என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஜூன் 22–28 ஆல்மா 17–22: “ உங்களை கருவியாக்குவேன்”


“ஜூன் 22–28 ஆல்மா 17–22: ‘உங்களை கருவியாக்குவேன்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஜூன் 22–28. ஆல்மா 17–22,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
லாமோனி இராஜாவுடன் அம்மோன் பேசுதல்

அம்மோனும் லிம்கி இராஜாவும் –ஸ்காட் எம்.ஸ்நோ

ஜூன் 22–28

ஆல்மா 17–22

“உங்களை கருவியாக்குவேன்”

ஆல்மா 17–22ஐ நீங்கள் படிக்கும்போது, உங்களுக்கு வருகிற எண்ணங்களைப் பதிவுசெய்து, அவற்றின்படி செயல்படவும். அப்படிச் செய்வது, அதிக தனிப்பட்ட வெளிப்படுத்தல்களைப் பெற நீங்கள் சித்தமாயிருப்பதை கர்த்தருக்குக் காட்டும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாததற்கு ஜனங்கள் கொடுக்கிற அனைத்துக் காரணங்களையும்பற்றி சிந்தியுங்கள்: “எனக்குப் போதுமானளவுக்குத் தெரியாது” அல்லது “அவர்களுக்கு ஆர்வமிருக்கிறதாவென எனக்கு நிச்சயமாகத் தெரியாது” அல்லது “நான் அவர்களைப் புண்படுத்தினால் என்னவாகும்?” சிலநேரங்களில் இதேபோன்ற காரியங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தை நீங்கள் கண்டிருக்கலாம். லாமானியர்களோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளாததற்கு நேபியர்களுக்கு கூடுதலான காரணமிருந்தது: அவர்கள் “மூர்க்கமாயும், கடினமாயும், கொடிய ஜனங்களுமாயிருந்து நேபியர்களைக் கொலை செய்ய களிகூருகிற ஜனங்களுமாயிருந்தார்கள்” (ஆல்மா17:14; ஆல்மா26:23–25 ஐயும் பார்க்கவும்). ஆனால், லாமானியர்களோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று ஏன் அவர்கள் உணர்ந்தார்களென்பதற்கு மோசியாவின் குமாரர்களுக்கு ஒரு வலிமையான காரணமிருந்தது: “இப்பொழுதும் அவர்களால் எந்த ஒரு மனுஷ ஆத்துமாவும் அழிந்துபோவதை தாங்கிக்கொள்ள முடியாததால் எல்லா சிருஷ்டிக்கும் இரட்சிப்பு அறிவிக்கப்படவேண்டும் என்று வாஞ்சித்தார்கள்” (மோசியா28:3) அம்மோனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் உணர்த்திய இந்த அன்பு, உங்கள் குடும்பத்தாருடனும், உங்கள் நண்பர்களுடனும், இதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என தோன்றாத பரிச்சயமானவர்களுடனும் கூட சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்களுக்கும் உணர்த்தலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

ஆல்மா 17:1–4.

என்னுடைய சொந்த விசுவாசத்தை நான் பெலப்படுத்தியதைப்போல, மிகஆற்றலுடன் நான் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள முடியும்.

நீங்கள் எப்போதாவது உங்களுடைய பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைந்ததால், அவர்கள் விசுவாசத்தில் பெலன்கொண்டிருந்ததால் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஆல்மாவைப்போல நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? (ஆல்மா17:1–2 பார்க்கவும்). சுவிசேஷத்தில் உங்களுடைய விசுவாசத்தை எவ்வாறு காத்துக்கொள்வதென்றும் அதனுடனான அர்ப்பணிப்பில் வலிமையாயிருக்கவும் மோசியாவின் குமாரர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்? மோசியாவின் குமாரர்களின் ஆவிக்குரிய வலிமையைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்களென நினைக்கிறீர்கள்?

மோசியாவின் குமாரர்களின் ஆவிக்குரிய ஆயத்தம் லாமானியர்களுடன் அவர்களுடைய வேலையை எவ்வாறு பாதித்தது? “தேவனுடைய வல்லமையோடும் அதிகாரத்தோடும்” (ஆல்மா 17:3) சுவிசேஷத்தைப் போதிக்க உங்களுடைய முயற்சிகளை மதிப்பிட ஒருவேளை இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆல்மா 17:6 –12.

அவருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பைக் கொண்டுவர தேவனுடைய கரங்களில் நான் ஒரு கருவியாகமுடியும்.

தலைவர் தாமஸ் எஸ். மான்சன் சொன்னார், “ஒரு வேலைக்காக ஓட்டம் அவருக்குத் தேவைப்பட்டால் அவருக்காக டாம் மான்சன் அந்த வேலைக்காக ஓடுவான் என எப்போதுமே கர்த்தர் அறிந்திருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்” (“On the Lord’s Errand: The Life of Thomas S. Monson,” video, ChurchofJesusChrist.org). ஆல்மா17:6–12ஐ நீங்கள் வாசிக்கும்போது, தேவனுடைய கரங்களில் கருவிகளாக இருக்கமுடியும்படியாக மோசியாவின் குமாரர்கள் என்ன செய்தார்கள் என்பதைத் தேடுங்கள். மற்றவர்களை ஆசீர்வதிக்க தேவனுடைய கரங்களில் எவ்வாறு நீங்கள் ஒரு கருவியாக முடியும்? நீங்கள் செய்யவேண்டுமென கர்த்தர் விரும்புகிறதைச் செய்ய உங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிற அவர்களுடைய எடுத்துக்காட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

டாலின் ஹெச்.ஓக்ஸ் “Sharing the Restored Gospel,” Ensign or Liahona, Nov. 2016, 57–60 ஐயும் பார்க்கவும்.

ஆல்மா 17–18

சுவிசேஷத்தைப் பெற ஆயத்தப்பட மற்றவர்களுக்கு நான் உதவமுடியும்.

“மூர்க்கமாயும், கடினமாயும், கொடிய ஜனங்களுமாயிருந்தவர்களுக்கு” லாமான் தலைவனாயிருந்தான்(ஆல்மா17:14), இருந்தும் பலஆண்டுகளின் பாரம்பரியத்தை அவன் மேற்கொண்டு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டான். லாமானுடன் அம்மோனின் உரையாடல்களை நீங்கள் வாசிக்கும்போது, அவனுடைய செய்தியை மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்க லாமானுக்குதவ அம்மோன் என்ன செய்தானென்பதைக் கவனிக்கவும். மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் என்ன செய்யமுடியுமென்பதைப்பற்றி உங்களுக்கு சிந்தனைகள் வந்தால் அந்த உணர்த்துதல்களை எழுதி வையுங்கள்.

அம்மோன் லாமானிக்குப் போதித்த சத்தியங்கள் (ஆல்மா18:24–39 பார்க்கவும்) மற்றும் ஆரோன் லாமானியின் தகப்பனுக்குப் போதித்த சத்தியங்களை (ஆல்மா22:1–16 பார்க்கவும்) குறித்துக்கொள்ளவும் அல்லது எழுதி வைக்கவும் இது உங்களுக்கு உதவியாயிருக்கலாம். சுவிசேஷத்தைப்பற்றிய சாட்சியை நாட அவர்களுக்குதவ மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடிகிற சத்தியங்களைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

படம்
இராஜாவின் ஆடுகளை அம்மோன் பாதுகாத்தல்

மினர்வா கே. டெய்செர்ட் (1888–1976), Ammon Saves the King’s Flocks, 1935–1945, oil on masonite, 35 x 48 inches. பிரிகாம் யங் பல்கலைக் கழக அருங்காட்சியகம்.

ஆல்மா 18–22

எனது சாட்சி ஒரு தொலைநோக்கு செல்வாக்கைப் பெற முடியும்.

வேதங்களில் நாம் படிக்கிறவற்றிலுள்ள மனமாற்றத்தைப்பற்றிய விவரங்கள் பெரும்பாலும் வியக்கத்தக்க நிகழ்வுகளை கொண்டிருந்தாலும், அவைகளின் மையக்கருத்தாக, பேசவும் மற்றவர்களுடன் தங்களுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ளவும் தைரியமுள்ள தனிப்பட்டவர்களை பொதுவாக நாம் காண்கிறோம். ஆல்மா 18–22லிலுள்ள நிகழ்வுகளைப் படிக்க ஒரு வழி, ஒருவர் அவன் அல்லது அவளுடைய சாட்சியைப் பகிர்ந்துகொள்ளுதலின் அதிக விளைவுகளைத் தேடுவதாகும். இதைப் போன்ற ஒரு வரைபடத்தில் நீங்கள் காண்கிறதை நீங்கள் பதிவுசெய்யலாம்:

வுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்த வுடன் அம்மோன் சுவிசேஷத்தைப் பகிர்ந்தான், அதன் விளைவு ஆக இருந்தது.

ஆல்மா 19:36

நான் மனந்திரும்பும்போது கர்த்தருடைய கரம் என்னை நோக்கி நீட்டப்படுகிறது.

லாமோனியின் மனமாற்ற விவரத்தின் முடிவில், கர்த்தருடைய தன்மையைப்பற்றி மிகமுக்கியமான ஒன்றை மார்மன் போதித்தான். கர்த்தருடைய தன்மையைப்பற்றி ஆல்மா 19:36 உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது? உங்களை நோக்கி கர்த்தரின் கரம் நீட்டப்பட்டதை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? நீங்கள் நேசிப்பவர்கள் அவருடைய இரக்கத்தை உணர நீங்கள் எவ்வாறு அவர்களுக்குதவமுடியும்?

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் கலந்துரையாடவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஆல்மா 17–19

இந்த அதிகாரங்களிலுள்ள விவரங்களை உங்கள் குடும்பங்களில் உங்களால் எவ்வாறு உயிரோட்டமுள்ளதாக்க முடியும்? அம்மோன் ஆடுகளைப் பாதுகாத்தலின் கதை அல்லது தேவனின் வல்லமையைக் காண திரளான ஜனங்களை அபிஷ் கூட்டிச்சேர்த்த கதையை நீங்கள் நடித்துக்காட்டலாம். ஒருவேளை, கதையின் வெவ்வேறு பகுதிகளை குடும்பத்தினர் வரைந்து கதையைச் சொல்ல படங்களை அவர்கள் பயன்படுத்தலாம். அம்மோன் மற்றும் அபிஷின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்ற உங்கள் குடும்பம் என்ன செய்யும்?

ஆல்மா 18:24–39

ஒருவேளை உங்கள் குடும்பத்தினர்ஆல்மா18:24–39 ஒன்றாக படித்து அம்மோன் லாமோனிக்குப் போதித்த சத்தியங்களை அடையாளம் காணலாம். இந்த சத்தியங்களை லாமோனிக்கு அம்மோன் முதலாவதாக போதித்தான் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த சத்தியங்களைக் குறித்து நமக்கு ஒரு சாட்சியிருப்பது ஏன் முக்கியமாயிருக்கிறது?

ஆல்மா 20:8–15

லாமானி எவ்வாறு தனது தகப்பனுக்குப் பதிலளித்தான் என்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? நீதிக்காக நிற்கிற லாமானின் எடுத்துக்காட்டை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும்? (சில எடுத்துக்காட்டுகளுக்கு “Dare to Stand Alone” on ChurchofJesusChrist.org காணொலியைப் பார்க்கவும்.)

ஆல்மா 22:15–18.

அவனுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ளும்படியாக லாமானியின் தகப்பன் எதை விட்டுவிட மனதுள்ளவனாயிருந்தான் என்பதைப் பார்க்க ஆல்மா20:23 பரிசீலிக்கவும். பின்னர், சுவிசேஷத்தின் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவன் எதை விட்டுவிட மனதுள்ளவனாயிருந்தான் என்பதைப் பார்க்க ஆல்மா22:15 பரிசீலிக்கவும். தேவனை அறிந்துகொள்ளும்படியாக அவன் எதை விட்டுவிட மனதுள்ளவனாயிருந்தான்? (வசனம் 18 பார்க்கவும்). ஒருவேளை மிக முழுமையாக தேவனை அறிந்துகொள்ளும்படி ஏதோ ஒன்றை விட்டுவிட குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தை எழுதலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

கொள்கைகளை அடையாளம் கண்டு பயன்படுத்துங்கள். வேத கதைகளின் விவரங்கள் உங்களுக்கு பொருந்தாததாகத் தோன்றினாலும்கூட இந்த விவரங்களிலுள்ள கொள்கைகள் பெரும்பாலும் பொருந்துகிறது. அம்மோன் மற்றும் ஆரோனைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுதலைப்பற்றி என்ன கொள்கைகளை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்?

படம்
லாமானி இராஜாவின் மனைவி மயக்கமடைதல்

இயேசுவைத் துதித்துக்கொண்டு தரையிலிருந்து லாமானி இராஜாவின் மனைவி எழுந்தாள். ஆசீர்வதிக்கப்பட்ட இயேசு–வால்ட்டர் ரானே