“3. ஆசாரியத்துவ கொள்கைகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“3. ஆசாரியத்துவ கொள்கைகள்,”பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
3.
ஆசாரியத்துவ கொள்கைகள்
3.0
முன்னுரை
ஆசாரியத்துவம் என்பது தேவனின் அதிகாரமும் வல்லமையும் ஆகும். ஆசாரியத்துவத்தின் மூலம், பரலோக பிதா தனது பணியை “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர” (மோசே 1:39) நிறைவேற்றுகிறார். இந்த பணியைச் செய்ய உதவுவதற்காக பூமியில் உள்ள அவருடைய குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் தேவன் அதிகாரத்தையும் வல்லமையையும் வழங்குகிறார் (அத்தியாயம் 1 பார்க்கவும்).
3.2
ஆசாரியத்துவத்தின் ஆசிர்வாதங்கள்
உடன்படிக்கைகள் மற்றும் ஆசாரியத்துவ நியமங்கள் மூலம், தேவன் தம் பிள்ளைகள் அனைவருக்கும் பெரும் ஆசீர்வாதங்களை கொடுக்கிறார். இந்த ஆசீர்வாதங்களில் அடங்குவன:
-
ஞானஸ்நானம் மற்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அங்கத்தினரத்துவம்.
-
பரிசுத்த ஆவியின் வரம்.
-
திருவிருந்தில் பங்கேற்றல்.
-
சபை அழைப்புகள் மற்றும் பணிகளில் சேவை செய்வதற்கான அதிகாரம் மற்றும் வல்லமை.
-
கோத்திர பிதா ஆசீர்வாதங்கள் மற்றும் பிற குணமாக்கும் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், குணப்படுத்துதல், ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் பெறுதல்.
-
ஆலயத்தில் தேவ வல்லமையுடன் தரிப்பிக்கப்படுதல்
-
ஒருவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் நித்தியமாக முத்திரிக்கப்பட்டிருத்தல்.
-
நித்திய ஜீவனின் வாக்குத்தத்தம்.
3.3
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவமும் ஆரோனிய ஆசாரியத்துவமும்
சபையில், ஆசாரியத்துவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:1 பார்க்கவும்).
3.3.1
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம்
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் என்பது “தேவ குமாரனின் முறைமையின்படி அது பரிசுத்த ஆசாரியத்துவமாகும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:3). தேவனின் குமாரர்களும் குமாரத்திகளும் அவரைப் போல் ஆகக்கூடிய வல்லமை இது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–21; 132:19–20 பார்க்கவும்).
இந்த அதிகாரத்தின் மூலம், சபைத் தலைவர்கள் சபையின் அனைத்து ஆவிக்குரிய பணிகளையும் வழிநடத்துகிறார்கள் மற்றும் நிர்வகிக்கிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:18 பார்க்கவும்).
பிணையத் தலைவரே பிணையத்தில் பிரதான ஆசாரியன் ஆவார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:8, 10; இந்தக் கையேட்டில் அத்தியாயம் 6ஐயும் பார்க்கவும்). ஆயர் தொகுதியில் தலைமை தாங்கும் ஆசாரியராக உள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:17 பார்க்கவும்; இந்த கையேட்டில் அத்தியாயம் 7ஐயும் பார்க்கவும்).
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அலுவல்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவலுக்கு, 8.1ஐப் பார்க்கவும்.
3.3.2
ஆரோனிய ஆசாரியத்துவம்
ஆரோனிய ஆசாரியத்துவம் என்பது “…மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் ஒரு இணைப்பு” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:14). இது உள்ளடக்கியுள்ள திறவுகோல்கள்:
-
தேவதூதர்களின் ஊழியம்.
-
மனந்திரும்புதலின் சுவிசேஷம்.
-
பாவ மன்னிப்புக்கான ஞானஸ்நானம் உட்பட வெளிப்புற நியமங்களை நிர்வகித்தல்.
(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1; 84:26–27; 107:20 பார்க்கவும்.)
ஆயர் தொகுதியில் உள்ள ஆரோனிய ஆசாரியத்துவத்தின் தலைவராக உள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:15 ஐப் பார்க்கவும்).
ஆரோனிய ஆசாரியத்துவத்தின் அலுவல்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தகவலுக்கு, 10.1.3 ஐப் பார்க்கவும்.
3.4
ஆசாரியத்துவ அதிகாரம்
ஆசாரியத்துவ அதிகாரம் என்பது தேவனுக்கு பிரதிநிதியாக இருப்பதற்கும் அவருடைய நாமத்தில் செயல்படுவதற்குமான அங்கீகாரமாகும். சபையில், ஆசாரியத்துவத்தின் அனைத்து அதிகாரங்களும் ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
3.4.1
ஆசாரியத்துவ திறவுகோல்கள்
ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் தேவனின் பிள்ளைகளுக்காக ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துவதை வழிநடத்துவதற்கான அதிகாரமாகும்.
3.4.1.1
ஆசாரியத்துவத் திறவுகோல்களைத் தரித்தவர்கள்
கர்த்தர் தம்முடைய ஒவ்வொரு அப்போஸ்தலர்கள் மீதும் பூமியில் உள்ள தேவனுடைய ராஜ்யத்திற்குரிய அனைத்து திறவுகோல்களையும் அருளியிருக்கிறார். சபையின் தலைவரான மூத்த உயிரோடிருக்கும் அப்போஸ்தலரே, அந்த ஆசாரியத்துவத் திறவுகோல்கள் அனைத்தையும் செயல்படுத்த பூமியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 81:1–2; 107:64–67, 91–92; 132:7 பார்க்கவும்) .
சபையின் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், ஆசாரியத்துவத் தலைவர்களுக்கு திறவுகோல்கள் வழங்கப்படுகின்றன, இதனால் அவர்கள் தங்கள் பொறுப்புகளில் தலைமை தாங்க முடியும். இந்த தலைவர்கள்:
-
பிணைய மற்றும் சேகர தலைவர்கள்
-
ஆயர்கள் மற்றும் கிளைத் தலைவர்கள்
-
மெல்கிசேதேக்கு மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவ குழும தலைவர்கள்
-
ஆலய தலைவர்கள்
-
ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய பயிற்சி மையத்தின் தலைவர்கள்.
இந்த தலைவர்கள் தங்கள் அழைப்புகளுக்கு பணிக்கப்படும் போது ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுகிறார்கள்.
உள்ளூர் ஆசாரியத்துவ தலைவர்கள் அல்லது சபை அமைப்புகளின் தலைவர்களுக்கு ஆலோசகர்கள் உட்பட மற்றவர்களுக்கு ஆசாரியத்துவ திறவுகோல்கள் வழங்கப்படுவதில்லை. ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சபை அமைப்பின் தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள் ( 4.2.4 பார்க்கவும்).
3.4.1.2
கர்த்தரின் பணியின் முறை
ஆசாரியத்துவத் திறவுகோல்கள் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான பணி ஒரு ஒழுங்கான முறையில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கின்றன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:11; 132:8 ஐப் பார்க்கவும்). ஆசாரியத்துவ திறவுகோல்களை தரித்திருப்பவர்கள் தங்கள் பொறுப்புகளுக்குள் கர்த்தருடைய பணியை வழிநடத்துகிறார்கள். இந்த தலைமைதாங்கும் அதிகாரம் தலைவரின் அழைப்பின் குறிப்பிட்ட பொறுப்புகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆசாரியத்துவத் தலைவர்கள் தங்கள் அழைப்புகளிலிருந்து விடுவிக்கப்படும்போது, அவர்கள் அதற்குமேலும் இந்தத் திறவுகோல்களை தரித்திருப்பதில்லை.
3.4.2
ஆசாரியத்துவம் அருளுதல் மற்றும் நியமனம்
ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஆரோனிய ஆசாரியத்துவம் மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தகுதியுள்ள ஆண் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:14-17 ஐப் பார்க்கவும்). பொருத்தமான ஆசாரியத்துவம் அருளப்பட்ட பிறகு, அவர் அந்த ஆசாரியத்துவத்தில் உள்ள உதவிக்காரன் அல்லது மூப்பர் போன்ற ஒரு பதவிக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் அந்த அலுவலின் உரிமைகள் மற்றும் கடமைகளின்படி ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துகிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:99 பார்க்கவும் ).
ஆசாரியத்துவம் அருளுதல் மற்றும் நியமனம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, 8.1.1 மற்றும் 18.10 ஐப் பார்க்கவும்.
3.4.3
சபையில் சேவை செய்ய ஆசாரியத்துவ அதிகாரத்தை அளித்தல்
3.4.3.1
பணித்தல்
ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆண்களும் பெண்களும் பணிக்கப்பட்டால், அந்த அழைப்பில் செயல்பட அவர்களுக்கு தேவனிடமிருந்து அதிகாரம் வழங்கப்படுகிறது. அவர்கள் அழைப்பிலிருந்து விடுவிக்கப்படும்போது, அதனுடன் தொடர்புடைய அதிகாரம் அவர்களிடம் இருக்காது.
சேவை செய்ய பணிக்கப்பட்ட அனைத்து சபை உறுப்பினர்களுக்கும் தெய்வீக அதிகாரம் மற்றும் அவர்களின் அழைப்புகளில் செயல்பட பொறுப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக:
-
தொகுதி ஒத்தாசை சங்கத்தின் தலைவராக ஆயரால் அழைக்கப்பட்டு பணிக்கப்பட்ட ஒரு பெண், தொகுதியில் உள்ள ஒத்தாசை சங்கத்தின் பணிகளை வழிநடத்தும் அதிகாரம் பெற்றவர்.
அழைக்கப்பட்ட மற்றும் பணிக்கப்பட்ட அனைவரும் அவர்களுக்கு தலைமை தாங்குபவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேவை செய்கிறார்கள் ( 3.4.1.2 பார்க்கவும்).
3.4.3.2
பணி
தலைமை தாங்கும் சபைத் தலைவர்கள் பணி மூலம் அதிகாரத்தை வழங்கலாம். ஆண்களும் பெண்களும் இந்தப் பணிகளைப் பெறும்போது, அவர்கள் செயல்படுவதற்கு தேவனிடமிருந்து அதிகாரம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக:
-
பிரதான தலைமையும் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமமும் எழுபதின்மருக்கு அதிகாரத்தை வழங்குகின்றனர். அவர்கள் பிரதேசங்களை நிர்வகிக்கவும் பிணைய மாநாடுகளுக்கு தலைமை தாங்கவும் பணிக்கப்படுகிறார்கள்.
-
ஊழியம் செய்யும் சகோதரர்களாகவும் ஊழியம் செய்யும் சகோதரிகளாகவும் சேவை செய்ய சபை உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பணித்தல் மூலம் கொடுக்கப்படும் அதிகாரமானது, குறிப்பிட்ட பொறுப்புகள் மற்றும் பணியின் காலத்திற்கு மட்டுமே.
3.4.4
ஆசாரியத்துவ அதிகாரத்தை நீதியாகப் பயன்படுத்துதல்
இந்த அதிகாரத்தை நீதியாக மட்டுமே பயன்படுத்த முடியும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:36 ஐப் பார்க்கவும்). இது ஊக்கத்தாலும், நீடிய சாந்தத்தாலும், மென்மை, சாந்தம், அன்பு மற்றும் தயவு ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:41-42 ஐப் பார்க்கவும்).
ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்க மாட்டார்கள். அதை அவர்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதில்லை.
3.5
ஆசாரியத்துவ வல்லமை
ஆசாரியத்துவ வல்லமை என்பது தேவன் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கும் வல்லமை. தேவனின் ஆசாரியத்துவ வல்லமை சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பெண் மற்றும் ஆண், அவர்கள் அவருடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது அவர்கள் மீது இறங்குகிறது. ஆசாரியத்துவ நியமங்களைப் பெறும்போது உறுப்பினர்கள் இந்த உடன்படிக்கைகளைச் செய்கிறார்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–20 பார்க்கவும்.)
உறுப்பினர்கள் பெறக்கூடிய ஆசாரியத்துவ வல்லமையின் ஆசீர்வாதங்கள் பின்வருபவை:
-
அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல்.
-
குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வாறு சேவை செய்வது என்பதை அறிய உணர்த்துதல்.
-
நிலைத்திருக்கவும் சவால்களை மேற்கொள்ளவும் வலிமை.
-
அவர்களின் திறன்களை சிறப்பாக்க ஆவியின் வரங்கள்.
-
அவர்கள் நியமிக்கப்பட்ட, பணிக்கப்பட்ட அல்லது செய்ய நியமிக்கப்பட்ட பணியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அறிய வெளிப்படுத்துதல்.
-
இயேசு கிறிஸ்து மற்றும் பரலோக பிதா போல் ஆக உதவி மற்றும் பலம்.
3.5.1
உடன்படிக்கைகள்
உடன்படிக்கை என்பது தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பரிசுத்தமான வாக்குறுதியாகும். தேவன் உடன்படிக்கைக்கான நிபந்தனைகளை வழங்குகிறார், அவருடைய பிள்ளைகள் அந்த நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொள்கிறார்கள். தம்முடைய பிள்ளைகள் உடன்படிக்கையை நிறைவேற்றும்போது அவர்களை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்களிக்கிறார்.
தங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் இறுதிபரியந்தம் நிலைத்திருக்கும் அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் (2 நேபி 31:17–20; கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 14:7 பார்க்கவும்).
பெற்றோர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் பிறர், தனிநபர்கள் சுவிசேஷத்தின் நியமங்களைப் பெறும்போது உடன்படிக்கைகளைச் செய்ய ஆயத்தப்பட உதவுகிறார்கள். அந்த நபர் அவர் அல்லது அவள் செய்யும் உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்வதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். ஒரு நபர் ஒரு உடன்படிக்கை செய்த பிறகு, அவர்கள் அதை கடைபிடிக்க அவருக்கு உதவுகிறார்கள். (மோசியா 18:8–11, 23–26 பார்க்கவும்.)
3.5.2
நியமங்கள்
ஒரு நியமம் என்பது ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தால் செய்யப்படும் ஒரு பரிசுத்தமான செயலாகும்.
பல நியமங்களில், தனிநபர்கள் தேவனுடன் உடன்படிக்கை செய்கிறார்கள். உதாரணங்களில் ஞானஸ்நானம், திருவிருந்து, தரிப்பித்தல் மற்றும் திருமண முத்தரித்தல் நியமம் ஆகியவை அடங்கும்.
இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான நியமங்கள் நித்திய ஜீவனுக்கு இன்றியமையாதவை. மேலும் தகவலுக்கு, 18.1 ஐப் பார்க்கவும்.
3.6
ஆசாரியத்துவம் மற்றும் வீடு
தங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடிக்கும் அனைத்து சபை உறுப்பினர்களும், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள், தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பலப்படுத்த தங்கள் வீடுகளில் தேவனின் ஆசாரிய வல்லமையால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் (3.5 பார்க்கவும்). இந்த வல்லமை உறுப்பினர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்பங்களிலும் தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான பணியைச் செய்ய உதவும் (2.2 பார்க்கவும்).
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தை தரித்திருக்கும் ஆண்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல், குணப்படுத்துதல் மற்றும் ஆறுதல் வழங்க ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை வழங்க முடியும். தேவைப்படும்போது, சபை உறுப்பினர்கள் இந்த ஆசீர்வாதங்களை பிற குடும்ப உறுப்பினர்கள், ஊழியம் செய்யும் சகோதரர்கள் அல்லது உள்ளூர் சபைத் தலைவர்களிடமிருந்தும் பெறலாம்.