என்னைப் பின்பற்றி வாருங்கள்
மே 25–31. மோசியா 29–ஆல்மா 4: “அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்”


“மே 25–31. மோசியா 29–ஆல்மா 4: ‘அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மே 25–31 மோசியா 29–ஆல்மா 4” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஆல்மா இளையவன் பிரசங்கித்தல்

ஆல்மா இளையவன் பிரசங்கித்தல்–காரி எல்.காப்

மே 25–31

மோசியா 29–ஆல்மா 4

“அவர்கள் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்தார்கள்”

வேதத்தை வாசிப்பது வெளிப்படுத்தல்களை அழைக்கிறது. கர்த்தர் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிற செய்திகளுக்கு திறந்த மனதுடனிருங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

வெறும் ஞானமான அரசியல் சீரமைப்பாக, இராஜாக்களுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயாதிபதிகளை வைக்க மோசியா இராஜாவின் முன்மொழிதலை சிலர் பார்க்கலாம். ஆனால் நேபியர்களுக்கு, குறிப்பாக துன்மார்க்க இராஜா நோவாவின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு இந்த மாற்றம் ஆவிக்குரிய முக்கியத்துவமாகவுமிருந்தது. ஒரு அநீதியான இராஜா அவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் “அக்கிரமத்திற்கும்” “பேரழிவுக்கும்” எவ்வாறு காரணமாயிருந்தான் என அவர்கள் கண்டார்கள் மற்றும் இத்தகைய செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்பட “மிகுந்த ஆர்வமாயிருந்தார்கள்” (மோசியா 29:17) தங்களுடைய சொந்த நீதிக்கு பொறுப்புள்ளவர்களாயிருக்கவும், “தங்களுடைய சொந்த பாவங்களுக்காக பதிலளிக்கவும்” இந்த மாற்றம் அவர்களை அனுமதிக்கும் (மோசியா 29:38; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:78ஐயும் பார்க்கவும்).

நிச்சயமாக, இராஜாக்களின் ஆட்சியின் முடிவு, நேபியர்களின் சமுதாயத்தில் பிரச்சினைகளின் முடிவென்று அர்த்தமாகாது. நிகோர் மற்றும் அம்லிசி போன்ற தந்திரமான ஜனங்கள் பொய்யான கருத்துக்களை ஊக்குவித்தார்கள், அவிசுவாசிகள் பரிசுத்தவான்களை துன்புறுத்தினார்கள், சபையின் அநேக அங்கத்தினர்கள் பெருமைக்காரர்களாகி வீழ்ந்துபோனார்கள். இருந்தும், “தேவனை தாழ்மையுடன் பின்பற்றியவர்கள்” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், “நிலைநிற்பவர்களாயும் அசைக்கமுடியாதவர்களுமாய்” நிலைத்திருந்தார்கள் (ஆல்மா 1:25) மோசியாவால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால் தங்கள் சமுதாயத்தை நன்மைக்கு நேராக செல்வாக்கடையச் செய்ய அவர்களால் தங்கள் கருத்தைத் தெரிவிக்கமுடிந்தது (ஆல்மா 2:6).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

மோசியா 29:11–27; ஆல்மா 2:1–7

என்னுடைய சமுதாயத்தில் ஒரு நேர்மறையான செல்வாக்காய் நானிருக்கமுடியும்.

வெறும் ஐந்து வருட நியாயாதிபதிகளின் ஆட்சியில், எது சரியென்பதை வழக்கமாக ஜனங்களின் குரல் தேர்ந்தெடுக்குமென்ற மோசியாவின் அறிவிப்பை பரிட்சை பார்க்கிற ஒரு குழப்பம் எழுந்தது (மோசியா 29:26பார்க்கவும்). மத சுதந்தரத்தை உள்ளடக்கிய பிரச்சினை: அமீலேசி என்ற பெயருள்ள ஒரு மனிதன் “[ஜனங்கள்] அவர்களின் உரிமைகளையும் சபையின் சிலாக்கியங்களையும் பறிக்க வகைதேடினான்” (ஆல்மா 2:4). உங்கள் நாட்டில் அல்லது சமுதாயத்தில் மதஉரிமைகள் பயமுறுத்தப்படுகிறதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த பயமுறுத்தலை நேபியர்கள் சமாளித்த வழியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (ஆல்மா 2:1–7பார்க்கவும்).

உங்கள் சமுதாயம் சந்தித்துக்கொண்டிருக்கிற அநேக முக்கியமான பிரச்சினைகளிருக்கலாம். உங்கள் குரல் “ஜனங்களின் குரலோடு” சேர்க்கப்பட்டிருக்கிறதென்பதை நேபியர்களைப்போல நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? ஒருவேளை மக்களின் குரலுக்கு அரசாங்கத்தில் குறைவான செல்வாக்கு இருக்கிற ஒரு இடத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம், அப்படியானால், உங்கள் சமுதாயத்தின்மீது நீங்கள் ஒரு நேர்மறையான செல்வாக்காயிருக்க அங்கே பிற வழிகளிருக்கின்றனவா?

ஆல்மா 1

பொய்யான கோட்பாட்டை நான் அடையாளம்கண்டு புறக்கணிக்கலாம்.

அவன் போதித்தவை பொய்யானதென நிகோர் இறுதியாக அறிக்கையிட்டாலும், அநேக வருடங்களாக அவனுடைய போதனைகள் தொடர்ந்து நேபியர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது (ஆல்மா 1:15–16; 2:1–2; 14:14–18; 15:15; 21:4; 24:28 பார்க்கவும்) நிகோரின் போதனைகள் தந்திரமானவை என ஜனங்கள் ஏன் கண்டுபிடித்திருப்பார்கள்? ஆல்மா 1:2–4 ஐ நீங்கள் படிக்கும்போது, நிகோரின் போதனைகளில் பொய்யானவற்றை உங்களால் அடையாளம் காணமுடிகிறதா என பார்க்கவும், பாதி உண்மைகளுடன் அவைகள் போதிக்கப்பட்டனவென அநேகமாக நீங்கள் கவனிப்பீர்கள்.

“தேவனுடைய வார்த்தைகளுடன்” கிதியோன் நிகோரை எதிர்த்து நின்றான் (ஆல்மா 1:7, 9). நிகோரின் பொய்மைத்தனத்தை மறுக்கிற வேத வசனங்களைப்பற்றி உங்களால் நினைக்கமுடிகிறதா? இங்கே சில எடுத்துக்காட்டுகளிருக்கின்றன, ஆனால் இன்னும் அநேகம் உள்ளன: மத்தேயு 7:21–23; 2 நேபி 26:29–31; மோசியா 18:24–26; மற்றும் ஏலமன் 12:25–26. இன்று போதிக்கப்படுகிற பொய்யானவைகளை மறுக்க இந்த வேத வசனங்கள் எவ்வாறு உதவமுடியும்?

நிகோரையும் அவனைப் பின்பற்றுகிறவர்களையும் (வசனங்கள் 3–9, 16–20) “தேவனுடைய ஜனங்களுடன்” ஒப்பிட ஆல்மா 1ன் உங்கள் படிப்பை அணுக மற்றொரு வழி (வசனங்கள் 25–30; 2 நேபி 26:29–31) ஐயும் பார்க்கவும்.) நீங்கள் எவ்வாறு தேவனுடைய ஜனங்களைப்போலாக முடியும்? உங்களுடைய சொந்த சேவையில் எந்த “ஆசாரியவஞ்சகத்தையாவது” நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஆல்மா 1:27–31; 4:6–15

இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அவர்களுடைய இருதயங்களை ஐஸ்வரியங்களில் வைக்கமாட்டார்கள்.

சபை எப்போது விருத்தியடைந்து ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபை அங்கத்தினர்கள் அந்த வளர்ச்சியை வேறுவிதமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை ஆல்மாவின் அதிகாரங்கள் 1 மற்றும் 4 விவரிக்கின்றன. என்ன வேறுபாடுகளை நீங்கள் கவனிக்கிறீர்கள்? நீங்கள் கண்டுபிடித்ததின் அடிப்படையில் “தேவனை தாழ்மையோடு பின்பற்றுகிறவர்கள்” (ஆல்மா 4:15) செல்வம் மற்றும் செழிப்புக்கு நேராக செல்வார்கள் என்ற மனப்பாங்கை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? உங்களுடைய சொந்த மனப்பாங்கை மாற்ற என்ன தூண்டியதாக நீங்கள் உணருகிறீர்கள்?

ஆல்மா 4

“தேவனுடைய வார்த்தையும்” “தூய சாட்சியும்” இருதயங்களை மாற்ற முடியும்.

ஆல்மா 4ல் எது ஆல்மாவை “மிகத் துக்கப்பட வைத்தது” (ஆல்மா 4:15)? அவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் அவன் கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க தலைமை நியாயாதிபதியின் அலுவல் ஆல்மாவை சிறந்த ஸ்தானத்தில் வைத்திருந்ததென சிலர் சொல்லலாம். ஆனால் ஒரு சிறந்த வழியிருந்ததென ஆல்மா நினைத்தான். அவனுடைய ஜனங்களுக்கு உதவ அவனுடைய அணுகுமுறையைப்பற்றி எது உங்களை கவர்கிறது? உங்களைச் சுற்றியிருப்பவர்களை எவ்வாறு நீதியாக செல்வாக்கடையச் செய்யலாமென்பதைப்பற்றிய சிந்தனைகளை உங்களுடைய சிந்தனைகளில் உணர்த்தலாம்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 1:19–25

இந்த வசனங்களில் துன்புறுத்தலை சபை அங்கத்தினர்கள் சமாளித்த வெவ்வேறு வழிகளை அடையாளம் காண்பதிலிருந்து உங்கள் குடும்பம் பயனடையலாம். நமது நம்பிக்கைகளை மற்றவர்கள் தாக்கும்போது சமாளிக்க பொருத்தமான வழிகளை நீங்கள் பயிலலாம். மத சுதந்தரம் காணொலிகள் உதவக்கூடும்.

ஆல்மா 3:4

“தங்கள்மீது [ஒரு] அடையாளத்தை அவர்கள் போட்டுக்கொண்டபோது அமிலீசியர்கள் என்ன செய்தியை தெரிவிக்க விரும்பினார்கள்”? (ஆல்மா 3:4, 13 பார்க்கவும்) நமது தோற்றத்துடன் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக என்ன செய்திகளை நாம் அனுப்பலாம்? மறுபரிசீலனைக்கு இது ஒரு நல்ல நேரமாயிருக்கலாம் “உடையும் தோற்றமும்” ல் இளைஞர்களின் பெலனுக்காக (2011), 6–8.

ஆல்மா 4:2–3

தேவனுக்கு நேரான நமது கடமையை நினைவில்கொள்ள என்ன காரியங்கள் அல்லது அனுபவங்கள் நம்மை விழிப்படையச் செய்கிறது? (ஆல்மா 4:3). காலையில் உங்கள் குடும்பம் எழுந்த பின்பு இந்த வசனங்களை பகிர்ந்துகொள்வது ஆற்றலுள்ளதாக இருக்கும். சரீரபூர்வ எழுந்திருப்பதின் சவால்கள் ஆவிக்குரியவிதமான எழுந்திருப்பதன் சவால்களைப் புரிந்துகொள்ள எவ்வாறு நமக்குதவுகிறதென பின்னர் நீங்கள் கலந்துரையாடலாம்.

ஆல்மா 4:10–11

“சபையைச் சாராதவர்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக” இருப்பதை நம்மால் எவ்வாறு தவிர்க்கமுடியும்? (ஆல்மா 4:10). மற்றவர்களின் செயல்களை, குறிப்பாக சக அங்கத்தினர்களின் செயல்கள் நமது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இல்லாமலிருப்பதை நாம் எவ்வாறு நிச்சயப்படுத்துவதென்பதைப்பற்றி பேசுவதும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

ஆல்மா 4:19

சாட்சியின் வல்லமையை உங்கள் குடும்பம் புரிந்துகொள்ள உதவ, அவர்களை ஆழமாக பாதித்த யாரோ ஒருவரின் சாட்சியைக் கேட்டபோதுள்ள ஒரு நேரத்தைப்பற்றி சிந்திக்க அவர்களைக் கேட்கலாம். ஜனங்களின் இருதயங்களைத் தொட, சாட்சியையும் தேவனுடைய வார்த்தையையும் பயன்படுத்த ஏன் ஆல்மா தேர்ந்தெடுக்கக்கூடும்? (ஆல்மா 31:5யும் பார்க்கவும்) மாறுவதற்கு மற்றவர்களை வற்புறுத்த ஜனங்கள் பயன்படுத்தும் பிற முறைகளைவிட இது எவ்வாறு அதிக ஆற்றலுள்ளதாக இருக்கும்? அவர்களுடன் நமது சாட்சியை பகிர்ந்துகொள்ளுவதால் விசுவாசத்தை நாம் பெலப்படுத்துகிற ஜனங்களிருக்கிறார்களா?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்,—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்களோடு வேதங்களை ஒப்பிடுங்கள். நீங்கள் வாசிக்கும் கதைகளும் போதனைகளும் எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். உதாரணமாக, இன்றைய உலகத்திற்கும் ஆல்மா 1–4ல் நேபியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்குமிடையில் ஒற்றுமைகளை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

படம்
அமிலிசியர்களுடன் நேபியர்கள் போராடுகிறார்கள்

ஆல்மாவும் அமிலிசியும்–ஸ்காட் எம். ஸ்நோ