கையேடுகளும் அழைப்புகளும்
1.இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலில் தேவனின் திட்டமும் பணியில் உங்கள் பங்கும்


“1. இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலில் தேவனின் திட்டமும் பணியில் உங்கள் பங்கும்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“1. இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

மனிதர்கள் வீட்டைக் கட்டுதல்

1.

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலில் தேவனின் திட்டமும் பணியில் உங்கள் பங்கும்

1.0

முன்னுரை

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேவை செய்ய நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் சேவைக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் உண்மையாக சேவை செய்யும்போது, நீங்கள் ஜனங்களை ஆசீர்வதிப்பீர்கள், மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

கிறிஸ்துவைப் போன்ற சேவையின் கொள்கைகளைக் கற்றுக் கொள்ளவும், உங்கள் பொறுப்புகளைப் புரிந்துகொள்ளவும் இந்தக் கையேடு உங்களுக்கு உதவும். சபையில் உங்கள் சேவையை, பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பணியுடன் நீங்கள் இணைக்கும்போது நீங்கள் மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்.

1.1

மகிழ்ச்சிக்கான தேவனின் திட்டம்

பரலோக பிதா, அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க நமக்கு சாத்தியமாக்க, மகிழ்ச்சியின் திட்டத்தை வழங்கினார். ஏனெனில் இதோ, மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் “கொண்டுவர இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது” (மோசே 1:39).

தேவனின் திட்டத்தில் இயேசு கிறிஸ்து மையமாக இருக்கிறார். பரலோக பிதா நம்மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக, அவரது பாவநிவாரண பலியின் மூலம் நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டுக்கொள்ள தம்முடைய குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16 பார்க்கவும்). இயேசு கிறிஸ்து தனது பாவநிவர்த்தியின் மூலம் பூமியில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் உயிர்த்தெழுப்பப்பட்டு அழியாமை அடைவதை உறுதி செய்கிறார். அவருடைய பாவநிவர்த்தி நாம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதையும், நாம் நித்திய ஜீவனையும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெற இயல்வதையும் நம் இருதயங்கள் மாற்றப்படுவதையும் சாத்தியமாக்குகிறது.

நித்திய ஜீவனைப் பெற, நாம் “கிறிஸ்துவினிடத்தில் வந்து, அவரில் பூரணப்பட்டிருக்க வேண்டும்” (மரோனி 10:32).

1.2

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி

நாம் கிறிஸ்துவிடம் வந்து, மற்றவர்களும் அவ்வாறே செய்ய உதவும்போது, தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் நாம் பங்கேற்கிறோம். தேவனை நேசிப்பது மற்றும் அண்டை வீட்டாரை நேசிப்பது எனும் இரண்டு பெரிய கட்டளைகளால் இந்த பணி வழிநடத்தப்படுகிறது (மத்தேயு 22:37–39 பார்க்கவும்).

இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணி, தெய்வீகமாக நியமிக்கப்பட்ட நான்கு பொறுப்புகளில் கவனம் செலுத்துகிறது.

தேவனின் பணியின் இந்த நான்கு அம்சங்களைப் புரிந்துகொள்ள இந்தக் கையேடு உங்களுக்கு உதவும். அவற்றை நிறைவேற்றுவதில் உங்கள் பங்கைச் செய்யும்போது பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார் (2 நேபி 32:5 பார்க்கவும்).

1.2.1.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதலில் அடங்குபவை:

  • கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, அனுதினமும் மனந்திரும்புதல், இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பெறும்போது தேவனுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வது, அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதன் மூலம் இறுதிவரை நிலைத்திருப்பது (3.5.1 பார்க்கவும்).

  • வீட்டிலும் சபையிலும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்பித்தல்.

  • ஆவிக்குரிய ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் நமக்கும் நமது குடும்பங்களுக்கும் வழங்குவதில் சுயசார்புள்ளவர்களாக மாறுதல்.

1.2.2.

தேவையிலிருப்போரைப் பராமரித்தல்

தேவையிலிருப்போரைப் பராமரித்தலில் அடங்குபவை:

  • தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு சேவை செய்தலும் ஊழியம் செய்தலும்.

  • தேவையிலிருப்போருடன் சபை உதவி உட்பட ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

  • சுயசார்புடையவர்களாக மாற, பிறருக்கு உதவுதல்.

1.2.3.

சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தல்

சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தலில் அடங்குபவை:

  • ஊழியப்பணியிலும் ஊழியர்களாக சேவை செய்வதிலும் பங்கேற்றல்.

  • புதிய மற்றும் திரும்ப வரும் சபை உறுப்பினர்கள் உடன்படிக்கை பாதையில் முன்னேற உதவுதல்.

1.2.4.

நித்தியத்திற்கும் குடும்பங்களை ஒன்றிணைத்தல்

நித்தியத்திற்கும் குடும்பங்களை ஒன்றிணைத்தலில் அடங்குபவை:

  • நம்முடைய சொந்த ஆலய நியமங்களைப் பெறுகையில் உடன்படிக்கைகளை செய்தல்.

  • மரித்த நம் முன்னோர்களை கண்டுபிடித்து, அவர்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்ய முடியும்படிக்கு ஆலயத்தில் அவர்களுக்காக நியமங்களைச் செய்வது.

  • தேவனை ஆராதிக்கவும், அவருடைய பிள்ளைகளுக்கு நியமங்களைச் செய்யவும் முடிந்தவரை தவறாமல் ஆலயத்திற்குச் செல்லுதல்.

1.3

சபையின் நோக்கம்

இயேசு கிறிஸ்து தனி நபர்களும் குடும்பங்களும் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான பணியைச் செய்ய அவரது சபையை நிறுவினார் (எபேசியர் 4:11–13 பார்க்கவும்; 2.2 ஐயும் இந்தக் கையேட்டில் பார்க்கவும்). இந்த தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, சபையும் அதன் தலைவர்களும் வழங்குகிறார்கள்:

  • ஆசாரியத்துவ அதிகாரமும் திறவுகோல்களும்.

  • உடன்படிக்கைகளும் நியமங்களும்.

  • தீர்க்கதரிசன வழிகாட்டுதல்.

  • வேதங்கள்.

  • சுவிசேஷம் கற்றலும் கற்பித்தலுக்கான ஆதரவும்.

  • சேவை மற்றும் தலைமைக்கான வாய்ப்புகள்.

  • பரிசுத்தர்களின் ஒரு சமூகம்.

1.3.1.

ஆசாரியத்துவ அதிகாரமும் திறவுகோல்களும்

ஆசாரியத்துவத்தின் மூலம், இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை தேவன் நிறைவேற்றுகிறார். பூமியில் தேவனின் பணியை வழிநடத்தத் தேவையான ஆசாரியத்துவ அதிகாரம் மற்றும் திறவுகோல்கள், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு மறுஸ்தாபிதம் செய்யப்பட்டன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11–16; 112:30 பார்க்கவும்). இந்த திறவுகோல்கள் இன்று சபைத் தலைவர்களால் தரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தேவனின் பணியில் உதவ மற்றவர்களை அழைத்து அதிகாரமளிக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:8, 65–67 பார்க்கவும்).

1.3.2.

உடன்படிக்கைகளும் நியமங்களும்

பரலோக பிதாவின் திட்டத்தில், ஞானஸ்நானம் போன்ற இரட்சிப்பின் மேன்மையடைதலின் நியமங்களைப் பெறும்போது நாம் உடன்படிக்கைகளைச் செய்கிறோம் (யோவான் 3:5 பார்க்கவும்; இந்தக் கையேட்டில் அதிகாரம் 18 ஐயும் பார்க்கவும்). இந்த உடன்படிக்கைகளும் நியமங்களும் நாம் தேவனைப் போல் ஆகவும், அவரது பிரசன்னத்தில் மீண்டும் வாழவும் இன்றியமையாதவை (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19-22 பார்க்கவும்).

1.3.3.

தீர்க்கதரிசன வழிகாட்டுதல்

அவர் தெரிந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகள் மூலம், தேவன் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார் மற்றும் உணர்த்தப்பட்ட வழிகாட்டுதலையும் எச்சரிக்கைகளையும் வழங்குகிறார் (ஆமோஸ் 3:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:4 பார்க்கவும்). இந்த வழிகாட்டுதல் நித்திய ஜீவனுக்கு நடத்திச் செல்லும் பாதையில் பிரவேசிக்கவும், தொடர்ந்து இருக்கவும் உதவுகிறது.

1.3.4.

வேதங்கள்

கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வழிகாட்டுதலின் கீழ், சபை பரிசுத்த வேதங்களில் காணப்படும் தேவனின் வார்த்தையை வழங்குகிறது, பாதுகாக்கிறது. வேதங்கள் கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிக்கின்றன, அவருடைய சுவிசேஷத்தைப் போதிக்கின்றன, அவர் மீது விசுவாசம் வைக்க நமக்கு உதவுகின்றன (யாக்கோபு 7:10–11; ஏலமன் 15:7 பார்க்கவும்).

1.3.5.

சுவிசேஷம் கற்றலும் கற்பித்தலுக்குமான ஆதரவு

சுவிசேஷத்தின் சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த சத்தியங்களைக் கற்பிக்கும் பொறுப்பில், தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சபை உதவுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:77–78, 118 பார்க்கவும்; இந்தக் கையேட்டில் 2.2.3 ஐயும் பார்க்கவும்).

1.3.6.

சேவை மற்றும் தலைமை வாய்ப்புகள்

சபையில் அழைப்புகள் மற்றும் நியமிப்புகள் மூலம், உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்கும் வழிநடத்துவதற்கும் தேவன் வாய்ப்புகளை வழங்குகிறார். தேவையிலிருக்கும் உறுப்பினர்களை கவனிப்பதற்கும் மற்றவர்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்கும் கட்டமைப்பை சபை வழங்குகிறது (மோசியா 18:27–29 பார்க்கவும்).

1.3.7.

பரிசுத்தர்களின் ஒரு சமூகம்

பரிசுத்தர்களின் சமூகமாக, சபை உறுப்பினர்கள் தேவனை ஆராதிப்பதற்கும், திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் இரட்சகரை நினைவுகூருவதற்கும் தவறாமல் கூடுகிறார்கள். (மரோனி 6:4–6; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77 பார்க்கவும்). உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கவனித்து, ஊழியம் செய்கிறார்கள் (எபேசியர் 2:19 பார்க்கவும்).

1.4

தேவனின் பணியில் உங்கள் பங்கு

சபையில் ஒரு தலைவராக, நீங்கள் சேவை செய்பவர்கள் இரட்சிப்பு மர்றும் மேன்மையடைதலின் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு கற்பிக்கவும் ஆதரவளிக்கவும் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் (1.2 பார்க்கவும்). உங்கள் அழைப்பை நிறைவேற்றுவதற்கும்,“சகல கருத்தோடும், தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குப் போதிக்க” (யாக்கோபு 1:19) நீங்கள் பொறுப்புள்ளவர்கள். கர்த்தரின் திராட்சைத் தோட்டத்தில் அவருடன் சேர்ந்து பிரயாசப்படுவது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் (யாக்கோபு 5:70–72 பார்க்கவும்).

தேவனின் பணி, அவர் உங்களை என்ன செய்ய அழைக்கிறார், அவருடைய சபையின் நோக்கம் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்வது, ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவதில் உங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்த உதவும்.

இந்த அத்தியாயத்தில் உள்ள கொள்கைகளை அடிக்கடி பார்க்கவும். நீங்கள் சேவை செய்பவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்ற நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை ஜெபத்துடன் அறிய முயலுங்கள். பரிசுத்த ஆவியின் தூண்டுதல்கள் மூலம் தேவன் உங்களை வழிநடத்துவார்.