கையேடுகளும் அழைப்புகளும்
20. நிகழ்ச்சிகள்


“20. நிகழ்ச்சிகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“20. நிகழ்ச்சிகள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

இளம் பெண் தண்ணீர் தெளிப்பானுடன்

20.

நிகழ்ச்சிகள்

20.1

நோக்கங்கள்

சபை நிகழ்ச்சிகள் சபை உறுப்பினர்களையும் மற்றவர்களையும் “பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாராக” ஒன்றாகக் கொண்டுவருகின்றன (எபேசியர் 2:19). நிகழ்ச்சிகளுக்கான நோக்கங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள.

  • வேடிக்கையை வழங்கி, ஒற்றுமையை வளர்க்க.

  • தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்க.

  • தனிநபர்களையும் குடும்பங்களையும் பலப்படுத்த.

  • இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு உதவ (1.2 பார்க்கவும்)

20.2

நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல்

ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிடுவதற்கு முன், உறுப்பினர்களின் ஆவிக்குரிய மற்றும் உலகப்பிரகாரத் தேவைகளைத் தலைவர்கள் கருத்தில் கொள்கிறார்கள். அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எந்த வகையான நிகழ்ச்சி உதவும் என்பதைத் தீர்மானிக்கும் போது தலைவர்கள் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாடுகின்றனர்.

20.2.1

நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதலுக்கான பொறுப்பு

உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் தொகுதி நிகழ்ச்சிகள் பின்வரும் வழிகளில் திட்டமிடப்படலாம்:

  • தொகுதி ஆலோசனைக் குழு திட்டமிடுதலை மேற்பார்வையிட முடியும்.

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவதற்கு குறிப்பிட்ட அமைப்புகளை தொகுதி ஆலோசனைக் குழு நியமிக்கலாம்.

  • தேவைப்படும் போது மற்றும் போதுமான உறுப்பினர்கள் இருக்கும் போது, ஆயம் ஒரு தொகுதி நிகழ்ச்சிகள் குழுவை அமைக்கலாம்.

தொகுதி இளைஞர் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவதைப்பற்றிய தகவலுக்கு, 10.2.1.3 மற்றும் 11.2.1.3 பார்க்கவும்.

20.2.2

பங்கேற்க அனைவரையும் அழைத்தல்

நிகழ்ச்சிகளைத் திட்டமிடுபவர்கள் அனைவரையும், குறிப்பாக புதிய உறுப்பினர்கள், ஆர்வம் குறைவான உறுப்பினர்கள், இளைஞர்கள், ஒற்றை வயது வந்தவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை அணுக வேண்டும்.

நிகழ்ச்சிகள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தக்கூடாது.

20.2.3

தரங்கள்

சபை நிகழ்ச்சிகள் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் மற்றும் “உத்தமமானவை, அழகானவை அல்லது, நற்கீர்த்தியுள்ளவை அல்லது, புகழத்தக்கவை” என்பதை வலியுறுத்த வேண்டும் (விசுவாசப் பிமாணங்கள் 1:13). சபை போதனைகளுக்கு முரணான எதுவும் நிகழ்ச்சிகளில் இருக்கக்கூடாது.

20.2.6

நிகழ்ச்சிகளுக்கான நிதி

பெரும்பாலான நிகழ்ச்சிகள் எளிமையாக இருக்க வேண்டும் மற்றும் சிறிய அல்லது செலவு இல்லாமல் இருக்க வேண்டும். எந்தவொரு செலவுகளும் ஆயம் அல்லது பிணையத் தலைமையால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க பணம் செலுத்தக்கூடாது. நிதி நடவடிக்கைகள் குறித்த செயற் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, 20.6 பார்க்கவும்.

20.4

இளைஞர் மாநாடு

அவர்கள் 14 வயதை அடையும் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இளைஞர் மாநாட்டில் ஒன்றாக பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இளைஞர் மாநாடுகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை, ஒரு தொகுதி அல்லது பிணைய மட்டத்தில் நடத்தப்படுகின்றன. அவை பலபிணைய அல்லது பிரதேச அளவில் நடத்தப்படலாம். FSY மாநாட்டில் கலந்து கொள்ள இளைஞர்கள் நியமிக்கப்பட்ட வருடத்தில், பிணையங்கள் மற்றும் தொகுதிகள் இளைஞர் மாநாடுகளை நடத்தக்கூடாது.

ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவால் திட்டமிடப்பட்டு, தொகுதி இளைஞர் மாநாடுகள் நடத்தப்படுகின்றன (29.2.6 பார்க்கவும்). தொகுதி இளைஞர் மாநாட்டிற்கான திட்டங்களுக்கு ஆயம் பிணையத் தலைமையின் ஒப்புதலைப் பெறுகிறது.

தலைவர்களும் இளைஞர்களுமாக, இளைஞர் மாநாட்டைத் திட்டமிடும்போது, இந்த அத்தியாயத்தில் உள்ள நிகழ்ச்சிகளையும் பின்வரும் வழிகாட்டுதல்களையும் அவர்கள் கவனிக்க வேண்டும்:

  • சபையின் வருடாந்திர இளைஞர் தலைப்பு மாநாட்டின் தலைப்பாக பயன்படுத்தப்படலாம்.

  • தலைப்புக்கு இசைவான நிகழ்ச்சிகளைத் திட்டமிடுங்கள்.

  • அனைத்து செய்தியாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆயம் அல்லது பிணையத் தலைவர்களின் ஒப்புதலைப் பெறுங்கள்.

  • எல்லா நேரங்களிலும் போதுமான வயது வந்தோர் மேற்பார்வையை உறுதி செய்யுங்கள் (20.7.1 பார்க்கவும்).

20.5

நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து திட்டமிடுவதற்கான கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

20.5.1

வணிக அல்லது அரசியல் நிகழ்ச்சிகள்

எந்தவொரு வணிக அல்லது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது (35.5.2 பார்க்கவும்).

20.5.2

நடனங்களும் இசையும்

அனைத்து நடனங்களிலும், ஆடை, அலங்காரம், விளக்குகள், நடன பாணிகள், பாடல் வரிகள் மற்றும் இசை ஆகியவை கர்த்தரின் ஆவி பிரசன்னமாக இருக்கும் சூழ்நிலைக்கு பங்களிக்க வேண்டும்.

20.5.3

திங்கட்கிழமை இரவுகள்

திங்கட்கிழமை அல்லது மற்ற நேரங்களில் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். திங்கட்கிழமைகளில், மாலை 6:00 மணிக்குப் பிறகு சபை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் அல்லது ஞானஸ்நான சேவைகள் எதுவும் நடைபெறக்கூடாது.

20.5.5

முழுஇரவுநேர நிகழ்ச்சிகள்

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஒருங்கிணைந்த குழுக்களுக்கான சபை முழுஇரவுநேர நிகழ்ச்சிகள், ஆயர் மற்றும் பிணையத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆண் மற்றும் பெண் ஒற்றை உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கும் இதுவே நிலைமை.

சபைக் கூடுமிடங்கள் அல்லது கூடுமிட மைதானங்களில் முழு இரவு நேர நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

20.5.8

ஓய்வுநாள் ஆசரிப்பு

சபை முகாம்கள், விளையாட்டு நிகழ்வுகள் அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகள் எதுவும் ஞாயிற்றுக்கிழமையில் திட்டமிடப்படக்கூடாது. இளைஞர் குழுக்களும் மற்றவர்களும் ஞாயிற்றுக்கிழமையில் முகாம்கள் அல்லது இளைஞர் மாநாடுகளுக்குச் செல்லவோ அல்லது திரும்பி வரவோ பயணம்செய்யக் கூடாது.

20.5.10

ஆலயத்திற்கு வருகை தருதல்

ஆலய வருகைகள் அமைக்கப்பட்ட ஆலய சேகரத்தில் உள்ள தொகுதி அல்லது பிணைய அளவில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

20.6

நிதியளிப்பு நிகழ்ச்சிகளுக்கான கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

20.6.1

தொகுதி அல்லது பிணைய வரவு செலவு நிதிகள் மூலம் செலுத்தப்படும் நிகழ்ச்சிகள்

20.6.2-ல் பட்டியலிடப்பட்டுள்ள சாத்தியமான விதிவிலக்குகளுடன் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பணம் செலுத்த தொகுதி அல்லது பிணைய வரவு செலவு கணக்கு நிதிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

20.6.2

இளைஞர் முகாம்களுக்கு நிதியுதவி

கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு தொகுதி அல்லது பிணைய வரவு செலவு கணக்கில் போதுமான நிதி இல்லை என்றால், தலைவர்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு பகுதி அல்லது அனைத்திற்கும் பணம் செலுத்துமாறு கேட்கலாம்:

  • ஒரு வருடாந்திர நீட்டிக்கப்பட்ட ஆரோனிய ஆசாரியத்துவ முகாம் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சி.

  • ஒரு வருடாந்திர நீட்டிக்கப்பட்ட இளம் பெண்கள் முகாம் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சி.

  • 8 முதல் 11 வயதுடைய ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுக்கான வருடாந்திர நாள் முகாம் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சி.

வருடாந்திர முகாமுக்கான செலவுகள் அல்லது பயணங்கள் அதிகமாக இருக்கக்கூடாது. தனிப்பட்ட நிதி பற்றாக்குறை ஒரு உறுப்பினரை பங்கேற்பதிலிருந்து தடுக்கக்கூடாது.

20.6.3

FSY மாநாடுகளுக்கு நிதியுதவி

இளைஞர்களின் பெலனுக்காக (FSY) மாநாடுகளில் கலந்துகொள்ள இளைஞர்கள் கட்டணம் செலுத்துமாறு கேட்கப்படலாம். ஒரு இளைஞரை, பங்கேற்பதில் இருந்து செலவு தடுக்கும் என்றால், ஆயர் தொகுதி வரவு செலவு கணக்கு நிதியைப் பயன்படுத்தி இந்தக் கட்டணத்தின் முழு அல்லது பகுதியையும் செலுத்தலாம். FSY.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

20.6.5

நிதி திரட்டும் நிகழ்வுகள்

பிணையம் மற்றும் தொகுதி நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் பொதுவாக வரவு செலவு கணக்கு நிதியிலிருந்து செலுத்தப்படுகின்றன. இருப்பினும், ஒரு பிணையத் தலைவர் அல்லது ஆயர் பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிதி திரட்டும் நிகழ்வை அங்கீகரிக்கலாம்:

  • 20.6.2-ல் பட்டியலிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்த உதவுவதற்கு.

  • வருடாந்திர முகாம்களுக்கு அங்கங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க உதவுதல்.

20.7

நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

20.7.1

வயது வந்தோர் மேற்பார்வை

பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் அனைத்து சபை நிகழ்ச்சிகளிலும் குறைந்தது இரண்டு வயது வந்தவர்கள் இருக்க வேண்டும். குழுவின் அளவு, நிகழ்ச்சிக்குத் தேவையான திறன்கள் அல்லது பிற காரணிகளைப் பொறுத்து கூடுதல் வயது வந்தவர்கள் தேவைப்படலாம். உதவி செய்ய பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுடன் பணிபுரியும் அனைவரும் பிள்ளைகள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு பயிற்சியை முடித்திருக்க வேண்டும். ProtectingChildren.ChurchofJesusChrist.org பார்க்கவும்.

20.7.2

இளைஞர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வயது வரம்புகள்

பெற்றோரின் ஒப்புதலுடன், இளைஞர்கள் தங்களுக்கு 12 வயதாகும் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி முழுநேர இரவு முகாம்களில் கலந்து கொள்ளலாம். அவர்கள் 14 வயதாகும் ஆண்டின் ஜனவரியில் தொடங்கி, நடனங்கள், இளைஞர் மாநாடுகள் மற்றும் FSY மாநாடுகளில் கலந்து கொள்ளலாம்.

20.7.4

பெற்றோர் அனுமதி

பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியின்றி சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது. முழுஇரவு தங்குதல், நீண்ட பயணம் அல்லது சாதாரண அபாயங்களை விட அதிகமானது அடங்கிய சபை நிகழ்ச்சிகளுக்கு எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம்.

அனுமதி மற்றும் மருத்துவ வெளியீடு படிவத்தில் கையொப்பமிடுவதன் மூலம் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் இந்த ஒப்புதலை வழங்குகிறார்கள்.

20.7.5

துஷ்பிரயோக அறிக்கைகள்

சபை நிகழ்ச்சியின் போது ஏற்படும் எந்த துஷ்பிரயோகமும் சமூக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். ஆயரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். உறுப்பினர்களுக்கான அறிவுறுத்தல்கள் 38.6.2.7-ல் உள்ளன. ஆயருக்கான அறிவுறுத்தல்கள் 38.6.2.1-ல் உள்ளன.

20.7.6

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், விபத்தில் உதவுதல் மற்றும் விபத்து அறிக்கை

20.7.6.1

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

தலைவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் காயம் அல்லது நோய்க்கான குறைந்தபட்ச ஆபத்தை உறுதிப்படுத்த நிகழ்ச்சிகளை கவனமாக மதிப்பீடு செய்கிறார்கள். நிகழ்ச்சிகள் சொத்து சேதத்தின் குறைந்தபட்ச ஆபத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளின் போது, தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள்.

20.7.6.2

விபத்து உதவி

சபை சொத்துக்களில் அல்லது சபை செயல்பாட்டின் போது விபத்து அல்லது காயம் ஏற்பட்டால், தலைவர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள்:

  • முதலுதவி செய்யுங்கள். ஒரு நபருக்கு கூடுதல் மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டால், அவசர மருத்துவ சேவைகளை தொடர்பு கொள்ளவும். பெற்றோர், பாதுகாவலர் அல்லது பிற உறவினர்கள் மற்றும் ஆயர் அல்லது பிணையத் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.

  • யாராவது காணாமல் போனாலோ அல்லது இறந்தாலோ, உடனடியாக உள்ளூர் சட்ட அமலாக்கத்திற்குத் தெரிவிக்கவும்.

  • உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குங்கள்.

  • சட்ட நடவடிக்கையை ஊக்குவிக்கவோ அல்லது ஊக்கப்படுத்தாமலோ இருக்க வேண்டாம். சபையின் சார்பாக உறுதிமொழிகளைக் கொடுக்காதீர்கள்.

  • சாட்சிகளின் பெயர்கள், அவர்களின் தொடர்புத் தகவல்கள், என்ன நடந்தது என்பதற்கான விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்து வைக்கவும்.

  • விபத்தைப்பற்றி புகாரளிக்கவும் (20.7.6.3 பார்க்கவும்).

20.7.6.3

விபத்து அறிக்கையளித்தல்

பின்வரும் சூழ்நிலைகள் ஆன்லைனில் incidents.ChurchofJesusChrist.org-ல் புகாரளிக்கப்பட வேண்டும்.

  • சபைச் சொத்தில் அல்லது சபை நிகழ்ச்சியின் போது விபத்து அல்லது காயம் ஏற்படுகிறது.

  • சபை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரைக் காணவில்லை.

  • சபை நிகழ்ச்சியின் போது தனியார், பொது அல்லது சபை சொத்துக்கள் சேதமடைகின்றன.

  • சட்ட நடவடிக்கை அச்சுறுத்துகிறது அல்லது எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிகழ்வில் கடுமையான காயம், மரணம் அல்லது காணாமல் போன நபரின் விளைவாக, அவர் நியமிக்கும் பிணையத் தலைவர், ஆயர் அல்லது அவர் பொறுப்பளித்த உறுப்பினர் உடனடியாக பகுதி அலுவலகத்திற்குத் தெரிவிக்கிறார்.

20.7.6.4

காப்பீடும் கேள்விகளும்

சபை நிகழ்வின் போது காயம் ஏற்பட்டால், சபை நிகழ்ச்சி மருத்துவ உதவி திட்டம் பொருந்துமா என்பதை தலைவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

சில சமயங்களில், பிணையத் தலைவர் அல்லது ஆயர் பாதுகாப்புப் பிரச்சினைகள் அல்லது சபைக்கு எதிரான கோரிக்கைகள் குறித்து கேள்விகளைக் கொண்டிருக்கலாம். பிணையத் தலைவர் (அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் ஒரு ஆயர்) அத்தகைய கேள்விகளை இடர் மேலாண்மை பிரிவு அல்லது பகுதி அலுவலகத்திற்கு அனுப்புகிறார்.

20.7.7

பயணம்

சபை நிகழ்ச்சிகளுக்கான பயணம் ஆயர் அல்லது பிணையத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த பயணம் உறுப்பினர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தக்கூடாது. நிகழ்ச்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்கள் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.

சாத்தியமான போது, சபைக் குழுக்கள் நீண்ட தூர பயணத்திற்கு வணிக போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். இது பொறுப்புக் காப்பீடு மூலம் உரிமம் பெற்று பாதுகாக்கப்பட வேண்டும்.

சபைக் குழுக்கள் தனியார் பயணிகள் வாகனங்களில் பயணிக்கும் போது, ஒவ்வொரு வாகனமும் பாதுகாப்பான இயக்க நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் இருக்கை பெல்ட்டைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஓட்டுனரும் உரிமம் பெற்ற, பொறுப்பான வயது வந்தவராக இருக்க வேண்டும்.