கையேடுகளும் அழைப்புகளும்
7. ஆயம்


“7. ஆயம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“7. ஆயம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை.

பிரசங்க மேடையில் மனிதர் பேசிக்கொண்டிருத்தல்

7.

ஆயம்

7.1

ஆயரும் அவரது ஆலோசகர்களும்

தொகுதியில் சபையின் பணிகளை வழிநடத்த ஆயர் ஆசாரியத்துவத் திறவுகோல்களைத் தரித்திருக்கிறார் (3.4.1 பார்க்கவும்). அவரும் அவருடைய ஆலோசகர்களும் ஒரு ஆயத்தை அமைக்கிறார்கள்.

ஆயருக்கு நான்கு முக்கியப் பொறுப்புகள் உள்ளன:

  • தொகுதியில் அவர் தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்.

  • அவர் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் தலைவர்.

  • அவர் ஒரு பொதுநியாயாதிபதி.

  • தேவையிலிருப்போரைக் கவனித்துக்கொள்வது உட்பட, அவர் இரட்சிப்பு மற்றும், மேன்மையடைதலின் பணியை ஒருங்கிணைக்கிறார்.

  • பதிவேடுகள், நிதி மற்றும் கூடுமிடத்தின் பயன்பாட்டை, அவர் மேற்பார்வையிடுகிறார்.

தொகுதியில் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு (பிள்ளைகள், இளைஞர்கள் மற்றும் இளம் வயது வந்தோர்) ஆயருக்கு முதன்மையான பொறுப்புண்டு. இந்த பொறுப்பில் கவனம் செலுத்த சாத்தியமாக்க, அவர் அநேக பணிகளை கொடுக்கிறார்(4.2.5 பார்க்கவும்).

7.1.1.

தலைமை தாங்கும் பிரதான ஆசாரியர்

ஆயர், தொகுதியின் முதன்மை ஆவிக்குரிய தலைவர்.

7.1.1.1

தொகுதி அமைப்புகளும் ஆசாரியத்துவக் குழுமங்களும்

தொகுதி ஒத்தாசைச் சங்கம் மற்றும் இளம் பெண்கள் அமைப்புகளுக்கு ஆயருக்கு பொறுப்பு உண்டு. ஞாயிறு பள்ளி, ஆரம்ப வகுப்பு அமைப்புகள் மற்றும் பிற தொகுதி நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பை அவர் தனது ஆலோசகர்களுக்குபணிப்பார்.

ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமத்திற்கான ஆயரின் பொறுப்புகள் 7.1.2-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மூப்பர் குழுமத்திற்கான அவருடைய பொறுப்புகள் 8.3.1-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

7.1.1.2

நியமங்களும் ஆசீர்வாதங்களும்

தொகுதியில் பின்வரும் நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்களின் நிர்வகிப்பை ஆயர் வழிநடத்துகிறார்:

  • திருவிருந்து

  • பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி ஆசீர்வதித்தல்

  • பதிவேட்டிலிருக்கும் 8-வயது பிள்ளைகளின் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் (மனமாற்றமடைந்தவர்களுக்காக, 31.2.3.2 பார்க்கவும்).

  • ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளுதல் மற்றும் உதவிக்காரன், ஆசிரியர் மற்றும் ஆசாரியர்களின் நியமனம்

7.1.1.3

ஆலோசனைக் குழுக்களும் கூட்டங்களும்

தொகுதி ஆலோசனைக் குழு மற்றும் தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவை ஆயர் வழிநடத்துகிறார் (29.2.5 மற்றும் 29.2.6 பார்க்கவும்).

அத்தியாயம் 29-ல் பட்டியலிடப்பட்டுள்ள திருவிருந்துக் கூட்டங்கள் மற்றும் பிற தொகுதி கூட்டங்களை ஆயம் திட்டமிடுகிறது.

7.1.1.4

அழைப்புகளும் விடுவித்தல்களும்

அழைப்புகளுக்கும் விடுவித்தல்களுக்குமான ஆயரின் பொறுப்புகள் அத்தியாயம் 30-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

7.1.2.

ஆரோனிய ஆசாரியத்துவத்தின் தலைவர்

தொகுதியில் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் தலைவராக ஆயர் பின்வரும் பொறுப்புகளை வகிக்கிறார். அவரது ஆலோசகர்கள் அவருக்கு உதவுகிறார்கள்.

  • இளைஞர்களுக்கு கற்பிப்பதில் பெற்றோருக்கு ஆதரவளிக்கிறார்.

  • ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள் மற்றும் இளம் பெண்கள் வகுப்புகளைக் கண்காணிக்கிறார். ஆசாரியர் குழுமத்திற்கு ஆயர் தலைவர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:87–88 பார்க்கவும்). ஆசிரியர்கள் குழுமத்திற்கு அவருடைய முதலாவது ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது. உதவிக்காரர் குழுமத்திற்கு அவரது இரண்டாவது ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது.

  • தொகுதி இளம் பெண்கள் தலைவருடன் ஆலோசனை செய்கிறார்.

  • ஒவ்வொரு இளைஞனையும் தவறாமல் சந்திக்கிறார்.

7.1.3.

பொதுவான நியாயாதிபதி

தொகுதி ஆயர் ஒரு பொதுவான நியாயாதிபதி (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107: 71–74 பார்க்கவும்). அவருக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • இளைஞர்களும் வயதுவந்தோரும் ஆலயப் பரிந்துரைக்கு தகுதியடைய மதிப்படைய உதவுகிறார்.

  • 31.2-ல் கோடிட்டுக் காட்டியபடி நேர்காணல்களை நடத்துகிறார்.

  • ஆவிக்குரிய வழிகாட்டுதலைத் தேடுகிறவர்களை, கடுமையான தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்களை அல்லது கடுமையான பாவங்களைச் செய்தவர்களை, இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமையைப் பெற அவர்களுக்கு உதவ தொகுதி உறுப்பினர்களுடன் சந்திக்கிறார்.

  • பிணையத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், தேவைக்கேற்ப உறுப்பினர் ஆலோசனைக் குழுக்களை நடத்துகிறார். வழிகாட்டுதல்களுக்கு அத்தியாயம் 32 பார்க்கவும்.

7.1.4.

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை ஒருங்கிணைத்தல்

தொகுதியில், இரட்சிப்பு மற்றும், மேன்மையடைதலின் பணியை ஆயர் ஒருங்கிணைக்கிறார் (அத்தியாயம் 1 பார்க்கவும்). அவரது ஆலோசகர்களும் பிற தொகுதி தலைவர்களும் அவருக்கு உதவுகிறார்கள்.

7.1.4.1

உலகப்பிரகார தேவையிலிருப்போரைக் கவனித்துக்கொள்வதற்கான முன்னணி முயற்சிகள்

தேவையிலிருப்போரை ஆயர் எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பதைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு 22.6.1 பார்க்கவும்.

7.1.5.

பதிவேடுகள், நிதி, கூடுமிடம்

பதிவேடுகளைப்பற்றிய தகவலுக்கு அத்தியாயம் 33 பார்க்கவும். தசமபாகத்தையும் உள்ளடக்கிய நிதியைப்பற்றிய தகவலுக்கு அத்தியாயம் 34 பார்க்கவும். கூடுமிடங்களைப்பற்றிய தகவலுக்கு அத்தியாயம் 35. பார்க்கவும்

7.3

தொகுதி நிர்வாக செயலாளரும் தொகுதி உதவி நிர்வாக செயலாளர்களும்

தொகுதி நிர்வாகச் செயலாளராக பணியாற்ற மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவரை ஆயம் பரிந்துரைக்கிறார்கள்.

அவருக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • ஆயத்தைச் சந்தித்து, பணிக்கப்பட்டபடி நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்தல்.

  • தொகுதி ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றவும், தொகுதி ஆலோசனைக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.

  • ஆயத்துக்கான சந்திப்புகளுக்கு நேரம் குறித்தல்.

7.4

தொகுதி எழுத்தரும் தொகுதி உதவி எழுத்தர்களும்

தொகுதி எழுத்தர் மற்றும் தொகுதி உதவி எழுத்தர்களின் பொறுப்புகள் 33.4.2-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.