2010–2019
நமது விசுவாச முகாம்
அக்டோபர் 2018


நமது விசுவாச முகாம்

விசுவாசத்தை நாடுகிற, அனுமதிக்கிற, அதற்காக வாழ்கிறவர்களுக்காக, அதன் உதயம் சிலநேரங்களில் மெதுவாக வரும் அல்லது திரும்பும்.

அன்பான சகோதர சகோதரிகளே, வீட்டிலும், சபையிலும் நமது முழு இருதயத்தோடும், மனதோடும், பெலத்தோடும் புதிய மற்றும் பரிசுத்த வழிகளில்1 வாழ நம்மை அழைக்கிற தலைவர் ரசல் எம். நெல்சன் மற்றும் நமது சபைத் தலைவர்கள் மூலமாக பரலோகத்திலிருந்து தொடர்ந்து வெளிப்படுத்தல்களைப் பெறுவது அற்புதமாக இல்லையா?

ஆயத்தமில்லாததாக, அல்லது போதியதாக இல்லாமல் ஆனால் முயற்சிப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டதாக நீங்கள் உணர்ந்த ஒன்றைச் செய்ய உங்களுக்கு எப்போதாவது சந்தர்ப்பம் கிடைத்ததா?

எனக்கு கிடைத்திருக்கிறது. இங்கே ஒரு உதாரணம்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட், சில ஆண்டுகளுக்கு முன்பு, “கெரிட் என்னுடன் ஓவியம் வரைய விரும்புகிறீர்களா?” என அன்பாக அழைத்தார்.

ஓவியம் வரைதல் கண்காணித்தலுக்கும் உருவாக்குதலுக்கும் அவருக்குதவியதாக மூப்பர் ஸ்காட் சொன்னார். “விளைவுகள் சாதாரணமாக இருந்தாலும் உருவாக்க முயற்சி செய்யுங்கள். . . .வாழ்க்கைக்கும், உங்களுடைய ஜீவனில் கர்த்தர் பிணைத்ததற்கும் நன்றியுணர்வின் உற்சாகத்தை, உருவாக்குதல் உண்டாக்கும்.” 2

உருவாக்கவும், கட்டவும் அவரைப்போலாக அவருடைய பிள்ளைகள் மாற எதிர்பார்க்கிற “ஒரு சிருஷ்டிகரின் அன்பையும்” சேர்த்து “ஒரு அன்பின் உணர்வால்” 3 தூண்டப்பட்டதைப்போல தனது கலை தியானங்களை தலைவர் ஹென்றி பி. ஐரிங் விவரித்தார். தலைவர் ஐரிங்கின் உருவாக்கும் படைப்புகள், சாட்சி மற்றும் விசுவாசத்தின் சாட்சியை ஒரு “தனித்துவமான, ஆவிக்குரிய பார்வையை” வழங்குகிறது. 4

தலைவர் பாய்ட் கே. பாக்கரின் கலைப்படைப்பு, சுவிசேஷ செய்தியின் ஒரு அடிப்படையை விவரிக்கிறது. “அந்த தெய்வீக வழிநடத்துதலின் சிருஷ்டிப்பை இயற்கை முழுவதும் சாட்சி பகரும்படியாகவும், இயற்கை, விஞ்ஞானம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கிடையில் ஒரு முழுமையான இணக்கம் இருக்கும்படியாகவும், பரலோகங்களையும் பூமியையும், அவைகளிலுள்ள சகலத்தையும் சிருஷ்டித்தவர் தேவன்.” 5

“அனைத்து காரியங்களும் தேவன் ஒருவர் உண்டென்று புலப்படுத்துகிறது” 6 என ஆல்மா சாட்சியளிக்கிறான். “ஒரு பறவையின் பாடலை நான் கேட்கும்போதெல்லாம் அல்லது நீல நிற, வானத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்காக பரலோக பிதா சிருஷ்டித்த இந்த அழகான உலகத்தில் நான் வாழ்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” 7 என நமது ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் பாடுகிறார்கள். “மனிதர்களுக்கும் பொருட்களுக்கும், சூரியனிலிருந்து தாவர நுண் பூச்சிவரை. ... பறக்கிற ஒவ்வொரு பறவைகளும் தங்கள் நகங்களுக்குள் நித்தியத்தின் இழையைக் கொண்டிருக்கிற அற்புதமான உறவுகளை” ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ கொண்டாடுகிறார். . . வாயுத்திரள் நட்சத்திரக்கூட்டத்தின் ஒரு எரும்புப் புற்று”. 8

மூப்பர் ஸ்காட்டின் அழைப்புக்கு இது நம்மை பின்னால் கொண்டுபோகிறது.

“மூப்பர் ஸ்காட், நான் அதிகக் கண்காணிப்பவனாகவும் உருவாக்குபவனாகவும் மாற விரும்புகிறேன். உருண்டோடும் மேகங்களுடனும், வானம் மற்றும் தண்ணீரின் சாயலை பரலோக பிதா ஓவியமாக்குவதை கற்பனை செய்வதில் நான் வியப்புறுகிறேன். “ஆனால்,” இங்கே மிக நீண்ட அமைதி. நான் சொன்னேன், மூப்பர் ஸ்காட், ஓவியம் வரைவதற்கு எனக்கு எந்த திறமையுமில்லை. எனக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிக்கும்போது நீங்கள் சினங்கொள்வீர்களென நான் கவலைப்படுகிறேன்” என நான் பதிலளித்தேன்.

மூப்பர் ஸ்காட் புன்னகைத்துவிட்டு நாங்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார். நியமிக்கப்பட்ட நாளில், காகிதத்தையும், வர்ணத்தையும், தூரிகைகளையும் அவர் ஆயத்தப்படுத்தினார். எனக்காக அவர் சில கோடுகளை வரைந்து, காகிதத்தை ஈரமாக்க உதவினார்.

படம்
முகாம் தீயும் சூரிய அஸ்தமனமும்

சூரிய அஸ்தமனத்தில் முகாம் தீ என்று தலைப்பிடப்பட்ட அவருடைய அழகான ஓவியத்தை ஒரு மாதிரியாக நாங்கள் பயன்படுத்தினோம். ஒரு முகாமிலுள்ள ஒளியையும் வெப்பத்தையும் நாங்கள் எதிர்கொள்ளும்போது எப்படி நாம் இருளையும் நிச்சயமின்மையையும் நமக்கு பின்தள்ளுகிறோம், சிலநேரங்களில் நீண்டதும் தனிமையுமான இரவுகளில் விசுவாசம், நம்பிக்கையையும் நிச்சயத்தையும் கொடுக்கிறதென, ஓவியம் வரையும்போது நாங்கள் விசுவாசத்தைப்பற்றிப் பேசினோம். உதயம் வரும். நமது நினைவுகள், அனுபவங்கள், தேவனின் நற்குணங்களில் விசுவாசத்தின் பாரம்பரியம், நமது வாழ்க்கையில் மென்மையான இரக்கங்கள் என்ற நமது விசுவாசத்தின் முகாம் இரவு முழுவதிலும் நம்மைப் பெலப்படுத்தியது.

நாடுகிற, அனுமதிக்கிற, அதற்காக வாழ்கிறவர்களுக்காக, விசுவாசத்தின் உதயம் சிலநேரங்களில் மெதுவாக வரும் அல்லது திரும்பும். அதை நாம் விரும்பி, நாடும்போது, தேவனின் கட்டளைகளுக்கு பொறுமையாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவுமிருக்கும்போது, தேவனுடைய கிருபை, குணமாக்குதல், உடன்படிக்கைகளுக்காக நாம் திறந்த மனதுள்ளவர்களாயிருக்கும்போது ஒளி வரும்.

நாங்கள் ஓவியத்தை வரைய ஆரம்பித்தபோது, கெரிட், ஒரு பாடத்துடன், நீங்கள் வைத்துக்கொள்ளவும் நினைவுவைக்கவும் விரும்புகிற ஒன்றை நீங்கள் வரைவீர்கள் என மூப்பர் ஸ்காட் ஊக்குவித்தார். மூப்பர் ஸ்காட் சொன்னது சரி. ஓவியம் வரைய மூப்பர் ஸ்காட் உதவிய எங்கள் விசுவாச முகாமின் ஓவியத்தை நான் பொக்கிஷப்படுத்தினேன். என்னுடைய கலைத்திறமை குறைவாகவே இருந்தது, ஆனால் எங்கள் விசுவாச முகாமின் நினைவு ஐந்து வழிகளில் நம்மை ஊக்குவிக்கிறது.

முதலாவதாக, ஆரோக்கியமான சிருஷ்டிப்பில் மகிழ்ச்சியைக்காண எங்கள் விசுவாச முகாம் நம்மை ஊக்குவிக்க முடியும்.

ஆரோக்கியமான புதிய காரியங்களை கற்பனை செய்வதிலும், கற்றுக்கொள்வதிலும், செய்வதிலும் சந்தோஷமிருக்கிறது. பரலோக பிதாவிலும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிலும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் நாம் ஆழப்படுத்தும்போது இது விசேஷமாக உண்மை. நம்மைப் பாதுகாக்க போதுமான அளவுக்கு நம்மையே நாம் நேசிக்கமுடியாது. ஆனால், நம்மையே நாம் நேசிப்பதை அல்லது அறிந்துகொள்வதைவிட பரலோக பிதா அதிகமாக நம்மை நேசிக்கிறார், சிறப்பாக அறிகிறார். நமது சுயபுத்தியின்மேல் சாராமல் நாம் கர்த்தரை நம்பலாம். 9

ஒருவரின் பிறந்தநாளுக்கு அழைக்கப்படாத ஒரே ஒருவராக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, நீங்கள் எப்போதாவது கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்களா அல்லது தேர்ந்தெடுக்கப்படாமலிருந்திருக்கிறீர்களா?

பள்ளி தேர்வுக்கு, வேலை நேர்காணலுக்கு, உண்மையிலேயே உங்களுக்கு வேண்டிய ஒரு சந்தர்ப்பத்திற்காக நீங்கள் ஆயத்தப்பட்டு நீங்கள் தோற்றுவிடுவோம் என உணர்ந்திருக்கிறீர்களா?

என்ன காரணமாயிருந்தாலும், நடைபெறாத ஒரு உறவுக்காக நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா?

நீங்கள் நாள்பட்ட வியாதியில் விழுந்து, துணையால் கைவிடப்பட்டு, உங்கள் குடும்பத்திற்காக வருந்தியிருக்கிறீர்களா?

நமது இரட்சகர் நமது சூழ்நிலைகளை அறிவார். தேவன் கொடுத்த சுயாதீனத்தை நாம் பயன்படுத்தி, அடக்கம் மற்றும் விசுவாசத்தின் நமது திறன்கள் முழுவதையும் ஈடுபடுத்தும்போது, வாழ்க்கையின் சவால்களையும் சந்தோஷங்களையும் எதிர்கொள்ள நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து நமக்குதவுவார். அவருடைய உடன்படிக்கையின் பாதையை நாம் பின்பற்றும்போது, நம்மை ஆசீர்வதிக்க கொடுக்கப்பட்ட தேவனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதலிலிருந்தும் விசுவாசம் வருகிறது.

நிச்சயமின்மை, தனிமை, கைவிடப்பட்டதாக, ஏமாற்றமடைந்ததாக, அல்லது தேவனிடமிருந்தும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையிலிருந்தும் பிரிக்கப்பட்டதாக நாம் உணர்ந்த, அல்லது உணருகிறபோது, அவருடைய உடன்படிக்கையின் பாதையில் மீண்டும் பிரவேசிக்க முயற்சிக்கும் விசுவாசத்திற்கும் ஒரு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அது தகுதியானது! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள், அல்லது மீண்டும் வாருங்கள்! உலகப்பிரகாரமான அல்லது ஆவிக்குரிய மரணத்தின் வடங்களைவிட தேவனின் அன்பு பெலமானது, 10 நமது இரட்சகரின் பாவநிவர்த்தி அளவில்லாதது, நித்தியமானது. நாம் ஒவ்வொருவரும் அலைந்து திரிகிறோம், குறைவுள்ளவர்களாகிறோம். சிலநேரங்களில் நமது வழியை இழக்கிறோம். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், எந்த ஒரு திருப்பமுமில்லை என அன்புடன் தேவன் நமக்கு உறுதியளிக்கிறார். நம்மை அணைத்துக்கொள்ள ஆயத்தமாக அவர் காத்திருக்கிறார். 11

இரண்டாவதாக, புதிய, உயர்வான, மற்றும் பரிசுத்தமான ஆவி நிரம்பிய வழிகளிலும் ஊழியம் செய்ய, நமது விசுவாச முகாம் நம்மை ஊக்குவிக்கும்.

அத்தகையவை அற்புதங்களையும், தேவனின் அன்பை நாம் உணருகிற மற்றும் அந்த உற்சாகத்தில் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய நாடுகிற உடன்படிக்கை சேர்ந்த ஆசீர்வாதங்களையும் கொண்டுவருகிறது.

சகோதரி காங்கும் நானும் சமீபத்தில் ஒரு தகப்பனுடன் அறிமுகப்படுத்தப்பட்டோம். வீட்டுப் போதகத்திற்கு தகப்பனுடன் கூட்டாளியாக அவர் (ஆசாரியத்துவ சகோதரர்) இருக்கமுடியுமாவென கேட்ட, அவர்களுடைய ஆயராயிருந்த, ஒரு உண்மையுள்ள ஆசாரியத்துவ சகோதரரால் அந்தக் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. தகப்பன் உற்சாகமில்லாது வீட்டுப்போதகத்திற்கு ஆர்வமாயில்லை. ஆனால் தகப்பனின் இருதயம் மாற்றமடைந்து அவரும் இந்த அன்பான ஆசாரியத்துவ சகோதரரும் நியமிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க ஆரம்பித்தனர். அத்தகைய ஒரு சந்திப்பிற்குப் பின், எப்படி காரியங்கள் நடக்கின்றன என அப்போது சபைக்கு வராதிருந்த அவருடைய மனைவி அவருடைய கணவனைக் கேட்டாள். “ஏதோ ஒன்றை நான் உணர்ந்திருக்கலாம்” என தகப்பன் ஏற்றுக்கொண்டு, பின்னர் மதுபானத்தை எடுக்க சமையலறைக்குச் சென்றார். 12

ஆனால் ஒன்றுக்குப் பின் மற்றொன்று தொடர்ந்தது. மென்மையான அனுபவங்கள், ஊழியசேவை, மனமாற்றங்கள், ஆலய ஆயத்த வகுப்பு, சபைக்கு வருதல், பரிசுத்த ஆலயத்தில் ஒரு குடும்பமாக முத்திரிக்கப்படுதல். தங்களுடைய தகப்பனுக்கும் தாய்க்கும், மற்றவர்களை நேசிக்கவும், ஊழியம் செய்யவும் தங்களுடைய தகப்பனுடன் ஒரு நண்பனாகவும் கூட்டாளியாகவும் வந்த ஊழிய சகோதர கூட்டாளிக்கு, பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருப்பார்கள் என்று கற்பனை செய்யுங்கள்.

ஊக்குவித்தலின் மூன்றாவது விசுவாச முகாம். நமது முழு மனங்களோடும் ஆத்துமாக்களோடும் கர்த்தரையும் மற்றவர்களையும் நாம் நேசிக்க நாடும்போது உருவாக்கும் சுவிசேஷ சந்தோஷமும் ஆசீர்வாதங்களும் வருகின்றன.

நம்மையும், மாறிக்கொண்டிருக்கிற அனைவரையும் அன்பின், சேவையின் மேடையின்மேல் வைக்க வேதங்கள் நம்மை அழைக்கிறது. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் பலத்தோடும் அன்புகூர பழைய ஏற்பாட்டு உபாகமம் நமக்குச் சொல்லுகிறது. 13 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழுஆத்துமாவோடும் சேவியுங்கள்” என யோசுவா உற்சாகப்படுத்துகிறான்.14

புதிய ஏற்பாட்டில் நமது இரட்சகர் இரண்டு மகத்தான கற்பனைகளை உரைக்கிறார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” 15

மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாட்டில், தன் சரீரத்தின் சகல ஊக்கத்தோடும், தன் முழு ஆத்துமாவின் திறத்தாலும் பென்யமீன் இராஜா பிரயாசப்பட்டு, தேசத்தில் சமாதானத்தை ஸ்தாபித்தான்16 கோட்பாடும் உடன்படிக்கைகளில், ஒவ்வொரு ஊழியக்காரரும் அறிந்திருக்கிறதைப்போல, நமது “முழு இருதயத்தோடும், மனதோடும் பலத்தோடும்” 17 அவருக்கு ஊழியம் செய்ய கர்த்தர் நம்மைக் கேட்கிறார். ஜாக்சன் மாகாணத்திற்குள் பரிசுத்தவான்கள் பிரவேசித்தபோது “முழு இருதயத்தோடும், உங்கள் முழுஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் உங்கள் தேவனாகிய கர்த்தரில் நீங்கள் அன்புகூர்ந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை சேவிப்பதால் ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரியுங்கள்” என கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். 18

தேவனில் அன்புகூரவும், நம்மைச் சுற்றியிருப்பவர்களிடத்தில் அன்புகூரவும், நமது இருதயங்களிலும், நமது வீடுகளிலும், சபையிலும் பரலோக பிதாவிடத்திலும் இயேசு கிறிஸ்துவிடத்திலும் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தவும் உயர்ந்த, பரிசுத்த வழிகளில் நாடுவதற்கு நமது முழு ஆத்துமாக்களையும் அர்ப்பணிக்க அழைப்பதில் நாம் களிகூருகிறோம்.

நான்காவதாக, விசுவாசத்தையும் ஆவிக்குரியவற்றையும் ஆழப்படுத்துகிற வழக்கமான நீதியின் மாதிரிகளை ஸ்தாபிக்க, நமது விசுவாச முகாம் நம்மை ஊக்குவிக்கிறது

இந்த பரிசுத்த பழக்கங்கள், நீதியின் நடைமுறைகள், அல்லது ஜெபத்துடனான மாதிரிகள், ஜெபம், வேதப் படிப்பு, உபவாசம், திருவிருந்தின் உடன்படிக்கை மூலமாக நமது இரட்சகரையும் உடன்படிக்கைகளையும் நினைவுகூருதல், ஊழியம், ஆலய மற்றும் குடும்ப வரலாறு, பிற சேவைகள் மூலமாக சுவிசேஷ ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், சிந்திக்கவைக்கும் தனிப்பட்ட குறிப்பிதழ் முதலியன அடங்கும்

நீதியின் மாதிரிகளும் ஆவிக்குரிய ஏக்கங்களும் இணையும்போது, நேரமும் நித்தியமும் ஒன்றுசேர்ந்து வரும். வழக்கமான மத ஆசரிப்பு, நமது பரலோக பிதாவினிடத்திலும் நமது இரட்சகரிடத்திலும் நம்மை நெருக்கமாக்கும். ஆவியையும் நியாயப்பிரமாணத்தின் சாராம்சத்தையும் நாம் நேசிக்கும்போது நித்தியத்தின் காரியங்கள் வானத்திலிருந்து பனியைப்போல நமது ஆத்துமாக்களில் பொழியும். 19அன்றாட கீழ்ப்படிதலிலும் புத்துணர்ச்சியின் ஜீவதண்ணீரிலும் நாம் பதில்களையும், விசுவாசத்தையும், அன்றாட சவால்களை எதிர்கொள்ள பலத்தையும், சுவிசேஷ பொறுமை, கண்ணோட்டம் மற்றும் சந்தோஷத்தையும் காணமுடியும்.

ஐந்தாவதாக, தேவனில் அன்புகூரவும் அவரைச் சந்திக்க நம்மையும் பிறரையும் ஆயத்தப்படுத்த உதவவும் நாடும்போது, பிரசித்திபெற்ற மாதிரிகளின் சிறப்பானதை நாம் கைக்கொள்ளும்போது, பரிபூரணம் கிறிஸ்துவிலேயே இருக்கிறது, நம்மிடமோ, உலகத்தின் பரிபூரணத்திலேயோ இல்லை என்பதை நினைவுகூர நமது விசுவாச முகாம் நம்மை ஊக்குவிக்கிறது.

இயேசு கிறிஸ்து “வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருப்பதால்” 20 தேவனின் அழைப்பு அன்பும் சாத்தியமும் நிறைந்ததாயிருக்கிறது. பாரங்களை உணர்கிறவர்களை “என்னிடத்தில் வாருங்கள்” என அவர் அழைக்கிறார். அவரிடத்தில் வருகிறவர்களுக்கு “நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” 21 என அவர் வாக்களிக்கிறார். “கிறிஸ்துவினிடத்தில் வந்து அவரில் பூரணப்பட்டிருங்கள். தேவனில் உங்கள் முழு ஊக்கத்தோடும், மனதோடும் பெலத்தோடும் அன்புகூருவீர்களானால் அவருடைய கிருபை உங்களுக்குப் போதுமானதாயிருக்கும், அவருடைய கிருபையினிமித்தம் நீங்கள் கிறிஸ்துவில் பூரணப்படுவீர்கள்”. 22

“அவருடைய கிருபையால் கிறிஸ்துவில் நீங்கள் பூரணப்படுவீர்கள்” என்ற இந்த உத்தரவாதத்தில், ஆறுதலும், சமாதானமும், நாம் நம்புகிற, எதிர்பார்க்கிற, அல்லது ஒருவேளை நாம் சிறப்பாக செய்த பின்பும் நமது பக்கம் எந்த குற்றமுமில்லாதிருந்தும் தகுதி இல்லாவிட்டாலும் நாம் முன்னேறிச் செல்லலாம் என்ற வாக்களிப்புமிருக்கிறது.

பல்வேறு நேரங்களிலும் வழிகளிலும் நாம் அனைவரும், போதாமையை, நிச்சயமில்லாமையை, ஒருவேளை தகுதியில்லாமையை உணருவோம். இருந்தும், தேவனை நேசிக்கவும் அண்டைவீட்டாருக்கு ஊழியம் செய்யவும், நமது உண்மையான முயற்சிகளில் நாம் தேவனின் அன்பையும், புதிய மற்றும் பரிசுத்த வழிகளில் அவர்களுடைய மற்றும் நம்முடைய வாழ்க்கையில் தேவையான உணர்த்துதலையும் நாம் பெறுவோம்.

“கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும் எல்லா மனிதரிடத்திலும் அன்போடு நீங்கள் முன்னேறிச்செல்லவேண்டும்” 23 என இரக்கத்தோடு நமது இரட்சகர் ஊக்குவித்து வாக்களிக்கிறார். கிறிஸ்துவின் கோட்பாடு, நமது இரட்சகரின் பாவநிவர்த்தி, அவருடைய உடன்படிக்கை பாதையை முழு ஆத்துமாவோடு பின்பற்றுதல், அவருடைய சத்தியங்களை அறிந்துகொள்ளவும் நம்மை விடுதலையாக்கவும் நமக்குதவுகிறது. 24

அவருடைய சுவிசேஷத்தின் நிறைவும் அவருடைய சந்தோஷத்தின் திட்டமும், மறுஸ்தாபிதம் செய்யப்பட்டு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில், பரிசுத்த வேதங்களில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திலிருந்து இன்று தலைவர் ரசல்  எம். நெல்சன்வரை போதிக்கப்படுகிறதென நான் சாட்சியளிக்கிறேன். “நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்” 25என நமது நேசமுள்ள பரலோக பிதா வாக்களிக்கிறதைப்போல, அவருடைய உடன்படிக்கையின் பாதை மகத்தான வரத்திற்கு நடத்துகிறதென நான் சாட்சியளிக்கிறேன்.

நமது விசுவாச முகாமில் நமது இருதயங்களையும், நம்பிக்கைகளையும், ஒப்புக்கொடுத்தல்களையும் நாம் இதமாக்கும்போது அவருடைய ஆசீர்வாதங்களும் நிலையான சந்தோஷமும் நமதாக, இயேசு கிறிஸ்துவின் புனிதமான பரிசுத்தமான நாமத்தில் நான் ஜெபிக்கிறேன், ஆமென்.