கையேடுகளும் அழைப்புகளும்
30. சபையில் அழைப்புகள்


“30. சபையில் அழைப்புகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“30. சபையில் அழைப்புகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

மக்கள் வலது கைகளை உயர்த்துகிறார்கள்

30.

சபையில் அழைப்புகள்

30.0

முன்னுரை

அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்வதன் மூலம் தேவனுக்குச் சேவை செய்வதன் மகிழ்ச்சியை உணர உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளை அழைப்புகள் அளிக்கிறது (மோசியா 2:17 பார்க்கவும்). உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தை அதிகரிக்கவும் தேவனிடம் நெருங்கி வரவும் அழைப்புகள் உதவுகின்றன.

சபையில் குறிப்பிட்ட அழைப்புகளுக்கு ஆசைப்படுவது பொருத்தமானதல்ல (மாற்கு 10:42-45; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:34-37 பார்க்கவும்). சபை உறுப்பினர்கள் ஒரு அழைப்பிலிருந்து மற்றொரு அழைப்பிற்கு “முன்னேற” மாட்டார்கள். அழைப்பு என்ன என்பதை விட, அழைப்பில் உண்மையாகச் சேவை செய்வது மிக முக்கியம். கர்த்தர் தம்முடைய சபையில் சேவை செய்யும் அனைவரின் அர்ப்பணிப்பையும் மதிக்கிறார்.

30.1

யாரை அழைப்பதென்பதை தீர்மானித்தல்

30.1.1

பொது வழிகாட்டுதல்கள்

சபையில் சேவை செய்பவர்கள் தேவனால் அழைக்கப்படுகிறார்கள் (எபிரெயர் 5:4; விசுவாசப் பிரமாணங்கள் 1:5 பார்க்கவும்). யாரை அழைப்பது என்பதைத் தீர்மானிப்பதில் தலைவர்கள் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாடுகிறார்கள் (4.2.6 ஐயும் பார்க்கவும்). அவர்கள் கருத்திலும் கொள்வது:

  • உறுப்பினரின் தகுதி (ஒரு நேர்காணலில் தீர்மானிக்கப்பட்டது).

  • மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காக உறுப்பினர் வைத்திருக்கும் அல்லது உருவாக்கக்கூடிய வரங்கள் மற்றும் திறன்கள்.

  • உறுப்பினரான அவன் அல்லது அவளின் உடல்நிலை மற்றும் வேலை உட்பட தனிப்பட்ட சூழ்நிலைகள்.

  • அழைப்பின் தாக்கம் உறுப்பினரின் திருமணம் மற்றும் குடும்பத்தில் ஏற்படுத்தலாம்.

சபையில் சேவை செய்ய உறுப்பினர்கள் செய்யும் தியாகங்களுக்காக அவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு அழைப்பு தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தக்கூடாது. உறுப்பினர்கள் தங்கள் வேலைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அழைப்புகள் கடினமாக்கக்கூடாது.

பொதுவாக, கூடுதலாக ஊழியம் செய்யும் சகோதரன் அல்லது சகோதரியான ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு நேரத்தில் ஒரு அழைப்பில் மட்டுமே சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

திருமணமான ஒரு உறுப்பினருக்கு அழைப்பை கொடுக்கும்போது, அந்த அழைப்பை துணைவர் அறிந்திருப்பதையும் ஆதரவாக இருப்பதையும் தலைவர்கள் உறுதி செய்கிறார்கள். ஒரு இளைஞன் அல்லது இளம் பெண்ணுக்கு அழைப்பை கொடுக்கும் முன், தலைவர்கள் அவன் அல்லது அவளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவார்கள்.

அழைப்பு கொடுக்கப்படுவதற்கு முன், அந்த நபரின் உறுப்பினர் பதிவேட்டில் சிறுகுறிப்பு அல்லது முறையான உறுப்பினர் கட்டுப்பாடுகள் இல்லை என்பதைச் சரிபார்க்க கவனமாக ஆயர் மதிப்பாய்வு செய்கிறார்.

30.1.2

புதிய உறுப்பினர்களுக்கான அழைப்புகள்

சேவை செய்வதற்கான வாய்ப்புகள் உறுப்பினர்கள் ஆவிக்குரிய ரீதியில் வளர உதவுகின்றன.

ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டவுடனேயே புதிய உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புகளை தொகுதி தலைவர்கள் வழங்குகிறார்கள்.

30.1.3

உறுப்பினரல்லாதவர்களுக்கான அழைப்புகள்

சபையில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், ஆர்கன் வாசிப்பவர், இசையமைப்பாளர் அல்லது நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவதற்கு உதவ அழைப்பு போன்ற சில பதவிகளுக்கு அழைக்கப்படலாம். இருப்பினும், அவர்கள் ஆசிரியர்களாகவோ, குழும அல்லது அமைப்பின் தலைமை உறுப்பினர்களாகவோ அல்லது ஆரம்ப வகுப்பு இசைத் தலைவர்களாகவோ அழைக்கப்படக்கூடாது.

30.1.4

இரகசியத்தன்மை

அழைப்புகளும் விடுவித்தல்களும் பரிசுத்தமானவை. இதன் காரணமாக, தலைவர்கள் முன்மொழியப்பட்ட அழைப்புகள் மற்றும் விடுவித்தல்களைப்பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

30.1.5

அழைப்புகளுக்கான பரிந்துரைகளும் ஒப்புதல்களும்

அழைப்புகளின் விளக்கப்படம், ஒவ்வொரு அழைப்பிற்கும் யார் பரிந்துரை செய்யலாம் மற்றும் யார் ஒப்புதல் அளிக்கலாம் என்பதைக் குறிக்கிறது (30.8 பார்க்கவும்).

ஆயர்களும் பிணையத் தலைவர்களும் ஒவ்வொரு பரிந்துரையையும் கவனமாக பரிசீலித்து, அது ஜெபத்துடன் செய்யப்பட்டது என்பதை அங்கீகரிப்பார்கள். யாரை அழைப்பது என்பதைப்பற்றிய உணர்த்துதலைப் பெறுவதற்கான இறுதிப் பொறுப்பு ஆயத்துக்கு அல்லது பிணையத் தலைமைக்கு உள்ளது.

30.2

அழைப்பை நீடித்தல்

சேவை செய்வதற்கான அழைப்பைப் பெறுவது ஒரு உறுப்பினருக்கு அர்த்தமுள்ள ஆவிக்குரிய அனுபவமாக இருக்க வேண்டும்.

ஒரு தலைவர் ஒரு அழைப்பை கொடுக்கும்போது, அது கர்த்தரிடமிருந்து வந்தது என்று அவர் விளக்குகிறார்.

தலைவர் பின்வருமாறும் விளக்கலாம்:

  • அழைப்பின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகளை விளக்கலாம்.

  • அழைப்பை நிறைவேற்றுவதில் கர்த்தரின் ஆவியை நாட உறுப்பினரை ஊக்குவிக்கலாம்.

  • உறுப்பினருக்கு கர்த்தர் உதவுவார் என்றும் உண்மையாக சேவை செய்ததற்காக அவன் அல்லது அவளை ஆசீர்வதிப்பார் என்றும் சாட்சியமளியுங்கள்.

  • அழைப்பிற்கான பயிற்சி மற்றும் ஆதரவை யார் வழங்குவார் என்று உறுப்பினரிடம் சொல்லுங்கள்.

  • உறுப்பினருக்கு அவன் அல்லது அவள் கலந்துகொள்ள வேண்டிய கூட்டங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய எந்த ஆதாரங்களையும் தெரிவிக்கவும்.

30.3

அழைப்புகளில் உறுப்பினர்களை ஆதரித்தல்

பெரும்பாலான சபை பதவிகளுக்கு அழைக்கப்பட்டவர்கள், அவர்கள் சேவை செய்யத் தொடங்கும் முன் ஆதரித்தலுக்காக முன்மொழியப்பட வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:13; 42:11 பார்க்கவும்).

ஆதரித்தலை நடத்துபவர் முதலில் யார் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதை அறிவிக்கிறார் (பொருந்தினால்). அந்த நபரின் சேவைக்கு நன்றி தெரிவிக்க உறுப்பினர்களை அவர் அழைக்கிறார் (30.6 பார்க்கவும்).

ஒரு நபரை ஆதரிப்பதற்காக முன்வைக்கும்போது, அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவத் தலைவர் அவரை அல்லது அவளை நிற்கும்படி அழைக்கிறார். தலைவர் பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்:

“[பெயர்] [நிலை] என அழைக்கப்பட்டது. [அவரை அல்லது அவளை] ஆதரிக்க ஆதரவாக இருப்பவர்கள் அதை உயர்த்திய கையால் காட்டலாம். [சுருக்கமாக இடைநிறுத்தவும்.] எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால், அதையும் காட்டலாம். [சுருக்கமாக இடைநிறுத்தவும்.]

நல்ல நிலையில் உள்ள ஒரு உறுப்பினர் அழைப்பை எதிர்த்தால், தலைமை தாங்கும் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட மற்றொரு ஆசாரியத்துவத் தலைவர் அவரை அல்லது அவளை கூட்டத்திற்குப் பிறகு தனிப்பட்ட முறையில் சந்திப்பார்.

30.4

அழைப்புகளில் சேவை செய்ய உறுப்பினர்களை பணித்தல்

கூடுதல் தகவலுக்கு 18.11 பார்க்கவும்.

30.6

அழைப்புகளிலிருந்து உறுப்பினர்களை விடுவித்தல்

ஒரு தலைவர் அல்லது ஆயர் விடுவிக்கப்பட்டால், அவரது அல்லது அவளது ஆலோசகர்கள் தானாகவே விடுவிக்கப்படுகிறார்கள்.

ஒரு தலைவர் நன்றியைத் தெரிவிக்கவும், உறுப்பினரின் சேவையில் தேவனின் கரத்தை அங்கீகரிப்பதற்காகவும் ஒரு விடுவித்தலை கொடுப்பது ஒரு முக்கியமான வாய்ப்பாகும். விடுவித்தலை பகிரங்கமாக அறிவிக்கும் முன் அவருக்கு அல்லது அவளுக்குத் தெரிவிக்க தலைவர் தனிப்பட்ட முறையில் உறுப்பினரைச் சந்திக்கிறார். அறிவிக்கப்படுவதற்கு முன், தெரிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு மட்டுமே விடுவித்தல் அறிவிக்கப்படுகிறது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆசாரியத்துவத் தலைவர், அந்த நபரை ஆதரித்த அதே அமைப்பில் விடுவித்தலை அறிவிக்கிறார். தலைவர் பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்:

“[பெயர்] [நிலை] என விடுவிக்கப்பட்டார். [அவரது] சேவைக்கு நன்றி தெரிவிக்க விரும்புவோர் அதை உயர்த்திய கையால் காட்டலாம்.

யாராவது எதிர்க்கிறாரா என தலைவர் கேட்பதில்லை.

30.8

அழைப்புகளின் வரைபடம்

30.8.1

தொகுதி அழைப்புகள்

அழைப்பு

பரிந்துரைக்கப்பட்ட

அங்கீகரிக்கப்பட்ட

ஆதரிக்கப்பட்ட

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

அழைப்பு

ஆயர்

பரிந்துரைக்கப்பட்ட

பிணையத் தலைமை, LCR பயன்படுத்துதல்

அங்கீகரிக்கப்பட்ட

பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிரதான தலைமையிடம் அங்கீகாரம் பெற்ற பின்பு பிணையத் தலைவர்

அழைப்பு

ஆயத்துவத்தில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயர்

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

தொகுதி எழுத்தர்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம்

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது உயர் ஆலோசகர்

அழைப்பு

தொகுதி நிர்வாக செயலாளர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம்

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது உயர் ஆலோசகர்

அழைப்பு

மூப்பர்கள் குழுமத் தலைவர்

பரிந்துரைக்கப்பட்ட

பிணையத் தலைமை (ஆயருடன் ஆலோசித்தலில்)

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர்

அழைப்பு

மூப்பர்கள் குழும தலைமையில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

குழுமத் தலைவர் (ஆயருடன் ஆலோசித்து)

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவும்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது உயர் ஆலோசகர்

அழைப்பு

பிற மூப்பர் குழும அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

குழுமத் தலைமை

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

குழும உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

குழுமத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஒரு ஆலோசகர்

அழைப்பு

தொகுதி அமைப்பு தலைவர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர்

அழைப்பு

தொகுதி அமைப்பு தலைமைகளில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

அமைப்புத் தலைவர்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

பிற தொகுதி ஒத்தாசைச் சங்க அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

ஒத்தாசைச் சங்கத் தலைமை

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

ஒத்தாசைச் சங்க உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

பிற தொகுதி இளம் பெண்கள், ஆரம்ப வகுப்பு மற்றும் ஞாயிறு பள்ளி அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

அமைப்புத் தலைமை.

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

தொகுதி ஊழியத் தலைவர் (மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் ஒருவர் இந்தப் பாத்திரத்தை நிரப்பலாம்; அப்படியானால் அவர் அழைக்கப்படாமல், ஆதரிக்கப்படாமல், அல்லது தனித்தனியாக பணிக்கப்படாமலிருக்கலாம்).

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம் (மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைவர்களுடன் ஆலோசித்தலில்)

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

தொகுதி ஊழியக்காரர்கள்.

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம் அல்லது மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைவர்கள்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

தொகுதி ஆலய மற்றும் குடும்ப வரலாறு தலைவர் (மூப்பர் குழுமத் தலைமையின் உறுப்பினர் ஒருவர் இந்தப் பாத்திரத்தை நிரப்பலாம்; அப்படியானால் அவர் அழைக்கப்படாமல், ஆதரிக்கப்படாமல், அல்லது தனித்தனியாக பணிக்கப்படாமலிருக்கலாம்).

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம் (மூப்பர் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்க தலைவர்களுடன் ஆலோசித்தலில்)

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

ஆசாரியர் குழுமத் தலைவரின் உதவியாளர்கள்.

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம் (ஆசாரியர்கள் குழுமத் தலைவராக)

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

குழும உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர்

அழைப்பு

ஆசிரியர்கள் மற்றும் உதவிக்காரர் குழுமத் தலைவர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

குழும உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயரால் அல்லது பணிக்கப்பட்ட ஒரு ஆலோசகரால் அழைக்கப்படுகிறார், ஆயரால் பணிப்படுகிறார்

அழைப்பு

ஆசிரியர்கள் மற்றும் உதவிக்காரர் குழுமத் தலைமைகள் மற்றும் குழும செயலாளர்களில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

குழுமத் தலைவர்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

குழும உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

இளம் பெண்கள் வகுப்புத் தலைவர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம் (இளம் பெண்கள் தலைமையுடன் ஆலோசித்து

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

வகுப்பு உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

இளம் பெண்கள் வகுப்புத் தலைமைகள் மற்றும் வகுப்பு செயலாளர்களில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

வகுப்புத் தலைவர்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

வகுப்பு உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

அழைப்பு

பிற தொகுதி அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

ஆயம்

அங்கீகரிக்கப்பட்ட

ஆயம்

ஆதரிக்கப்பட்ட

தொகுதி உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

ஆயர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர்

  1. ஒரு ஆலயத்தில் செயலில் உள்ள முத்திரிப்பவர்களை ஆயத்துவங்களில் பணியாற்ற அழைக்கக்கூடாது. சபையின் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் முத்திரிப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

30.8.2

கிளை அழைப்புகள்

அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

அங்கீகரிக்கப்பட்ட

ஆதரிக்கப்பட்ட

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

அழைப்புகள்

கிளைத் தலைவர்

பரிந்துரைக்கப்பட்ட

பிணைய, ஊழிய, அல்லது சேகரத் தலைமை

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவும் அல்லது ஊழியத் தலைமை

ஆதரிக்கப்பட்ட

கிளை உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணைய அல்லது ஊழியத் தலைவர் (அல்லது நியமிக்கப்பட்டால் சேகரத் தலைவர்)

அழைப்புகள்

கிளைத் தலைமையில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

கிளைத் தலைவர்

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும் அல்லது ஊழியத் தலைமை (அல்லது, ஊழியத் தலைவரால் அங்கீகரிக்கப்படும்போது, சேகரத் தலைமை)

ஆதரிக்கப்பட்ட

கிளை உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணைய, ஊழிய அல்லது சேகரத் தலைவர் அல்லது பணிக்கப்பட்ட ஆலோசகர்.

அழைப்புகள்

கிளை எழுத்தர், உதவி எழுத்தர்கள் மற்றும் நிர்வாக செயலாளர்

பரிந்துரைக்கப்பட்ட

கிளைத் தலைமை

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும் அல்லது ஊழியத் தலைமை (அல்லது, ஊழியத் தலைவரால் அங்கீகரிக்கப்படும்போது, சேகரத் தலைமை)

ஆதரிக்கப்பட்ட

கிளை உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையத் தலைவர் அல்லது நியமிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது உயர்மட்ட ஆலோசகர் (பிணையங்களில் உள்ள கிளைகளுக்கு); சேகரத் தலைவர் அல்லது அவர் பணிக்கும் ஆசாரியத்துவத் தலைவர் (ஊழியங்களில் உள்ள கிளைகளுக்கு)

அழைப்புகள்

மூப்பர் குழுமத் தலைவர்

பரிந்துரைக்கப்பட்ட

பிணையம், சேகரம் அல்லது ஊழியத் தலைமை (கிளைத் தலைவருடன் கலந்தாலோசித்து)

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர் ஆலோசனைக் குழுவும் அல்லது ஊழியத் தலைமை (அல்லது, ஊழியத் தலைவரால் அங்கீகரிக்கப்படும்போது, சேகரத் தலைமை)

ஆதரிக்கப்பட்ட

கிளை உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணைய அல்லது ஊழியத் தலைவர் (அல்லது நியமிக்கப்பட்டால் சேகரத் தலைவர்)

அழைப்புகள்

மூப்பர் குழும தலைமையில் ஆலோசகர்கள்

பரிந்துரைக்கப்பட்ட

குழுமத் தலைவர் (கிளை தலைவருடன் கலந்தாலோசித்தலில்)

அங்கீகரிக்கப்பட்ட

பிணையத் தலைமையும் உயர்மட்ட ஆலோசனைக் குழுவும் அல்லது ஊழியத் தலைமை (அல்லது, ஊழியத் தலைவரால் அங்கீகரிக்கப்படும்போது, சேகரத் தலைமை)

ஆதரிக்கப்பட்ட

கிளை உறுப்பினர்கள்

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

பிணையம் அல்லது ஊழியத் தலைவர் அல்லது பணிக்கப்பட்ட ஆலோசகர் அல்லது உயர் ஆலோசகர் (அல்லது சேகரத் தலைவர் அல்லது மற்றொரு ஆசாரியத்துவத் தலைவர் நியமிக்கப்பட்டால்)

அழைப்புகள்

பிற கிளை அழைப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட

30.8.1 பார்க்கவும், ஆயருக்குப் பதிலாக கிளைத் தலைவர் மற்றும் தொகுதிக்குப் பதிலாக கிளையை மாற்றுதல்.

அங்கீகரிக்கப்பட்ட

30.8.1 பார்க்கவும், ஆயருக்குப் பதிலாக கிளைத் தலைவர் மற்றும் தொகுதிக்குப் பதிலாக கிளையை மாற்றுதல்.

ஆதரிக்கப்பட்ட

30.8.1 பார்க்கவும், ஆயருக்குப் பதிலாக கிளைத் தலைவர் மற்றும் தொகுதிக்குப் பதிலாக கிளையை மாற்றுதல்.

அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட

30.8.1 பார்க்கவும், ஆயருக்குப் பதிலாக கிளைத் தலைவர் மற்றும் தொகுதிக்குப் பதிலாக கிளையை மாற்றுதல்.

  1. ஒரு ஆலயத்தில் செயல்படும் முத்திரிப்பவர்களை கிளை தலைமைகளில் பணியாற்ற அழைக்கக் கூடாது. சபையின் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் முத்திரிப்பவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.