“10. ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“10. ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை
10.
ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள்
10.1
நோக்கமும் அமைப்பும்
10.1.1
நோக்கம்
ஒரு குழுமத்தின் நோக்கமானது ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்ற உதவிசெய்து இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை நிறைவேற்றுவதே. .
10.1.2
ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமத்தின் தலைப்பு
“நான் தேவனின் நேசக்குமாரன், நான் செய்ய வேண்டிய ஒரு வேலை அவரிடம் இருக்கிறது.
“என் முழு இருதயத்தோடும், கருத்தோடும், மனதோடும், பலத்தோடும், நான் தேவனை நேசிப்பேன், என் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவேன், அவருடைய ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் சேவை செய்வேன், என் சொந்த வீட்டிலேயே தொடங்குவேன்.
“நான் ஒவ்வொரு நாளும் சேவை செய்யவும், விசுவாசத்தைக் கைக்கொள்ளவும், மனந்திரும்பவும், மேம்படுத்தவும் முயலும்போது, ஆலய ஆசீர்வாதங்களையும், சுவிசேஷத்தின் நிலையான மகிழ்ச்சியையும் பெற நான் தகுதி பெறுவேன்.
“இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடனாக இருப்பதன் மூலம் கருத்துள்ள ஊழியக்காரராகவும், உண்மையுள்ள கணவனாகவும், அன்பான தகப்பனாகவும் மாற நான் ஆயத்தமாவேன்.
“கிறிஸ்துவண்டை வந்து அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களைப் பெற அனைவரையும் அழைப்பதன் மூலம், இரட்சகரின் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த நான் உதவுவேன்.”
10.1.3
குழுமங்கள்
10.1.3.1
உதவிக்கரார்கள் குழுமம்
வருடத்தின் ஜனுவரி ஆரம்பத்தில் அவர்களுக்கு 12 வயதாகும்போது, இளைஞர்கள் உதவிக்காரர் குழுமத்தில் சேருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் ஆயத்தமாகவும் தகுதியுடனும் இருந்தால் உதவிக்காரர்களாக நியமிக்க தகுதியுடையவர்கள்.
ஒரு உதவிக்காரரின் கடமைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:57–59; 84:111-ல் விவரிக்கப்பட்டுள்ளன. திருவிருந்தை பரிமாறுவதும், சகல “உலகப்பிரகாரமான காரியங்களை நிர்வகிப்பதில்” ஆயருக்கு உதவுவதும் பிற கடமைகளில் அடங்கும்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:68).
10.1.3.2
ஆசிரியர்கள் குழுமம்
வருடத்தின் ஜனுவரி ஆரம்பத்தில் அவர்களுக்கு 14 வயதாகும்போது, வாலிபர்கள் ஆசிரியர்கள் குழுமத்தில் சேருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் ஆயத்தமாகவும் தகுதியுடனும் இருந்தால் ஆசிரியர்களாக நியமிக்க தகுதியுடையவர்கள்.
உதவிக்காரர்களைப் போலவே ஆசிரியர்களுக்கும் அதே கடமைகள் உள்ளன. அவர்கள் திருவிருந்தைத் ஆயத்தம் செய்து ஊழியம் செய்யும் சகோதரர்களாகவும் பணியாற்றுகிறார்கள். கூடுதல் கடமைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:53-59; 84:111-ல் விவரிக்கப்பட்டுள்ளன.
10.1.3.3
ஆசாரியர்கள் குழுமம்
வருடத்தின் ஜனுவரி ஆரம்பத்தில் அவர்களுக்கு 16 வயதாகும்போது, வாலிபர்கள் ஆசாரியர்கள் குழுமத்தில் சேருகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் ஆயத்தமாகவும் தகுதியுடனும் இருந்தால் ஆசாரியர்களாக நியமிக்க தகுதியுடையவர்கள்.
உதவிக்காரர்கள், ஆசிரியர்களைப் போல ஆசாரியர்களுக்கு அதே கடமைகள் உண்டு. கூடுதல் கடமைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:46–52, 73–79-ல் விவரிக்கப்பட்டுள்ளன.
10.1.4
ஆசாரியத்துவ திறவுகோல்கள்
இந்த திறவுகோல்களைப்பற்றி கூடுதல் தகவலுக்கு 3.4.1 பார்க்கவும்.
10.1.5
உள்ளூர் தேவைகளுக்கு குழுமங்களை பயன்படுத்துதல்
ஒரு சில இளைஞர்கள் உள்ள ஒரு தொகுதி அல்லது கிளையில், ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமங்கள் அறிவுறுத்தல் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக ஒன்றாக கூடலாம்.
10.2
இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்றல்
10.2.1
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்
10.2.1.2
சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதல்
குழும கூட்டங்கள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. அவை 50 நிமிடங்கள் நீடிக்கும். குழுமத் தலைமையின் உறுப்பினர் (அல்லது ஆசாரியர் குழுமத்தில் ஆயரின் உதவியாளர்களில் ஒருவர்) நடத்துகிறார். அவர் தலைப்பைப் படிப்பதிலும், பணிகள், கடமைகள் மற்றும் பிற காரியங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதிலும் குழுமத்தை வழிநடத்துகிறார்.
ஒரு குழும உறுப்பினர் அல்லது வயது வந்த தலைவர் பின்னர் சுவிசேஷ அறிவுறுத்தலை வழிநடத்துகிறார்.
10.2.1.3
சேவையும் செயல்பாடுகளும்
சேவையும் நிகழ்ச்சிகளும் சாட்சியங்களை உருவாக்க வேண்டும், குடும்பங்களை பலப்படுத்த வேண்டும், குழும ஒற்றுமையை வளர்க்க வேண்டும், மற்றவர்களை ஆசீர்வதிக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
சில சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், குறிப்பாக வயதுவந்த இளைஞர்களுக்கு.
வருடாந்தர செயல்பாடுகள் வழக்கமான இளைஞர் நிகழ்ச்சிகளுக்கு கூடுதலாக, இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் பின்வருவனவற்றில் பங்கேற்கலாம்:
-
ஆரோனிய ஆசாரியத்துவக் குழும முகாம் (ஆரோனிய ஆசாரியத்துவக் குழும முகாம் வழிகாட்டி பார்க்கவும்).
-
ஒரு தொகுதி அல்லது பிணைய இளைஞர் மாநாடு அல்லது இளைஞர்களின் பெலனுக்காக (எப்.எஸ்.ஒய்) மாநாடு.
10.2.1.4
தனிப்பட்ட முன்னேற்றம்
இரட்சகரைப் போலாக அவர்களின் முயற்சிகளில், இளைஞர்கள் ஆவிக்குரிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சரீர ரீதியாகவும் மற்றும் அறிவு ரீதியாகவும் வளர இலக்குகளை அமைக்க அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 2:52 பார்க்கவும்).
கூடுதல் தகவலுக்கு ChildrenandYouth.ChurchofJesusChrist.org பார்க்கவும்.
10.2.2
தேவையிலிருப்போரைக் கவனித்தல்
ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்போர் ஆயருக்கு “சகல உலகப்பிரகாரமான காரியங்களையும் நிர்வகிப்பதில்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:68) உதவுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களிலும், குடும்பங்களுடனும், இளைஞர்களின் செயல்பாடுகளின் போதும், தாங்களாகவே மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கான வழக்கமான வாய்ப்புகளைப் பெற வேண்டும்.
10.2.2.1
ஊழியம் செய்தல்
ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்போர், அவர்கள் 14 வயதை எட்டும்போது ஆண்டின் ஜனுவரி மாதம் ஆரம்பத்தில் ஊழிய பணிகளைப் பெறுகிறார்கள். கூடுதல் தகவலுக்கு அத்தியாயம் 21 பார்க்கவும்.
10.2.3
சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தல்
ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களுக்கு “அனைவரையும் கிறிஸ்துவண்டை வரும்படி” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:59) அழைக்க வேண்டிய கடமை உள்ளது.
பெற்றோர்களும் தலைவர்களும் வாலிபர்கள் முழுநேர ஊழியம் செய்வதற்காகவும் மற்றும் சுவிசேஷத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் பகிர்வதற்காகவும் ஆயத்தமாவதற்கும் ஊக்குவிக்கிறார்கள்
10.2.4
நித்தியத்திற்கும் குடும்பங்களை ஒன்றிணைத்தல்
ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் குடும்பங்களை நித்தியத்திற்காக பல வழிகளில் ஒன்றிணைக்க உதவலாம்.
-
அவர்களுடைய பெற்றோரை கனம்பண்ணுகிறார்கள், தங்களுடைய வீட்டில் கிறிஸ்துவைப் போல வாழ்வதற்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
-
நித்திய திருமணம் உட்பட ஆலய நியமங்களைப் பெற ஆயத்தமாகிறார்கள்.
-
ஆலய நியமங்கள் தேவைப்படும் முன்னோர்களை அடையாளம் காண்கிறார்கள் (FamilySearch.org பார்க்கவும்).
-
சூழ்நிலைகள் அனுமதிக்கும் போதெல்லாம் மரித்தவர்களுக்கான ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல்களில் பங்கேற்கிறார்கள்.
10.3
ஆயம்
ஆயரின் தொகுதியில் அவருடைய முதன்மையான பொறுப்பு, வாலிபர்களையும் இளம் பெண்களையும் பராமரிப்பதாகும். அவர்களின் பெயர்களை அவர் தெரிந்து கொள்கிறார், அவர்களின் வீட்டுச் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்கிறார். அவர்களின் செயல்பாடுகளிலும், ஞாயிறு கூட்டங்களிலும் தவறாமல் அவர் கலந்து கொள்கிறார்.
ஆயர் ஆசாரியர் குழுமத்தின் தலைவர்.
ஆசிரியர்கள் குழுமத்திற்கு ஆயத்தில் முதலாவது ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது. உதவிக்காரர் குழுமத்திற்கு இரண்டாவது ஆலோசகருக்கு பொறுப்பு உள்ளது.
ஆரோனிய ஆசாரியத்துவ குழுமத்திற்காக பின்வரும் கூடுதல் பொறுப்புகள் ஆயத்திற்கு உள்ளது:
-
ஒவ்வொரு வாலிபனையும் வருடத்திற்கு இரண்டு முறையாவது சந்திக்கிறார் (31.3.1 பார்க்கவும்).
-
மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெற ஆயத்தமாக இளைஞர்களுக்கு உதவுகிறார்.
-
ஆரோனிய ஆசாரியத்துவ குழும பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் நிதிகளைக் கண்காணிக்கிறார்.
குழும ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த பொறுப்புகளில் கோரப்பட்டபடி உதவுகிறார்கள்.
10.4
இளைஞர் குழுமத் தலைவர்கள்
10.4.1
அழைத்தல், ஆதரித்தல் மற்றும் பணித்தல்
ஆசாரியர்கள் குழுமத்தை நடத்துவதில் அவருடைய உதவியாளர்களாக இருக்க ஒன்று அல்லது இரண்டு ஆசாரியர்களை ஆயர் அழைக்கிறார்.
உதவிக்காரர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுமத் தலைவர்களை ஆய உறுப்பினர் அழைக்கிறார். சேவை செய்ய போதுமான ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் இருக்கும்போது, இந்த வாலிபர்கள், குழும உறுப்பினர்களை ஆலோசகர்களாகவும் செயலாளராகவும் பரிந்துரைக்க ஜெபத்துடன் கருதுகின்றனர்.
இந்த அழைப்புகளை கொடுத்த பிறகு, ஆயத்தின் உறுப்பினர் ஒருவர், இளைஞர் குழுமத் தலைவர்களை அவர்களின் குழுமக் கூட்டத்தில் ஆதரிப்பதற்காக முன்வைக்கிறார். ஆயர் தனது உதவியாளர்களையும், உதவிக்காரர்கள் மற்றும் ஆசிரியர் குழுமத் தலைவர்களையும் பணிக்கிறார். குழுமத் தலைவர்கள் மேல் ஆசாரியத்துவத் திறவுகோல்களை அவர் அருளுகிறார் மற்ற தலைமை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்களை பணிக்க அவருடைய ஆலோசகர்களை அவர் நியமிக்கலாம்.
10.4.2
பொறுப்புகள்
-
இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்பதற்கான குழுமத்தின் முயற்சிகளை வழிநடத்துகிறார் (அத்தியாயம் 1 பார்க்கவும்).
-
குழும கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள் உட்பட, ஒவ்வொரு குழும உறுப்பினரையும் அறிந்து சேவை செய்கிறார்.
-
தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார் (10.4.4 பார்க்கவும்).
-
குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் ஆசாரியத்துவக் கடமைகளை கற்றுக்கொடுக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:85-88 பார்க்கவும்).
-
குழுமக் கூட்டங்களை, திட்டமிட்டு, நடத்துகிறார் (10.2.1.2 பார்க்கவும்).
-
குழும சேவை மற்றும் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்துகிறார் (10.2.1.3 பார்க்கவும்).
10.4.3
குழுமத் தலைமைக் கூட்டங்கள்
ஆரோனிய ஆசாரியத்துவக் குழுமத் தலைவர்கள் தவறாமல் சந்திக்கின்றனர். இந்தக் கூட்டங்களை குழுமத் தலைவர் நடத்துகிறார். குறைந்த பட்சம் இரண்டு வயது வந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்—ஆய உறுப்பினர், ஆலோசகர் அல்லது ஒரு நிபுணர்.
10.4.4
தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழு
தொகுதி இளைஞர் ஆலோசனைக் குழுவைப்பற்றி கூடுதல் தகவலுக்கு 29.2.6 பார்க்கவும்
10.8
கூடுதல் வழிகாட்டுதல்களும் கொள்கைகளும்
10.8.1
இளைஞர்களைப் பாதுகாத்தல்
வயது வந்தோர் சபை பின்னணிகளில் இளைஞர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, குறைந்தது இரண்டு பொறுப்புள்ள வயது வந்தோர் இருக்க வேண்டும்.
இளைஞர்களுடன் பணிபுரியும் அனைத்து வயதுவந்தோரும் பிள்ளைகள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு பயிற்சியை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் (ProtectingChildren.ChurchofJesusChrist.org).