என்னைப் பின்பற்றி வாருங்கள்
மே 18–24. மோசியா 25–28: “தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்”


“மே 18–24.” மோசியா 25–28: ‘தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மே 18–24. மோசியா 25-28,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தரிசனமாகுதல்

இளைய ஆல்மாவின் மனமாற்றம்- காரி எல். காப்

மே 18–24

மோசியா 25–28

“தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்”

பின்னர் “கர்த்தருடைய சத்தம் ஆல்மாவுக்கு உண்டாகி,” “அவன் அவைகளை வைத்திருக்குமாறு” (மோசியா 26:14, 33)கர்த்தர் அவனுக்குச் சொன்னவைகளை அவன் எழுதினான். நீங்கள் எப்படி ஆல்மாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் தனித்தனி தேசங்களில் வாழ்ந்தபிறகு, நேபியர்கள் திரும்பவும் ஒரே ஜனமானார்கள். லிம்கியின் ஜனம், ஆல்மாவின் ஜனம் மற்றும் மோசியாவின் ஜனம், நேபியிலிருந்து வந்திராத சாரகெம்லாவின் ஜனங்களும் கூட, இப்போது அனைவரும் “நேபியர்களோடு எண்ணப்பட்டார்கள்” (மோசியா 25:13). அவர்களில் அநேகர் ஆல்மா ஸ்தாபித்திருந்த சபையின் அங்கத்தினர்களாகவும் விரும்பினர். ஆகவே “கிறிஸ்துவுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ள விருப்பம் கொண்ட” எவரும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு “தேவனுடைய ஜனம் என்றழைக்கப்பட்டார்கள்” (மோசியா 25:23–24). பிணக்கும் அடிமைத்தனமுமான அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியாக நேபியர் சமாதான காலத்தை அனுபவிப்பார்கள் போல தோன்றியது.

ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பே அவிசுவாசிகள் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். விசேஷமாக இருதயத்தை நொறுக்குவது எதுவென்றால், இந்த அவிசுவாசிகளில் அநேகர், தழைக்கிற தலைமுறையான, மோசியாவின் குமாரர்கள் மற்றும் ஆல்மாவின் ஒரு குமாரன் உள்ளிட்டவர்களான விசுவாசிகளின் சொந்த பிள்ளைகள் (மோசியா 26:1). பின்பு ஒரு அற்புதம் நிகழ்ந்தது, அந்த அற்புதத்தின் விவரம் தலைமுறைகளாக மனவேதனையடைந்த பெற்றோருக்கு நம்பிக்கையளித்திருக்கிறது. ஆனால், ஆல்மாவின் மனமாற்றக் கதை வழிதவறிய பிள்ளைகளின் பெற்றோருக்கு மட்டுமல்ல. உண்மையான மனமாற்றம் ஒரு அற்புதம், ஒன்று அல்லது மற்றொரு விதத்தில் அது நம் அனைவருக்கும் நிகழ வேண்டும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

மோசியா 26:1-6

என் சொந்த விசுவாசத்துக்கும் சாட்சிக்கும் நானே பொறுப்பு.

பென்யமின் இராஜாவின் பிரசங்கத்தைக் கேட்டவர்கள், ஒரு அற்புதமான மனமாற்றத்தை அனுபவித்தார்கள்(மோசியா 5:1–7 பார்க்கவும்), ஆனால் மனமாற்றம் தனிப்பட்ட அனுபவம், அது பிறப்புரிமையாக ஒருவரின் பிள்ளைகளுக்கு கடத்தப்பட முடியாதது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு நமது சொந்த மனமாற்றத்தை நாமனைவரும் அனுபவிக்க வேண்டும். விசுவாசமில்லாத நேபியர்களின் தழைக்கிற தலைமுறையைப்பற்றி மோசியா 26:1–6ல் நீங்கள் வாசிக்கும்போது, அவர்களது அவிசுவாசத்தின் விளைவுகளைக் கவனிக்கவும். கிறிஸ்துவிடம் நீங்கள் கொண்டுவர விரும்பக்கூடிய ஜனங்களைப்பற்றியும் நீங்கள் யோசிக்கலாம். உங்கள் மனமாற்றத்தை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க முடியாதபோது, அவர்கள் விசுவாசத்தைக் காண அவர்களுக்கு நீங்கள் உதவக் கூடியவற்றை பரிசுத்த ஆவி மெல்லிய குரலில் உங்களுக்கு தெரிவிக்கலாம். மோசியா 25–28ல், தழைக்கிற தலைமுறைக்கு ஆல்மாவும் பிற சபையாரும் எப்படி உதவினார்கள் என்பதைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, கூடுதல் சிந்தனைகள் உங்களுக்கு வரக்கூடும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 68:25–29ஐயும் பார்க்கவும்.

மோசியா 26:6–39

தேவனின் விசுவாசமிக்க வேலைக்காரர்கள் அவரது சித்தத்தைச் செய்ய நாடுகிறார்கள்.

ஆல்மா போன்ற சபைத் தலைவர் எப்போதுமே செய்யக்கூடிய சரியானவற்றை அறிகிறார் என சிலசமயங்களில் நாம் நினைக்கலாம். மோசியா 26ல் சபையில் ஆல்மா ஒருபோதும் ஈடுபட்டிராத பிரச்சினை மற்றும் “தேவனுடைய பார்வையில் குற்றம் செய்துவிடுவோமோ என்று அவன் பயந்தான்” என்பதைப்பற்றி, நாம் வாசிக்கிறோம். (மோசியா 26:13). இந்தச் சூழ்நிலையில் ஆல்மா என்ன செய்தான்? (மோசியா 26:13–14, 33–34, 38–39 பார்க்கவும்). உங்கள் குடும்பத்தில் அல்லது சபைச் சேவையில் கஷ்டமான பிரச்சினைகளை நீங்கள் எப்படி அணுகலாம் என்பதைப்பற்றி ஆல்மாவின் அனுபவம் என்ன ஆலோசனையளிக்கிறது?

மோசியா 26:15–32ல் காணப்படுகிற, தேவன் ஆல்மாவுக்கு வெளிப்படுத்திய சத்தியங்களைப் பட்டியலிடுவதும் ரசிக்கத்தக்கதாக இருக்கலாம். இந்த சத்தியங்களில் சில, ஆல்மாவின் கேள்விக்கு நேரடியான பதில் அல்ல என்பதைக் கவனிக்கவும். ஜெபம் மற்றும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெறுவதைப்பற்றி இது உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

மோசியா 27:8–37

எல்லா ஆண்களும் பெண்களும் மறுபடியும் பிறக்க வேண்டும்.

இளைய ஆல்மாவுக்கு ஆவிக்குரிய மறுபிறப்பு தேவை என்பது வெளிப்படை, ஏனெனில் அவனும் மோசியாவின் குமாரர்களும், “தேவனுடைய சபையை அழிப்பதற்கு” சுற்றித் திரிந்த “கொடிய பாவிகள்” (மோசியா 27:10; 28:4). ஆனால் அவனது மனமாற்றத்துக்குப் பிறகு உடனேயே, ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறதான மனமாற்றம் முக்கியமானது அத்தியாவசியமானதென, சாட்சியளித்தான்: “எல்லா ஜனங்களும் மறுபடியும் பிறக்க வேண்டும் என்பதால் திகையாதே” (மோசியா 27:25; italics added). உண்மையாகவே, அது உங்களையும் உள்ளடக்கியது.

மோசியா 27:8–37ல், காணப்படுகிற ஆல்மாவின் அனுபவத்தை நீங்கள் வாசிக்கும்போது, அவனது இடத்தில் உங்களை வைக்க நீங்கள் முயற்சிக்கலாம். நீங்கள் சபையை அழிக்க முயற்சிக்கவில்லை, ஆனால் உங்களில் மாறவேண்டிய காரியங்களைப்பற்றி நீங்கள் கண்டிப்பாக நினைக்கலாம். ஆல்மாவின் தகப்பனைப்போல “அதிக விசுவாசத்துடன்” யார் உங்களை ஆதரித்து ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்? “தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் [உங்களுக்கு] உணர்த்த” எந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன?மோசியா 27:14. நீங்கள் “நினைவுகூர” வேண்டிய எந்த “மகத்தான காரியங்களை” உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்துக்கு கர்த்தர் செய்திருக்கிறார்?(மோசியா 27:16). மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதைப்பற்றி இளைய ஆல்மாவின் வார்த்தைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? மறுபடியும் பிறக்கும் முறையில் உங்கள் முன்னேற்றத்தை அளவிட இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கு உதவலாம்.

மோசியா 5:6–9; ஆல்மா 36; “மனமாற்றம்,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

படம்
இளைய ஆல்மா அவனது தகப்பனின் வீட்டுக்கு கொண்டுபோகப்படுதல்

அவனது தகப்பன் களிகூர்ந்தான்–வால்ட்டர் ரானே

மோசியா 27:14, 19–24

தேவன் என் ஜெபங்களைக் கேட்டு அவரது சித்தப்படி அவற்றுக்கு பதிலளிப்பார்.

அவரது மகன் அல்லது மகள் நாசமிக்க தேர்ந்தெடுப்புகளை செய்கிற, மூத்த ஆல்மாவின் சூழ்நிலையிலிருக்கிற ஒரு பெற்றோரை நீங்கள் அறியலாம். அல்லது அந்த பெற்றோர் நீங்களாகவே இருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற மோசியா 27:14, 19–24ல் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? இந்த வசனங்கள் பிறருக்கான உங்கள் ஜெபங்களில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தலாம்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மோசியா 25:5–11

சீனிப்பின் ஜனம் மற்றும் ஆல்மாவின் ஜனத்தின் பதிவேடுகளை அவன் வாசித்த பிறகு மோசியாவின் ஜனம் எவ்வாறு உணர்ந்தார்கள்? நீங்கள் வாசிக்கும்படியாக உங்கள் குடும்பம் எந்த பதிவேடுகளையாவது வைத்திருக்கிறார்களா? உங்கள் பதிவேடுகளில் நீங்கள் சேர்க்கலாம் அல்லது உங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். “அளவிட முடியாத மிகுந்த சந்தோஷத்தினால் நிரப்பப்படவும்,” “தேவனுடைய நேரான நற்குணத்தைப்பற்றி” அறியவும் (வருங்கால சந்ததிகள் உட்பட) உங்கள் குடும்பத்துக்கு உதவக் கூடிய எவைகளை நீங்கள் சேர்ப்பீர்கள்.?(மோசியா 25:8, 10).

மோசியா 25:16

சிறைத்தனத்திலிருந்து கர்த்தர் அவர்களை விடுவித்திருக்கிறார் என லிம்கியின் ஜனம் நினைவுகூர்வது ஏன் முக்கியமாயிருந்தது? நாம் நினைவுகூரும்படிக்கு, கர்த்தர் நமக்கு என்ன செய்திருக்கிறார்?

மோசியா 26:29–31; 27:35

இந்த வசனங்களின்படி, மன்னிப்பு பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

மோசியா 27:21–24

இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் குடும்பம் உபவாசித்து ஜெபிக்கக்கூடிய ஒருவரை கருத்தில் கொள்ளவும்.

மோசியா 27–28

இந்த அதிகாரங்களிலுள்ள விவரங்களை உங்கள் குடும்பத்தினர் கற்பனை செய்ய உதவ, சம்மந்தப்பட்ட ஜனங்களின் படங்களை வரைய நீங்கள் அவர்களை அழைக்கலாம், மற்றும் கதையை திரும்ப சொல்ல அப்படங்களை பயன்படுத்தலாம். அல்லது, ஆல்மாவும் மோசியாவின் குமாரர்களும் அனுபவித்த மாற்றத்தை அவர்கள் எப்படி சித்தரிக்கலாம் என அவர்கள் அந்தக் கதையை நடித்து ரசிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

கலையைப் பயன்படுத்தவும். ChurchofJesusChrist.orgலுள்ள Gospel Art Book மற்றும்Media Libraryல் உள்ள அநேக உருவங்களும் காணொலிகளும் கருத்துக்கள் அல்லது நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பம் கற்பனை செய்ய உதவ முடியும்.

படம்
இளைய ஆல்மாவுக்கு தூதன் தரிசனமாகுதல்

இளைய ஆல்மாவுக்கு ஒரு தூதன் தரிசனமாகுவதின் விளக்கப்படம்–கெவின் கீலி