என்னைப் பின்பற்றி வாருங்கள்
ஏப்ரல் 13–19 மோசியா 1–3 “தேவனிடத்திலும் எல்லா மனுஷரிடத்திலும் அன்பால் நிறைக்கப்பட்டு”


“ஏப்ரல் 13–19. மோசியா 1–3 6: ‘தேவனிடத்திலும் எல்லா மனுஷரிடத்திலும் அன்பால் நிறைக்கப்பட்டு’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“ஏப்ரல் 13–19 மோசியா1–3,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
பென்யமின் இராஜா தன் ஜனத்துக்குப் போதித்தல்

மினர்வா கே. டெய்ச்சர்ட் (1888–1976), பென்யமின் இராஜாவின் பிரிவுபச்சார உரை, 1935, மாசனைட்டில் ஆயில், 36x48 அங்குலம் பிரிகாம் யங் பல்கலைக்கழக கலையருங்காட்சியகம்.

ஏப்ரல் 13–19

மோசியா 1–3

“தேவன் மற்றும் எல்லா மனுஷர் மீதும் அன்பால் நிரப்பப்பட்டு”

நமது ஆவிக்குரிய எண்ணங்களைப் பதிவு செய்ய ஒரு காரணத்தை பென்யமின் இராஜா கொடுத்தான்: “இந்தத் தகடுகளின் உதவியைத் தவிர இந்தக் காரியங்கள் அனைத்தையும் நம் தகப்பனாகிய லேகி நினைவில் கொண்டிருக்காவிட்டால் அவைகளைத் தன் பிள்ளைகளுக்கு போதிக்கக் கூடாமல் போயிருக்கும்.” (மோசியா 1:4).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இராஜா என்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் கிரீடங்கள், மாளிகைகள், வேலைக்காரர்கள் மற்றும் சிங்காசனங்களைப்பற்றி நினைக்கலாம். மோசியா 1–3ல், நீங்கள் ஒரு வித்தியாச வகையான இராஜாவைப்பற்றி வாசிப்பீர்கள். தன் ஜனத்தின் பிரயாசத்தால் வாழ்வதை விடுத்து, பென்யமின் இராஜா “தன் சொந்த கரங்களால் பணிபுரிந்தான்”(மோசியா 2:14). பிறர் அவனுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக: “கர்த்தர் அருளிய சகல ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும், தன் ஜனத்துக்கு சேவை செய்தான்” (மோசியா 2:11). இராஜா தன் ஜனம் தன்னை ஆராதிப்பதை விரும்பவில்லை, மாறாக இராஜரீகம் பண்ணுகிற கர்த்தர்” என அவன் புரிந்ததால், தன்னைவிட உயர்வான இராஜாவை ஆராதிக்க அவர்களுக்குப் போதித்தான்” (மோசியா 3:5). தேவனுடைய இராஜ்யத்திலுள்ள மகத்தான தலைவர்கள் போல, இரட்சகர் இயேசு கிறிஸ்துவான பரலோக இராஜாவினடத்திற்கு, பென்யமின் இராஜாவின் வார்த்தைகளும் எடுத்துக்காட்டுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு, “பரலோகத்திலிருந்து இறங்கி வந்து”, “மனுபுத்திரர்களிடையே பலத்த அற்புதங்களை நடப்பித்து. … அவருடைய நாமத்தின் மீதான விசுவாசத்தின் மூலம் மனுப்புத்திரர்களுக்கு விசுவாசம் வரும்பொருட்டு, அவர் வந்தார்” (மோசியா 3:5, 9) என பென்யமின் இராஜா சாட்சியளித்தான்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேத படிப்புக்கான ஆலோசனைகள்

மோசியா 2:1–9

தேவனுடைய வார்த்தையை பெறுவதற்கு ஆயத்தம் தேவைப்படுகிறது.

தன் ஜனத்திடம் பென்யமின் இராஜா பேச விரும்புவதாக செய்தியனுப்பியபோது, “அவர்களை எண்ணக்கூடாதபடி” அநேக ஜனங்கள் வந்தார்கள் (மோசியா 2:2). தங்கள் தலைவர் மீது நன்றியுணர்வு மற்றும் அன்பினிமித்தம் அவர்கள் ஒரு பகுதியாக வந்தார்கள். ஆனால் மிக முக்கியமாக தேவ வார்த்தை போதிக்கப்பட அவர்கள் வந்தார்கள்.

மோசியா 2:1–9 நீங்கள் வாசிக்கும்போது, தேவனுடைய வார்த்தையை அவர்கள் மதிக்கிறார்கள் என காட்ட ஜனங்கள் என்ன செய்தார்கள் என தேடவும். தேவ வார்த்தையைக் கேட்க ஆயத்தப்பட என்ன செய்ய வேண்டுமென பென்யமின் இராஜா அவர்களைக் கேட்டான்? (வசனம் 9 பார்க்கவும்). உங்களுடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப படிப்பின்போதும், சபைக் கூட்டங்களின்போதும், தேவ வார்த்தையைப் பெற நீங்கள் உங்களை எப்படி சிறப்பாக ஆயத்தப்படுத்த முடியும்?

மத்தேயு 13:18–23; ஆல்மா 16:16–17 ஐயும் பார்க்கவும்.

மோசியா 2:10–26

நான் பிறருக்கு சேவை செய்யும்போது, நான் தேவனுக்கும் சேவை செய்கிறேன்.

சேவை செய்ய நேரம் கண்டுபிடிக்க போராடுகிறீர்களா அல்லது உங்கள் சேவை அதிக மகிழ்ச்சியளிக்க விரும்புகிறீர்களா? தன் முழு “ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும்” அவன் ஏன் சேவை செய்தான் என நீங்கள் அவனிடம் கேட்டால், பென்யமின் இராஜா என்ன சொல்வான் என நினைக்கிறீர்கள்?மோசியா 2:11. நீங்கள் மோசியா 2:11 வாசிக்கும்போது, சேவையைப்பற்றி பென்யமின் இராஜா போதித்த சத்தியங்களை அடையாளம் கண்டு, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என சிந்திக்கவும். உதாரணமாக, நீங்கள் பிற ஜனங்களுக்கு சேவை செய்யும்போது, நீங்கள் தேவனுக்கும் சேவை செய்கிறீர்கள் என அறிவதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (மோசியா 2:17) பார்க்கவும். இந்த வாரத்தில் நீங்கள் ஒருவருக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வழியைப்பற்றி நினையுங்கள்.

மத்தேயு 25:40 ஐயும் பார்க்கவும்.

படம்
இரு பெண்கள் அணைத்துக்கொள்கின்றனர்

நான் பிறருக்கு சேவை செய்யும்போது, நான் தேவனுக்கும் சேவை செய்கிறேன்.

மோசியா 3:1–20

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நான் சுபாவ மனுஷனை மேற்கொண்டு பரிசுத்தவானாக முடியும்.

“அவர்களே தங்களின் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெற்று, மிகுந்த சந்தோஷத்தினால் களிகூரத்தக்கதாக,” பென்யமின் இராஜா எல்லா தீர்க்கதரிசிகளையும் போல இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளித்தான் (மோசியா 3:13). இரட்சகர் தன் பாவநிவர்த்தி மூலம், நம்மை கழுவுவது மட்டுமின்றி, “சுபாவ மனுஷனை” புறம்பேதள்ளி, “பரிசுத்தவானாக” நமக்கு வல்லமையுமளிக்கிறார், எனவும் அவன் போதித்தான் (மோசியா 3:19; Guide to the Scriptures, ஐயும் பார்க்கவும்“Natural Man,” scriptures.ChurchofJesusChrist.org).

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் விளக்கினார்: “இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திதான் கழுவுகிற மற்றும் மீட்கிற வல்லமையை அளிக்கிறது, அது நமக்கு பாவத்தை மேற்கொள்ள உதவியளித்து, பரிசுத்தமாக்கும் மற்றும் பெலப்படுத்தும் வல்லமையளிக்கிறது, அது நமது சொந்த பெலத்தை மட்டுமே சார்ந்து நாம் எப்போதையும் விட சிறப்படைய உதவுகிறது. எல்லையற்ற பாவநிவர்த்தி நம் ஒவ்வொருவரிலுமுள்ள பாவிக்கும் பரிசுத்தவானுக்குமிடையேயானது“ (“Clean Hands and a Pure Heart,” Ensign or Liahona, Nov. 2007, 82).

இரட்சகரைப்பற்றிய பென்யமின் இராஜாவின் சாட்சியை மோசியா 3:1–20ல் நீங்கள் வாசிக்கும்போது, சிந்திக்க இங்கே சில கேள்விகள் இருக்கின்றன:

  • இரட்சகர் மற்றும் அவரது ஊழியத்தைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

  • பாவத்தை மேற்கொள்ள இயேசு கிறிஸ்து எனக்கு எப்படி உதவியிருக்கிறார்? எனது இயல்பை மாற்றி ஒரு பரிசுத்தவான் போல அதிகமாக ஆக அவர் எனக்கு எப்படி உதவியிருக்கிறார்?

  • ஒரு பரிசுத்தவானாக மாறுவதைப்பற்றி மோசியா3:19லிருந்து நான் என்ன கற்றுக்கொள்கிறேன்?

மோசியா 3:8

இயேசுவை பரலோகம் மற்றும் பூலோகத்தின் பிதா என ஏன் பென்யமின் இராஜா குறிப்பிட்டான்?

தலைவர் ஜோசப் எப். ஸ்மித் விளக்கினார்: “நாம் யேகோவா எனவும் அறிகிற இயேசு கிறிஸ்து, சிருஷ்டிப்பின் பணியில் பிதா மற்றும் ஏலோஹிமின் நிர்வாக அதிகாரியாக இருந்தார். … இயேசு கிறிஸ்து சிருஷ்டிகராக இருப்பதால், தொடர்ந்து பரலோகம் மற்றும் பூலோகத்தின் பிதா என அழைக்கப்பட்டிருக்கிறார் … ; அவரது சிருஷ்டிப்புகள் நித்திய தன்மை உடையவையாதலால், அவர் மிக பொருத்தமாக பரலோகம் மற்றும் பூமியின் நித்திய பிதா என அழைக்கப்படுகிறார்” Teachings of Presidents of the Church: Joseph F. Smith [1998], 357).

படம்
குடும்ப படிப்பு சின்னம்

குடும்ப வேத படிப்பு மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதத்தை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

மோசியா 1:1–7

பித்தளைத் தகடுகளும் நேபியின் தகடுகளும் பென்யமின் இராஜாவின் ஜனங்களை எப்படி ஆசீர்வதித்தது? வேதங்கள் நமது குடும்பங்களை எப்படி ஆசீர்வதிக்கிறது?

மோசியா 2–3

பென்யமின் இராஜாவின் பேச்சு பின்னணியை உருவாக்குவது உங்கள் குடும்பத்துக்கு வேடிக்கையாக இருக்கும். நீங்கள் சிறிய கோபுரம் அமைத்து, அதின்மேல் நிற்கும்போது பென்யமின் இராஜாவின் வார்த்தைகளை வாசிக்க உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் முறை எடுக்கட்டும். குடும்பத்தில் மீதிப்பேர் ஒரு தற்காலிக கூடாரத்தினுள் இருந்து கேட்கலாம்.

மோசியா 2:9–19

பென்யமின் இராஜாவின் போதனைகள் மற்றும் எடுத்துக்காட்டிலிருந்து சேவையைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாம் என்ன செய்ய உணர்த்தப்படுகிறோம்?

மோசியா 2:15–25

தாழ்மையைப்பற்றி கலந்துரையாடுதல் உங்கள் குடும்பத்துக்கு பலன் தருமா? அவன் செய்த எல்லாவற்றையும் குறித்து பென்யமின் இராஜா ஏன் பெருமை பேசவில்லை? தேவனுடன் நமது உறவைப்பற்றி அவனது போதனைகளிலிருந்து நாம் என்ன கற்கிறோம்?

மோசியா 2:36–41

சத்தியத்தை அறிந்து ஆனால் அதன்படி வாழாதிருப்பதன் விளைவைப்பற்றி பென்யமின் இராஜா என்ன போதிக்கிறான்? உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு பெறுவதென்பதைப்பற்றி அவன் என்ன போதித்தான்?

மோசியா 3:19

நாம் பரிசுத்தவான்களாக என்ன செய்ய வேண்டும்? இந்த வசனத்திலிருந்து எந்த பண்பை குடும்பமாக மேம்படுத்த நாம் கவனம் செலுத்தலாம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நிர்வகிக்கக்கூடிய இலக்குகளை ஏற்படுத்துங்கள். வேதங்களைப் படிக்க செலவு செய்யும் ஒரு சில நிமிடங்கள் கூட உங்கள் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும். தினமும் படிக்க ஒப்புக்கொடுக்கவும், உங்கள் ஒப்புக்கொடுத்தலை நினைவூட்ட ஒரு வழி கண்டுபிடிக்கவும்.

படம்
பென்யமின் இராஜா தன் ஜனத்துக்கு பிரசங்கித்தல்

பென்யமின் இராஜாவின் உரை–ஜெரிமி வின்போர்க்