பொது மாநாடு
கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்புதல்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்புதல்

கிறிஸ்துவுடனான உடன்படிக்கை உறவின் அஸ்திவாரத்தின் மீது நம் வீடுகளைக் கட்டும்போது, கிறிஸ்துவின் கோட்பாட்டை நாம் நம்புகிறோம்.

என் மனக்கண்ணில், வயதான தீர்க்கதரிசி நேபியை அவனது மேசையில் பார்க்கிறேன், அவன் முன் விரிக்கப்பட்ட தங்கத் தகடுகள், கையில் அவனது எழுத்தாணி.

நேபி தனது கடைசி பதிவேட்டை பொறிப்பதை முடிக்கும் பணியில் இருந்தான். அவன் எழுதினான், “இப்பொழுது, என் பிரியமான சகோதரரே, நான் என் வார்த்தைகளை முடித்துக்கொள்கிறேன்.”1 ஆனால் விரைவில், ஆவியானவர் நேபியை தனது பதிவுக்குத் திரும்பி ஒரு முடிவுரை செய்தியை எழுதும்படி வற்புறுத்தினார். பரிசுத்த ஆவியின் வல்லமை வாய்ந்த செல்வாக்கின் கீழ், நேபி தனது எழுத்தாணியை மீண்டும் கையில் எடுத்து எழுதினான், “ஆகையால், கிறிஸ்துவின் உபதேசங்களைக் குறித்தும் சில வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர, நான் எழுதிய காரியங்கள் எனக்குப் போதுமானவைகளாக இருக்கின்றன … ஆதலால், கிறிஸ்துவின் கோட்பாட்டைக் குறித்து நான் பேச வேண்டும்.”2

அந்த “சில வார்த்தைகளுக்காகவும்”3 மற்றும் அவைகளை எழுதும்படி நேபியிடம் ஆவியானவரின் வற்புறுத்தலுக்காகவும் நாம் எவ்வளவு நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவின் கோட்பாட்டைப்பற்றிய நேபியின் உரை, அதை ருசிப்பவர்களுக்கு மதிப்பிட முடியாத பொக்கிஷமாகும். அதில் இரட்சகரின் ஞானஸ்நானத்தைப்பற்றிய4 தரிசனம் மற்றும் குமாரனின் குரல் உள்ளது, அவரைப் பின்பற்றவும்,5 “[அவர்] செய்ததாக [நாம்] கண்ட காரியங்களைச் செய்ய அனைவரையும் அழைக்கிறது.”6 கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டு, தங்கள் பாவங்களுக்காக உண்மையாக மனந்திரும்பி, இரட்சகரைப் பின்தொடர்ந்து ஞானஸ்நானம் பெறுபவர்களுக்கு நேபியின் சாட்சி, “பரிசுத்த ஆவியானவரைப் பெறுவீர்கள், ஆம் … அக்கினியாலும், பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் வரும்.”7 சாட்சி கூறும் பிதாவின் குரலையும் நாம் கேட்கிறோம்: “ஆம், எனக்குப் பிரியமானவரின் வார்த்தைகள் சத்தியமும் உண்மையுமானவை. முடிவுபரியந்தமும் நிலை நிற்பவனே, இரட்சிக்கப்படுவான்.”8

தலைவர் ரசல் எம். நெல்சன் ஒருமுறை கிறிஸ்துவின் கோட்பாட்டின் பிரதான முக்கியத்துவத்தை புதிதாக அழைக்கப்பட்ட ஊழியத் தலைவர்களிடம் வலியுறுத்தினார்: “எல்லாவற்றையும் விட, நமது ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டை தங்கள் இருதயங்களில் பொறிக்க வேண்டும், அவர்களின் எலும்புகளின் மஜ்ஜையில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ”9

எனது சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டின் ஐந்து முக்கிய கூறுகளை சுருக்கமாகக் கூறுகிறது. அது கூறுகிறது, “இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் அவருடைய பாவநிவர்த்தி, மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதன் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பெறுவதற்கு மற்றவர்களை கிறிஸ்துவிடம் வரும்படி [நாம்] அழைக்கிறோம்.”10

ஆனால் கிறிஸ்துவின் கோட்பாட்டின் முக்கியத்துவம் ஊழியக்காரர்களுக்கு மட்டுமல்ல! மேலும் அதன் ஐந்து முக்கிய கூறுகளை சுருக்கமாக மீண்டும் கூறுவதை விட இது மிகவும் ஆழமானது. இது சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்தை உள்ளடக்கியது. இது நித்திய ஜீவனுக்கான மாபெரும் திட்டம்.

நமது எலும்புகளின் மஜ்ஜையில் கிறிஸ்துவின் கோட்பாடு வேரூன்றியிருப்பதற்கான தலைவர் நெல்சனின் அழைப்பை நாம் ஏற்க வேண்டுமானால், படிப்பு, ஜெபம், விசுவாச ஜீவியம் மற்றும் அன்றாட மனந்திரும்புதல் மூலம் நாம் அவ்வாறு செய்ய வேண்டும். கிறிஸ்துவின் கோட்பாட்டை “[நம்] இருதய[ங்களா]மாகிய சதையான பலகைகளிலேயும்” தங்கத் தகடுகளில் நேபியால் பொறிக்கப்பட்டதைப் போல ஆழமாகவும் நிரந்தரமாகவும் பொறிக்க பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்க வேண்டும்.11

கடந்த அக்டோபரில், தலைவர் நெல்சன் கேட்டார், “உலகத்தை வெல்வது என்றால் என்ன?” “மனிதர்களின் தத்துவங்களை விட கிறிஸ்துவின் கோட்பாட்டை ”“நம்புவது” என்று அவர் கூறினார்.12

நம்பிக்கை என்ற சொல் “ஒருவரின் அல்லது ஏதோவொன்றின் தன்மை, திறன், வலிமை அல்லது உண்மையின் மீதான உறுதியான நம்பிக்கை” என வரையறுக்கப்பட்டுள்ளது.13 அந்த ஒருவர் இயேசு கிறிஸ்து, மற்றும் அந்த ஒன்று அவருடைய கோட்பாடு.

கிறிஸ்துவின் கோட்பாட்டை நாமாகவே நம்புவது எப்படி நம் வாழ்க்கையை மாற்றும்?

நாம் கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பினால், கிறிஸ்துவின் ஒவ்வொரு வார்த்தையின்படியும் வாழும் அளவுக்கு கிறிஸ்துவை நம்புவோம்.14 இயேசு கிறிஸ்து, 15 அவருடைய ஊழியம், அவருடைய போதனைகள் மற்றும் அவரது எல்லையற்ற பாவநிவர்த்தி ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் படிப்போம். அந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட அவரது வாக்களிப்பு மற்றும் நிபந்தனைகளை நாம் படிப்போம்.16 நாம் படிக்கும்போது, கர்த்தரிடம் அதிக அன்பினால் நிரப்பப்படுவோம்.

நாம் கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பினால், ஒவ்வொரு நாளும் நமது பரலோக பிதாவை பணிவான, இரகசிய ஜெபத்தில் அணுகுவோம், அங்கு அவருடைய குமாரனின் பரிசுக்காகவும் நமது ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றியை வெளிப்படுத்தலாம்.17 நாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்படுத்தும் தோழமைக்காக,18 அவரது சித்தத்தை நம்முடையதோடு இணைக்க,19 நமது உடன்படிக்கைகள் குறித்து சிந்திக்கவும் மற்றும் அவற்றைக் கைக்கொள்ள நமது ஒப்புக் கொடுத்தலை புதிப்பிக்கவும் நாம் ஜெபிக்கலாம்.20 நம்முடைய தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களை ஆதரிக்கவும் அன்பை வெளிப்படுத்தவும்,21 மன்னிப்பின் தூய்மைப்படுத்தும் வல்லமைக்காக ஜெபிக்க வேண்டும் 22 மற்றும் சோதனையை எதிர்க்கும் பெலனுக்காக நாம் ஜெபிக்கலாம்.23 உங்கள் வாழ்க்கையில் ஜெபத்திற்கு முன்னுரிமை அளிக்க நான் உங்களை அழைக்கிறேன், தேவனுடனான உங்கள் தொடர்பை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் தேடுங்கள்.

நாம் கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பினால், உலகின் பளபளப்பான பொருட்களை ஒதுக்கி வைப்போம், இதனால் உலக மீட்பர் மீது கவனம் செலுத்த முடியும்.24 சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவோம் அல்லது அகற்றுவோம்; இணைய விளையாட்டுகள்; வீணான, அதிகப்படியான அல்லது பொருத்தமற்ற பொழுதுபோக்கு; இந்த உலகின் பொக்கிஷங்கள் மற்றும் மாயைகளின் கவர்ச்சி; மற்றும் தவறான மரபுகள் மற்றும் மனிதர்களின் தவறான தத்துவங்களுக்கு இடம் கொடுக்கும் மற்ற நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவோம் அல்லது அகற்றுவோம். கிறிஸ்துவில் மட்டுமே நாம் உண்மையையும் நீடித்த நிறைவையும் காண்கிறோம்.

உண்மையான மனந்திரும்புதல்25 நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியான 26 பகுதியாக மாறும், பாவங்களிலிருந்து மன்னிக்கப்படவும், கிறிஸ்துவின் சாயலில் மாற்றப்படவும்.27 கிறிஸ்துவில் விசுவாசத்துடன் மனந்திரும்புதல் கிறிஸ்துவின் பாவநிவிர்த்திக்கான வழியை நமக்கு வழங்குகிறது. இரட்சகர் மன்னிக்கும்போது, அவர் “[நம்மை] பாவத்திலிருந்து சுத்தப்படுத்துவதை விட அதிகமாக செய்கிறார். அவர் [நமக்கு] புதிய பலத்தையும் தருகிறார்,” என்று தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்.28 தேவ கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், நம் வாழ்வின் நித்திய நோக்கத்தை நிறைவேற்றவும் நம் ஒவ்வொருவருக்கும் இந்த வலிமை தேவை.

இயேசுவிலும் அவருடைய கோட்பாட்டிலும் நாம் பலத்தைக் காண்கிறோம். அவர் சொன்னார், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இதுவே என் கோட்பாடு. இதின்மேல் கட்டுகிற எவனும் என் கன்மலையின்மேல் கட்டுகிறான். பாதாளத்தின் வாசல்கள் அவனை மேற்கொள்ளாது.”29

விசுவாசமுள்ள மக்களின் வாழ்வில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதைக் காண்கிறோம். சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் டிராவிஸ் மற்றும் கேசியை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் 2007-ல் சிவில் திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், டிராவிஸ் சபையில் உறுப்பினராக இல்லை. கேசி, ஒரு சுறுசுறுப்பான பிற்காலப் பரிசுத்தவான் இல்லத்தில் வளர்க்கப்பட்டாலும், பதின்வயதில் இருந்த நம்பிக்கையிலிருந்து விலகி, தன் அடித்தளத்திலிருந்து விலகிச் சென்றாள்.

2018-ம் ஆண்டில், டிராவிஸ் ஊழியக்காரர்களைச் சந்தித்தார், மார்ச் 2019-ல் ஞானஸ்நானம் பெற்றார். கேசிக்கு டிராவிஸ் ஒரு ஊழியக்காரர் ஆனார், அவர் வாழ்க்கையை மாற்றும் மாற்றத்தையும் அனுபவித்தார். செப்டம்பர் 2020 அன்று ஆலயத்தில் அவர்கள் முத்திரிக்கப்பட்டனர். ஞானஸ்நானம் பெற்ற சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிராவிஸ் ஆயத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார்.

டிராவிஸுக்கு ஒரு அரிய நோய் உள்ளது, இது அவரது உள் உறுப்புகளில் தொடர்ந்து கட்டிகளை உருவாக்குகிறது. மீண்டும் மீண்டும் வரும் கட்டிகளை அகற்ற பல அறுவை சிகிச்சைகள் செய்தும் நோய் குணமாகவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, டிராவிஸ் 10 வருடங்களுக்கும் குறைவாகவே வாழ முடியும் என்று கூறப்பட்டது.

கேசிக்கு ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா உள்ளது, இது ஒரு அரிய மரபணு நோயாகும், இது முழுமையான குருட்டுத்தன்மை ஏற்படும் வரை பார்வை களத்தின் மீளமுடியாத சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

கேசி தனது எதிர்காலத்தைப்பற்றி பேசினாள். அவள் விதவையாகவும், பார்வையற்றவளாகவும், நிதி உதவியின்றி, வளர்ந்து வரும் நான்கு குழந்தைகளை வளர்க்க தனியாகவும் இருக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்று அவள் எதிர்பார்த்தாள். இவ்வளவு இருண்ட எதிர்காலத்தை எப்படி கையாள முடியும் என்று கேசியிடம் கேட்டேன். அவள் சமாதானமாகச் சிரித்துவிட்டு, “என் வாழ்நாளில் நான் இதைவிட மகிழ்ச்சியாகவோ அல்லது அதிக நம்பிக்கையோடும் இருந்ததில்லை. ஆலயத்தில் நாங்கள் பெற்ற வாக்குறுதிகளை நாங்கள் கடைபிடிக்கிறோம்.”

டிராவிஸ் இப்போது ஆயர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவருக்கு மற்றொரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் நம்பிக்கையுடனும் சமாதானமாகவும் இருக்கிறார். கேசியின் பார்வை மோசமாகிவிட்டது. அவளிடம் இப்போது ஒரு வழிகாட்டும் நாய் உள்ளது, வாகனம் ஓட்ட முடியவில்லை. ஆனால் அவள் திருப்தியுடன் இருக்கிறாள், தனது குழந்தைகளை வளர்த்து, இளம் பெண்கள் தலைமையில் ஆலோசகராக பணியாற்றுகிறாள்.

டிராவிஸ் மற்றும் கேசி பாறையில் தங்கள் வீட்டைக் கட்டியுள்ளனர். டிராவிஸ் மற்றும் கேசி கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்புகிறார்கள் மற்றும் தேவன் “[அவர்களது] துன்பங்களை [அவர்களது] ஆதாயத்திற்காக அர்ப்பணிப்பார்” என்ற வாக்குறுதியை நம்புகிறார்கள்.30 தேவனின் பரிபூரண திட்டத்தில், கிறிஸ்துவில் விசுவாசத்துடன் துன்பப்படுவது, கிறிஸ்துவில் நாம் பூரணப்படுத்தப்படுவதோடு இணைக்கப்பட்டுள்ளது.31. உவமையில் வரும் புத்திசாலி மனிதன் பாறையில் தன் வீட்டைக் கட்டியதைப் போல,32 மழை பெய்து, வெள்ளம் வந்து, காற்று வீசியது, டிராவிஸ் மற்றும் கேசி கட்டிக்கொண்டிருந்த வீட்டின் மீது மோதி, அது விழவில்லை, ஏனென்றால் அதற்கு ஒரு பாறை அடித்தளமாக இருக்கும்.33

நம் வாழ்வில் மழை வெள்ளம் மற்றும் காற்று வருவதற்கான சாத்தியக்கூறுகளை இயேசு பேசவில்லை; புயல்கள் எழும் என்பது உறுதி என்று பேசினார். உவமையில் உள்ள மாற்றம், புயல்கள் வருமா என்பது அல்ல, ஆனால் அவர் போதித்தவற்றைக் கேட்கவும் செய்யவும், அவருடைய அழைப்புக்கு நாம் எவ்வாறு பதிலளித்தோம், அவர் பேசுவதைக் கேட்டு செய்தோம் என்பதும்தான்.34 பிழைத்திருக்க வேறு எந்த வழியுமில்லை.

கிறிஸ்துவுடனான உடன்படிக்கை உறவின் அஸ்திபாரத்தின் மீது நம் வீடுகளைக் கட்டும்போது, கிறிஸ்துவின் கோட்பாட்டை நாம் நம்புகிறோம், நித்திய ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தைப் பெறுவோம், நமக்கு அவரது நித்திய ஜீவனின் வாக்குறுதி உண்டு. கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பும் மக்கள் கிறிஸ்துவில் உறுதியுடன் முன்னேறி, இறுதிவரை நிலைத்திருப்பார்கள். பரலோக இராஜ்ஜியத்தில் இரட்சிக்கப்பட வேறு வழி இல்லை.35

உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிச்சயத்தைக் குறித்து நான் எனது தனிப்பட்ட சாட்சியளிக்கிறேன். தேவன் உலகத்தை மிகவும் நேசித்ததால் அவர் தம்முடைய குமாரனை, நம்மை பாவத்திலிருந்து மீட்க,36 துக்கத்திலிருந்து நம்மைக் குணப்படுத்த அனுப்பினார் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.37 அவர் நம் காலத்தில் தேவனின் தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சனை அழைத்துள்ளார், அவர் மூலம் பேசி நம்மை வழிநடத்துகிறார் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பவும், மீட்பரின் கன்மலையின் மீது உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பவும் நான் உங்களை முழு மனதுடன் அழைக்கிறேன். அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. 2 நேபி 30:18.

  2. 2 நேபி 31:2; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  3. 2 நேபி 31–32 பார்க்கவும்.

  4. 2 நேபி 31:7–8 பார்க்கவும்.

  5. 2 நேபி 31:10 பார்க்கவும்.

  6. 2 நேபி 31:12.

  7. 2 நேபி 31:13.

  8. 2 நேபி 31:15.

  9. In Marianne Holman Prescott, “Elder Russell M. Nelson: ‘Epistles of the Lord,’Church News, July 1, 2015, thechurchnews.com.

  10. Preach My Gospel: A Guide to Missionary Service (2018), 1. “ஊழிய நோக்கம்” கிறிஸ்துவின் கோட்பாட்டின் ஐந்து தூண்களை பிரதிபலிக்கிறது. 2 நேபி 31–32-ன் போதனை கிறிஸ்துவின் கோட்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் பல முக்கியமான கூறுகளை உள்ளடக்கியது, அதாவது கிறிஸ்துவின் வார்த்தையை உறுதியாகப் பற்றியது (2 நேபி 31:19–20; 32:3 பார்க்கவும்); கட்டளைகளைக் கைக்கொள்ளுதல் (2 நேபி 31:7, 10, 18 பார்க்கவும்); ஜெபம் ( 2 நேபி 32:8–9 பார்க்கவும்); கிறிஸ்துவின் பாவநிவாரண பலி மட்டுமே நாம் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி என்ற கோட்பாடு அதன் மையத்தில் உள்ளது.(2 நேபி 31:21 பார்க்கவும்). கிறிஸ்துவின் கோட்பாட்டின் கூறுகள் வேதம் முழுவதும் காணப்படுகின்றன, இருப்பினும் கோட்பாட்டின் மிகவும் முழுமையான கலந்துரைடல்கள் காணப்படுவது 2 நேபி 31:5–21; 3 நேபி 11:31–39; 3 நேபி 27:13–21; மற்றும் மோசே 6:59–62.

  11. 2 கொரிந்தியர் 3:3.

  12. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 96; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  13. Merriam-Webster.com Dictionary, “trust.”

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:44 பார்க்கவும்.

  15. மத்தேயு 11:29 பார்க்கவும்.

  16. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 39: “We begin by learning about Him. பார்க்கவும். இரட்சகரின் ஊழியம் மற்றும் பணியைப்பற்றி நாம் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ அவ்வளவு அதிகமாக அவருடைய கோட்பாட்டையும் அவர் நமக்காக என்ன செய்தார் என்பதையும் புரிந்துகொள்கிறோம். … தலைப்புவாரி வழிகாட்டியில் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய வேதப்பூர்வ மேற்கோள்கள் [உங்கள்] தனிப்பட்ட முக்கிய பாடத்திட்டமாக மாற அனுமதிக்க நான் [உங்களை அழைக்கிறேன்].”

  17. மத்தேயு 6:6–13 பார்க்கவும்.

  18. 3 நேபி 19:9 பார்க்கவும்.

  19. 2 நேபி 4:35; 3 நேபி 19:24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:30 பார்க்கவும்.

  20. Russell M. Nelson, “The Temple and Your Spiritual Foundation,” Liahona, Nov. 2021, 95 பார்க்கவும்: “நீங்கள் செய்த உடன்படிக்கைகளை உங்கள் மனதில் ஒத்திகை பார்க்க ஒரு வழக்கமான நேரத்தை அமைக்க உங்களை அழைக்கிறேன்”

  21. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:22 பார்க்கவும்.

  22. மோசியா 4:10 பார்க்கவும்.

  23. மத்தேயு 6:13 பார்க்கவும்.

  24. மத்தேயு 6:19–21, 33 பார்க்கவும்.

  25. பென்யமீன் ராஜா உண்மையான மனந்திரும்புதலை விவரித்தான்: “மறுபடியும், உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவைகளை விட்டுவிட்டு, தேவனுக்கு முன்பாக உங்களையே தாழ்த்தவேண்டுமென விசுவாசியுங்கள்; உண்மையான இருதயத்தோடு அவர் உங்களை மன்னிக்கும்படி கேளுங்கள்; இப்பொழுதும், இவைகள் யாவையும் நீங்கள் விசுவாசிப்பீர்களெனில் அவைகளை செயலாக்கவும் பார்த்துக்கொள்ளுங்கள்.” (மோசியா 4:10).

  26. Russell M. Nelson, “The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 98–99: “Start today to experience the joy of putting off the natural man பார்க்கவும். இரட்சகர் நம்மை எப்போதும் நேசிக்கிறார், ஆனால் விசேஷமாக நாம் மனந்திரும்பும்போது. … தினமும் மனம்மாறுவதன் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.”

  27. ஆல்மா 5:14–15 பார்க்கவும்.

  28. Dallin H. Oaks, “Our Message for Missionaries” (worldwide missionary broadcast, Jan. 20, 2016); see also Dallin H. Oaks, “Sin and Suffering,” Ensign, July 1992, 73.

  29. 3 நேபி 11:39; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  30. 2 நேபி 2:2.

  31. எபிரெயர் 5:8–9 பார்க்கவும்.

  32. 3 நேபி 14:24–27 பார்க்கவும்.

  33. 3 நேபி 14:24–25 பார்க்கவும்.

  34. 3 நேபி 14:24 பார்க்கவும்.

  35. 2 நேபி 31:20-21 பார்க்கவும்.

  36. யோவான் 3:16–17 பார்க்கவும்.

  37. யோவான் 16:20 பார்க்கவும்.