பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ஏப்ரல் 2023 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, உங்கள் ஆதரித்தல் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் முன்மொழிதல் எனது சிலாக்கியம்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரித்தலை தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் உலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்களையும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

பின்வரும் பொது அதிகாரிகளின் எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2023 முதல் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவார்கள்: மூப்பர்கள் பெஞ்சமின் டி. ஹோயாஸ், ஜுவான் ஏ. உசேடா மற்றும் கஸுகிகோ யமஷிட்டா.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இந்த சகோதரர்களுக்கும், அவர்களது மனைவிகளுக்கும் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்: ஜே. கிமோ எஸ்ப்ளின் மற்றும் ஆலன் டி. பிலிப்ஸ்.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

இந்த ஆண்டு தங்கள் சேவையை நிறைவு செய்யும் ஏனைய பிரதேச எழுபதின்மர்களையும் நாங்கள் பாராட்டுதலோடு குறிப்பிடுகிறோம், அவர்களின் பெயர்களை சபை இணையதளத்தில் காணலாம்.

இந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக நன்றி தெரிவிக்க விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், இளம் ஆண்கள் பொது தலைமையின் முதல் மற்றும் இரண்டாவது ஆலோசகர்களாக இருந்த சகோதரர்கள் அஹ்மத் எஸ். கார்பிட் மற்றும் பிராட்லி ரே வில்காக்ஸ் ஆகியோரை விடுவிக்கிறோம்.

அவர்களது அர்ப்பணிப்புள்ள சேவைக்காக இந்த சகோதரர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவோர் அவ்வாறே தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2023 முதல் அமலுக்கு வரும் வகையில், இளம் பெண்கள் பொது தலைமையை பின்வருமாறு விடுவிக்கிறோம்: போனி ஹெச். கார்டன் தலைவராகவும் மிச்செல்லே டி. கிரேக் முதல் ஆலோசகராகவும், ரெபேக்கா எல் க்ரேவன் இரண்டாவது ஆலோசகராகவும்.

இச்சகோதரிகளுக்கு அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பொது அதிகாரி எழுபதின்மராக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: அஹ்மத் எஸ். கார்பிட், ராபர்ட் எம். டெய்ன்ஸ், ஜே. கிமோ எஸ்ப்ளின், கிறிஸ்டோஃப் ஜி. ஜிராட்-கேரியர் மற்றும் ஆலன் டி. பிலிப்ஸ்.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

மார்ச் 30, வியாழன் அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டங்களில் 61 புதிய பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், பின்னர் சபை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.

அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் புதிய இளம் பெண்கள் பொதுத்தலைமையாக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: எமிலி பெல்லி ஃப்ரீமேன் தலைவராகவும், தமரா வூட் ரூனியா முதல் ஆலோசகராகவும், ஆண்ட்ரியா முனோஸ் ஸ்பானாஸ் இரண்டாவது ஆலோசகராகவும்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இளம் ஆண்கள் பொதுத்தலைமையாக பின்வருவோரை நாங்கள் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: பிராட்லி ரே வில்காக்ஸ் முதல் ஆலோசகராகவும், மைக்கேல் டி. நெல்சன் இரண்டாவது ஆலோசகராகவும்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

இசாயாஸ் அல்கலா, ஜான் டி. அமோஸ், ஜானி ஓ. பாடூ, விக்டர் ஓ. பாஸி, அட்ரியன் பெட்ரிட்ஜ், ஏ. கௌல்லே பெஸெரா, கார்லோஸ் ஜி. கேன்டெரோ, எமர்சன் பி. கார்னவேல், ஆர்லாண்டோ ஏ. காஸ்டானோஸ், பன் ஹூச் எங், ஃபாலெச் யூ. பெர்னாண்டோ ஆர். கார்சியா, டோமஸ் கார்சியா, சி. ஆலன் கோல்டின், ஆரோன் டி. ஹால், டார்வின் டபிள்யூ. ஹால்வோர்சன், ஜெட் ஜே ஹான்காக், ஹென்றி ஹெர்ரேரா, ண்டலம்பா இலுங்கா, சாமுவேல் எம். டி. கொய்விஸ்டோ, கார்லோஸ் ஜே. லாண்டிகுவா, ஈஸ் லாண்டிகுவா . லார்சன், தாபோ லெபெதோவா, ஜி. கென்னத் லீ, இஸ்ரேல் மரின், வெய்ன் இ. மௌரர், லீ ஜி. மெக்கான் II, ராபர்ட் மெண்டன்ஹால், அட்ரியன் மெண்டஸ், சியாபோங்கா ம்கைஸ், ஜேவியர் எஃப். மோனெஸ்டெல், தாமஸ் பி. மோர்கன், ஜாரெட் வி. ஓர்ம்ஸ், . ரூடி பல்ஹுவா, ஆர்டுரோ டி பால்மீரி, கென்னத் பம்பு, ஹ்யூகோ ஓ. பனாமெனோ, கெவின் ஜே. பார்க்ஸ், பால் பிகார்ட், டேவிட் ஜே. பிக்கெட், மார்ட்டின் பில்கா, இரினியூ இ. பிராடோ, கிறிஸ்டோபர் ஆர். பிரைஸ், மிகுவல் ரிபீரோ, ஜேம்ஸ் என். , எட்வர்ட் பி. ரோவ், ராபர்ட் ஸ்வார்ட்ஸ், கிரிகோரி ஏ. ஸ்காட், டொமினிக் ஆர். செனெச்சல், கோஃபி ஜி. சோசு, மைக்கேல் பி. ஸ்ட்ராங், நித்ய குமார் சுந்தர்ராஜ், தாமஸ் ஏ. தாமஸ், அலெஜான்ட்ரோ எச். ட்ரெவினோ, நெஃபி எம். ட்ரூஜிலோ . உடீச்சி, பெர்னாண்டோ வால்டெஸ், ஹெல்டன் சி. வெச்சி, ப்ரெண்ட் பி. வார்டு மற்றும் டோமாசிட்டோ எஸ். ஜபாண்டா.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2023 அன்று விடுவிக்கப்பட்டனர்:

ரிச்சர்ட் கே. அஹட்ஜி, டுவான் டி. பெல், ஹூபர்மேன் பீன் ஐமே, வெக்டர் ஆர். கால்டெரான், மைக்கேல் ஜே. கார்ட்டர், டேனியல் கோர்டோவா, ஜான் என். கிரேக், வில்லியம் எச். கே. டேவிஸ், பெர்னாண்டோ பி. டெல் கார்பியோ, ரிச்சர்ட் ஜே. டிவ்ரீஸ், கைலர் ஜி. டொமிங்குவேஸ், டார்பன் எங்ப்ஜெர்க், கென்னத் ஜே. பிர்மஜ், எட்கர் புளோரஸ், சில்வியோ புளோரஸ், கார்லோஸ் ஏ. ஜெனாரோ, மார்க் ஏ. கில்மோர், செர்ஜியோ ஏ. கோமேஸ், ராபர்டோ கோன்சலஸ், விர்ஜிலியோ கோன்சலஸ், ஸ்பென்சர் ஆர். கிரிஃபின், மார்செல் குய், ஒலெக்ஸி எச். ஹக்கலென்கோ,மத்தேயு எஸ். ஹார்டிங், டேவிட் ஜே. ஹாரிஸ், கெவின் ஜே. ஹாத்வே, ஜோஸ் ஹெர்னாண்டஸ், க்ளென் எம். ஹோம்ஸ், ரிச்சர்ட் நீட்செல் ஹோல்சாபெல், ஓகெச்சுக்வு I. இமோ, மைக்கேல் டி. ஜோன்ஸ், பங்க்வே எஸ். கொங்கோலோ, ரிக்கார்டோ சி. லைட், அரேட்டெமியோ சி. மாலிகான், எட்கர் ஏ. மாண்டில்லா, லிங்கன் பி. மார்டின்ஸ், கார்ல் ஆர். ம ure ரர், டேனியல் எஸ். மெஹ்ர் II, க்ளென் டி. மெல்லா,டோமாஸ் எஸ். மெர்டேஜியா ஜூனியர், அல்லிஸ்டர் பி. ஒட்ஜர்ஸ், ஆர். ஜெஃப்ரி பார்க்கர், விக்டர் பி. பேட்ரிக், டெனிஸ் இ. பினெடா, ஹென்ரிக் எஸ். சிம்பிளிசியோ, ஜெஃப்ரி எச். சிங்கர், மைக்கேல் எல். ஸ்டேலி, ஜெஃப்ரி கே. வெட்செல், மைக்கேல் எஸ். வில்ஸ்டெட், மற்றும் டேவிட் எல். ரைட்.