2010–2019
கிறிஸ்துவுக்குள் சகலத்தையும் ஒன்றாக கூட்டிச் சேருங்கள்
அக்டோபர் 2018


கிறிஸ்துவுக்குள் சகலத்தையும் ஒன்றாக கூட்டிச் சேருங்கள்

நம்மை மாற்றவும் ஆசீர்வதிக்கவும், இரட்சகரின் சுவிசேஷத்தின் வல்லமை, அதன் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும் பழக்கங்களின் சம்மந்தத்தை பகுத்தறிவதாலும் பிரயோகிப்பதாலும் பொழிகிறது.

நம் அனைவருக்கும் பிரசித்தமான கயிறு ஒரு அத்தியாவசியமான கருவி. துணி, செடிகள், கம்பி, அல்லது பிற பொருட்களின் இழைகள் ஒவ்வொன்றும் ஒன்றாக முறுக்கப்பட்டு அல்லது பின்னப்பட்டு கயிறுகள் செய்யப்படுகின்றன. மிகவும் விதிவிலக்காக பொருட்கள் ஒன்றாக பின்னப்பட்டு விதிவிலக்கின் பலமாக மாறுவது சுவாரஸ்யமானது. அப்படியாக, சாதாரண பொருட்கள் திறம்பட இணைக்கப்படும்போது, கட்டப்படும்போது ஒரு அசாதாரணமான கருவி உருவாகலாம்.

படம்
இழைகள் கயிறுகளாக முறுக்கப்படுதல்

தனித்தனியான அநேக இழைகள் பிணைந்ததிலிருந்து ஒரு கயிறுக்கு பெலன் கிடைப்பதைப்போல, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் சத்தியத்தின் மிகப்பெரிய பார்வையைக் கொடுத்து “பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கட்டப்படவேண்டும்” 1 என்ற பவுலின் எச்சரிக்கைக்கு நாம் செவிகொடுக்கும்போது வளமான ஆசீர்வாதங்களை வழங்குகிறது. முக்கியமாக, அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருப்பதால் சத்தியத்தின் இந்த முக்கியமான கூட்டிச் சேர்த்தல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் மையமாக்கப்பட்டு கவனிக்கப்படுகிறது. 2

நமது அன்றாட வாழ்க்கையில் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை கற்றுக்கொள்ளுதலுக்கும், வாழ்தலுக்கும் நடைமுறை வழிகளில், சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே ஒன்றாக கூட்டிச் சேர்க்கப்பட வேண்டியதின் கொள்கை எவ்வாறு பொருந்துகிறதென கருத்தில்கொள்ளும்போது பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் விழிப்பூட்ட நான் ஜெபிக்கிறேன்.

ஒரு வெளிப்படுத்தலின் காலம்

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் வெளிப்படுத்தலின் காலத்தில் நாம் வாழ்கிறோம். பரலோக பிதாவில், அவருடைய திட்டத்தில், அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவில், அவருடைய பாவநிவர்த்தியில், விசுவாசத்தை பெலப்படுத்துதல் என்ற ஒரே நோக்கம் இன்றிருக்கிறதென வரலாற்று மாற்றங்கள் அறிவிக்கின்றன. ஞாயிறு கூட்ட நேர அட்டவணை சாதாரணமாக சுருக்கப்படவில்லை. மாறாக, வீட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை மகிழ்ச்சியானதாக அதிகரிப்பதற்காக நமது நேரத்தைப் பயன்படுத்த, தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக இப்போது நமக்கு அதிகரித்த சந்தர்ப்பங்களும் பொறுப்புகளுமிருக்கின்றன.

கடந்த ஏப்ரலில் ஆசாரியத்துவ குழும கட்டமைப்பு வெறுமையாக மாற்றப்படவில்லை. மாறாக, நமது சகோதர சகோதரிகளுக்கு ஒரு உயர்ந்த பரிசுத்த வழியில் ஊழியம் செய்வதற்கான வலியுறுத்தலும் பெலனும் கொடுக்கப்பட்டன.

கயிற்றின் பின்னப்பட்ட இழைகள் ஒரு ஆற்றல்மிக்க, நீடித்த கருவியாவதைப்போலவே, இந்த தொடர்புள்ள நடவடிக்கைகள், ஆதாரங்களில் நன்றாக கவனம் செலுத்தவும், அவருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பையும் மேன்மையையும் கொண்டுவர தேவனின் பணியில் அவருக்குதவும் அடிப்படை ஊழியத்துடன் இரட்சகரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் பணியும் ஒற்றுமையான முயற்சியின் ஒரு பகுதி. அறிவிக்கப்பட்ட வசதிகளின் அம்சங்களின்மேல் தயவுசெய்து முதன்மையாக கவனம் செலுத்தவேண்டாம். இப்போது செய்யப்பட்ட இந்த மாற்றங்களால் நடைமுறையிலுள்ள முக்கிய ஆவிக்குரிய காரணங்களை தெளிவற்றதாக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

பிதாவின் திட்டத்தில் விசுவாசமும், இரட்சகரின் மீட்பின் ஊழியம் பூமியின் மீது அதிகரிப்பதும், தேவனின் நித்திய உடன்படிக்கை நிலைவருவதுமே நமது விருப்பம். 3 கர்த்தரிடம் தொடர்ந்து மனமாறுதலை எளிதாக்குவதும் மிக முற்றிலுமாக அன்பு செலுத்துவதும், நமது சகோதர சகோதரிகளுக்கு மிக ஆற்றலுடன் சேவை செய்வதும் மட்டுமே நமது ஒரே நோக்கம்.

வகைப்படுதலும் பிரித்தலும்

சில நேரங்களில் சபை அங்கத்தினர்களாக நாம் வகைப்படுத்தி, பிரித்து, படிக்கவும் நிறைவேற்றவும் பணிகளுக்கும், தனிப்பட்ட தலைப்புகளின் நீண்ட பட்டியலை உருவாக்குவதால் நமது வாழ்க்கையில் சுவிசேஷத்தை பிரயோகப்படுத்துகிறோம். ஆனால் அத்தகைய ஒரு அணுகுமுறை நமது புரிந்துகொள்ளுதலையும் பார்வையையும் கட்டுப்படுத்த சாத்தியமாக்கும். பட்டியலின்மேல் பரிசோதிக்கும் கவனம் கர்த்தரிடத்திற்கு மிக நெருக்கமாக வருவதிலிருந்து நம்மை திசைதிருப்பலாமென்பதால் நாம் கவனமாயிருக்கவேண்டும்.

நோக்கத்தையும் சுத்திகரித்தலையும், சந்தோஷத்தையும், ஆனந்தத்தையும், தொடர்ந்துவரும் மனமாறுதலையும், “ [நமது] இருதயங்களை தேவனிடத்திற்கு கொடுத்ததிலிருந்தும்” 4 “அவருடைய சாயலைப்போல [நமது] முகரூபத்தைப் [பெறுவதிலிருந்தும்]” 5 வருகிற பாதுகாப்பையும், நாம் செய்யவேண்டிய ஆவிக்குரிய காரியங்கள் அனைத்தையும் வெறுமனே செய்வதாலும் சரிபார்ப்பதாலும் பெறமுடியாது. மாறாக, மாறுவதற்கான இரட்சகரின் சுவிசேஷத்தின் வல்லமை, அதன் கோட்பாடு, கொள்கைகள், நடைமுறைகளின் பகுத்தறிதலிலிருந்தும் உறவுமுறையை பயன்படுத்துவதிலிருந்தும் பாய்கிறவை நம்மை ஆசீர்வதிக்கிறது. அவர்மீது உறுதியான கவனத்துடன் நாம் சகலமும் கிறிஸ்துவுக்குள் கட்டும்போது மட்டுமே நாம் எப்படி மாறவேண்டுமென தேவன் விரும்புகிற மாதிரி மாற சுவிசேஷ சத்தியங்கள் ஒத்துழைக்கும் வகையில் நமக்கு சாத்தியமாக்கி, 6 முடிவுபரியந்தம் தைரியத்துடன் நிலைத்திருக்க வைக்கிறது. 7

சுவிசேஷ சத்தியங்களை கற்றுக்கொள்ளுதலும் இணைத்தலும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் “இசைவாய் இணைக்கப்பட்ட” 8 ஒரு மகத்துவமான சத்தியத்தின் திரைச்சீலை மற்றும் ஒன்றாக பின்னப்பட்டது. வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷ சத்தியங்களை நாம் கற்று ஒன்றாக இணைக்கும்போது அருமையான பார்வையையும், நமது வாழ்க்கையில் கர்த்தரின் செல்வாக்கை பார்க்கும்படியான கண்கள் மூலமாகவும், அவருடைய குரலைக் கேட்கும்படியாக காதுகள் மூலமாகவும் அதிகரிக்கப்பட்ட ஆவிக்குரிய திறன்களையும் பெற நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். 9அவரில் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கும் கொள்கை மரபு ஆய்வுப்பட்டியல்களை ஒருசேர, ஒன்றிணைந்த மற்றும் முற்றிலும் முழுமையாக மாற்ற நமக்கு உதவ முடியும்.

எடுத்துக்காட்டு 1. சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கட்டப்படுதலின் சிறந்த விவரங்களில் ஒன்று நான்காவது விசுவாசப் பிரமாணம்: “சுவிசேஷத்தின் முதல் கொள்கைகளையும் நியமங்களையும் நாங்கள் நம்புகிறோம். அவை, முதலாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்; இரண்டாவதாக, மனந்திரும்புதல்; மூன்றாவதாக பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானம்; நான்காவதாக, பரிசுத்த ஆவியின் வரத்திற்காக கைகளை வைத்தல்.” 10

படம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்

தெய்வீக மற்றும் பிதாவின் ஒரேபேரான குமாரனாக அவரிலும் அவர் நிறைவேற்றின மீட்பின் ஊழியத்திலும் உண்மையான விசுவாசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலும், அவர்மீதும் மையப்படுத்தப்படுகிறது. “ஏனெனில் அவர் நியாயப்பிரமாணத்தின் முடிவுகளை நிறைவேற்றினார். அவர் தம்மில் விசுவாசம் வைத்திருப்போர் யாவரையும் கேட்கிறார், அவரில் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் எல்லா நன்மையான காரியத்தையும் பற்றிக்கொள்வார்கள், ஆதலால் அவர் மனுபுத்திர்ருக்காக பரிந்துரைக்கிறார்.” 11 கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதென்பது, அவருடைய நாமம் மற்றும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மேல், நமது இரட்சகராக அவரில் நம் நம்பிக்கை வைப்பதாகும்.

படம்
மனந்திரும்புதல்

இரட்சகரில் நம்பிக்கை வைப்பதன் முதல் மற்றும் இயற்கையான விளைவு மனந்திரும்புதலும் தீமையிலிருந்து விலகுவதுமாகும். கர்த்தரிலும் அவர் மேலும் நாம் விசுவாசம் வைக்கும்போது நாம் அவரை நோக்கி திரும்பி, அவருக்குள் வந்து, அவரைச் சார்ந்திருப்போம். அப்படியாக, மனந்திரும்புதல் என்பது, அவரில் நம்பிக்கை வைத்தல் மற்றும் நாமே செய்யமுடியாததை நமக்காக செய்ய மீட்பரின்மேல் சார்ந்திருப்பது. “இரட்சிக்க வல்லமையுடையவரை, நற்குணங்களின் முழுமையானவரை நாம் ஒவ்வொருவரும் சார்ந்திருக்க வேண்டும்” 12 ஏனெனில், பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம், கிருபையாகியவைகளின் மூலமே.” 13 கிறிஸ்துவில் நாம் புது சிருஷ்டிகளாக மாறி, 14 இறுதியாக தேவனின் பிரசன்னத்தில் வாழ திரும்புவோம்.

படம்
ஞானஸ்நானம்

பாவங்களின் மீட்பிற்காக முழுக்கு ஞானஸ்நானத நியமம் அவரில் நம்பிக்கை வைக்கவும், அவர்மேல் சார்ந்திருக்கவும், அவரைப் பின்பற்றவும் நமக்குத் தேவையாயிருக்கிறது. நேபி அறிவித்தான், “உங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, உங்களின் கர்த்தரும் இரட்சகருமானவரின் வார்த்தைகளின்படியே அவரைப் பின்பற்றி, தண்ணீருக்குள் மூழ்கிப் பெறும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவினுடைய நாமத்தை தங்கள்மீது எடுத்துக்கொள்ள மனதுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என பிதாவுக்குச் சாட்சியளித்து, தேவ சமூகத்தில், உள்ளத்தின் முழுநோக்கத்தோடும் மாய்மாலம் புரியாமலும், வஞ்சிக்காமலும் போலியற்ற விருப்பத்தோடும் இருந்து குமாரனைப் பின்பற்றுவீர்களானால் இதோ, பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள் என்று அறிந்திருக்கிறேன். அதன் பின்பு, அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் வரும்.” 15

படம்
திடப்படுத்தல்

பரிசுத்த ஆவியின் வரத்திற்காக கைகளை வைத்தல் நியமம் அவரில் நம்பிக்கை வைக்க, அவரைச் சார்ந்திருக்க, அவரைப் பின்பற்ற மற்றும் அவரது பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் அவரில் முன்னேறிச் செல்வதுமாகும். நமக்குத் தேவையாயிருக்கிறது. நேபி அறிவித்ததைப்போல “ஒருவன் முடிவு பரியந்தமும், ஜீவனுள்ள தேவனின் குமாரன் வகுத்த எடுத்துக்காட்டைப் பின்பற்றி நிலைத்திராவிட்டால், அவன் இரட்சிக்கப்படமாட்டான் என்பதை நான் அறிவேன்.” 16

படம்
ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தல்

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் அடிப்படை கொள்கைகளையும் நியமங்களையும் நான்காவது விசுவாசப் பிரமாணம் வெறுமனே அடையாளப்படுத்துவதில்லை. மாறாக, இந்த உணர்த்துதலான நம்பிக்கைகளின் வாசகம் சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டிச் சேர்க்கிறது: அவரில், அவர் மீது நம்பிக்கை வைத்தல், அவரை சார்ந்திருத்தல், அவரைப் பின்பற்றுதல், அவரோடு, அவரிலும் முன்னேறிச் செல்லுதல்.

எடுத்துக்காட்டு 2. சபை நிகழ்ச்சிகள், முயற்சிகள் அனைத்தும் எவ்வாறு கிறிஸ்துவுக்குள் கட்டப்படுகிறதென இப்போது நான் விவரிக்க விரும்புகிறேன். அநேக கூடுதலான விவரங்கள் சமர்பிக்கப்படலாம்; தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சிலவற்றை மட்டும் நான் பயன்படுத்துவேன்.

படம்
சீயோனைக் கட்டி பெலப்படுத்தல்

உலக முழுவதிலும் சீயோனின் பெலத்தைக் கட்ட சபை அங்கத்தினர்களை, 1978ல் தலைவர் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பல் அறிவுறுத்தினார். தங்களுடைய சொந்த நாட்டிலேயே தங்கியிருந்து, தேவனின் குடும்பத்தை கூட்டிச்சேர்த்து, கர்த்தரின் வழிகளில் போதித்து பெலமான பிணையங்களை நிறுவ பரிசுத்தவான்களுக்கு அவர் ஆலோசனையளித்தார். உலகத்தில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பரிசுத்தவான்களுக்கு அதிகமான ஆலயங்கள் கட்டப்பட்டு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் அவர் கூடுதலாக குறிப்பிட்டார். 17

படம்
மூன்று மணி நேர பிரிவு
படம்
குடும்ப பிரகடனம்

பிணையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, “குடும்ப அங்கத்தினர்கள் அன்பாயிருக்கிறவர்களாக, அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளமாக்குகிறவர்களாக மாறி, பரஸ்பர அன்பையும், ஆதரவையும், பாராட்டுதலையும் ஊக்குவித்தலையும் கண்டு, குடும்பங்களின் அங்கத்தினர்களின் தேவை தீவிரமாகிறது.” 18 இதன் விளைவாக, 1980ல், “சுவிசேஷத்தை கற்றுக்கொள்வதற்காக, அதன்படி வாழ்வதற்காக, போதிப்பதற்காக தனிப்பட்ட மற்றும் குடும்ப பொறுப்புகளை மீண்டும் வலியுறுத்த” 19 ஞாயிறு கூட்டங்கள் மூன்று மணிநேர அமைப்பாகத் தொகுக்கப்பட்டது. 1995ல் தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியால் அறிமுகப்படுத்தப்பட்ட “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனத்தில்” குடும்பத்தில் மற்றும் வீட்டில் இந்த வலியுறுத்தல் மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. 20

படம்
ஆலயக் கட்டுமானம்

ஏப்ரல் 1998ல், அநேக அதிக சிறிய ஆலயங்களின் கட்டுமானத்தை தலைவர் ஹிங்க்லி அறிவித்து அதன்மூலம் உலகமுழுவதிலும் பிற்காலப் பரிசுத்தவான்களின் தனிப்பட்டவர்களுக்கும், குடும்பங்களுக்கும் அருகில் கர்த்தரின் ஆலயத்தின் பரிசுத்த நியமங்கள் கொண்டுவரப்பட்டது. 21 ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த அதிக வாய்ப்புகள் இம்மைக்குரிய சுயசார்பு சம்பந்தப்பட்ட அதிகரிப்பினால் நிலையான கல்வி நிதியை 2010ல் அறிமுகப்படுத்தலின் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டது. 22

படம்
வறியோரையும் தேவையிலிருப்போரையும் கவனித்தல்

அவருடைய நிர்வாகத்தின்போது, “மீட்புக்குப்” போக பரிசுத்தவான்களை தலைவர் தாமஸ் எஸ். மான்சன் திரும்பத் திரும்ப அறிவுறுத்தி சபையில் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட பொறுப்புகளில் ஒன்றான ஏழைகளிடத்திலும் வறியோரிடத்திலும் அக்கறை காட்ட வலியுறுத்தினார். இம்மைக்குரிய ஆயத்தத்தில் தொடர்ந்த வலியுறுத்தலில் சுயசார்பு சேவைகளின் முயற்சிகள் 2012ல் செயல்படுத்தப்பட்டன.

படம்
ஒய்வு நாளை மகிழ்ச்சியாக்குதல்

கடந்த அநேக ஆண்டுகளாக, வீட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை மகிழ்ச்சியாக்குவதைப்பற்றிய அத்தியாவசிய கொள்கைகளை வலியுறுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது, 23 அப்படியே, பொது மாநாட்டின் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஞாயிறு கூட்ட அட்டவணைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது.

படம்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்கள் துணைக்குழுக்களுடன் இணைதல்

ஆறு மாதங்களுக்கு முன்பு, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்கள் பெலப்படுத்தப்பட்டு, ஊழியத்திற்கான ஒரு உயர்ந்த பரிசுத்தமான அணுகுமுறையை நிறைவேற்ற துணைச்சங்கங்களுடன் மிகத் திறம்பட சீரமைக்கப்பட்டது.

படம்
ஒரு ஒன்றிணைந்த பணி

பல ஆண்டுகளாக இந்த செயல்களின் வரிசையும் நேரமும் ஒரு தொடர்ச்சியான சுயாதீனமான மற்றும் தனித்துவமான முயற்சிகள் மட்டுமல்லாது, ஐக்கியமும் விரிவானதுமான பணி ஒன்றைக் காண நமக்குதவுமென்று நான் நம்புகிறேன். “வீட்டை மையப்படுத்துகிற, சபை ஆதரிக்கிற நியமங்கள், போதனைகள், நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் மூலமாக தனிப்பட்டவர்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் ஒரு மாதிரியை தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். சபை அமைப்புகளும் நிகழ்ச்சிகளும் தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் ஆசீர்வதிக்க உள்ளன, தாமே முடித்துக்கொள்வதில்லை.” 24

இன்னும் அதிகமாய் வீட்டை மையப்படுத்துகிற, சபை ஆதரிக்கிற உலகமுழுவதிலுமுள்ள ஒரு மகத்தான பணியாக கர்த்தரின் பணியை நாம் அடையாளம் காண நான் ஜெபிக்கிறேன். கர்த்தர் வெளிப்படுத்துகிறாரென்றும், “தேவனின் இராஜ்ஜியத்திற்கு சம்பந்தப்பட்ட அநேக பெரியதும் முக்கியமானதுமான காரியங்களை இன்னமும் வெளிப்படுத்துவாரென்றும்,” 25 நான் அறிவேன் மற்றும் சாட்சியளிக்கிறேன்.

வாக்குத்தத்தமும் சாட்சியும்

பொருளின் தனித்தனியான இழைகள் ஒரு கயிற்றுக்குள் ஒன்றாக முறுக்கப்பட்டு அல்லது நெய்யப்பட்டு உருவாக்கப்பட்ட பெலத்தை முக்கியப்படுத்தி நான் என் செய்தியை ஆரம்பித்தேன். சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே, அவரிலேயே கட்டப்பட நாம் முயற்சிக்கும்போது இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை நாம் கற்றுக்கொள்ளுதலில், வாழ்தலில் அதிக பார்வையும் நோக்கமும் வல்லமையும் தெளிவாயிருக்குமென இதே வழியில் நான் வாக்களிக்கிறேன்

நித்திய விளைவின் அனைத்து சந்தர்ப்பங்களும் ஆசீர்வாதங்களும் தொடங்கி, சாத்தியமும் நோக்கமுமிருப்பதாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிலைத்திருக்கிறது. ஆல்மா சாட்சியளித்ததைப்போல “மனுஷன் கிறிஸ்துவினாலும் அவர் மூலமுமேயன்றி வேறெந்த வழியினாலும், முறையினாலும் இரட்சிக்கப்பட முடியாது. இதோ, அவரே உலகத்தின் ஜீவனும் ஒளியுமானவர்.” 26

நித்திய பிதா மற்றும் அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தையும் ஜீவிக்கிற சத்தியத்தையும் குறித்த எனது சாட்சியை, நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நமது இரட்சகரிடத்தில் நாம் மகிழ்ச்சியைக் காண்கிறோம். “இம்மையில் சமாதானத்தின், மறுமையில் நித்திய ஜீவனின்” 27 நிச்சயத்தை அவரில் நாம் காண்கிறோம். அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.