என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூன் 1–7. ஆல்மா 5–7: “இந்த பெரும் மாற்றத்தை உங்கள் இருதயங்களிலே பெற்ற அனுபவமுண்டா?”


ஜூன் 1–7 ஆல்மா 5–7: ‘இந்த பெரும் மாற்றத்தை உங்கள் இருதயங்களிலே பெற்ற அனுபவமுண்டா?’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூன் 1–7 ஆல்மா 5–7,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
இயேசு ஒரு ஆட்டுக்குட்டியை தூக்கி வைத்திருத்தல்

நீங்கள் மறக்கப்படவில்லை–ஜோன் மெக்நாட்டன்

ஜூன் 1–7

ஆல்மா 5–7

“இந்த பெரும் மாற்றத்தை உங்கள் இருதயங்களிலே பெற்ற அனுபவமுண்டா?”

நடந்துகொண்டிருக்கும் உங்களுடைய மனமாற்றத்தை இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிட ஆல்மா 5–7 உங்களுக்கு உதவமுடியும். நீங்கள் வாசிக்கும்போது ஆவியானவர் உங்களுக்குப் போதிக்கிறதைப் பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட இருதயத்திற்கு பதிலாக ஒரு ஆரோக்கியமான இருதயம் மாற்றாக பொருத்தப்படும் இன்றைய உயிர்காக்கும் மாற்று இருதய அறுவை சிகிச்சைகளைப்பற்றி ஆல்மா அறிந்திருக்கவில்லை. ஆனால் மிக அற்புதமான “மனமாற்றத்தைப்பற்றி” (ஆல்மா 5:26)” அவன் அறிந்திருந்தான், அதன்படி, “மறுபடியும் பிறப்பதைப்போல” (ஆல்மா 5:14, 49 பார்க்கவும்) ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு புதிய ஒன்றை இரட்சகர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த இதே மனமாற்றம்தான் அநேக நேபியர்களுக்குத் தேவையாயிருந்தது என்பதை ஆல்மாவால் பார்க்கமுடிந்தது. சிலர் செல்வந்தராயிருந்தனர், சிலர் தரித்திரராயிருந்தனர், சிலர் பெருமையுள்ளவர்களாயிருந்தனர், மற்றவர்கள் தாழ்மையுள்ளவர்களாயிருந்தனர், சிலர் துன்புறுத்துபவர்களாயும், சிலர் துன்புறுத்தலினால் உபத்திரவப்பட்டவர்களாயுமிருந்தனர். (ஆல்மா4:6–15 பார்க்கவும்). நாம் அனைவரும் செய்கிறதைப்போல, அனைவருமே குணமடைய இயேசு கிறிஸ்துவண்டை வர வேண்டியவர்களாயிருந்தனர். நாம் பெருமையை மேற்கொள்ள அல்லது துன்பங்களை சகித்துக்கொள்ள நாடினாலும், ஆல்மாவின் செய்தி ஒன்றே: “வந்து பயப்படாதிருங்கள்” (ஆல்மா 7:15). ஒரு கடினமான, பாவமான, அல்லது காயம்பட்ட இருதயத்தை, அடக்கமான, தாழ்மையான, புதிய இருதயமாக இரட்சகர் மாற்றுவாராக.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 5:14–33.

இருதயத்திலே பெரும் மாற்றத்தை நான் அனுபவிக்கவேண்டும், தொடர்ந்து உணரவேண்டும்.

ஆல்மா 5:14–33ல் காணப்படுகிற சாரகெம்லாவின் ஜனங்களிடத்தில் ஆல்மா கேட்ட விசாரிக்கும் கேள்விகள், உங்கள் சொந்த ஆத்துமாவைத் தேடவும், வாழ்நாள் முழுவதும் ஒரு “இருதயத்தின் பெரும் மாற்றத்தின்” அனுபவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவும். இந்த கேள்விகளின் மதிப்பை தலைவர் எம். ரசல் பல்லார்ட் விளக்கினார்: “’நான் எவ்வாறு இருக்கிறேன்?’ என என்னையே கேட்க வழக்கமாக நான் நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.’ இது, உங்களுடனேயே ஒரு தனிப்பட்ட, தனியான நேர்காணலை நடத்துவதைப்போலாகும். … இந்த தனிப்பட்ட, தனியான நேர்காணலின்போது எனக்கு ஒரு வழிகாட்டியாக, ஆல்மாவின் ஐந்தாவது அதிகாரத்தில் காணப்படுகிற விசாரணை வார்த்தைகளை வாசிக்கவும் சிந்திக்கவும் நான் விரும்புகிறேன்” (“Return and Receive,” Ensign or Liahona, May 2017, 64)

நீங்களே உங்களை நேர்காணல் செய்வதைப்போலவும், உங்கள் இருதயத்தை பரிசோதிப்பதைப்போலவும் ஆல்மாவின் கேள்விகளை வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை பதிவுசெய்ய நீங்கள் விரும்பலாம். உங்களுடைய நேர்காணலின் விளைவாக செய்ய தூண்டுகிற எதை நீங்கள் உணருகிறீர்கள்?

டேல் ஜி. ரென்லன்ட் “Preserving the Heart’s Mighty Change,” Ensign or Liahona, Nov. 2009, 97–99 ஐயும் பார்க்கவும்.

படம்
படுக்கைக்கருகில் சிறுமி ஜெபித்தல்

கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷனும் ஒரு “இருதய மாற்றத்தை” அனுபவிக்கவேண்டும்.

ஆல்மா 05:33–62

பரிசுத்த ஆவியின் மூலமாக இரட்சகரைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் என்னுடைய சொந்த சாட்சியை நான் பெறமுடியும்.

இரட்சகரைப்பற்றியும் அவருடைய சுவிசேஷத்தைப்பற்றியும் ஆல்மா ஒரு வல்லமையான சாட்சியை பகர்ந்தான், அந்த சாட்சியை எவ்வாறு அவன் பெற்றான் என்பதையும் அவன் விவரித்தான். அவன் சாட்சியுரைக்கும்போது, ஒரு தூதனைப் பார்த்த, பேசுவதைக் கேட்ட அவனுடைய அனுபவத்தை அவன் குறிப்பிடவில்லை, (மோசியா 27:10–17 பார்க்கவும்) ஆனால், மாறாக, அவனே சத்தியத்தை அறிந்துகொள்ள கிரயம் செலுத்தியதை விளக்கினான். ஆல்மா எவ்வாறு சத்தியத்தை அறிந்தான் என்பதைப்பற்றி ஆல்மா 5:44–51லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் சாட்சியைப் பெற அல்லது பெலப்படுத்த உங்களுடைய முயற்சிகளில் அவனுடைய எடுத்துக்காட்டை நீங்கள் எவ்வாறு பின்பற்றமுடியும்? ஆல்மா 5:33–35, 48–50, மற்றும் 57–60லிலுள்ள ஆல்மாவின் போதனைகளிலிருந்து இரட்சகரைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

ஆல்மா 7

“தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு நடத்துகிற பாதையில்” நிலைத்திருக்க கருத்தான கீழ்ப்படிதல் எனக்குதவும்.

சாரகெம்லாவின் ஜனங்களைப்போல கிதியோனின் ஜனங்கள் அதே இக்கட்டுடன் போராடிக்கொண்டிருக்கவில்லை, ஆகவே அவர்களுடைய தேவைகளை உணரவும் அவர்களுக்கு வித்தியாசமாக போதிக்கவும் ஆவியானவர் ஆல்மாவுக்குதவினார் (ஆல்மா 7:17, 26 பார்க்கவும்). சாரகெம்லாவிலும் (ஆல்மா 5 பார்க்கவும்) கிதியோனிலும் (ஆல்மா 7 பார்க்கவும்) ஆல்மாவின் செய்திகளுக்கிடையில் சில வித்தியாசங்களை நீங்கள் கவனிக்கலாம். உதாரணமாக, “தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு நடத்துகிற பாதையில்” (ஆல்மா 7:19) கிதியோனின் ஜனங்களிருந்தார்கள் என்று ஆல்மா உணர்ந்தான். அவர்களுக்கு அவனுடைய பிரசங்கம் முழுவதிலும் அந்த பாதையில் எவ்வாறு நிலைத்திருப்பதென்பதைப்பற்றி அநேக காரியங்களை ஆல்மா அவர்களுக்குப் போதித்தான் (ஆல்மா 7பார்க்கவும்). அவர்களுக்கு அவன் என்ன ஆலோசனையைக் கொடுத்தான்? இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை பயன்படுத்தமுடியும்?

ஆல்மா 7:7–16

என்னுடைய பாவங்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் இரட்சகர் தம்மீது எடுத்துக்கொண்டார்.

உங்களுடைய போராட்டங்களையும் அல்லது சவால்களையும் யாருமே புரிந்துகொள்ளவில்லை என எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியானால், ஆல்மா 7:7–16ல் போதிக்கப்பட்டிருக்கிற சத்தியங்கள் உதவலாம். மூப்பர் டேவிட் எ. பெட்னார் சாட்சியளித்தார்: “தேவகுமாரன் பரிபூரணமாக அறிந்திருக்கிறார், புரிந்திருக்கிறார், ஏனெனில் நமது தனிப்பட்ட பாரங்களை அவர் உணர்ந்திருகிறார், சுமந்திருக்கிறார். அவருடைய முடிவற்ற, நித்தியமான பலியினால் (ஆல்மா 34:14 பார்க்கவும்) அவரிடம் பரிபூரண பச்சாதாபமிருக்கிறது, அவருடைய இரக்கமுள்ள கரத்தை நம்மிடம் நீட்டமுடியும்” (“Bear Up Their Burdens with Ease,” Ensign or Liahona, May 2014, 90).

ஆல்மா 7:7–16ஐ நீங்கள் வாசிக்கும்போது, இரட்சகரின் பலியின் நோக்கத்தைப்பற்றிப் புரிந்துகொள்ள எந்த வசனங்கள் நமக்குதவுகிறதென சிந்தியுங்கள். நமது வாழ்க்கையில் அவருடைய. வல்லமையை நாம் எவ்வாறு அணுகுவது? உங்கள் சிந்தனைகளை பதிவுசெய்வதைக் கருத்தில்கொள்ளவும்.

ஏசாயா 53:3–5ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 5:6–13

அவர்களுடைய முன்னோர்களின்மீதிருந்த கர்த்தருடைய இரக்கத்தை தன்னுடைய ஜனங்கள் நினைவுகூர ஆல்மா ஏன் விரும்பினான்? உங்களுடைய குடும்ப வரலாற்றிலிருந்து எந்த கதைகள், அவருடைய இரக்கத்தைப்பற்றி உங்களுக்குப் போதிக்கின்றன? இந்த கதைகளை பதிவுசெய்ய familysearch.org/myfamily க்கு நீங்கள் வருகை புரியலாம்.

ஆல்மா 5:14–33

ஆயத்தமாயிருப்பது எதைப்போன்று உணரவைக்கிறதென அல்லது ஒரு முகாம் பயணத்திற்கு, ஒரு பள்ளி தேர்வுக்கு, அல்லது வேலை நேர்காணலுக்கு ஆயத்தப்படாதிருப்பதைப்பற்றி உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் அறிந்திருக்கலாம். ஆயத்தமாயிருப்பதன் முக்கியத்துவத்தை சித்தரிக்க சமீபத்திய எந்த அனுபவங்களை அவர்களால் பகிர்ந்துகொள்ளமுடியும்? ஆல்மா 5:14–33ஐ மறுபரிசீலனை செய்து, தேவனை சந்திக்க அவனுடைய ஜனங்கள் ஆயத்தப்பட ஆல்மா கேட்ட கேள்விகளை கண்டுபிடிக்க உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம். ஒருவேளை குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஒரு கேள்வியை தேர்ந்தெடுத்து, தேவனை சந்திக்க ஆயத்தப்பட அது எவ்வாறு நமக்குதவுமென பகிர்ந்துகொள்ளலாம். குடும்ப அங்கத்தினர்கள் சிந்திப்பதற்காக உங்கள் வீட்டைச்சுற்றி ஆல்மாவின் பல்வேறு கேள்விகளை உங்கள் குடும்பம் காட்சியாகவும் வைக்கலாம்.

ஆல்மா 6:4–6.

பரிசுத்தவான்களாக நாம் கூடுவதற்கான சில காரணங்கள் எவை? நமக்கும் மற்றவர்களுக்கும் அதிக உதவிகரமாக இருக்க சபையில் நமது நேரத்தை எவ்வாறு நாம் செலவழிக்கமுடியும்?

ஆல்மா 7:9–16

நாம் மனந்திரும்பவும் மாறவும் அவசியமாகும்போது நமக்குதவுகிற “பயப்படாதிருங்கள்” (ஆல்மா 7:15) என்ற இந்த வசனங்களில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நமக்கு உதவி தேவைப்படும்போது இரட்சகரிடத்தில் திரும்புதலைப்பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன போதிக்கிறது? அவருடைய உதவியைப்பெற என்ன பிற காரியங்களை நாம் செய்திருக்கிறோம்? எவ்வாறு நமக்கு அவர் ஒத்தாசை புரிந்திருக்கிறார்?

ஆல்மா7:23

இந்த வசனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குணங்களில் ஒன்று அல்லது அதிகமானவற்றிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாயிருக்கிற யாரை நமக்குத் தெரியும்? இந்த குணங்களை விருத்திசெய்வது ஏன் முக்கியமானது?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

குடும்ப அங்கத்தினர்கள் செயல்பட அழைக்கிற கேள்விகளைக் கேளுங்கள். மிக முழுமையாக அவர்கள் எவ்வாறு சுவிசேஷத்தின்படி வாழமுடியும் என்பதை சிந்திக்க உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு உணர்த்துகிற கேள்விகளைக் கருத்தில் கொள்ளவும். “வழக்கமாக இவைகள் கலந்துரையாடல் கேள்விகளில்லை, அவைகள் தனிப்பட்ட சிந்தனைக்காகவே” (Teaching in the Savior’s Way, 31).

படம்
இயேசு சிகப்பு அங்கியை அணிந்திருத்தல்

நமக்காகப் பரிந்துபேசுகிறவர்–ஜாய் பிரையன்ட் வார்ட்