கையேடுகளும் அழைப்புகளும்
19. இசை


“19. இசை,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“19. இசை,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

பெண்ணும் குழந்தையும் பியானோ வாசிக்கிறார்கள்

19.

இசை

19.1

சபையில் இசையின் நோக்கம்

பரிசுத்த இசை, இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை அதிகரிக்கிறது. அது பரிசுத்த ஆவியை அழைக்கிறது, கோட்பாட்டை போதிக்கிறது. இது பயபக்தியின் உணர்வை உருவாக்குகிறது, உறுப்பினர்களை ஒருங்கிணைக்கிறது, மேலும் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் ஆராதிக்க ஒரு வழியை வழங்குகிறது.

19.2

வீட்டில் இசை

தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம், கர்த்தர் தனிநபர்களையும் குடும்பங்களையும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எழுச்சியூட்டும் இசையைப் பயன்படுத்த ஊக்குவித்துள்ளார்.

சபை இசையின் பதிவுகள் பின்வரும் மூலங்களிலிருந்து கிடைக்கின்றன:

19.3

சபைக் கூட்டங்களில் இசை

19.3.1

சபைக் கூட்டங்களில் இசைக்காக திட்டமிடுதல்

தொகுதி மற்றும் பிணைய இசை ஒருங்கிணைப்பாளர்கள், ஆசாரியத்துவ தலைவர்களுடன் இணைந்து ஆராதனைகளுக்கு இசையை திட்டமிடுகின்றனர். கூட்டங்களில் ஆராதனையின் உற்சாகத்தை மேம்படுத்தும் இசையை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

19.3.2

திருவிருந்துக் கூட்டத்தில் இசை

திருவிருந்துக் கூட்டத்தில் இசை என்பது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கும் நிறைவு செய்வதற்கும், திருவிருந்து நிர்வகிப்பதற்கு முன்பும் சபை பாடல்களைப் பாடுவதை உள்ளடக்கியது. திருவிருந்து துதிப்பாடல் திருவிருந்தையோ அல்லது இரட்சகரின் தியாகத்தையோ குறிக்க வேண்டும்.

கூட்டத்திற்கு முன் உறுப்பினர்கள் கூடும் போது முன்னிசை இசைக்கப்படுகிறது. நிறைவு ஜெபத்திற்குப் பிறகு, உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறும் போது ஒரு வாத்திய பின்னிசை இசைக்கப்படுகிறது.

ஒரு திருவிருந்துக் கூட்டத்தின் நடுவில் பாடப்படும் கூடுதல் சபைப் பாடலும் சேர்க்கலாம், எடுத்துக்காட்டாக, பேசப்படும் செய்திகளுக்கு இடையில்.

19.3.3

வகுப்புகளிலும் பிற தொகுதி கூட்டங்களிலும் இசை

ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தலை மேம்படுத்த துதிப்பாடல்கள் மற்றும் பிற பரிசுத்த இசையைப் பயன்படுத்த தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

19.3.6

இசைக் கருவிகள்

நேரடி இசைக்கருவிகள் பொதுவாக முன்னிசை மற்றும் பின்னிசை மற்றும் சபைக் கூட்டங்களில் துதிப்பாடல்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிடைக்கிறபோதும், உறுப்பினர்கள் அவைகளை வாசிக்க முடிகிறபோதும், ஆர்கன்களும் பியானோக்களும் தரமான கருவிகளாகும். சபைத் துதிப் பாடலுடன், முன்னிசை மற்றும் பின்னிசை மற்றும் பிற இசைத் தேர்ந்தெடுப்புகளில் பிற இசைக் கருவிகளைப் பயன்படுத்த ஆயம் அங்கீகரிக்கலாம்.

ஒரு பியானோ, ஆர்கன் அல்லது துணைக் கருவி இல்லை என்றால், இசைப் பதிவுகள் பயன்படுத்தப்படலாம் (19.2 பார்க்கவும்).

19.3.7

சேர்ந்திசைக் குழுவினர்

19.3.7.1

தொகுதி சேர்ந்திசைக் குழுவினர்

போதுமான உறுப்பினர்கள் இருக்கும் இடங்களில், தொகுதிகளில் திருவிருந்து கூட்டத்தில் தொடர்ந்து பாடும் சேர்ந்திசைக் குழுவினரை அமைக்கலாம்.

தொகுதி சேர்ந்திசைக் குழுவினரைத் தவிர, குடும்பங்கள் மற்றும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் அல்லது பிள்ளைகள் குழுக்கள் சபைக் கூட்டங்களில் பாட அழைக்கப்படலாம்.

19.4

தொகுதியில் இசை தலைமை

19.4.1

ஆயம்

தொகுதி இசைக்கு ஆயரே பொறுப்பு. அவர் தனது ஆலோசகர்களில் ஒருவரை இந்தப் பொறுப்புக்கு நியமிக்கலாம்.

19.4.2

தொகுதி இசை ஒருங்கிணைப்பாளர்

தொகுதி இசை ஒருங்கிணைப்பாளர் ஆயத்தின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுகிறார். அவன் அல்லது அவளுக்கு பின்வரும் பொறுப்புகள் உள்ளன:

  • இசை விஷயங்களில் ஆயத்திற்கும் பிற தொகுதி தலைவர்களுக்கும் ஒரு ஆதாரமாக இருங்கள்.

  • திருவிருந்துக் கூட்டங்களுக்கு இசையைத் திட்டமிட ஆயத்துடன் செயல்படுங்கள் (19.3.1 மற்றும் 19.3.2 பார்க்கவும்).

  • ஆயம் கேட்டுக் கொண்டபடி, தொகுதி இசை அழைப்புகளில் பணியாற்ற உறுப்பினர்களை பரிந்துரைக்கவும். தேவைக்கேற்ப ஆதரவு, அறிவுறுத்தல் மற்றும் பயிற்சியை வழங்கி, இந்த அழைப்புகளில் சேவை செய்பவர்களை அறிமுகம் செய்யுங்கள்.

19.4.3

கூடுதல் அழைப்புகள்

பின்வரும் அழைப்புகளில் பணியாற்ற ஆயம் உறுப்பினர்களை அழைக்கலாம்.

19.4.3.1

தொகுதி இசைத் தலைவர்

திருவிருந்து கூட்டத்திற்கும், கேட்டுக்கொண்டபடி, பிற தொகுதி கூட்டங்களுக்கும் இசைத் தலைவர் சபைத் துதிப்பாடல்களை நடத்துகிறார்.

19.4.3.2

தொகுதி இசை வாசிப்பவர்

தொகுதி இசை வாசிப்பவர் முன்னிசை மற்றும் பின்னிசை மற்றும் திருவிருந்துக் கூட்டம் மற்றும் பிற தொகுதி கூட்டங்களின் போது கோரப்பட்டபடி பாடல்களுக்கான இசையை வழங்குகிறார்.

19.7

கூடுதல் கொள்கைகளும் வழிகாட்டுதல்களும்

19.7.2

பயிற்சி, தனிப்பட்ட அறிவுறுத்தல் மற்றும் கச்சேரிகளுக்காக கூடுமிடத்தின் இசைக் கருவிகளின் பயன்பாடு,

நியாயமான மாற்று இல்லாதபோது, கூடுமிட பியானோக்கள் மற்றும் ஆர்கன்களை, பணம் செலுத்திய தனிப்பட்ட கற்பித்தல் மற்றும் கூடுமிடத்தைப் பயன்படுத்தும் அங்கங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய கச்சேரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆசாரியத்துவத் தலைவர்கள் அனுமதிக்கலாம்.