என்னைப் பின்பற்றி வாருங்கள்
மே 4–10. மோசியா 11–17: “ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளி”


“மே 4–10 மோசியா 11–17: ‘ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளி’” என்னைப் பின்பற்றி வாருங்கள் — தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மே 4–10. மோசியா 11–17,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
நோவா இராஜாவிடம் அபிநாதி சாட்சியளித்தல்

நோவா இராஜாவுக்கு முன்பு அபிநாதி– ஆண்ட்ரூ போஸ்லி

மே 4–10

மோசியா 11–17

“ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளி”

அபிநாதியின் வார்த்தைகள் நோவா இராஜாவின் அரண்மனையிலிருந்த ஒருவரிலாவது பெலத்த மாற்றத்தை ஏற்படுத்தியது.(மோசியா 17:2–4 பார்க்கவும்). நீங்கள் எப்படி மாற முடியும் என்பதைப்பற்றிய உணர்வுகளை பெற உங்கள் இருதயத்தில் ஜெபத்துடன் மோசியா 11–17 வாசிக்கவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஒரு தீ பொறியிலிருந்து பெரும் நெருப்பு தொடங்க முடியும். ஒரு வல்லமைமிக்க இராஜா மற்றும் அவனது அரண்மனைக்கு எதிராக சாட்சியளித்த ஒரே மனுஷன் அபிநாதி. அவனுடைய மிகுதியான வார்த்தைகள், புறக்கணிக்கப்பட்டு அவன் மரண தண்டனையளிக்கப்பட்டான். இருப்பினும் ஒருபோதும் அந்தகாரமடையாத … ஒளியாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அவனது சாட்சி (மோசியா 16:9), இளம் ஆசாரியனாகிய ஆல்மாவுக்குள் ஏதோவொன்றை பொறியேற்றச் செய்தது. ஆல்மா அநேகரை மனந்திரும்புதலுக்குள்ளாகவும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்திற்குள்ளும் கொண்டுவந்தபோது, அந்த மனமாற்றப் பொறி மெதுவாக வளர்ந்தது. அபிநாதியைக் கொன்ற தீப்பிழம்புகள் முடிவாக அணைந்தன, ஆனால் அவனது வார்த்தைகள் உருவாக்கிய விசுவாச நெருப்பு, நேபியர்கள் மீதும், இன்று அவனுடைய வார்த்தைகளை வாசிப்பவர்கள் மீதும் நீடித்த செல்வாக்கைப் பெற்றிருக்கும். நமது சாட்சிகளினிமித்தம் நம்மில் அதிகமானோர் அபிநாதி போல் ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டோம், ஆனால் நாமனைவருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது வரும் நமது தைரியம் மற்றும் விசுவாசத்தின் சோதனைத் தருணங்கள் வரும். ஒருவேளை அபிநாதியின் சாட்சியைத் தியானிப்பது, சாட்சியின் ஜுவாலைகளையும் அப்படியே உங்கள் இருதயத்தின் தைரியத்தையும் கூட மூட்டும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்பிற்கான ஆலோசனைகள்

மோசியா 11–1317

நான் தனிமையில் நிற்கும்போது கூட நான் சத்தியத்துக்காக நிற்க முடியும்.

தங்கள் துன்மார்க்க வழிகளை மாற்றுவதில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களாகத் தோன்றும் ஜனங்களிடம் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிடுவது அபிநாதிக்கு எவ்வளவு அதைரியமளிப்பதாக இருந்திருக்கும் என கற்பனை செய்யுங்கள். அவனது செய்தி மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது. இருப்பினும் அபிநாதி விட்டு விடவில்லை.

சத்தியத்தைப் பாதுகாப்பதில் நீங்கள் தனியாக நிற்பதுபோல் எப்போது உணர்ந்தீர்கள்? மோசியா 11–13 மற்றும் 17 வாசிக்கும்போது, அவரது சுவிசேஷத்துக்காக நிற்பது கர்த்தருக்கு தேவைப்படும்போது, நீங்கள் ஆயத்தமாயிருக்க உங்களுக்கு நீங்கள் உதவக்கூடியதாக எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்? அபிநாதியின் எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன பிற கொள்கைகளைக் கற்றுக்கொள்கிறீர்கள்?

மோசியா 12:19–30

தேவ வார்த்தையைப் புரிந்துகொள்ள நான் என் இருதயத்தை பயன்படுத்த வேண்டும்.

நோவா இராஜாவின் ஆசாரியர்கள் தேவ வார்த்தையோடு பரிச்சயமாயிருந்தார்கள், அவர்கள் வேத பத்திகளை மேற்கோள் காட்ட முடியும் மற்றும் கட்டளைகளைப் போதிக்க முடியும் என கோரினார்கள். ஆனால் அந்த கட்டளைகள் “[அவர்களது] இருதயங்களில் எழுதப்படவில்லை,” மேலும் “அவற்றை புரிந்துகொள்ள [அவர்கள்] இருதயங்களைப் பிரயோகிக்கவில்லை.”(மோசியா 13:11; 12:27). அதன் விளைவாக அவர்களது ஜீவியங்கள் மாறாததாக இருந்தன.

நீங்கள் மோசியா 12:19–30 வாசிக்கும்போது, தேவ வார்த்தையைப் புரிந்துகொள்ள இருதயத்தைப் பயன்படுத்துவது என்றால் என்ன என சிந்தியுங்கள். நீங்கள் சுவிசேஷத்தை வாசிக்க அணுகும் விதத்தில் எந்த மாற்றங்களும் செய்ய இது உங்களுக்கு உணர்த்துகிறதா?

மோசியா 13:1–9

தன் பணியில் அவரது வேலைக்காரர்களை கர்த்தர் ஆதரிப்பார்.

ஒரு புறம் தன் வேலைக்காரர்களை கர்த்தர் எப்படி ஆதரிக்கிறார் என பல எடுத்துக்காட்டுகளை அபிநாதியின் அனுபவம் கொடுக்கிறது, மோசியா 13:1–9ல் அதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நீங்கள் காணலாம். மற்றொரு புறம், அவனுடைய சாட்சிக்காக, அபிநாதி தண்டிக்கப்படவும், சிறைபிடிக்கப்படவும், கொல்லப்படவும் கர்த்தர் அனுமதித்தார். அபிநாதி கர்த்தரை நம்பினான் என தெரிவிக்கிற இந்த வசனங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? உங்கள் அழைப்புகள் மற்றும் பொறுப்புக்களை நீங்கள் பார்க்கும் விதத்தை அபிநாதியின் எடுத்துக்காட்டு எப்படி பாதிக்கிறது.

மோசியா 14–15

இயேசு கிறிஸ்து எனக்காக பாடனுபவித்தார்.

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலம் இரட்சிப்பு வருகிறது என நோவா இராஜாவும் அவனது ஆசாரியர்களும், நம்பினர். மேசியாவாகிய இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிப்பு வருகிறது என அவர்கள் அறிய வேண்டுமென அபிநாதி விரும்பினான். மோசியா 14–15ல், இரட்சகரையும் உங்களுக்காக அவர் என்ன பாடனுபவித்தார் என்பதையும் விவரிக்கிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கவனியுங்கள். அவர் மீது உங்கள் அன்பையும் நன்றியுணர்வையும் எந்த வசனங்கள் ஆழப்படுத்த உதவுகின்றன?

மோசியா 15:1–12

இயேசு கிறிஸ்து எப்படி பிதாவாகவும் குமாரனாகவும் இருக்கிறார்?

இந்த பாகங்கள் சில சமயங்களில் குழப்புகின்றன, ஏனெனில் பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரே என அபிநாதி போதிப்பது போல தோன்றலாம், இருப்பினும் அவர்கள் தனித்தனியானவர்கள் என நாம் அறிகிறோம். அபிநாதி சொல்வதன் அர்த்தம் என்ன? மாம்சத்தில் தரித்திருந்து, பகுதி மனுஷனாகவும் பகுதி தேவனாகவுமாகி, (மோசியா 15:1 பார்க்கவும்), குமாரனாகிய தேவன்--- யேகோவாவாக---மீட்பராவார் என அவன் போதித்தான் (வசனங்கள் 2–3). அவன் முற்றிலும் பிதாவாகிய தேவனின் சித்தத்துக்கு தன்னை ஆளாக்கினான்.( வசனங்கள் 5–9). இதினிமித்தம் இயேசு கிறிஸ்து தேவ குமாரனாகவும், பிதாவாகிய தேவனின் பூலோக பரிபூரண பிரதிநிதியாகவும் இருக்கிறார்(யோவான் 14:6–10 பார்க்கவும்).

நாம் அவரது மீட்பை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் “அவரது சந்ததியாகிறோம்” (மோசியா 15:11–12). என்னும் அர்த்தத்தில் இயேசு கிறிஸ்து பிதாவாகவும் இருக்கிறார் என விளக்கி ஆல்மா தொடர்ந்தான். பிற வார்த்தைகளிலெனில், நாம் அவர் மூலம் ஆவிக்குரிய விதமாக மறுபடியும் பிறந்தவர்களாகிறோம் (மோசியா 5:7 பார்க்கவும்).

யோவான் 5:25–27; 8:28–29; 17:20–23; “The Father and the Son,” Ensign, Apr. 2002, 12–18 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்ப வேத படிப்பு

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மோசியா 11–13; 17

அப்படிச் செய்வது பிரசித்தமில்லாததானபோதும், சத்தியத்துக்கு விசுவாசமாக இருப்பதன் உணர்த்தப்பட்ட எடுத்துக்காட்டுகளாக ஆல்மாவும் அபிநாதியும் இருக்கிறார்கள். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் தரங்களை சமரசம் செய்யும் சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். சத்தியத்துக்காக நிற்பதைப்பற்றி அபிநாதி மற்றும் ஆல்மாவிடமிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? உங்கள் குடும்பத்தினர் விவரத்தை கற்பனை செய்ய இக்குறிப்புடன் வருகிற கலைப்படைப்பு உதவ முடியும். இந்த அதிகாரங்களை படித்த பின், தங்கள் தரங்களை சமரசம் செய்ய அழுத்தத்துக்கு உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பிரதிக்கிரியை செய்யும்படிக்கு, நிஜ வாழ்க்கை காட்சிகளை நடித்துக் காட்டுவதை கருத்தில் கொள்ளவும். அல்லது, சத்தியத்துக்காக நீங்கள் நின்ற அனுபவங்களை ஒருவருக்கொருவர் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

மோசியா 12:33–37, 13:11–24 .

“[நமது] இருதயங்களில் எழுதப்பட்ட” தேவ கட்டளைகளைப் பெற்றிருப்பது என்பதன் அர்த்தம் என்ன? மோசியா 13:11 ஒரு பெரிய இருதய வடிவுள்ள காகிதத்தில்(அல்லது உங்கள் கருத்துக்களின் படங்களை வரையலாம்) சில கருத்துக்களை நீங்கள் எழுதலாம். கட்டளைகள் நமக்கு ஏன் விலைமதிப்புள்ளவையாக இருக்கின்றன? நாம் அவற்றை நமது இருதயங்களில் எவ்வாறு எழுத முடியும்?

படம்
தகப்பனும் மகனும் வேதங்களை வாசித்தல்

வேதங்களை படித்தல் நமது இருதயங்களில் கட்டளைகளை எழுத நமக்கு உதவ முடியும்.

மோசியா 14

இந்த அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவை விவரிக்கிற பல வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் அவைகளைக் கண்டு பிடிக்கும்போது, உங்கள் குடும்பத்தினர் அவற்றைப் பட்டியலிடலாம். இந்த வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் நாம் படிக்கும்போது, இரட்சகரைப்பற்றி குடும்ப அங்கத்தினர்கள் எவ்விதம் உணர்கிறார்கள்?

மோசியா 15:26–27; 16:1–13

இயேசு “இவ்வுலகத்திற்கு வரவில்லையெனில்” (மோசியா 16:6) அல்லது அவர்கள் அவரைப் பின்பற்றவில்லையெனில், தேவனின் பிள்ளைகளுக்கு என்ன நிகழும் என இந்த வசனங்கள் விவரிக்கின்றன. அவர் வந்து நமக்காக பாவநிவர்த்தி செய்ததால் நடந்துள்ள நல்ல காரியங்கள் யாவை? “Why We Need a Savior” (ChurchofJesusChrist.org) என்ற காணொலியையும் பார்க்கவும்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

சுவிசேஷக் கொள்கைகளைக் கற்பிக்க கதைகளையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்தவும். கதைகளையும் உவமைகளையும் பயன்படுத்தி, இரட்சகர் அடிக்கடி சுவிசேஷக் கொள்கைகளை போதித்தார். உங்கள் குடும்பத்துக்கு ஒரு சுவிசேஷக் கொள்கையை உயிரோட்டமுள்ளதாக்கக்கூடிய உங்கள் சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் கதைகளையும் சிந்திக்கவும் (Teaching in the Savior’s Way, 22 பார்க்கவும்).

படம்
நோவா இராஜாவுக்கு அபிநாதி சாட்சியளித்தல்

அவரது முகம் மிகப்பிரகாசமாக ஜொலித்தது–ஜெரிமி வின்போர்க்