கையேடுகளும் அழைப்புகளும்
36. புதிய அலகுகளை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் பெயரிடுதல்


“36. புதிய அலகுகளை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் பெயரிடுதல்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“36. புதிய அலகுகளை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் பெயரிடுதல்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை

திருவிருந்து கூட்டத்தில் செய்தி கொடுக்கும் மனிதன்

36.

புதிய அலகுகளை உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் பெயரிடுதல்

36.0

முன்னுரை

சபை உறுப்பினர்கள் அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் அந்தந்த அங்கங்களைச் சேர்ந்தவர்கள் (மோசியா 25:17–24 பார்க்கவும்). முறையான ஆசாரியத்துவ அதிகாரத்தின் கீழ் சபையின் பணியை ஒழுங்கமைப்பதற்கும் செய்வதற்கும் இந்த அங்கங்கள் அவசியம்.

சபை அங்கங்கள் (அலகுகள் என்றும் அழைக்கப்படுகின்றன) பிணையங்கள், சேகரங்கள், தொகுதிகள் மற்றும் கிளைகள் ஆகியவை அடங்கும். அவை தேவைக்கேற்ப மட்டுமே உருவாக்கப்படுகின்றன, மாற்றப்படுகின்றன அல்லது நிறுத்தப்படுகின்றன.

புதிய அங்கம் உருவாக்க அல்லது அங்க எல்லையை மாற்ற முன்மொழிவதற்கு முன் உறுப்பினர்களின் ஆவிக்குரிய வலிமையை அதிகரிக்க தலைவர்கள் வேலை செய்கிறார்கள். தற்போதுள்ள அங்கங்கள் போதுமான அளவு வலுவாக இருந்தால் மட்டுமே புதிய அங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவில் ஆதரவுக்கு, 1-801-240-1007 ஐ அழைக்கவும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவிற்கு வெளியேயுள்ளவர்கள், பகுதி அலுவலகத்தை அழைக்கவும்.