கையேடுகளும் அழைப்புகளும்
9. ஒத்தாசைச் சங்கம்


“9. ஒத்தாசைச் சங்கம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“9. ஒத்தாசைச் சங்கம்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

பெண்கள் வேதங்களைப் படித்தல்

9.

ஒத்தாசைச் சங்கம்

9.1

நோக்கமும் அமைப்பும்

9.1.1

நோக்கம்

ஒத்தாசைச் சங்கத்தின் நோக்கம் ஆத்துமாக்களைப் பாதுகாப்பதுவும் துன்பத்திலிருந்து விடுவிப்பதுவும் என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கற்பித்தார்.

ஒத்தாசைச் சங்கத்தின் குறிக்கோள் “அன்பு ஒருக்காலும் ஒழியாது” (1 Corinthians 13:8).

9.1.2

ஒத்தாசைச் சங்கத்தில் உறுப்பினர்

ஒரு இளம் பெண் 18 வயதாகும் போது ஒத்தாசைச் சங்கத்தில் கலந்துகொள்ள ஆரம்பிக்கலாம். 19 வயதிற்குள் அல்லது பல்கலைக்கழகத்திற்குச் செல்வது அல்லது ஊழியப்பணிகளில் ஈடுபடுவது போன்றவற்றினால், வீட்டை விட்டு நகரும் போது, அவள் ஒத்தாசைச் சங்கத்தில் பங்கேற்க வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களும் ஒத்தாசைச் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

9.2

இரட்சிப்பு மற்றும்மேன்மையடைதலின் பணியில் பங்கேற்றல்

3:31

9.2.1

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுதல்

9.2.1.2

ஒத்தாசைச் சங்கக் கூட்டங்களில் சுவிசேஷம் கற்றுக்கொள்ளுதல்

கூட்டங்கள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. அவை 50 நிமிடங்கள் நீடிக்கும். இந்தக் கூட்டங்களை ஒத்தாசைச் சங்க தலைமை திட்டமிடுகிறது. தலைமையின் ஒரு உறுப்பினர் நடத்துகிறார்.

மிக சமீபத்திய பொது மாநாட்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரைகளில் உள்ள தலைப்புகளில் ஒத்தாசைச் சங்கக் கூட்டங்கள் கவனம் செலுத்துகின்றன.

9.2.1.3

நிகழ்ச்சிகள்

ஒத்தாசைச் சங்கத் தலைமைகள் நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாம். பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஞாயிறு அல்லது திங்கள் மாலைகள் தவிர மற்ற நேரங்களில் நடைபெறும்.

9.2.2.

தேவையிலிருப்போரைக் கவனித்தல்

2:46

9.2.2.1

ஊழியம் செய்தல்

ஒத்தாசைச் சங்கத் தலைமையிடமிருந்து சகோதரிகள் ஊழிய பணிகளைப் பெறுகின்றனர். கூடுதல் தகவலுக்கு அத்தியாயம் 21 பார்க்கவும்.

9.2.2.2

குறுகிய கால தேவைகள்

ஊழியம் செய்யும் சகோதரிகள் தாங்கள் சேவை செய்பவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவைகளுக்கு தீர்வளிக்க முற்படுகிறார்கள். நோய், பிறப்புகள், இறப்புகள், வேலை இழப்பு மற்றும் பிற சூழ்நிலைகளில் உறுப்பினர்களுக்கு குறுகிய கால உதவி தேவைப்படலாம்.

தேவைப்படும்போது, ஊழியம் செய்யும் சகோதரிகள் ஒத்தாசைச் சங்கத் தலைமையிடம் உதவி கேட்கிறார்கள்.

9.2.2.3

நீண்ட கால தேவைகளும் சுயசார்பும்

ஆயரால் ஒருங்கிணைக்கப்பட்டபடி, ஒத்தாசைச் சங்க மற்றும் மூப்பர் குழுமத்தின் தலைமைகள், நீண்டகால தேவைகள் மற்றும் சுயசார்புக்காக உறுப்பினர்களுக்கு உதவுகின்றன.

ஒத்தாசைச் சங்கத் தலைவர், மூப்பர் குழுமத் தலைவர், அல்லது மற்றொரு தலைவர், நபருக்கு அல்லது குடும்பத்திற்கு சுயசார்புத் திட்டத்தை உருவாக்க உதவுகிறார்கள்.

9.2.2.4

ஒரு தொகுதி உறுப்பினர் மரிக்கும் போது

ஒரு தொகுதி உறுப்பினர் மரிக்கும்போது, ஒத்தாசைச் சங்கத்தின் தலைமைகளும் மூப்பர் குழுமத் தலைமையும் ஆறுதலையும் உதவியையும் வழங்குகிறார்கள். ஆயரின் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் இறுதிச் சடங்கிற்கு உதவலாம்.

கூடுதல் தகவலுக்கு 38.5.8 பார்க்கவும்.

9.2.3.

சுவிசேஷத்தைப் பெற அனைவரையும் அழைத்தல்

தொகுதியில் உறுப்பினர் ஊழியப் பணியை வழிநடத்த உதவ, தலைமையின் ஒரு உறுப்பினரை ஒத்தாசைச் சங்கத் தலைவர் நியமிக்கிறார். இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க, மூப்பர் குழுமத் தலைமையில் நியமிக்கப்பட்ட உறுப்பினருடன் அவர் பணியாற்றுகிறார் (23.5.1 பார்க்கவும்).

9.2.4

நித்தியத்திற்கும் குடும்பங்களை ஒன்றிணைத்தல்

தொகுதியில் ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணியை வழிநடத்த உதவ, தலைமையின் ஒரு உறுப்பினரை ஒத்தாசைச் சங்கத் தலைவர் நியமிக்கிறார். இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்க, மூப்பர் குழுமத் தலைமையில் நியமிக்கப்பட்ட உறுப்பினருடன் அவர் பணியாற்றுகிறார் (25.2.2 பார்க்கவும்).

2:45

9.3

ஒத்தாசைச் சங்கத் தலைவர்கள்

9.3.1

ஆயர்

வழக்கமாக மாதந்தோறும் ஒத்தாசைச் சங்கத் தலைவரை ஆயர் சந்திப்பார். ஊழியம் செய்யும் சகோதரிகளின் சேவை உட்பட, இரட்சிப்பின், மேன்மையடைதலின் பணியைப்பற்றி அவர்கள் விவாதிக்கின்றனர்.

9.3.2

ஒத்தாசைச் சங்கத் தலைமை

9.3.2.1

ஒத்தாசைச் சங்கத் தலைமையை அழைத்தல்

தொகுதி ஒத்தாசைச் சங்கத்தின் தலைவராக பணியாற்ற ஒரு பெண்ணை ஆயர் அழைக்கிறார். அங்கம் போதுமான பெரிதாக இருந்தால், தனது ஆலோசகர்களாக பணியாற்றுவதற்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களை அவர் பரிந்துரைக்கிறார்.

சில சிறிய அங்கங்களில் இளம் பெண்கள் அல்லது ஆரம்ப வகுப்புத் தலைவர் இல்லாமல் இருக்கலாம். இந்த அங்கங்களில், இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளுக்கான அறிவுரைகளைத் திட்டமிட பெற்றோர்களுக்கு ஒத்தாசைச் சங்கத் தலைவர் உதவலாம்.

9.3.2.2

பொறுப்புகள்

ஒத்தாசைச் சங்கத் தலைவர் பின்வரும் பொறுப்புகளைக் கொண்டுள்ளார். அவரது ஆலோசகர்கள் அவருக்கு உதவுகிறார்கள்.

  • தொகுதி ஆலோசனைக்குழுவில் பணியாற்றுதல்.

  • இரட்சிப்பின் மேன்மையடைதலின் பணியில் பங்கேற்பதற்கான ஒத்தாசைச் சங்க முயற்சிகளை வழிநடத்துதல்ள் (அத்தியாயம் 1 பார்க்கவும்).

  • ஊழியம் செய்யும் சகோதரிகளின் சேவையை ஒழுங்கமைத்து மேற்பார்வை செய்தல்.

  • ஆயரின் வழிகாட்டுதலின் கீழ், தொகுதியின் வயது வந்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துதல்.

    3:12
  • தொகுதியில், திருமணமாகாத மற்றும் திருமணமான இளம் வயது வந்த சகோதரிகளை பலப்படுத்த ஒத்தாசைச் சங்க முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.

  • ஒவ்வொரு ஒத்தாசைச் சங்க உறுப்பினரையும் தனித்தனியாக குறைந்தது வருடத்திற்கு ஒரு முறையாவது சந்தித்தல்.

  • ஒத்தாசைச் சங்க பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் நிதிகளைக் கண்காணித்தல் (LCR.ChurchofJesusChrist.org பார்க்கவும்).

9.3.2.3

தலைமைக் கூட்டம்

ஒத்தாசைச் சங்கத் தலைமையும் செயலரும் அடிக்கடி சந்திக்கின்றனர். இந்தக் கூட்டங்களை தலைவர் நடத்துகிறார். நிகழ்ச்சி நிரலில் பின்வரும் விவரங்கள் இருக்கலாம்:

  • சகோதரிகளையும் அவர்களது குடும்பங்களையும் எவ்வாறு பலப்படுத்துவது என்று திட்டமிடுதல்.

  • ஊழியப் பணி, ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்று பணிகளை ஒருங்கிணைத்தல்.

  • தொகுதி ஆலோசனைக் கூட்டங்களில் இருந்து பணிகளுக்கு பதிலளித்தல்.

  • ஊழியம் செய்யும் நேர்காணல்களின் தகவலை மதிப்பாய்வு செய்தல்.

  • ஒத்தாசைச் சங்க அழைப்புகள் மற்றும் பணிகளில் சகோதரிகள் சேவை செய்வதைக் கருத்தில் கொள்ளுதல்.

  • ஒத்தாசைச் சங்கக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல்.

9.3.3

செயலர்

ஒத்தாசைச் சங்கத் தலைமை ஒரு சகோதரியை ஒத்தாசைச் சங்கத்தின் செயலாளராக பணியாற்ற பரிந்துரைக்கலாம்.

9.4

ஒத்தாசைச் சங்கத்தில் பங்கேற்க இளம் பெண்கள் ஆயத்தமாக உதவுதல்

ஒத்தாசைச் சங்கத்தில் பங்கேற்பதில் ஆயத்தமாகுவதற்கு உதவ, இளம் பெண்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் இளம் பெண் தலைவர்களுடன் இணைந்து ஒத்தாசைச் சங்கத் தலைமை பணியாற்றுகிறது.

இளம் பெண்கள் மற்றும் ஒத்தாசைச் சங்க சகோதரிகள் உறவுகளை வளர்த்துக் கொள்ள தலைவர்கள் தொடரும் வாய்ப்புகளை வழங்குகிறார்கள். ஊழியம் செய்யும் சகோதரிகளாக ஒன்றாகச் சேவை செய்தல் இணைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு மதிப்புமிக்க வழி.

9.6

கூடுதல் வழிகாட்டுதல்களும் கொள்கைகளும்

9.6.2

கல்வி

உறுப்பினர்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள உதவ, தேவைக்கேற்ப, ஆயர், மூப்பர் குழுமத் தலைமை மற்றும் தொகுதி ஆலோசனைக் குழு ஆகியவற்றுடன் இணைந்து ஒத்தாசைச் சங்கத் தலைமை பணியாற்றுகிறது.