என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 23–29 ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்: அவரது சித்தத்தைச் செய்ய அவர் என்னில் கிரியை செய்கிறார்


“மார்ச் 23–29. ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்: அவரது சித்தத்தைச் செய்ய அவர் என்னில் கிரியை செய்கிறார்,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மார்ச் 23–29. ஏனோஸ்-மார்மனின் வார்த்தைகள்,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

படம்
ஏனோஸ் இளம் சிறுவனாகத், தன் தகப்பன், யாக்கோபு, மற்றும் தாயுடன்

யாக்கோபும் ஏனோஸூம், ஸ்காட் ஸ்னோ

மார்ச் 23–29

ஏனோஸ்மார்மனின் வார்த்தைகள்

அவரது சித்தத்தைச் செய்ய அவர் என்னில் கிரியை செய்கிறார்

நீங்கள் ஏனோஸ் முதல் மார்மனின் வார்த்தைகள் வாசிக்கும்போது, உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்துக்கு விலைமதிப்புள்ள செய்திகளைத் தேடுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஏனோஸ் மிருகங்களை வேட்டையாட காட்டுக்குப் போனான். ஆனால் இறுதியாக அவன் “நாள் முழுவதும் … மேலும் இரவு வந்த போதும்” அங்கு ஜெபிப்பதற்காகத் தங்கினான் ( ஏனோஸ் 1:3–4). ஏனெனில் அவனது ஆத்துமா தன் பாவங்களுக்காக உண்மையில் ஒரு மன்னிப்பைப் பெற பசியோடு இருந்தது, தேவைப்படும் போதெல்லாம், ஏனோஸ் ஜெபிப்பதற்கும் மேலும் தேவனோடு போராடவும் விருப்பம் உள்ளவனாக இருந்தான் (ஏனோஸ் 1:2). இதுவே உண்மையான ஜெபம் என்பது: நமக்குத் தேவையானவற்றை அதிகமாக கேட்பது அல்ல ஆனால் தேவனோடு தொடர்பு கொள்ளவும் அவரது சித்தத்தோடு நமது சித்தத்தை இணைக்கவுமான ஒரு உண்மையான முயற்சி. நீங்கள் இவ்வாறு ஜெபிக்கும்போது, உங்கள் சத்தம் “பரலோகத்தை எட்டியவுடன்,”தேவன் உங்களைக் கேட்கிறார் என்பதையும், மேலும் அவர் உண்மையாகவே உங்கள் மேல், உங்களுக்கு அன்பானவர்கள் மேல், உங்கள் எதிரிகள் மேலும் கூட அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதையும் ஏனோஸைப் போல நீங்கள் கண்டுகொள்வீர்கள், (ஏனோஸ் 1:4–17பார்க்கவும்). அந்த நேரங்களில், தேவன் தமது சித்தத்தை நீங்கள் அறியும்படி செய்வார், மேலும் நீங்கள் மிகவும் விருப்பத்துடனும் திறனுடனும் அவருடைய சித்தத்தைச் செய்வீர்கள், ஏனெனில் நீங்கள் அவருடன் இசைவுடனிருக்கிறீர்கள். மார்மனைப்போல, நீங்கள் “எல்லாவற்றையும் அறியாமல் இருக்கலாம்; ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் … [மேலும்] அவர் அவரது சித்தப்படி செய்ய [உங்களுக்குள்] கிரியை செய்கிறார்”மார்மனின் வார்த்தைகள் 1:7).

படம்
தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

ஏனோஸ் 1:1–3

பெற்றோரின் வார்த்தைகள் ஒரு நீடித்த செல்வாக்கைக் கொண்டிருக்கும்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இந்த வசனங்கள் என்ன செய்திகளைக் கொண்டுள்ளன?

ஏனோஸ் 1:4–27

என் இருதயப்பூர்வமான ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்படும்.

ஏனோஸின் ஜெபத்துடனான அனுபவம் வேதத்தில் மிகவும் மறக்கமுடியாத ஒன்றாகும். உங்கள் அனுபவம் ஆச்சரியம் குறைந்ததாக இருக்கலாம், ஆனால் அவை குறைந்த அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனோஸின் அனுபவங்கள் உங்கள் ஜெபங்களை மேம்படுத்தும் வழிகளை வெளிப்படுத்தலாம். இங்கே சிந்திப்பதற்கான சில கேள்விகள்:

  • அவன் ஜெபித்தபோது ஏனோஸின் முயற்சிகளை என்ன வார்த்தைகள் விவரிக்கின்றன?

  • ஆரம்பத்தில் எதற்காக ஏனோஸ் ஜெபித்தான்? (ஏனோஸ் 1:4 பார்க்கவும்). அவன் ஒரு பதிலைப் பெற்றவுடன் ஏனோஸின் பதிலிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஏனோஸ் 1:5–7பார்க்கவும்).

  • தான் பெற்ற பதில்களின் அடிப்படையில் எவ்வாறு ஏனோஸ் செயல்பட்டான்?

  • கர்த்தரின் மேல் “அசைக்கமுடியாத” விசுவாசம் வைப்பது எப்படி என்பதைப்பற்றி ஏனோஸிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஏனோஸ் 1:11).

யாரோம்ஓம்னி

நான் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார்.

மார்மன் புஸ்தகத்தில் மிக அடிக்கடி காணப்படும் ஒரு தேவனின் வாக்குத்தத்தம் என்னவென்றால் நேபியர்கள் கற்பனைகளைக் கைக்கொண்டால், அவர்கள் செழிப்பார்கள் (2 நேபி 1:20; யாரோம் 1:9–12; ஓம்னி 1:6 பார்க்கவும்). யாரோம் மற்றும் ஓம்னி புஸ்தகங்கள் இந்த வாக்குறுதி ஒரு சில வழிகளில் நிறைவேறியதைக் காட்டுகின்றன. இந்த விவரங்களில் இருந்து “தேசத்தில் செழித்தோங்க” உதவுபவைகளாக நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

ஓம்னி 1:14, 21

சாரகெம்லாவின் ஜனங்கள் யார்?

நேபி நிலத்தை விட்டு நேபியர்கள் ஓடியபோது, அவர்கள் சாரகெம்லா என்றழைக்கப்பட்ட இடத்தில் அநேக ஜனங்கள் வாழ்வதைக் கண்டுபிடித்தார்கள். லேகியின் குடும்பத்தைப் போல, எருசலேமை விட்டுச் சென்ற இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு குழுவின் வம்சத்தார்களான சாரகெம்லா ஜனங்கள், தேவன் வாக்குத்தத்தம் செய்த தேசத்தை அடைய தேவனால் வழிநடத்தப்பட்டார்கள் கி.மு 587ல் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் செதேக்கியாவின் குமாரர்களில் ஒருவனான மூலெக் அந்தக் குழுவில் ஒருவனாயிருந்தான் (எரேமியா52:1–11; மோசியா 25:2; ஏலமன் 8:21பார்க்கவும்).

சாரகெம்லா ஜனங்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைந்த பிறகு, அவர்கள் கொரியாந்தமரை சந்தித்தனர் (ஓம்னி 1:21பார்க்கவும்), யாரேதியரில் தப்பிப்பிழைத்தவர்களில் இறுதியானவனாகிய இவனுடைய கதை ஏத்தேர் புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மார்மனின் வார்த்தைகள்

மார்மனின் வார்த்தைகள் என்பது என்ன?

மார்மனின் வார்த்தைகள் மார்மன் புஸ்தகத்தை உருவாக்கும் தகடுகளின் இரு தொகுதிகளுக்கு இடையில் பாலமாகத் திகழ்கிறது. இங்கே மார்மன் இந்த இரு ஆவணங்களைப்பற்றிய ஒரு விளக்கத்தை அளிக்கிறான், மேலும் கர்த்தரின் வழிகாட்டுதலை முற்றிலுமாக புரிந்துகொள்ளாத போதும் அவரை நம்புவதைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தியை அவனுடைய வார்த்தைகள் போதிக்கின்றன.

நேபி அவனது ஜனங்களின் விவரத்தை எழுதிக்கொண்டு இருந்தபோது, நேபியின் சிறிய தகடுகள் மற்றும் பெரிய தகடுகள் என்றழைக்கப்பட்ட இரு தொகுதி தகடுகளை உருவாக்குமாறு தேவன் அவனுக்கு வழிகாட்டினார். இரு தொகுதி தகடுகளை உருவாக்கும்படி எதற்காக அவருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது என்று நேபிக்குத் தெரியாது, ஆனால் “நான் அறியாமலிருந்தாலும் … , ஒரு ஞானமான நோக்கம்” கர்த்தரிடம் இருக்கிறது என்று அவன் நம்பினான். (1 நேபி 9.5;மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய ஒரு குறும் விளக்கம்“).

நூற்றாண்டுகள் கழிந்த பின்னர், நேபியின் பெரிய தகடுகளை மார்மன் சுருக்கியபோது, அவன் சிறு தகடுகளையும் கண்டான். சிறு தகடுகள் மார்மன் ஏற்கனவே சுருக்கிய பெரிய தகடுகளில் விவரிக்கப்பட்ட அதே நிகழ்வுகளில் பலவற்றையே கொண்டிருந்தன, ஆனால் சிறு தகடுகள் அதிகமாக ஆவிக்குரிய விஷயங்களிலும், ஊழியங்களிலும், தீர்க்கதரிசிகளின் போதனைகளிலும் கவனத்தை செலுத்தின. நேபியின் சிறிய தகடுகளைப் பெரிய தகடுகளோடு சேர்த்து ஆவணப்படுத்துமாறு தேவன் மார்மனை ஊக்குவித்தார்.

நேபியைப் போலவே, மார்மனும் இரு தொகுதி தகடுகளைப்பற்றிய தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை, ஆனால் அது ஒரு “ஞானமான நோக்கத்துக்காக” இருக்கும் என்று அவன் நம்பினான் (மார்மனின் வார்த்தைகள் 1:7).

தேவனின் நோக்கம் என்னவாயிருந்தது என்பதை இன்று நாம் அறிகிறோம். 1828-ல், மார்மன் சுருக்கிய நேபியின் பெரிய தகடுகளின் ஒரு பகுதியை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்த்த பின்னர் (116 கையெழுத்துப் பக்கங்கள்), மார்ட்டின் ஹாரிஸ் அந்தப் பக்கங்களைத் தொலைத்துவிட்டார். தீய மனிதர்கள் வார்த்தைகளை மாற்றி ஜோசப்பை இழிவுசெய்ய முயலலாம் என்பதால் இந்தப் பகுதியை மறுபடியும் மொழிபெயர்க்க வேண்டாம் என்று தேவன் ஜோசப்புக்குக் கட்டளையிட்டார் (கோ&உ 10, பாகத் தலைப்பு; கோ&உ 10:14–19, 30–45பார்க்கவும்). நன்றி பாராட்டும் விதமாக, தேவன் இதை முன்னரே அறிந்து சிறு தகடுகளை அளித்துள்ளார், அவை இழந்து போன 116 பக்கங்களின் அதே வரலாற்றைக் கொண்டிருந்தன. மார்மனின் வார்த்தைகள் வருவதற்கு முன்னர் சிறு தகடுகள் புஸ்தகமாக உருவாயின மற்றும் மார்மனின் வார்த்தைகளுக்குப் பின்னர் மார்மன் சுருக்கிய பெரிய தகடுகள் தொடங்குகின்றன.

படம்
மார்மன் தங்கத் தகடுகளைத் தொகுக்கிறான்

மார்மன் தகடுகளைத் தொகுக்கிறான், ஜார்ஜ் காக்கோ

படம்
குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றும்படியாக எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

ஏனோஸ் 1:1–17

ஏனோஸ் ஜெபிக்கும் ஒரு படத்தை உங்கள் குடும்பம் பார்த்து ஏனோஸ் 1:1–17 ல் படத்தின் தலைப்பாகப் பயன்படுத்தக் கூடிய சொற்றொடர்களைத் தேடலாம். ஏனோஸின் அனுபவத்தைப்பற்றிய சித்திரங்களை வரையுமாறு குடும்ப அங்கத்தினர்களிடம் நீங்கள் கேட்கலாம். மன்னிப்பைத் தேடுவது குறித்து ஏனோஸிடம் இருந்து நாம் எதைக் கற்கலாம்?

யாரோம் 1:2

நமது மார்மன் புஸ்தக தியானம் நமக்கு எவ்வாறு “இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தியது”?

ஓம்னி 1:12–22

இந்த வசனங்கள் நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றி என்ன போதிக்கிறது?

மார்மனின் வார்த்தைகள் 1:3–9

தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆவணங்களைப் பராமரிப்பதனால் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவோம்? நாம் நம்முடைய ஆவணங்களைக் கிறிஸ்துவின் மேல் அதிக கவனம் செலுத்துவதாக எவ்வாறாக்க முடியும்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, பார்க்கவும் என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

அடிக்கடி ஒன்று கூடுங்கள். தலைவர் ஹென்றி பி, ஐரிங் போதித்தார்: “இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை கற்றுக்கொள்வதற்காக பிள்ளைகளை ஒன்று கூட்டும் ஒரு வாய்ப்பை ஒருபோதும் தவறவிட வேண்டாம். எதிரியின் முயற்சியோடு ஒப்பிடும்போது அத்தகைய சந்தர்ப்பங்கள் மிக அரிதானவைகளே” (“The Power of Teaching Doctrine,” Ensign, May 1999, 74).

படம்
ஏனோஸ் ஜெபிக்கிறான்

ஏனோஸ் ஜெபிக்கிறான் ராப்ர்ட் டி. பேரட்