வேதபாட வகுப்பும் முதிர்வேதபாட வகுப்பும்
நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள் .


“நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்: வீட்டிலும் சபையிலும் கற்பிக்கிற அனைவருக்கும். (2022)

“நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள்,” இரட்சகரின் வழியில் போதித்தல்

படம்
கிணற்றடியில் பெண்ணிடம் இயேசு கிறிஸ்து பேசிக்கொண்டிருத்தல்

இரட்சகரை நம் முன்மாதிரியாகக் கொள்ளும்போது, அன்பு நம் கற்பித்தலுக்கான உந்துதலாக மாறுகிறது.

நீங்கள் கற்பிப்பவர்களை நேசியுங்கள் .

தனது பூலோகத்துக்குரிய ஊழியம் முழுவதும் இரட்சகர் செய்த அனைத்தும் அன்பினால் தூண்டப்பட்டது. கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக இருக்க நாம் முயற்சி செய்யும்போது, இதே அன்பினால் நாமும் நிரப்பப்பட முடியும் (யோவான் 13:34–35; மரோனி 7:47–48; 8:26 பார்க்கவும்). இரட்சகரின் அன்பு நம் இருதயங்களில் இருக்கும்போது, மற்றவர்கள் கிறிஸ்துவைப்பற்றிக் கற்றுக் கொள்ளவும், அவரண்டை வரவும் உதவும் எல்லா வழிகளையும் நாம் தேடுகிறோம். அன்பு நம் கற்பிப்பதற்கான உந்துதலாக மாறுகிறது.

நீங்கள் கற்பிப்பவர்களை நேசிக்க

  • தேவன் அவர்களைப் பார்க்கிற வழியில் கற்பவர்களைப் பாருங்கள்.

  • அவர்களைத் தெரிந்துகொள்ள நாடுங்கள், அவர்களின் சூழ்நிலைகள், தேவைகள் மற்றும் பெலன்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

  • பெயர் சொல்லி அவர்களுக்காக ஜெபியுங்கள்.

  • அனைவரும் மதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் மதிக்கப்படுகின்றன என்பதை அறிகிற, பாதுகாப்பான சூழலை உருவாக்குங்கள்.

  • உங்கள் அன்பை வெளிப்படுத்த பொருத்தமான வழிகளைக் கண்டு பிடியுங்கள்.

இரட்சகர் போதித்த ஒவ்வொருவரிடமும் தெய்வீகத் திறனை அவர் கண்டார்

எரிகோவில் உள்ள பெரும்பாலான மக்கள் சகேயுவைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அறிந்திருப்பதாக நினைத்தார்கள். அவன் ஒரு ஆயக்காரனாகவும், வரி வசூலிப்பவனாகவும், ஆயக்காரர்களின் தலைவனாகவும் இருந்தான், உண்மையில், அவன் ஒரு ஆஸ்திமானாக இருந்தான். தெளிவாக, அவன் ஒரு நேர்மையற்றவனாகவும் ஊழல்வாதியாகவும் இருக்கவேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இயேசு சகேயுவின் இருதயத்தைப் பார்த்தார், மரியாதைக்குரிய “ஆபிரகாமின் குமாரனாகப்” பார்த்தார் (லூக்கா 19:1–10 பார்க்கவும்). மக்களை அவர்கள் தோன்றியதைப் போலவே இரட்சகர் பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்களோ, அவர்கள் எப்படி ஆக முடியும் என்று பார்த்தார். சீமோன், அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் போன்ற மெருகூட்டப்படாத மீனவர்களில், அவர் தனது சபையின் எதிர்கால தலைவர்களைக் கண்டார். பயந்து துன்புறுத்துபவனான சவுலில், ராஜாக்கள் மற்றும் தேசங்களுக்கு முன்பாக அவருடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் “தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறதை,” அவர் கண்டார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:10–15 பார்க்கவும்). உங்களிடமும், நீங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு நபரிடமும், வரம்பற்ற ஆற்றலுடன் தேவனின் குமாரன் அல்லது குமாரத்தியை இரட்சகர் காண்கிறார்.

நீங்கள் கற்பிப்பவர்களில், உண்மையுள்ளவர்களாகவும், மனம் மாறியவர்களாகவும் தோன்றுபவர்களும், ஆர்வமில்லாதவர்களாகவும் அல்லது கலகக்காரர்களாகவும் தோன்றுபவர்களும் உங்களிடம் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் பார்ப்பதன் அடிப்படையில் மட்டுமே அனுமானங்களைச் செய்யாமல் கவனமாக இருங்கள். இரட்சகர் பார்க்கிற சிலவற்றை ஒவ்வொரு நபரிடமும் காண பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவ முடியும், மேலும் அவர் செய்யும் விதத்தில் அவர்களை நேசிக்கத் தொடங்க உங்களுக்கு உதவ முடியும்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: நீங்கள் கற்பிக்கும் ஒவ்வொரு நபரைப்பற்றியும் சிந்தித்துப் பாருங்கள், பரலோக பிதாவும் இயேசுவும் ஒவ்வொருவரையும்பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவனில் அல்லது அவளிடம் அவர்கள் என்ன பார்க்கக்கூடும்? இந்த எண்ணங்கள் அந்த நபருக்கு நீங்கள் கற்பிக்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கும்?

வேதங்களிலிருந்து: 1 சாமுவேல் 16:7; சங்கீதம் 8:4–5; ரோமர் 8:16–17; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–14

இரட்சகர் நம்மை அறிந்திருக்கிறார், நமது சூழ்நிலைகளை, தேவைகளை, பெலங்களை புரிந்திருக்கிறார்

சமாரியப் பெண் ஒரு சுவிசேஷ செய்தியைக் கேட்க கிணற்றுக்கு வரவில்லை. சிறிது தண்ணீர் எடுக்க அவள் வந்தாள். ஆனால் அவளது தாகம் சரீரரீதியான தாகத்தை விட அதிகமானது என்பதை இரட்சகரால் உணர முடிந்தது. நிலையற்ற உறவுகளுடன் ஒரு பிரச்சனையான கடந்த காலம் அவளுக்கிருந்தது என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, அவளுக்கு உடனடி ஆர்வமுள்ள சரீரரீதியான தேவையான, உயிர்காக்கும் தண்ணீரை இயேசு எடுத்து, “ஜீவத் தண்ணீர்” மற்றும் “நித்திய ஜீவனுக்கு” அவளுடைய ஆழ்ந்த ஆவிக்குரிய தேவைகளுடன் அதை இணைத்தார். அவர்களின் உரையாடலின் முடிவில், அவர் அவளை எவ்வளவு நன்றாக அறிந்திருந்தார் என்பதன் ஒரு பகுதியாக ஈர்க்கப்பட்டு, அந்தப் பெண் இயேசுவே கிறிஸ்து என்று தனிப்பட்ட முறையில் சாட்சியை பெற்றாள். “நான் செய்த எல்லாவற்றையும் [அவர்] எனக்குச் சொன்னார்,” என்றாள். “அவர் கிறிஸ்துதானோ?” (யோவான் 4:6–29 பார்க்கவும்).

கிறிஸ்துவைப் போன்ற ஆசிரியராக இருப்பதில், நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி அறிந்துகொள்வதும், அவர்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் அடங்கும். நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஆர்வம் காட்டலாம், மனதுருக்கம் காட்டலாம். அவர்களின் பின்னணிகள், தாலந்துகள், ஆர்வங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான வழிகளை நீங்கள் தேடலாம். அவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம், கவனமாகக் கேட்கலாம், கவனிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆவியானவர் மட்டுமே கொடுக்கக்கூடிய புரிதலுக்காக நீங்கள் ஜெபிக்கலாம். ஒரு நபரை நீங்கள் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தனிப்பட்ட அர்த்தத்தையும் வல்லமையையும் கண்டறிய அவருக்கு அல்லது அவளுக்கு உதவ முடியும். ஒரு நபரின் தாகத்தை ஒருமுறை நீங்கள் புரிந்துகொண்டவுடன், இரட்சகரின் ஜீவத்தண்ணீரால் அதை எவ்வாறு தணிப்பது என்பதை ஆவியானவர் உங்களுக்குக் கற்பிக்க முடியும்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: நீங்கள் கற்பிப்பவர்களைப்பற்றி உங்களுக்கு ஏற்கனவே என்ன தெரியும்? அவர்களுக்கு எது முக்கியம்? அவர்களின் பெலன் எவை? அவர்கள் எதனுடன் போராடுகிறார்கள்? அவர்களை சிறப்பாக புரிந்துகொள்ள உங்களால் என்ன செய்ய முடியும்?

வேதங்களிலிருந்து: சங்கீதம் 139:1–5; மத்தேயு 6:25–32; மாற்கு 10:17–21; யோாவன் 10:14; 3 நேபி 17:1–9

இரட்சகர் போதித்தவர்களுக்காக அவர் ஜெபித்தார்

சீமோனே, சீமோனே, இதோ, சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். … ஆனால் உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு நான் உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்று இரட்சகர் தன்னிடம் சொன்னதைக் கேட்ட சீமோன் பேதுரு எப்படி உணர்ந்திருப்பான் என்று கற்பனை செய்து பாருங்கள். (லூக்கா 22:31–32). இயேசு கிறிஸ்து உங்களுக்காக பிதாவிடம் ஜெபித்தார் என்பதை அறிவது உங்களை எப்படி பாதித்திருக்கும்? பண்டைய அமெரிக்க மக்களுக்கு இது போன்ற ஒரு அனுபவம் இருந்தது, மேலும் அவர்கள் அதை இந்த விதமாக விவரித்தனர்: “[இயேசு] எங்களுக்காக பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணுகிறதை நாங்கள் கேட்ட அச்சயமத்தில் எங்கள் ஆத்துமாக்களை நிறைத்த அந்த சந்தோஷத்தை ஒருவராலும் எண்ணிப் பார்க்கமுடியாது” (3 நேபி 17:17).

இடைவிடாது பெயர் சொல்லி நீங்கள் ஒருவருக்காக ஜெபிக்கும்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம். அந்த நபரைப்பற்றி நீங்கள் உணருகிற விதத்தை உங்கள் ஜெபங்கள் எவ்வாறு பாதிக்கிறது ? உங்கள் செயல்களை அவைகள் எவ்வாறு பாதிக்கிறது? கற்பவருக்கு உதவ விரும்பும் ஒரு ஆசிரியரின் நேர்மையான ஜெபங்களுக்கு நிச்சயமாக பரலோகத்திலுள்ள நமது பிதா செவிசாய்த்து பதிலளிப்பார். மேலும் அநேக சந்தர்ப்பங்களில், ஆசிரியரின் இருதயத்தைத் தொட்டு, கற்பவருக்கு அவரது அல்லது அவளது அன்பை உணர உதவும் ஒன்றைச் செய்ய அல்லது சொல்ல அவரைத் தூண்டுவது, அவர் அந்த ஜெபங்களுக்கு பதிலளிக்கும் ஒரு வழி.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, உங்கள் ஜெபங்களுக்கு விசேஷ தேவை இருப்பதாக நீங்கள் நினைக்கும் யாராவது இருக்கிறார்களா? அவன் அல்லது அவள் சார்பாக எதற்காக ஜெபிக்க தூண்டப்பட்டதாக உணர்கிறீர்கள்? ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படி கற்பவர்களை நீங்கள் அழைக்கும்போது என்ன ஆசீர்வாதங்கள் வரக்கூடும்?

வேதங்களிலிருந்து: யோவான் 17; ஆல்மா 31:24–36; 3 நேபி 18:15–24; 19:19–23, 27–34

அனைவரும் மதிக்கப்படுவதாகவும் மதிப்புமிக்கவர்களாகவும் உணரப்படுவதை இரட்சகர் உறுதி செய்தார்

இயேசுவின் காலத்தில் மதத் தலைவர்களிடையே இருந்த பொதுவான மனப்பான்மை, பாவிகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதே. இதன் காரணமாக, இந்த தலைவர்கள் இயேசு பாவிகளுடன் பழகுவதைக் கண்டு, அவர்கள் திகைத்தனர். அப்படிப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட ஒருவர் எப்படி ஆவிக்குரிய ஆசிரியராக இருக்க முடியும்?

இயேசு, நிச்சயமாக, வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார். ஆவிக்குரிய ரீதியில் நோய்வாய்ப்பட்டவர்களை அவர் குணப்படுத்த முயன்றார் (மாற்கு 2:15–17; லூக்கா 4:17–18 பார்க்கவும்). அவர்களைச் சுற்றியிருப்பவர்களில் இருந்து வேறுபட்டவர்களையோ அல்லது ஒரு பிரச்சனையான கடந்த காலத்தைக் கொண்டவர்களையோ அவர் தொடர்ந்து அணுகினார், மேலும் அவர் பாவம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டார். ஒரு ரோமானிய சிப்பாயின் விசுவாசத்தை அவர் பாராட்டினார் (மத்தேயு 8:5–13 பார்க்கவும்). நம்பப்படாத வரி வசூலிப்பவனைத் தம்முடைய நம்பிக்கைக்குரிய சீஷர்களில் ஒருவனாக அவர் அழைத்தார் (மாற்கு 2:14 பார்க்கவும்). ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்தார், மேலும் மனந்திரும்பி சிறந்த வாழ்க்கை வாழ அவளுக்கு உணர்த்தினார் (யோவான் 8:1–11 பார்க்கவும்).

ஆனால் இயேசு அதை விட அதிகமானதைச் செய்தார். அவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளும் இந்த அதே மனப்பான்மையையும் அன்பையும் அவர் வளர்த்தார். எல்லா மக்களுக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தபோது அவருடைய முன்மாதிரி அவருடைய அப்போஸ்தலர்களின் இருதயங்களில் நிச்சயமாக இருந்தது. இது பேதுருவின் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்பதை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34).

நீங்கள் கற்பிக்க அழைக்கப்பட்ட அனைவருமே ஏதோவொரு வகையில் மரியாதை கொடுக்கப்படுவதாக மற்றும் மதிக்கப்படுவதாக உணர போராடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவர்களை நேசிக்கும் மற்றும் மதிக்கும் விதத்தில், அவர்கள் வரவேற்கப்படுபவர்கள் மட்டுமல்ல, தேவைப்படுபவர்களுமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கலாம். கலந்து கொள்ளாதவர்கள், போராடுபவர்கள் அல்லது ஆர்வம் காட்டாதவர்களாகத் தோன்றுபவர்களை நீங்கள் அணுகலாம், முன்னேற்றம் மெதுவாகத் தோன்றினால் பொறுமையாக இருங்கள். சக விசுவாசிகளுடன் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்வதில் அனைவரும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர நீங்கள் உதவலாம். உங்களால் அதை விட அதிகமாக செய்ய முடியும். மரியாதை, சொந்தமாகுதல் மற்றும் அன்பின் உணர்வில் கோட்பாடு கற்பிக்கப்படும் சூழலை உருவாக்க உங்களுக்கு உதவ அனைத்து கற்பவர்களுக்கும் நீங்கள் உணர்த்தலாம்.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: ஒரு நபர் மரியாதையளிக்கப்படுவதை, மதிப்பளிக்கப்படுவதை உணர எது உதவுகிறது? மற்றவர்களை மதிக்கவும் மதிப்பளிக்கவும் ஒரு நபரைத் தூண்டுவது எது? நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி ஜெபத்துடன் சிந்திக்கும்போது, அவர்கள் அனைவரும் வரவேற்கப்படுவதாகவும் தேவைப்படுகிறவர்களாகவும் உணர முடிய நீங்கள் என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?

வேதங்களிலிருந்து: யோவான் 4; 2 நேபி 26:27–28, 33; ஆல்மா 1:26; 3 நேபி 18:22–25

படம்
தகப்பன் பிள்ளைகளுக்குப் போதித்தல்

தாங்கள் கற்பிப்பவர்கள் அன்பு செலுத்தப்படுவதாக உணர ஆசிரியர்கள் உதவலாம்.

இரட்சகர் கற்பித்தவர்களுக்காக அவருடைய அன்பை அவர் வெளிப்படுத்தினார்

நேபியர்களிடையே போதனை மற்றும் ஊழியம் செய்த ஒரு அற்புதமான, உயர்த்துதலான நாளின் முடிவில், இயேசு தாம் செல்ல வேண்டிய நேரம் வந்ததைக் கவனித்தார். அவர் சந்திக்கவேண்டிய பிற மக்கள் இருந்தார்கள். “நீங்கள் உங்கள் வீடுகளுக்குப் போய், நாளைக்கென்று உங்கள் மனங்களை ஆயத்தம்பண்ணுங்கள்” என்று அவர் கூறினார். ஆனால் மக்கள் “கண்ணீரோடு” அங்கேயே அமர்ந்திருந்து, “அவர் தங்களோடு சற்று அதிகமாய்த் தங்கவேண்டுமென்று கேட்பது போன்று அவர்கள் அவரையே” கண்நோக்கினார்கள். அவர்களின் சொல்லப்படாத தேவையை உணர்ந்து, “மனதுருக்கத்தால் நிரப்பப்பட்டு” இயேசு இன்னும் சிறிது காலம் தங்கினார் (3 நேபி 17:3, 5–6). அவர்களுடனிருந்த நோயுற்றோரையும் துயரப்பட்டோரையும் அவர் ஆசீர்வதித்தார். அவர்களுடன் அவர் முழங்காற்படியிட்டு ஜெபித்தார். அவர்களோடு அவர் அழுதார், அவர்களோடு அவர் களிகூர்ந்தார்.

3 நேபி 17 லுள்ள இரட்சகரின் வார்த்தைகளையும் செயல்களையும் ஜெபத்துடன் படிப்பதைக் கருத்தில்கொள்ளவும். அவர் போதித்தவர்களுக்காக அவர் வெளிப்படுத்திய அன்பைக்குறித்து சிந்தியுங்கள். வேதங்களில் மற்ற இடங்களில் அவருடைய அன்பின் வெளிப்பாடுகளைத் தேடுங்கள். பின்னர் நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி சிந்தியுங்கள். அவர்களிடம் அன்பை எப்படி நீங்கள் பொருத்தமாக வெளிப்படுத்துகிறீர்கள்? ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக. நீங்கள் கற்பிப்பவர்களிடம் அன்பை உணரவோ அல்லது வெளிப்படுத்தவோ கடினமாக இருந்தால், தேவனின் அன்பை சாட்சியமளிப்பதன் மூலம் தொடங்குங்கள். பின்னர், “பிதா தம்முடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற, யாவர் மேலும் அவர் அருளின [கிறிஸ்துவின் தூய அன்பினால்] நிரப்பப்படவும், பிதாவிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்துடனும் ஜெபியுங்கள்” (மரோனி 7:48). ஒரு பாடம் கற்பிப்பதில் உங்கள் அக்கறை உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவதில் இருந்து உங்களை ஒருபோதும் திசைதிருப்பக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலும் நீங்கள் மக்களை நடத்தும் விதம் அவர்களுக்கு நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள் என்பதைப்போல முக்கியமானது.

சிந்திக்க வேண்டிய கேள்விகள்: உங்கள் மீதுள்ள அன்பை அறிய இரட்சகர் உங்களுக்கு எப்படி உதவினார்? அவருடைய அன்பை உணர ஒரு பெற்றோர் அல்லது மற்ற ஆசிரியர் உங்களுக்கு எப்படி உதவினார்கள்? அவர்களை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பது நீங்கள் கற்பிப்பவர்களுக்குத் தெரியுமா? இரட்சகர் அவர்களை நேசிக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

வேதங்களிலிருந்து: மாற்கு 6:31–42; யோவான் 13:3–16, 34–35; 15:12–13; 1 கொரிந்தியர் 13:1–7; 1 யோவான் 4:7–11

நீங்கள் கற்றுக்கொள்வதைப் பிரயோகிக்க சில வழிகள்

  • நீங்கள் ஒரு வகுப்பில் கற்பிக்கிறீர்கள் என்றால், கற்பவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் கற்பிக்கும்போது அவற்றைப் பயன்படுத்துங்கள்.

  • கற்பவர்கள் பங்களிக்கும்போது உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்.

  • நீங்கள் கற்பிப்பதற்கு முன்னும் பின்னும் கற்பவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

  • கற்பவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு சூழலை வளர்க்க உதவுங்கள்.

  • நீங்கள் கற்பிக்கும் போதும் மற்ற நேரங்களிலும் கவனத்துடன் கேளுங்கள்.

  • நீங்கள் கற்பிப்பவர்களுக்கான சேவைச் செயல்களைச் செய்யுங்கள்.

  • நீங்கள் கற்பிப்பவர்களுக்கு அர்த்தமுள்ள கொள்கைகளில் அதிக நேரத்தை செலவிட உங்கள் கற்பித்தல் திட்டங்களை மாற்ற தயாராக இருங்கள்.