“0. முன்னுரை கண்ணோட்டம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“0. முன்னுரை கண்ணோட்டம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
0.
முன்னுரை கண்ணோட்டம்
0.0
முன்னுரை
“ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய கடமையை அறிந்துகொண்டு அவன் நியமிக்கப்பட்ட அலுவலில் முழு சிரத்தையுடன் செயல்படுவானாக” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:99) என்று கர்த்தர் போதித்தார். பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக, உங்கள் அழைப்பின் கடமைகளைக் கற்றுக்கொள்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் உங்களுக்குதவ, தனிப்பட்ட வெளிப்பாட்டை நீங்கள் தேட வேண்டும்.
வேதங்களையும் பிற்கால தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் படிப்பது உங்கள் கடமைகளைப் புரிந்துகொண்டு நிறைவேற்ற உங்களுக்கு உதவும். நீங்கள் தேவனின் வார்த்தைகளைப் படிக்கும்போது, ஆவியின் செல்வாக்கை நீங்கள் அதிகமாக பெற்றுக்கொள்பவராக இருப்பீர்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85 பார்க்கவும்).
இந்த கையேட்டில் உள்ள அறிவுறுத்தல்களைப் படிப்பதன் மூலம் உங்கள் கடமைகளையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைத் நாடும் போது, கொள்கைகள், செயற்திட்டங்கள் மற்றும் நடைமுறைகளைப்பற்றிய புரிதலை வழங்க இந்த அறிவுறுத்தல்கள் பயன்படுத்தப்பட்டால், அவை வெளிப்பாட்டிற்கு அழைப்பு விடுக்கலாம்.
0.1
கையேடு
பொது கையேடு: பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் சேவை செய்வது பொது மற்றும் உள்ளூர் சபைத் தலைவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
இந்த கையேட்டில் உள்ள தலைப்புகள் மற்றும் துணை தலைப்புகள் தலைப்புகளை எளிதாகக் கண்டறியவும், குறிப்பிடவும் எண்ணப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு ஆலயத்தில் யாரை முத்திரிக்கலாம் என்பதைப்பற்றிய அறிவுறுத்தல் 27.3.1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. எண் 27 என்பது அத்தியாயத்தைக் குறிக்கிறது, எண் 3 என்பது அந்த அத்தியாயத்தில் உள்ள ஒரு பாகத்தைக் குறிக்கிறது, எண் 1 என்பது துணைப்பிரிவைக் குறிக்கிறது.
0.2
தழுவப்பட்ட மற்றும் விருப்ப ஆதாரங்கள்
எல்லா பிணையங்களுக்கும் தொகுதிகளுக்கும் ஒரே தேவைகள் இல்லை.
உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்த வழிகாட்டுதல்கள் மற்றும் விருப்ப ஆதாரங்களைப் பயன்படுத்துவது என்பது குறித்து தலைவர்கள் உணர்த்துதலை நாடுகின்றனர்.
0.4
அறிவுறுத்தல்களைப்பற்றிய கேள்விகள்
வேதங்களிலோ, ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலோ அல்லது இந்தக் கையேடுகளிலோ கேட்கப்படாத கேள்விகள் எழும்போது, சபை உறுப்பினர்கள் தேவனுடனான தங்கள் உடன்படிக்கைகள், உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலுக்காக பரிசுத்த ஆவியின் உணர்த்துதல் ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டும்.
இந்தக் கையேட்டில் உள்ள தகவல்களைப்பற்றியோ அல்லது அது கொன்டுவராத சிக்கல்களைப்பற்றியோ தலைவர்களுக்கு கேள்விகள் இருந்தால், அவர்கள் உடனடியாக தலைமை தாங்கும் அதிகாரியுடன் ஆலோசனை செய்கிறார்கள்.
0.5
சொற்களஞ்சியம்
வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டதைத் தவிர:
-
இந்த கையேட்டில் உள்ள ஆயர் மற்றும் ஆயம் என்ற சொற்கள் கிளைத் தலைவர்கள் மற்றும் கிளைத் தலைமைகளையும் குறிக்கின்றன. பிணையத் தலைவர் மற்றும் பிணையத் தலைமை என்ற சொற்கள் சேகரத் தலைவர்கள் மற்றும் சேகரத் தலைமைகளைக் குறிக்கின்றன. பிணையத் தலைவர்களின் அதிகாரத்திலிருந்து சேகரத் தலைவர்களின் அதிகாரம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதற்கான தொகுப்பிற்கு, 6.3 பார்க்கவும்.
-
தொகுதிகள் மற்றும் பிணையங்களைப்பற்றிய குறிப்புகள் பொதுவாக கிளைகள், சேகரங்கள் மற்றும் ஊழியங்களுக்கும் பொருந்தும்.
-
உள்ளூரில் ஓய்வுநாள் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமையைப்பற்றிய குறிப்புகள், அந்த நாளுக்குப் பொருந்தும்.
-
அங்கம் என்ற சொல் தொகுதிகளையும் கிளைகளையும் குறிக்கிறது.
-
பெற்றோர்களைப்பற்றிய குறிப்புகள் பொதுவாக சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்கும் பொருந்தும்.
ஆயர் மற்றும் கிளைத் தலைவரின் அழைப்புகள், அதிகாரத்தில், பொறுப்பில் சமமானவை அல்ல, பிணையத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவரின் அழைப்புகளிலும் சமமானவை அல்ல. ஆயர், ஆசாரியத்துவத்தில் ஒரு அலுவல், மற்றும் நியமனம் பிரதான தலைமையால் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. பொது அதிகாரிகள், மற்றும் பிரதேச எழுபதின்மரால் பிணையத் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
0.6
சபைத் தலைமையகம் அல்லது பிரதேச அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுதல்
இந்த கையேட்டில் உள்ள சில அத்தியாயங்களில் சபைத் தலைமையகம் அல்லது பிரதேச அலுவலகத்தை தொடர்புகொள்வதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கியுள்ளன. சபைத் தலைமையகத்தைத் தொடர்புகொள்வதற்கான அறிவுறுத்தல் அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ளவர்களுக்குப் பொருந்தும். பிரதேச அலுவலகத்தைத் தொடர்புகொள்வதற்கான அறிவுறுத்தல் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் வெளியே உள்ளவர்களுக்குப் பொருந்தும்.