப்படையாக அல்லது இரகசியமாக கிறிஸ்துவுக்கு எதிராக அமைக்கப்படுகிறதாக இது இருக்கிறது” (Bible Dictionary, அந்திகிறிஸ்து”).

இன்றைய உலகத்தில் சுவிசேஷத்தை எது போலியாக்குகிறதென நீங்கள் கவனிக்கிறீர்கள்? உதாரணமாக, ”உலகத்திலிருந்து நாம் கேட்கிற குடும்பத்திற்கு எதிரான எந்த கோட்பாடும் அல்லது கொள்கையும் அந்தி–கிறிஸ்துவாக இருக்கிறது” என ஒத்தாசைச் சங்கத்தின் முன்னாள் தலைவரான சகோதரி ஜூலி பி. பெக் போதித்தார்(“Teaching the Doctrine of the Family,” Ensign, Mar. 2011, 15)

படம்
கோரிகோர் ஆல்மாவுடன் பேசுகிறான்

கோரிகோர் ஆல்மாவை எதிர்கொள்கிறான்–ராபர்ட் டி. பாரெட்

ஆல்மா 30:6–60

என்னை ஏமாற்ற முயற்சிக்கிறவர்களின் செல்வாக்கை தடுக்க மார்மன் புஸ்தகம் எனக்கு உதவமுடியும்.

ஆல்மா 30:6–31ஐ நீங்கள் வாசிக்கும்போது, கோரிகோரின் போதனைகள் பரிச்சயமாகத் தெரியலாம். “நமது நாட்களில் பிசாசானவனின் தீமையான வடிவங்களுக்கு, உத்திகளுக்கு, கோட்பாடுகளுக்கு எதிராக மார்மன் புஸ்தகம் வெளிப்படுத்துகிறது மற்றும் வலிமைப்படுத்துகிறது. மார்மன் புஸ்தகத்திலுள்ள மதமாறுபாட்டின் மாதிரி இன்று நமக்கிருக்கிற வகையை ஒத்ததாயிருக்கிறது. தவறுகளை நாம் பார்க்கும்படியாகவும், நமது காலத்தில், பொய்யான கல்வி, அரசியல், மத, தத்துவங்களின் கருத்துக்களை எவ்வாறு போராடுவது என அறியும்படியாகவும், தேவன், அவருடைய முடிவற்ற முன்னறிவுடன் மார்மன் புஸ்தகத்தை அவ்விதமாக வார்த்தார்” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson, [2014], 132).

ஆல்மா 30:6–31ல் கோரிகோர் போதித்த பொய்யான கோட்பாடுகளை ஒரு பட்டியலிடுவதை கருத்தில்கொள்ளவும். இந்த போதனைகளை நம்புவதின் சில விளைவுகள் எவை? உதாரணமாக, “ஒரு மனிதன் மரிக்கும்போது, அதுதான் முடிவாயிருக்கும்” என்பதை நம்புவதின் விளைவு என்ன? (ஆல்மா 30:18). கோரிகோரினால் போதிக்கப்பட்ட எந்த கோட்பாடுகள் இன்றைய உலகத்தில் நீங்கள் கவனித்த பொய்யான கோட்பாடுகளைப் போலிருக்கிறது?

கோரிகோருக்கும் ஆல்மாவுக்குமிடையிலுள்ள உரையாடலைப்பற்றி வாசிக்கும்போது, மற்றவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிக்கும்போதுள்ள சூழ்நிலைகள் உங்களுக்குதவும். ஆல்மா 30:29–60ஐ படிப்பது, கோரிகோர் எவ்வாறு ஏமாற்றப்பட்டானென்று புரிந்துகொள்ள உதவக்கூடும் (விசேஷமாக வசனங்கள் 52–53 பார்க்கவும்). கோரிகோரின் போதனைகளுக்கு ஆல்மாவின் பதிலிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? (ஆல்மா30:31–35 பார்க்கவும்).

ஆல்மா 31

நீதிக்கு நேராக ஜனங்களை நடத்த தேவனுடைய வார்த்தைக்கு வல்லமையிருக்கிறது.

நேபியரிடமிருந்து சோரமியர்கள் பிரிந்துபோவதன் பிரச்சினையை ஒரு அரசியல் அல்லது இராணுவ தீர்வுக்கு அவசியமானதென சிலர் விரும்புவதாகத் தோன்றக்கூடும் (ஆல்மா 31:1–4 பார்க்கவும்). ஆனால் “தேவ வார்த்தையின் நன்மையை” (ஆல்மா 31:5) நம்புவதற்கு ஆல்மா கற்றுக்கொண்டான். ஆல்மா 31:5லிருந்து தேவ வார்த்தையின் வல்லமையைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? “நீதியானவற்றை ஜனங்கள் செய்ய” தேவ வார்த்தை நடத்துகிறதென நீங்கள் எவ்வாறு பார்த்தீர்கள்? (ஆல்மா 31:5). நீங்கள் நேசிக்கிற ஒருவருக்குதவ தேவ வார்த்தையை பயன்படுத்த நீங்கள் எவ்வாறு “முயற்சிக்கலாமென” (பயன்படுத்து அல்லது சோதி) சிந்தியுங்கள்.

மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கு ஆல்மாவின் அணுகுமுறையை கூடுதலாகப் புரிந்துகொள்ள அவனுடைய மனப்போக்குகளை, உணர்வுகளை, செயல்களை ஆல்மா 31ல் விவரிக்கப்பட்டிருக்கிறதைப்போல சோரமியர்களுடன் நீங்கள் ஒப்பிடலாம். பின்வரும் ஒன்றைப்போன்ற ஒரு அட்டவணை உதவக்கூடும். என்ன வேறுபாடுகளை நீங்கள் கவனிக்கிறீர்கள்? நீங்கள் ஆல்மாவைப்போலிருக்க முடியும் என்பதை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

சோரமியர்

ஆல்மா

சோரமியர்

அவர்களுடைய பிரிவினருக்கு வெளியிலிருந்தவர்களை நம்பியவர்கள் நரகத்திற்கு தண்டிக்கப்பட்டார்கள்(ஆல்மா 31:17).

ஆல்மா

சோரமியர் அவர்களுடைய “சகோதரர்களாக” இருந்தார்கள், அவர்களுடைய ஆத்துமாக்கள் “அருமையானவை” என நம்பப்படுகிறது( ஆல்மா 31:35).

சோரமியர்

அவர்களுடைய இருதயங்களை செல்வத்தில் வைத்தார்கள் ( ஆல்மா 31:24, 28).

ஆல்மா

இயேசு கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவர வாஞ்சையாயிருந்தார்கள்( ஆல்மா 31:34)

சோரமியர்

ஆல்மா

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 30:44

வெளியே நடக்கச்செல்லும்போது அல்லது தேவனுடைய சிருஷ்டிப்புகளின் படங்களை பார்வையிடும்போது ஆல்மா 30:44ஐ ஒன்றுசேர்ந்து வாசிப்பதையும் கலந்துரையாடுவதையும் கருத்தில்கொள்ளவும். தேவனைக்குறித்து சாட்சியளிக்கும்படியாக அவர்கள் பார்த்ததை குடும்ப அங்கத்தினர்கள் பகிர்ந்துகொள்ளலாம். இந்தக் காரியங்கள் அல்லது நமக்குக் கிடைத்த பிற அனுபவங்கள், தேவன் உண்மையானவர் என அறிந்துகொள்ள எவ்வாறு உதவுகிறது?

ஆல்மா 30:56–60

பிசாசானவன் அவனைப் பின்பற்றுகிறவர்களை எவ்வாறு நடத்துகிறான் என்பதைப்பற்றி ஆல்மா 30:56–60லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அவனுடைய செல்வாக்குக்கு எதிராக நமது வீட்டைப் பாதுகாக்க நம்மால் என்ன செய்யமுடியும்?

ஆல்மா 31:20–38

உங்கள் குடும்பத்துடன் ஆல்மா 31:20–38ஐ வாசித்தபின்பு பின்வரும் கேள்விகளை நீங்கள் கலந்துரையாடலாம்: சோரமியர் ஜெபத்திலிருந்து ஆல்மாவின் ஜெபம் எவ்வாறு வித்தியாசமாயிருந்தது? நம்முடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபங்களில் ஆல்மாவின் எடுத்துக்காட்டை எவ்வாறு நாம் பின்பற்றலாம்?

ஒவ்வொரு காலையும் இரவும் ஜெபிப்பதற்கு நினைவுகொள்ள அவர்களுக்குதவ, இளம் பிள்ளைகள் அவர்களுடைய தலையணைகளுக்குக் கீழே சிறிய கல் ஒன்றை வைக்கலாம். தங்களுடைய கல்லை அலங்கரிப்பதை அவர்கள் ரசிக்கக்கூடும்.

ஆல்மா 31:23

நம்முடைய வீட்டில் தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளவும் பேசவும் ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் சுற்றுச்சூழல்களை ஆயத்தப்படுத்தவும். “சத்தியத்தை கற்றுக்கொள்ளவும் உணரவும் நமது திறமையை நமது சுற்றுச்சூழல்கள் ஆழமாகப் பாதிக்கமுடியும்,”(Teaching in the Savior’s Way, 15). பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கை அழைக்கக்கூடிய வசனங்களைப் படிக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். எழுச்சியூட்டும் இசையும் படங்களும்கூட ஆவியானவரை அழைக்கலாம்.

படம்
ராமியம்தோம்மில் சோரமியர் ஜெபித்தல்

ராமியம்தோம்–டெல் பார்சன்