“தலைவர்களுக்காக—ஆசிரியர்களை பயிற்றுவித்தலும் ஆதரித்தலும்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும் (2022)
“ஆசிரியர்களை பயிற்றுவித்தலும் ஆதரித்தலும்,” இரட்சகரின் வழியில் போதித்தல்
தலைவர்களுக்காக— ஆசிரியர்களை பயிற்றுவித்தலும் ஆதரித்தலும்
ஒரு தலைவராக, உங்கள் அமைப்பில் “புதிதாக அழைக்கப்பட்ட ஆசிரியர்களைச் சந்திக்கவும்” “அவர்களின் அழைப்புக்குத் தயாராக அவர்களுக்கு உதவவும்” உங்களுக்குப் பொறுப்பு உள்ளது. (General Handbook, 17.3, ChurchofJesusChrist.org). இந்த கூட்டங்கள் புதிய ஆசிரியர்களை அவர்களின் பரிசுத்தமான அழைப்புகளுக்கு அறிமுகப்படுத்தி, இரட்சகரின் வழியில் போதிப்பது என்றால் என்ன என்ற பார்வையுடன் அவர்களை ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். ஒரு தலைவராக, பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம் புதிய ஆசிரியர்களுக்கு சேவை செய்ய நீங்கள் உதவலாம்:
-
அவர்களின் அழைப்பில் இரட்சகர் அவர்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:78 பார்க்கவும்).
-
புதிய ஆசிரியர்களுக்கு இந்த ஆதாரத்தின் நகலைக் கொடுத்து, அவர்களின் கற்பித்தலில் அதன் கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேட அவர்களை ஊக்குவிக்கவும்.
-
உங்கள் அமைப்பைப்பற்றி புதிய ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
தேவைக்கேற்ப, புதிய ஆசிரியர்களுக்கு எந்த அறையில் கற்பிக்க வேண்டும், எந்தப் பாடத்தைத் தொடங்க வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களின் வகுப்பு மற்றும் வகுப்பு உறுப்பினர்களைப்பற்றி அவர்களுக்குத் தேவையான எந்த தகவலையும் வழங்கவும்.
-
அவர்களின் அழைப்பிற்கு நீங்கள் அவர்களுக்கு உதவலாம் என்பதை புதிய ஆசிரியர்களுக்கு விளக்கவும். தேவைப்பட்டால் வகுப்பறையிலும் மற்றும் கற்பித்தல் ஆதாரங்களைப்பெற ஆதரவையும் வழங்குங்கள்.
-
ஆசிரியர்களின் வகுப்புகளை அவ்வப்போது கவனிக்கவும், பரிசுத்த ஆவியின் தூண்டுதலின்படி கருத்துக்களை வழங்கவும்.
-
காலாண்டு ஆசிரியர் ஆலோசனைக்குழு கூட்டங்களில் பங்கேற்க ஆசிரியர்களை அழைக்கவும்.
ஆசிரியர்களின் சேவை முழுவதும், தொடர்ந்து ஆதரவளிக்க அவ்வப்போது அவர்களைச் சந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, ஒரு தலைவராக, இரட்சகரின் வழியில் போதித்தலின் கொள்கைகளைப்பற்றி கலந்துரையாட, வகுப்பிற்கு முன் அல்லது பின் ஆசிரியருடன் நீங்கள் சுருக்கமாக கலந்துரையாடலாம். ஆசிரியரிடம் அவர்கள் என்ன சிறப்பாகச் செய்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், எப்படி மேம்படுத்த விரும்புகிறார்கள் என்று கேளுங்கள். அவர்கள் செய்யும் சேவைக்கு தயவுடனும் நன்றியுடனும் அவர்களை ஊக்குவிக்கவும்.
ஆசிரியர் கற்பிப்பதை கவனித்து இந்த கலந்துரையாடலுக்கு நீங்கள் ஆயத்தமாகலாம். ஆசிரியரின் பலத்தை நன்கு புரிந்துகொள்ள நாடுங்கள், நீங்கள் ஆதரவை வழங்கக்கூடிய வழிகளைக் கண்டறியுங்கள். ஒரு ஆசிரியரின் பலத்தை கட்டியெழுப்புவது, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பது போலவே முக்கியமானது.