என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூன் 15–21. ஆல்மா 13–16: “கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்”


“ஜூன் 15–21. ஆல்மா 13–16: ‘கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூன் 15–21. ஆல்மா 13–16,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஆல்மாவும் அமுலேக்கும் சிறையிலிருந்து வெளியேறி நடத்தல்

ஆல்மாவும் அமுலேக்கும் சிறையிலிருந்து விடுதலையாக்கப்படுதலின் விவரம்–ஆண்ட்ரூ போஸ்லி

ஜூன் 15–21

ஆல்மா 13–16

“கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசியுங்கள்”

வேதங்களை நீங்கள் சிந்திக்கும்போது, நீங்கள் பெறுகிற உணர்த்துதல் விலையேறப்பெற்றது. அதை பதிவுசெய்தும், அதன்படி செயல்பட்டும் நீங்கள் அதைப் பொக்கிஷப்படுத்துவதை காட்ட முடியும்

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

பல வழிகளில் அமுலேக்குக்கும் சீஸரோமுக்கும் அம்மோனிகாவில் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கிறது. அமுலேக்கு “சிறிது நன்மதிப்பு பெற்ற,” “அநேக உறவினர்களும், சிநேகிதர்களும் உடைய,” “அதிக ஐஸ்வர்யம் பெற்றவன்”(ஆல்மா 10:4). சீஸ்ரம் கற்றவர்கள் “மத்தியில் மிகவும் திறமைசாலிகளில் ஒருவன்,” “மிகுந்த காரியங்களை செய்தான்.”(ஆல்மா 10:31). பின்னர் ஆல்மா மனந்திரும்புமாறும், “கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கவும்” ஒரு தெய்வீக அழைப்புடன் அம்மோனிகாவுக்கு வந்தான் (ஆல்மா 13:16). அமுலேக்குக்கும், சீஸ்ரோமுக்கும், பிறருக்கும் இந்த அழைப்பை ஏற்பதற்கு தியாகம் தேவைப்பட்டது, கிட்டத்தட்ட தாங்க முடியாத எதிர்ப்புக்கும் கூட வழிநடத்தியது.

ஆனால் உண்மையில் கதை அங்கு முடியவில்லை. ஆல்மா 13–16ல், இரட்சிப்புக்கேதுவான கிறிஸ்துவின் வல்லமையை நம்புவர்களுக்கு முடிவாக என்ன நிகழ்கிறது என நாம் அறிகிறோம்(ஆல்மா 15:6). சில சமயங்களில் விடுதலையிருக்கிறது, சில சமயங்களில் குணமாக்குதலிருக்கிறது, சில சமயங்களில் இந்த வாழ்க்கையில் காரியங்கள் எளிதாயிருப்பதில்லை. ஆனால் எப்போதும், “கர்த்தர் [தன் ஜனத்தை] மகிமையில் தம்முடன் ஏற்றுக்கொள்கிறார்”(ஆல்மா 14:11). எப்போதும், கர்த்தர், “கிறிஸ்துவிலே அவர்கள் வைத்த விசுவாசத்துக்குத் தக்கதாக வல்லமையை” அருளுகிறார் (ஆல்மா 14:28) எப்போதும் “கர்த்தர் மேல் விசுவாசம்,” “[நாம்] நித்திய ஜீவனைப் பெறுவோம்” என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது.(ஆல்மா 13:29) இந்த அதிகாரங்களை நீங்கள் படிக்கும்போது, இந்த வாக்குத்தத்தங்களில் நீங்கள் ஆறுதல் பெறலாம், கர்த்தருடைய இளைப்பாறுதலைப்பற்றி ஆல்மா பேசியபோது அவன் என்ன சொன்னான் என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 13:1–19

இயேசு கிறிஸ்து மூலம் மீட்பு பெற ஆசாரியத்துவ நியமங்கள் எனக்கு உதவுகின்றன.

ஆல்மா 12ல், தேவனின் மீட்பின் திட்டத்தைப்பற்றி ஆல்மா போதித்ததை நீங்கள் நினைவுகூரலாம்(ஆல்மா 12:24–27 பார்க்கவும்). அதிகாரம் 13ல், இந்தக் காரியங்களை ஜனங்களுக்கு போதிக்க வேண்டுமென்று, தேவன் நியமித்த ஆசாரியர்களைப்பற்றி அவன் பேசினான். (ஆல்மா 13:1). ஆசாரியத்துவத்தைப்பற்றி அநேக வல்லமையான சத்தியங்களை ஆல்மாவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. ஒருவேளை ஆல்மா 13:1–9ல் ஒருவசனத்துக்கு குறைந்தது ஒரு சத்தியத்தையாவது அடையாளம் காண நீங்கள் முயற்சிக்கலாம். நீங்கள் தொடங்க இங்கே சில ஆலோசனைகள்:

வசனம் 1.ஆசாரியத்துவம் “[தேவ] குமாரனின் முறைமை” எனவும் அழைக்கப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:1–4 ஐயும் பார்க்கவும்).

வசனம் 2.மீட்புக்காக தன் குமாரனை நோக்கிப்பார்க்க ஜனங்களுக்கு உதவ தேவன் ஆசாரியர்களை நியமித்தார்.

வசனம் 3.“உலகத்தின் அஸ்திபாரத்திலிருந்தே” தங்கள் பொறுப்புக்களுக்காக ஆசாரியத்துவம் தரித்தவர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டார்கள்.

வேறு எதை நீங்கள் காண்கிறீர்கள்? இந்த சத்தியங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது ஆசாரியத்துவத்தைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? மீட்புக்காக கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க ஆசாரியத்துவ நியமங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கின்றன?

அம்மோனிகாவில் அநேக ஜனங்கள் நேஹோரைப் பின்பற்றியவர்கள் என்பதைக் கவனிப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது (ஆல்மா 14:18; 15:15 பார்க்கவும்). நேஹோர் முறைமையின் ஆசாரியர்கள் ( ஆல்மா 1:3–6 பார்க்கவும்) ஆல்மா விவரித்த (ஆல்மா 13:1–19 பார்க்கவும்) தேவனின் குமாரனின் முறைமையின்படி நியமிக்கப்பட்ட ஆசாரியர்களிலிருந்து எவ்வாறு வித்தியாசமானவர்களாயிருந்தனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:3).

Dale G. Renlund, “The Priesthood and the Savior’s Atoning Power,” Ensign or Liahona, Nov. 2017, 64–67ஐயும் பார்க்கவும்.

படம்
திருவிருந்து மேஜையில் வாலிபர்கள்

மீட்புக்காக இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்க ஆசாரியத்துவ நியமங்கள் நமக்கு உதவுகின்றன.

ஆல்மா 13:3

“உலகத்தின் அஸ்திபாரம் முதலே அழைக்கப்பட்டு ஆயத்தம் செய்யப்பட்டவர்கள்” ஆசாரியத்துவம் தரித்தவர்கள் மட்டுமா?

ஆல்மா 13:3ல் ஆல்மாவின் போதனைகள் குறிப்பாக ஆசாரியத்துவம் தரித்தவர்களை குறிப்பிடுகிறது. எனினும் “உலகத்தின் அஸ்திபாரம் முதலே” தனிநபர்கள் பொறுப்புகளைப் பெற்று அவற்றை நிறைவேற்ற ஆயத்தப்படுத்தப்பட்டார்கள் என்ற அவன் போதித்த கொள்கை நம் அனைவருக்கும் பொருந்தும். தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் சொன்னார்: “நாம் இங்கே வருவதற்கு முன்புள்ள உலகத்தில், குறிப்பிட்ட ஆசாரியத்துவ பணிகளுக்கு விசுவாசமிக்க மனுஷர் முன்நியமிக்கப்பட்டபோது, விசுவாசமிக்க பெண்கள் குறிப்பிட்ட பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டனர். இப்போது விவரங்கள் நமக்கு நினைவில்லாதபோது, நாம் ஒரு சமயம் ஏற்றுக்கொண்ட மகிமையான உண்மையை அது மாற்றாது” (Teachings of Presidents of the Church: Spencer W. Kimball [2006], 215–16; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:55–56 ஐயும் பார்க்கவும்).

ஆல்மா 14

சில சமயங்களில் தேவன் நீதிமான்களை கஷ்டப்பட அனுமதிக்கிறார்.

ஆல்மா 14 தங்கள் நம்பிக்கைகளினிமித்தம் கஷ்டப்பட்ட, மரித்த நீதிமான்களைப்பற்றி கூட கூறுகிறது. நீதியாக வாழ முயற்சிப்பவர்களுக்கு ஏன் பயங்கரமான காரியங்கள் நடைபெறுகின்றன என அநேகரைப்போல நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆல்மா 14லுள்ள இந்த கஷ்டமான கேள்விக்கு நீங்கள் பதில்கள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியாது போகலாம், ஆனால் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகளுக்கு ஆல்மாவும் அமுலேக்கும் பதிலளித்த விதத்திலிருந்து அறிந்துகொள்ள அதிகமிருக்கிறது. நீதிமான்கள் கஷ்டப்பட கர்த்தர் சில சமயங்களில் ஏன் அனுமதிக்கிறார் என்பதைப்பற்றி அவர்களது வார்த்தைகளும் செயல்களும் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? துன்புறுத்தலை எதிர்கொள்ளுதலைப்பற்றி அவர்களிடமிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?

மத்தேயு 5:43–44; மாற்கு 14:55–65; ரோமர் 8:35–39; 1 பேதுரு 4:12–14; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 122:5–9 ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 15:16, 18

சீஷத்துவத்துக்கு தியாகம் தேவைப்படுகிறது.

சுவிசேஷத்தை தழுவ அமுலேக் விட்டுவிட்ட காரியங்களைப் பட்டியலிடுவது ரசிக்கத்தக்கதாயிருக்கும் (ஆல்மா 10:4–5; 15:16 பார்க்கவும்), அவன் பெற்றவற்றின் பட்டியலை அதனுடன் ஒப்பிடவும் (ஆல்மா 15:18; 16:13–15; 34:8 பார்க்கவும்). மிகவும் விசுவாசமிக்க சீஷனாக இருக்கும்படியாக நீங்கள் எதை தியாகம் செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 13

ஆல்மா 13ல் “இளைப்பாறுதல்” வருகிற ஒவ்வொரு முறையையும் குறித்தல் மூலம் உங்கள் குடும்பம் பலனடையக்கூடும். அதனுடன் என்ன பிற வார்த்தைகளும் கருத்துக்களும் வருகின்றன? “கர்த்தரின் இளைப்பாறுதல்” என்பதன் அர்த்தம் என்ன என புரிந்துகொள்ள இது நமக்கு எப்படி உதவுகிறது? இது சரீர இளைப்பாறுதலிலிருந்து எவ்வாறு வித்தியாசமாயிருக்கிறது?

ஆல்மா 13:10–12

இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன என உங்கள் குடும்பம் கற்பனை செய்ய, வெள்ளை துணி போன்ற ஒன்றை, நீங்கள் ஒன்றாக துவைக்கலாம். நாம் அழுக்காக இருக்கும்போது நாம் எவ்வாறு உணர்கிறோம்? நாம் மீண்டும் சுத்தமாகும்போது, நாம் எவ்வாறு உணர்கிறோம்? நாம் பாவம் செய்து பின்பு இரட்சகரின் பாவநிவர்த்தி மூலம் சுத்தமாகும்போது உணர்வதற்கு இந்த உணர்வுகள் எப்படி ஒத்ததாக இருக்கின்றன?

ஆல்மா 15:1–12

நாம் தவறு செய்யும்போது கூட, நம்மை பெலப்படுத்தவும் குணப்படுத்தவும் கர்த்தரின் வல்லமையைப்பற்றி சீஸரோமின் அனுபவத்திலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கிறோம்? அவரது பெலத்தையும் குணமாக்குதலையும் நாம் பெற ஆசாரியத்துவம் என்ன பங்காற்ற முடியும்?

ஆல்மா 16:1–10

இந்த வசனங்களை வாசித்த பிறகு நீங்கள் ஆல்மா 9:4 வாசிக்கலாம். தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப்பற்றி சோரம் உணர்ந்த விதம் மற்றும் அம்மோனிகாவின் ஜனம் உணர்ந்த விதத்தை எதிரெதிராக்கி நாம் என்ன அறிந்துகொள்கிறோம்? நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்கு விசுவாசமாயிருக்க நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

எப்போதும் தயாராயிருங்கள். போதிக்கும் தருணங்கள் விரைவாக கடந்து போகும், ஆகவே அவை எழும்போது சாதகமாக்கிக் கொள்ளுங்கள். உலகத்தின் ஒரு துயரமான, கர்த்தர் ஏன் சில சமயங்களில் மாசற்றவர்களை கஷ்டப்பட அனுமதிக்கிறார் என்பதைப்பற்றி, உதாரணமாக, ஆல்மா 14லிருந்து, கொள்கைகளைப் பகிர ஒரு சந்தர்ப்பமாயிருக்கலாம் (இரட்சகரின் வழியில் போதித்தல், 16 பார்க்கவும்.)

படம்
சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்

சிறையில் ஆல்மாவும் அமுலேக்கும்–காரி எல். காப்