என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 30–ஏப்ரல் 12. ஈஸ்டர்: “அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்”


மார்ச் 30–ஏப்ரல் 12 ஈஸ்டர்: “அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மார்ச் 30–ஏப்ரல் 12. ஈஸ்டர்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவருடைய அப்போஸ்தலர்களுடன்

கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும்–டெல் பார்சன்

மார்ச் 30–ஏப்ரல் 12

ஈஸ்டர்

ஈஸ்டர்: “அவருடைய செட்டைகளில் குணமாக்குதலுடன்… அவர் எழுவார்”

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய நாட்களின்போது, வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையின் சக்திவாய்ந்த சாட்சியை, மார்மன் புஸ்தகத்தின் உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வேத படிப்பில் கவனம் செலுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய தங்களுடைய சாட்சிகளில் பூர்வகால அப்போஸ்தலர்கள் தைரியமாயிருந்தனர். மில்லியன் கணக்கானோர் இயேசு கிறிஸ்துவை நம்பினார்கள், வேதாகமத்தில் அவர்களுடைய வார்த்தைகள் பதிக்கப்பட்டிருந்ததால் அவரைப் பின்பற்ற முயற்சித்தார்கள். இருந்தும், இயேசு கிறிஸ்து உலகமுழுவதற்கும் இரட்சகராயிருந்தால், பின்னர் ஏன் அவருடைய நேரில் கண்ட சாட்சிகள் ஒரு சிறிய பகுதியிலிருந்த ஒரு சில மக்களிடம் மட்டும் கவனம்செலுத்த மட்டுப்படுத்தப்படவேண்டுமென ஒரு சிலர் வியப்படைவார்கள்?

இயேசு கிறிஸ்து உலகத்தின் இரட்சகராயிருக்கிறார் எல்லா தேசங்களுக்கும் “தன்னை வெளியரங்கமாய்க் காட்டுகிறார்” (மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்) அவரிடத்தில் வருகிறவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறார் என்ற ஒரு கூடுதலான உறுதியான சாட்சியாக மார்மன் புஸ்தகம் நிற்கிறது. அதற்கும் மேலாக, இரட்சிப்பு என்றால் என்னவென இந்த இரண்டாவது சாட்சியும்கூட தெளிவுபடுத்துகிறது. இதனால்தான் நேபியும், யாக்கோபுவும், மார்மனும், அனைத்து தீர்க்கதரிசிகளும் தகடுகளின்மேல் இந்த வார்த்தைகளை பொறிக்கவும், அவர்களும் “கிறிஸ்துவை அறிந்திருந்தார்களென்றும் அவருடைய மகிமையிலே நம்பிக்கை வைத்திருந்தார்களென்றும்” (யாக்கோபு 4:3–4)வருங்கால தலைமுறைகளுக்கு அறிவிக்கவும் சிரத்தையுடன் பிரயாசப்பட்டார்கள். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை, முழுஉலகத்தையும் மீட்டு, உங்களையும் மீட்டு, உலகளாவியதாகவும் தனிப்பட்டதாகவுமிருக்கிறதென மார்மன் புஸ்தகத்திலுள்ள சாட்சிகளை இந்த ஈஸ்டர் காலம் பிரதிபலிக்கிறது.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

2 நேபி 9:6–15, 22; ஆல்மா 11:41–45; 40:21–23; 3 நேபி 26:4–5

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலாயே சகல ஜனங்களும் உயிர்த்தெழுவார்கள்.

ஈஸ்டரில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை தியானிப்பது பாரம்பரியம், ஆனால் உயிர்த்தெழுப்பப்படுவது என்றால் சரியான அர்த்தம் என்ன? உயிர்த்தெழுதலைப்பற்றி மார்மன் புஸ்தகம் என்ன உள்ளுணர்வுகளை வழங்குகிறது? ஒருவேளை, 2 நேபி 9:6–15, 22; ஆல்மா 11:41–45; 40:21–23; மற்றும் 3 நேபி 26:4–5ல் நீங்கள் காண்கிற உயிர்த்தெழுதலைப்பற்றிய சத்தியங்களை ஈஸ்டரை நீங்கள் கடைப்பிடிக்கும் ஒரு பகுதியாக நீங்கள் பட்டியலிடலாம். இந்த சத்தியங்கள் ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வது முக்கியமென நீங்கள் ஏன் நினைக்கிறீர்களெனவும் நீங்கள் பதிவுசெய்யலாம்.

உயிர்த்தெழுதலைப்பற்றிய சத்தியங்கள், வழக்கமாக இறுதி நியாயத்தீர்ப்பைப்பற்றிய சத்தியங்களுடன் இணைக்கப்பட்டு போதிக்கப்பட்டதென நீங்கள் கவனித்திருக்கலாம். இரட்சிப்பின் திட்டத்தில் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தைப்பற்றி உங்களுக்கு என்ன போதிக்கிறதென சிந்திக்கவும்.

லூக்கா 24:36–43; அப்போஸ். 24:15; 1 கொரிந்தியர் 15:12–23ம் பார்க்கவும்

மோசியா 3:7; 15:5–9; ஆல்மா 7:11–13

என்னுடைய பாவங்களையும், வேதனைகளையும், பெலவீனங்களையும் இயேசு கிறிஸ்துவே தம்மீது எடுத்துக்கொண்டார்.

நமது பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து பாவநிவர்த்தி செய்தாரென வேதாகமம் தெளிவாக போதிக்கிறது. எப்படியாயினும், கிறிஸ்துவின் தியாகத்தை, பாடுகளைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை முக்கியமான விதங்களில் மார்மன் புஸ்தகம் விரிவாக்குகிறது. மோசியா 3:7; 15:5–9; மற்றும் ஆல்மா 7:11–13ல் இந்த போதனைகள் சிலவற்றை நீங்கள் காணலாம். இந்த பத்திகளை நீங்கள் படித்த பின்பு, பின்வருவதைப்போல ஒரு விளக்கப்படத்தில் நீங்கள் கண்டுபிடித்ததை பதிவுசெய்வதை கருத்தில் கொள்ளுங்கள்:

இரட்சகர் என்ன பாடுபட்டார்?

அவர் ஏன் பாடுபட்டார்?

எனக்கு இது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

இரட்சகர் என்ன பாடுபட்டார்?

அவர் ஏன் பாடுபட்டார்?

எனக்கு இது என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

ஏசாயா 53; எபிரெயர் 4:14–16ம் பார்க்கவும்.

படம்
கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்து ஜெபித்தல்

கெத்செமனே,–மைக்கேல் டி.மால்ம்

மோசியா 5:1–2; 27:8–28; ஆல்மா 15:3–12; 24:7–19

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி என்னை சுத்தப்படுத்தி என்னை பரிபூரணனாக்க உதவுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் மாறிய ஜனங்களைப்பற்றிய ஒரு அதிக விவரம் மார்மன் புஸ்தகத்திலிருக்கிறதென சொல்லப்படலாம். உண்மையில், அந்த ஜனங்களில் சிலர் கடுமையான பாவங்களைச் செய்து, அவரில் அவர்களுடைய விசுவாசத்தின்படி இரட்சகரின் வல்லமை அவர்களில் ஒரு வலிமையான மாற்றத்தை செயல்படுத்துவதற்கு முன்பு தேவனுடைய ஜனங்களுக்கும் எதிரிகளாயிருந்தார்கள். இந்த அனுபவங்கள் சிலவற்றை மோசியா 5:1–2; 27:8–28; மற்றும் ஆல்மா 15:3–12; 24:7–19ல் நீங்கள் படிக்கலாம், அப்படியே பிற எடுத்துக்காட்டுகளை படிக்க நீங்கள் நினைக்கலாம். பொதுவாக இந்த எடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றும் இருக்கின்றன என்பதில் நீங்கள் என்ன கவனித்தீர்கள்? என்ன வேறுபாடுகளை நீங்கள் கவனித்தீர்கள்? எவ்வாறு இரட்சகரின் பாவநிவர்த்தி உங்களை மாற்றமுடியுமென்பதைப்பற்றி இந்த விவரங்கள் உங்களுக்கு என்ன போதிக்கிறது?

ஆல்மா 5:6–14; 13:11–12; 18; 19:1–16; 22:1–26; 36:16–21; ஏத்தேர் 12:27; மரோனி 10:32–33ம் பார்க்கவும்.

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

உங்கள் குடும்பத்துடன் ஈஸ்டரை நீங்கள் கொண்டாடும்போது, உயிர்த்தெழுதலையும் சேர்த்து இரட்சகரைப்பற்றியும் அவருடைய பாவநிவர்த்தியையும்பற்றி ஒன்றுசேர்ந்து கற்றுக்கொள்ள வழிகளைத் தேடுங்கள். இங்கே சில ஆலோசனைகள்.

3 நேபி 1117

உயிர்த்தெழுந்த இரட்சகர் அமெரிக்காவுக்கு வருகைபுரிந்த விவரத்தை தியானித்தல், குறிப்பாக ஈஸ்டர் நேரத்தில் அர்த்தமுள்ளதாக இருப்பதாக சில குடும்பங்கள் கண்டார்கள். அவருடைய காயங்களை உணருவது எப்படியிருந்திருக்கும் என (3 நேபி 11:14–15பார்க்கவும்) அல்லது அவர் ஆசீர்வதித்த பிள்ளைகளில் ஒருவராயிருக்க (3 நேபி 17:21 பார்க்கவும்) குடும்ப அங்கத்தினர்கள் கற்பனை செய்ய ஊக்குவிக்கவும். இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்காக நமது நன்றியுணர்வை எவ்வாறு இந்த விவரம் ஆழப்படுத்துகிறது? இந்த விவரத்தை சித்தரி்க்கிற ஒரு ஓவியம் இந்த குறிப்போடு இணைந்திருக்கிறது, மற்றவை ChurchofJesusChrist.orgல் காணப்படலாம். அவர்கள் படித்ததை தங்களுடைய சொந்த படங்களாக வரைவதில் உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் மகிழவும்கூடும்.

பொது மாநாட்டிலிருந்து செய்திகள்

உலகத்தின் அநேக பகுதிகளில், ஈஸ்டருக்கு முன்பான வாரக்கடைசியில் இந்த ஆண்டின் ஏப்ரல் பொது மாநாடு நடைபெறுகிறது. ஒருவேளை மாநாட்டுச் செய்திகளைக் கேட்பது இந்த ஈஸ்டரில் இரட்சகரிடத்தில் கவனம் செலுத்த உங்கள் குடும்பத்திற்கு உதவமுடியும். உதாரணமாக, இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலையும், குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகளான அப்போஸ்தலர்களிடமிருந்து சாட்சியளிக்கிற மாநாட்டு் செய்திகளைக் கேட்க குடும்ப அங்கத்தினர்களை நீங்கள் அழைக்கலாம். பின்னர் நீங்கள் ஒன்றுசேர்ந்து இந்த செய்திகளை மறுஆய்வு செய்யலாம் மற்றும் இரட்சகரைப்பற்றிய உங்களுடைய சாட்சிகளை போதனைகளை அடையாளம் காணலாம்.

ஜீவிக்கிற கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சி

ஒரு குடும்பமாக “ஜீவிக்கிற கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சி ” (Ensign அல்லது Liahona, May 2017 முன் அட்டையின் உள்ளே படிக்கவும், ChurchofJesusChrist.org)ஐயும் பார்க்கவும் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்திட இந்த சாட்சியிடமிருந்து ஈஸ்டர் செய்தி ஒன்றை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரையும் அழைக்கவும். உதாரணமாக, சமூக ஊடகத்தில், உங்கள் முன் கதவில் அல்லது ஜன்னல் ஒன்றில் காட்சியாக வைக்க நீங்கள் சுவரொட்டிகளை உருவாக்கலாம்.

காணொலிகள்: கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகள்

ChurchofJesusChrist.org மற்றும் . சுவிசேஷ நூலக செயலிக்கு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகள் என அழைக்கப்படுகிற ஒரு காணொலி வரிசைகளிருக்கிறது. பிரதான தலைமையில் ஒவ்வொரு அங்கத்தினரும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி பகருவதின் காணொலிகளும் இதில் அடங்கியிருக்கிறது. இந்த காணொலிகளில் ஒன்றை அல்லது அதிகமானதைப் பார்த்து இரட்சகர் நமக்காக என்ன செய்தாரென்பதைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் கலந்துரையாடலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றி கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழவும். ஒரு பெற்றோராக உங்களால் செய்யமுடிகிற மிக முக்கியமான காரியம் உங்கள் முழு இருதயத்தோடு சுவிசேஷத்தின்படி வாழுதலே. பரிசுத்த ஆவியின் தோழமைக்கு தகுதியாயிருக்க இதுவே சிறந்த வழி. நீங்கள் பரிபூரணராயிருக்க வேண்டியதில்லை, உங்களால் செய்யமுடிந்த சிறந்ததை செய்ய சிரத்தையோடு முயற்சி செய்யுங்கள் மற்றும் இரட்சகரின் பாவநிவர்த்தி மூலமாக மன்னிப்பை நாடுங்கள். (இரட்சகரின் வழியில் போதிப்பது,13–14 பார்க்கவும்.)

படம்
நேபியர்களை கிறிஸ்து வாழ்த்துதல்

நேபியர்களுடன் கிறிஸ்து விளக்கப்படம்–பென் சோவார்ட்ஸ்