என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூன் 8–14 ஆல்மா 8–12: தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்


ஜூன் 8–14 ஆல்மா 8–12: தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

ஜூன் 8–14. ஆல்மா 8–12,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஆல்மா பிரசங்கித்தல்

உண்மையான கோட்பாட்டை போதித்தல்– மைக்கேல் டி. மாம்

ஜூன் 8–14

ஆல்மா 8–12

தன்னுடைய ஜனங்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வருவார்

வேதங்களை படிப்பது வெளிப்படுத்தல்களை அழைக்கிறது. ஆகவே ஆல்மா 8–12ஐ நீங்கள் வாசிக்கும்போது, ஆல்மா மற்றும் அமுலேக்கின் செய்திகளிலிருந்து அவர் உங்களுக்கு போதிக்கும்போது ஆவியானவரின் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தேவனின் கிரியை தோற்றுப்போகாது. ஆனால் அவருடைய பணிக்கு உதவும் நமது முயற்சிகள் சிலசமயங்களில் தோற்றுப்போவதாகத் தோன்றுகிறது, குறைந்தபட்சம், நாம் நம்பிக்கொண்டிருக்கிற விளைவுகளை உடனடியாக நாம் பார்க்காதிருக்கலாம். அம்மோனிகாவில் ஆல்மா சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, நிராகரிக்கப்பட்டவனாக, துப்பப்பட்டவனாக, வெளியேற்றப்பட்டவனாக அவன் உணர்ந்ததைப்போல சிலநேரங்களில், நாம் உணரக்கூடும். இருப்பினும் திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்க ஒரு தூதன் அறிவுறுத்தியபோது ஆல்மா தைரியத்துடன் “துரிதமாக திரும்பிப்போனான்” (ஆல்மா 8:18) அவனுக்கு முன்பாக தேவன் வழியை ஆயத்தப்படுத்தினார். உண்ணுவதற்கு உணவையும், தங்குவதற்கு ஒரு இடத்தையும் மட்டுமே ஆல்மாவுக்கு அவர் கொடுக்கவில்லை, ஆனால், ஒரு சக வேலைக்காரனாகவும், சுவிசேஷத்தின் ஒரு கடுமையான பாதுகாவலனாகவும், ஒரு உண்மையுள்ள நண்பனாகவும் மாறின அமுலேக்கையும் அவர் ஆயத்தப்படுத்தினார். கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் நாம் சேவை செய்துகொண்டிருக்கும்போது, பின்னடைவுகளையும் ஏமாற்றங்களையும் நாம் எதிர்கொள்ளும்போது, தேவன் எவ்வாறு ஆல்மாவை ஆதரித்து அவனை நடத்தினார் என்பதை நாம் நினைவுகூரலாம், கடினமான சூழ்நிலைகளிலும் தேவன் நம்மை ஆதரிப்பார், நடத்துவார் என்று நாம் நம்பலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 8

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள என்னுடைய முயற்சிகளுக்கு விடாமுயற்சியும் பொறுமையும் தேவையாயிருக்கலாம்.

சுவிசேஷத்தின் உங்களுடைய சாட்சியை ஒருவர் நிராகரித்தாலும்கூட, நீங்கள் நம்பிக்கை இழக்கவேண்டுமென்பது அதற்கு அர்த்தமாகாது, எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தர் அந்த நபரை விட்டுவிடமாட்டார், எவ்வாறு செயல்படவேண்டுமென அவர் உங்களை வழிநடத்துவார். ஆல்மாவின் விஷயத்தில், அங்கே, அவனை ஜனங்கள் ஏற்கனவே வன்முறையில் நிராகரித்தாலும்கூட, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அம்மோனிகாவுக்குத் திரும்பிப்போக அவனுக்கு ஒரு தூதன் கட்டளையிட்டான் (ஆல்மா 8:14–16 பார்க்கவும்). சவால்களும் எதிர்ப்புகளும் இருந்தபோதிலும் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள, ஆல்மாவின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? ஆல்மா 8லுள்ள எந்த வசனங்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உங்களுடைய வாஞ்சையை அதிகரிக்கிறது?

3 நேபி 18:30–32; Jeffrey R. Holland, “The Cost—and Blessings—of Discipleship,” Ensign or Liahona, May 2014, 6–9 ஐயும் பார்க்கவும்

ஆல்மா 9:18–25; 10:16–23

அவர்களிடமுள்ள ஒளி மற்றும் அறிவின்படியே அவருடைய பிள்ளைகளை தேவன் நியாயந்தீர்க்கிறார்.

அம்மோனிகாவில், கர்த்தருடைய ஊழியக்காரர்களை நேபியர்கள் நடத்திய விதத்தைப்பற்றி வாசிக்கும்போது, ஒருசமயம் அவர்கள் சுவிசேஷத்தின்படி வாழ்ந்தவர்கள் என்பதையும் “கர்த்தருக்கு மிகவும் பிரியமான ஜனங்களாயிருந்தார்கள்” (ஆல்மா 9:20) என்பதையும் மறப்பது எளிது. உண்மையில், மிக வளமையாக அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியதாலும், பெரும்பாலும் அறியாமையில் பாவம் செய்த லாமானியர்களைவிட அவர்களுடைய நிலைமை மோசமாயிருந்ததாலும் அம்மோனிகாவிலுள்ள ஜனங்களுக்கு ஆல்மாவின் செய்தியின் பகுதி அப்படியாயிருந்தது. அவருடைய பிள்ளைகளை தேவன் எவ்வாறு நியாயந்தீர்க்கிறார் என்பதைப்பற்றி இந்த மாறுபாடு நமக்கு என்ன போதிக்கிறது?

நேபியரின் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த பெரிய ஆசீர்வாதங்களைப்பற்றி (விசேஷமாக ஆல்மா 9:19–23 பார்க்கவும்) நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற பெரிய ஆசீர்வாதங்களை சிந்திக்கவும். இந்த ஆசீர்வாதங்களுக்கு நீங்கள் உண்மையாயிருக்க நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்ன மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டுமென நீங்கள் உணருகிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 82:3-8ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 11–12

தேவனுடைய திட்டம் மீட்பின் திட்டம்.

இரட்சிப்பின் திட்டம் அல்லது சந்தோஷத்தின் திட்டத்தைப்போல, அவருடைய பிள்ளைகளுக்காக தேவனுடைய திட்டத்தை விவரிக்க பல்வேறு பெயர்களை மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகள் பயன்படுத்தினர். ஆல்மா11–12ல் ஆல்மாவும் அமுலேக்கும் மீட்பின் திட்டமாக இதைக் குறிப்பிட்டார்கள். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது திட்டத்தை விவரிக்க மீட்பு என்ற வார்த்தை ஏன் பயன்படுத்தப்பட்டது என சிந்திக்கவும். திட்டத்தின் பின்வரும் அம்சங்களைப்பற்றி ஆல்மாவும் அமுலேக்கும் என்ன போதித்தார்கள் என்பதை ஒரு சுருக்க தொகுப்பாகவும்கூட நீங்கள் எழுதலாம்.

வீழ்ச்சி:

மீட்பர்:

மனந்திரும்புதல்:

மரணம்:

உயிர்த்தெழுதல்:

நியாயத்தீர்ப்பு:

ஜனங்கள்மேல் அமுலேக்கின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தை கவனிக்கவும் (ஆல்மா 11:46 பார்க்கவும்). இந்த கொள்கைகள் அத்தகைய ஒரு ஆற்றலுள்ள செல்வாக்கை ஏற்படுத்தியது ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை அவைகள் எவ்வாறு செல்வாக்கடையச் செய்தது?

டி. டாட் கிறிஸ்டாபர்சன் “The Resurrection of Jesus Christ,” Ensign or Liahona, May 2014, 111–14 ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 12:8–18.

என்னுடைய இருதயத்தை நான் கடினப்படுத்தாதிருந்தால், கூடுதலான தேவ வார்த்தைகளை நான் பெறமுடியும்.

ஏன் பரலோக பிதா சகலகாரியங்களையும் நாம் அறிந்துகொள்ளாமல் வைத்திருக்கிறார் என சில ஜனங்கள் ஆச்சரியப்படலாம். ஆல்மா 12:9–14ல், தேவனுடைய இரகசியங்கள் சிலநேரங்களில் நம்மிடமிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான ஒரு சாத்தியமான காரணத்தைப்பற்றி ஆல்மா விவரித்தான். அவன் போதித்தவைகளை நீங்கள் சிந்திக்க இந்த கேள்விகள் உங்களுக்கு உதவமுடியும்:

  • நமது இருதயங்களைக் கடினப்படுத்துதல் என்றால் அர்த்தமென்ன? உங்களுக்குள்ளே இந்த மனப்போக்கை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

  • தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்துகிறவர்களிடமிருந்து அவருடைய வார்த்தைகளை கர்த்தர் ஏன் நிறுத்தியிருக்கக்கூடும்?

  • “வார்த்தையின் பெரும் பங்கைப்” பெறுதலின் வாக்களிப்பை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? (ஆல்மா 12:10). அந்த அனுபவம் எதைப் போன்றிருந்தது?

  • தேவனுடைய வார்த்தை “ [உங்களில்] காணப்படுகிறதென்பதை” உறுதிப்படுத்த உங்களால் என்ன செய்யமுடியும்? (ஆல்மா 12:13). உங்களில் தேவ வார்த்தையிருந்தால், உங்களுடைய “வார்த்தைகளில்”, “செயல்களில்”, “சிந்தனைகளில்” அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? (ஆல்மா12:14).

இந்தக் கொள்கைகளின் ஒரு உதாரணமாக, அமுலேக்கை அம்மோனிகாவின் பிற ஜனங்களுடன் ஒப்பிடவும். இந்த வசனங்களில் ஆல்மா போதித்தவற்றை அமுலேக்கின் அனுபவம் (குறிப்பாக ஆல்மா 10:1–11 பார்க்கவும்) எவ்வாறு சித்தரிக்கிறது?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 8:10–18.

இது கடினமாயிருந்தாலும்கூட “துரிதமாக” கர்த்தருக்குக் கீழ்ப்படிதலைப்பற்றி ஆல்மாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? (வசனம் 18) பிள்ளைகளில் இந்த கொள்கையை வலுப்படுத்த, நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம், அங்கே, ஒரு பணிக்கு நீங்கள் அறிவுரைகளைக் கொடுத்து, எவ்வளவு சீக்கிரத்தில் குடும்ப அங்கத்தினர்கள் அதை நிறைவுசெய்கிறார்கள் என்று பார்க்கவும். உதாரணமாக, ஒரு துண்டுத் துணியை யார் வேகமாக மடிக்கிறார்களென்று நீங்கள் பார்க்கலாம்.

ஆல்மா 10:1–12

இந்த வசனங்களில் அமுலேக்கின் அனுபவத்திலிருந்து நம்மால் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? அதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் மீது அவனுடைய சாட்சி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அமுலேக்கின் எடுத்துக்காட்டிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டதின் அடிப்படையில் இந்த வாரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய ஒரு திட்டத்தை உண்டுபண்ண உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.

ஆல்மா 10:22–23

ஒரு துன்மார்க்க பட்டணத்தில் நீதிமான்களின் ஒரு குழு செல்வாக்கை வைத்திருக்கமுடியும் என்பதைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

ஆல்மா 11:34–37

நமது பாவத்தில் இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்கும் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்குமிடையில் என்ன வேறுபாடிருக்கிறது? (ஏலமன்5:10 பார்க்கவும்; 1 யோவான் 1:9–10ம் பார்க்கவும்) அமுலேக் போதித்ததை சித்தரிக்க, மூப்பர் ஆலென் டி. ஹெய்னின் செய்தியின் ஆரம்பத்தில் கதையை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்“ Remembering in Whom We Have Trusted” (Ensign or Liahona, Nov. 2015, 121–23). நமது பாவங்களிலிருந்து இயேசு கிறிஸ்து நம்மை எவ்வாறு இரட்சிக்கிறார்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிற்காலத் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படிக்கவும். வேதங்களில் நீங்கள் காண்கிற சத்தியங்களைப்பற்றி பிற்காலத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் என்ன போதித்தார்கள் என வாசிக்கவும். உதாரணமாக, ஆல்மா 8–12ல் நீங்கள் ஒரு தலைப்பை அடையாளம் காணலாம், மிக சமீபத்திய பொதுமாநாட்டில் அந்த தலைப்பை தேடுங்கள் (Teaching in the Savior’s Way, 21 பார்க்கவும்).

படம்
அமுலேக்குடன் ஆல்மா உணவருந்துதல்

அமுலேக்குடன் ஆல்மா உணவருந்துதலின் சித்தரிப்பு–டான் பர்