2010–2019
மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் பங்கு
அக்டோபர் 2018


மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் பங்கு

கடைசி முறையாக நாம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேரக்கிறோம், மனமாற்றத்தின் மிக வல்லமைமிக்க கருவிகளில் ஒனறாகிய மார்மன் புஸ்தகத்துடன் அதைச் செய்கிறோம்.

இன்று அநேக ஜனங்கள் தேவன் இருப்பது பற்றியும், அவரோடு நமது தொடர்பு பற்றியும் ஆச்சரியப்படுகின்றனர். அவரது மகிழ்ச்சியின் மாபெரும் திட்டம் பற்றி அநேகர் மிக கொஞ்சம் அறிந்து அல்லது ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். 30க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் கூறினார், “இன்று உலகின் அதிகமானோர் …இரட்சகரின் தெய்வீகத்தை மறுக்கின்றனர். அவரது அதிசயமான பிறப்பு, அவரது பரிபூரணமான வாழ்க்கை, அவரது மகிமையான உயிர்த்தெழுதலின் நிச்சயம் பற்றி அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.” 1

நமது நாளிலும் கேள்விகள் நமது இரட்சகர் பற்றி மட்டும் கேட்கப்படுவதில்லை—தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக அவர் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைப் பற்றியும். இக்கேள்விகள் எப்போதும் இரட்சகரது சபையின் வரலாறு, போதனைகள், அல்லது செயல்கள் பற்றியும் கேட்கப்படுகின்றன.

மார்மன் புஸ்தகம் சாட்சியில் வளர நமக்கு உதவுகிறது.

என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்களில் நாம் வாசிக்கிறோம், “[பரலோக பிதா மற்றும் அவரது மகிழ்ச்சியின் திட்டம்] பற்றிய நமது புரிதல், தேவனிடமிருந்து நேரடியாக வெளிப்படுத்தல் பெறுகிற, ஜோசப் ஸ்மித் மற்றும் அவரது வழிவந்தவர்களாகிய, தற்கால தீர்க்கதரிசிகள் மூலமாக வருகிறது என்பதை நினைவு கொள்ளுங்கள். ஆகவே ஒருவர் பதிலளிக்கக்கூடிய முதல் கேள்வி, ஜோசப் ஸ்மித் ஒரு தீர்க்கதரிசியா என்பதே, மற்றும் மார்மன் புஸ்தகத்தை வாசித்தும் அதுபற்றி ஜெபித்தும், அவன் அல்லது அவள் இக்கேள்விக்கு பதிலளிக்க முடியும்.” 2

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் தெய்வீக அழைப்பு பற்றிய எனது சாட்சி, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடாகிய மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு படித்ததால் பெலப்படுத்தப்பட்டிருக்கிறது: மார்மன் புஸ்தகத்தின் உண்மைபற்றி அறிய, “கிறிஸ்துவின் பெயரால் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில் கேட்க” சொன்ன மரோனியின் அழைப்பின்படி நான் செயல்பட்டேன். 3 இது உண்மை என நான் அறிவேன் என நான் சாட்சியளிக்கிறேன். “பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால்,” உங்களுக்கு வரக்கூடியது போல அந்த அறிவு எனக்கும் வந்திருக்கிறது. 4

மார்மன் புஸ்தகத்துக்கான அறிமுகம் கூறுகிறது: “பரிசுத்த ஆவியிடமிருந்து மார்மன் புஸ்தகம் பற்றிய தெய்வீக சாட்சி பெறுபவர்கள், அதே வல்லமையால் இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் எனவும், இந்த கடைசி நாட்களில் ஜோசப் ஸ்மித் அவரது வெளிப்படுத்துபவர் மற்றும் தீர்க்கதரிசி எனவும், மேசியாவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக பூமியில் மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்ட கர்த்தரின் இராஜ்யம் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை எனவும் அறிவார்கள்.” 5

ஒரு இளம் ஊழியக்காரனாக சிலிக்குச் சென்று, மார்மன் புஸ்தகத்தின் மனமாறும் வல்லமை பற்றிய வாழ்க்கையை மாற்றும் பாடத்தை நான் கற்றேன். நான் திரு. கோன்சலாஸ் என அழைக்கிற ஒரு மனுஷன், அநேக ஆண்டுகளாக அவரது சபையில் ஒரு மதிப்புமிக்க ஸ்தானத்தில் சேவை செய்தார். அவர் இறையியலில் ஒரு பட்டம் உள்ளிட்ட அதிகமான மத பயிற்சி பெற்றிருந்தார். தன் வேதாகம புலமை பற்றி அவர் மிகவும் பெருமையோடிருந்தார். அவர் ஒரு மத அறிஞர் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிந்தது.

பெருவிலுள்ள லிமா பட்டணத்தில் அவர்கள் தங்கள் பணிநிமித்தம் சுற்றித் திரிந்ததால், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை ஊழியக்காரர்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு வேதாகமம் கற்றுக் கொடுக்கும்படியாக, அவர் எப்போதும் அவர்களைச் சந்திக்க விரும்பினார்.

ஒரு நாள் அவர் நினைத்தபடியே கிட்டத்தட்ட பரலோகத்திலிருந்து ஒரு வரம் போல, அவரை தெருவில் இரண்டு ஊழியக்காரர்கள் நிறுத்தி, வேதங்களை அவருடன் பகிர்ந்துகொள்ள அவரது வீட்டுக்கு தாங்கள் வரலாமா என கேட்டனர். இது அவரது கனவு நனவான காரியம். அவரது ஜெபங்கள் கேட்கப்பட்டன. இறுதியாக இந்த தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை அவர் சரிப்படுத்த முடியும். வேதங்களைப் பற்றி கலந்துரையாட அவர்கள் அவரது வீட்டுக்கு வருவதால் அவர் மகிழ்ச்சியடைவதாக சொன்னார்.

அந்த சந்திப்புக்காக அவரால் காத்திருக்க முடியவில்லை. அவர்களுடைய நம்பிக்கைகளை தகர்க்க வேதாகமத்தைப் பயன்படுத்த அவர் தயாராக இருந்தார். அவர்களது வழிகளின் தவறுகளை வேதாகமம் தெளிவாகவும் சரளமாகவும் சுட்டிக்காட்டும் என அவர் நம்பினார்.

அவர் கதவைத் திறந்து, தன் வீட்டுக்குள் ஊழியக்காரர்களை வரவேற்றார். ஊழியக்காரர்களில் ஒருவர், ஒரு நீல புஸ்தகத்தை அவரிடம் கொடுத்து, அப்புஸ்தகம் தேவ வார்த்தைகளைக் கொணடது என தான் அறிவதாக உருக்கமான சாட்சி கொடுத்தார். இரண்டாவது ஊழியக்காரர் ஜோசப் ஸ்மித் என்ற பெயருடைய தற்காலத் தீர்க்கதரிசியால் அது மொழிபெயர்க்கப்பட்டதெனவும், அது கிறிஸ்து பற்றி போதிக்கிறது எனவும் சாட்சியளித்து அப்புஸ்தகம் பற்றிய தன் வல்லமையான சாட்சியை சேர்த்தார். ஊழியக்காரர்கள் விடைபெற்று அவரது வீட்டிலிருந்து சென்றார்கள்.

திரு. கோன்சாலஸ் மிகவும் ஏமாற்றமடைந்தார். ஆனால் அவர் அதன் பக்கங்களைத் திறந்து, வாசிக்கத் தொடங்கினார். முதல் பக்கத்தைத் திறந்தார். அவர் ஒவ்வொரு பக்கமாக வாசித்தார், அடுத்த நாள் மாலை வெகுநேரம்வரை நிறுத்தவில்லை. அவர் முழு புஸ்தகத்தையும் வாசித்து அது உண்மை என அறிந்தார். அவர் என்ன செய்ய வேண்டுமென அறிந்தார். ஊழியக்காரர்களை அழைத்தார், பாடங்களைக் கற்றார், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினராகி, தான் அறிந்த வாழ்க்கையை விட்டு விட்டார்.

அந்த நல்ல மனுஷர் ப்ரோவோவில் என் எம்டிசி ஆசிரியர். சகோதரர் கோன்ஸாலேஸின் மனமாற்ற கதையும், மார்மன் புஸ்தகத்தின் வல்லமையும் என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

நான் சிலிக்கு வந்தபோது, எனது ஊழியத் தலைவர், தலைவர் ராய்டன் ஜே. க்லேட், ஜோசப் ஸ்மித் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் சாட்சியை ஒவ்வொரு வாரமும் வாசிக்க எங்களை அழைத்தார். முதல் தரிசனம் பற்றிய சாட்சி, சுவிசேஷம் பற்றிய நமது சாட்சிக்கும், மார்மன் புஸ்தகம் பற்றிய நமது சாட்சிக்கும் நேரடி தொடர்பு கொண்டுள்ளது என எங்களுக்கு போதித்தார்.

நான் அவரது அழைப்பை பயபக்தியாய் எடுத்துக் கொண்டேன். நான் முதல் தரிசனம் பற்றிய விவரத்தை வாசித்திருக்கிறேன். மார்மன் புஸ்தகத்தை வாசித்திருக்கிறேன். நான் மரோனி வழிகாட்டியபடி ஜெபித்து, மார்மன் புஸ்தகம் உண்மையானதா என” கிறிஸ்துவின் நாமத்திலே நித்திய பிதாவாகிய தேவனிடம்” கேட்டேன். 6 மார்மன் புஸ்தகம், “பூமியிலுள்ள எந்த புஸ்தகத்தையும் விட சரியானது, நமது மதத்தின் முக்கியக் கல், எந்தப் புஸ்தகத்தையும் விட, இதன் கொள்கைகளை கடைபிடிப்பதால் மனுஷன் தேவனுக்கு நெருக்கமாக செல்ல முடியும்,” என தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னதுபோல, மார்மன் புஸ்தகம் உண்மையானது என நான் சாட்சியளிக்கிறேன். 7 ஜோசப் ஸ்மித் மேலும் அறிவித்தார், “மார்மன் புஸ்தகத்தையும், வெளிப்படுத்தலையும் எடுத்து விடுங்கள், நமது மதம் எங்கே, ஒன்றுமில்லை.” 8

தனிப்பட்ட மனமாற்றம்

நாம் யார், மற்றும் மார்மன் புஸ்தகத்தின் நோக்கங்கள் என்ன என நன்கு அறியும்போது, நமது மனமாற்றம் ஆழமாகி, அதிக நிச்சயமாகிறது. தேவனோடு நாம் செய்த உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ள நமது ஒப்புக்கொடுத்தலில் நாம் பெலப்படுத்தப்படுகிறோம்.

மார்மன் புஸ்தகத்தின் முக்கிய நோக்கம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்ப்பதாகும். இக்கூடுகை எல்லா தேவ பிள்ளைகளுக்கும் உடன்படிக்கையின் பாதையில் பிரவேசிக்க சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது, அந்த உடன்படிக்கைகளை மதிப்பதால், பிதாவின் பிரசன்னத்துக்கு திரும்ப வருகிறார்கள். நாம் மனந்திரும்புதலைக் கற்பித்து, மனமாறியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, நாம் இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கிறோம்.

மார்மன் புஸ்தகம் இஸ்ரவேலின் வீட்டார் பற்றி 108 குறிப்புகளைக் கொண்டுள்ளது. மார்மன் புஸ்தகத்தின் தொடக்கத்தில், நேபி போதித்தான், “ஏனெனில் மனிதர்களை ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறவரிடத்தில் வரும்படித்தூண்டி, அவர்கள் இவ்விதமாய் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கத்தின் நிறைவாயிருக்கிறது.” 9 ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், மற்றும் யாக்கோபின் தேவன் இயேசு கிறிஸ்துவே, பழைய ஏற்பாட்டின் தேவன். சுவிசேஷத்தின்படி வாழ்வதால் நாம் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவண்டை வருகிறோம்.

பின்னர் நேபி எழுதினான்:

“ஆம், என் தந்தை மிகுதியாய் புறஜாதியாரைப் பற்றியும்கூட, மற்றும் இஸ்ரவேல் வீட்டாரையும் குறித்தும், அவர்களை ஒரு ஒலிவ விருட்சத்திற்கு ஒப்பிட்டும், அதன் கிளைகள் முறிக்கப்பட்டு பூமியின் பரப்பு மீதெங்கும் சிதறடிக்கப்படுதல் வேண்டும் என்றும் சொன்னார். …

“மேலும் இஸ்ரவேல் வீட்டார் சிதறடிக்கப்பட்ட பின்பு அவர்கள் மீண்டும் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அல்லது முடிவில் புறஜாதியார் பூரண சுவிசேஷத்தைப் பெற்றபின்பு, ஒலிவ விருட்சத்தின் சுயமான கிளைகள் அல்லது இஸ்ரவேல் வீட்டின் மீதியானவர்கள், ஒட்டப்படுதல் வேண்டும் அல்லது அவர்களின் கர்த்தரும் அவர்களின் மீட்பருமாகிய உண்மையான மேசியாவின் ஞானத்துக்குள் வர வேண்டும்.” 10

அதேபோல மார்மன் புஸ்தகத்தின் முடிவில், தீர்க்கதரிசி மரோனி நமது உடன்படிக்கைகள் பற்றி நமக்கு நினைவூட்டுகிறான், “இஸ்ரவேலின் வீட்டாரே, நீ ஒருபோதும் தாறுமறாக போகாத படிக்கும், நித்திய பிதா உன்னோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேறும்படிக்கும்.” 11

நித்திய பிதாவின் உடன்படிக்கைகள்

மரோனியால் குறிப்பிடப்படுகிற “நித்திய பிதாவின் உடன்படிக்கைகள்” யாவை? நாம் ஆபிரகாம் புஸ்தகத்தில் வாசிக்கிறோம்:

“எனது நாமம் யேகோவா, தொடக்கத்திலிருந்தே முடிவு எனக்குத் தெரியும். ஆகவே எனது கரம் உனக்கு மேலிருக்கும்.

“நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். அளவுக்கு மேல் உன்னை ஆசீர்வதிப்பேன். தேசங்களுக்குள்ளே உனது நாமத்தை பெருமைப்படுத்துவேன். உணக்குப் பின்னால் உன் சந்ததிக்கு நீ பெரிய ஆசீர்வாதமாய் இருப்பாய். எல்லா தேசங்களுக்கும் இந்த ஊழியத்தையும், ஆசாரியத்துவத்தையும் அவர்கள் தங்கள் கரங்களில் ஏந்திக் கொண்டு போவார்கள்.” 12

ஒரு அண்மை உலகளாவிய ஒளிபரப்பில் தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார், “இது கண்டிப்பாக கடைசி நாட்கள்தான், இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்க கர்த்தர் தன் பணியை விரைவுபடுத்துகிறார். இன்று பூமியில் நடந்து கொணடிருக்கிற மிக முக்கிய காரியம் கூட்டிச் சேர்த்தல். அதன் அளவுக்கு எதுவும் இணையல்ல, அதன் முக்கியத்துவத்துக்கு எதுவும் இணையல்ல, அதன் மகத்துவத்துக்கு எதுவும் இணையல்ல. நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் விரும்பினால், நீங்கள் இதன் பெரிய பங்காளியாகலாம். மிகப் பெரிய பங்காகிய, பிரமிப்பான, மகத்துவமான பங்காளியாக நீங்களும் இருக்கலாம்.

கூடுகை பற்றி நாம் பேசும்போது, நாம் இதன் அடிப்படை சத்தியம் பற்றியே பேசுகிறோம், திரையின் இருமருங்கிலும் உள்ள பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளையும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியை கேட்கத் தகுதியானவர்கள். அவர்கள் அதிகம் அறிய விரும்பினால், அவர்களே தீர்மானிக்கிறார்கள்.” 13

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக நாம் இதையே செய்கிறோம்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் புரிதலுக்கும், மனமாற்றத்துக்கும், உலகைக் கொண்டுவர நாம் நாடுகிறோம். நாம் பிற்கால கூட்டிச் சேரப்ப்பவர்கள்.” 14 நமது ஊழியம் தெளிவானது. சகோதர சகோதரிகளே, மரோனியின் வாக்குத்தத்தத்தை இருதயத்துக்குள் எடுத்துக்கொண்டு, ஜெபித்து, மார்மன் புஸ்தகம் உண்மையானது என அறிய ஒரு பதிலைப் பெற்றவர்களாக பின்பு அந்த அறிவை பிறருடன் வார்த்தையாகவும், மிக முக்கியமாக செயலிலும் பகிர்ந்து கொள்பவர்களாக அறியப்படுவோமாக.

மனமாற்றத்தில் மார்மன் புஸ்தகத்தின் பங்கு

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையை உள்ளடக்கியது. 15 அது நம்மை பிதாவின் உடன்படிக்கைகளுக்கு கூட்டிச் செல்கிறது, அதை நாம் கைக்கொண்டால் அவரது மாபெரும் வரமாகிய நித்திய ஜீவனை நமக்கு உறுதியளிக்கும்.16 பரலோக பிதாவின் அனைத்து குமாரர்கள் மற்றும் குமாரத்திகளின் மனமாற்றத்துக்கு முக்கிய கல்லாக இருக்கும். 16

தலைவர் நெல்சனை மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன், “நீங்கள் மார்மன் புஸ்தகத்திலிருந்து தினமும் வாசிக்கும்போது, நீங்கள் கூட்டிச் சேர்த்தலின் கோட்பாட்டையும், இயேசு கிறிஸ்து, அவரது பாவநிவர்த்தி, வேதாகமத்தில் காணப்படாத அவரது சுவிசேஷத்தின் முழுமையை பற்றிய சத்தியங்களையும் கற்பீர்கள். மார்மன் புஸ்தகம் இஸ்ரவேலின் கூடுகைக்கு மையமாக இருக்கிறது. உண்மையில் மார்மன் புஸ்தகம் இல்லாவிட்டால், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இஸ்ரவேலின் கூடுகை நிகழாது.” 17

வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்களை நேபியர்களுக்கு அவர் போதித்தபோது, இரட்சகர் சொன்ன வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறேன் “நீங்கள் தீர்க்கதரிசிகளின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள், நீங்கள் இஸ்ரவேல் வீட்டைச் சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள். பிதா ஆபிரகாமை நோக்கி, உன் சந்ததியாலே உலகத்தின் சகல கோத்திரங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று சொல்லி, உங்கள் பிதாக்களிடத்தில் செய்து கொண்ட உடன்படிக்கையைச் சேர்ந்தவர்களாயிருக்கிறீர்கள்.” 18

நாம் தேவனின் குமாரர்களும் குமாரத்திகளும், ஆபிரகாமின் சந்ததியும், இஸ்ரவேலின் வீட்டாருமாயிருக்கிறோம், என நான் சாட்சியளிக்கிறேன். நாம் கடைசியாக இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்க்கிறோம், மிக வல்லமை வாய்ந்த மனமாற்றத்தின் கருவியாகிய, கர்த்தரின் ஆவியோடு இணைந்த புஸ்தகமாகிய மார்மன் புஸ்தகத்தோடு அப்படிச் செய்கிறோம். நமது நாளில் இஸ்ரவேலின் கூடுகையை வழிநடத்துகிற தேவனின் தீரக்கதரிசியாகிய தலைவர் ரசல் எம். நெல்சனால் வழிநடத்தப்படுகிறோம். மார்மன் புஸ்தகம் உண்மையானது. அது என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. காலம் காலமாக மரோனி மற்றும் பல தீர்க்கதரிசிகள் போல உங்கள் வாழ்க்கையையும் அது மாற்றும் என நான் வாக்களிக்கிறேன். 19 இயேசு கிறிஸ்துவின் நமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Ezra Taft Benson (2014), 129.

  2. What Is the Role of the Book of Mormon?” Preach My Gospel: A Guide to Missionary Service, rev. ed. (2018), lds.org/manual/missionary.

  3. மரோனி 10:4.

  4. மரோனி 10:4.

  5. மார்மன் புஸ்தக முன்னுரை.

  6. மரோனி 104.

  7. மார்மன் புஸ்தக முன்னுரை.

  8. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 196.

  9. 1 நேபி 6:4.

  10. 1 நேபி 10:12, 14.

  11. மரோனி 10:31.

  12. ஆபிரகாம் 2:8–9.

  13. Russell M. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), 4, HopeofIsrael.lds.org.

  14. யாக்கோபு 5:72 பார்க்கவும்.

  15. தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் போதித்தார், “மார்மன் புஸ்தகம் இயேசு ‘கிறிஸ்துவின் முழுமையான சுவிசேஷத்தைக்’ கொண்டுள்ளது என கர்த்தர் தாமே சொன்னார் (கோ.உ 20:19). எப்போதும் வெளிப்படுத்தப்பட்டுள்ள எல்லா போதனைகளையும், எல்லா கோட்பாடுகளையும் அடக்கியுள்ளது என அதற்கு அர்த்தமில்லை. மாறாக மார்மன் புஸ்தகத்தில் நமது இரட்சிப்புக்கு தேவையான கோட்பாடுகளின் முழுமையை நாம் காணலாம். இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படும் வழிகளை பிள்ளைகளும் கூட கற்கும் விதமாக, அவை தெளிவாகவும் எளிமையாகவும் போதிக்கப்பட்டுள்ளன.” (Teachings: Ezra Taft Benson, 131).

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும்.

  17. Russell M. Nelson, “Hope of Israel,” 7.

  18. 3 நேபி 20:25.

  19. உதாரணமாக, Henry B. Eyring, “The Book of Mormon Will Change Your Life,” Liahona, Feb. 2004, 12–16 பார்க்கவும்.