சொந்தமாகுதலின் கோட்பாடு
சொந்தமாகுதலின் கோட்பாடு நம் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கீழே வருகிறது: சுவிசேஷ உடன்படிக்கையில் நான் கிறிஸ்துவுடன் ஒன்றாக இருக்கிறேன்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்குச் சொந்தமானவர்கள் எனும் கோட்பாடு என நான் அழைப்பதைப் பற்றி பேச விரும்புகிறேன். இந்தக் கோட்பாட்டில் மூன்று பகுதிகள் உள்ளன: (1) கர்த்தருடைய உடன்படிக்கை ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பதில் உள்ள பங்கு, (2)சொந்தமாகுதலின் சேவை மற்றும் தியாகத்தின் முக்கியத்துவம், மற்றும் (3)சொந்தமாகுதலில் இயேசு கிறிஸ்துவின் மையத்தன்மை.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அதன் தொடக்கத்தில் பெரும்பாலும் வெள்ளை வட அமெரிக்க மற்றும் வடக்கு ஐரோப்பிய பரிசுத்தவான்களாலும், பூர்வீக அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகளைக் கொண்டிருந்தது. இப்போது, அது ஸ்தாபிக்கப்பட்டதன் 200 வது ஆண்டு நிறைவுக்கு எட்டு ஆண்டுகள் முன்னே, வட அமெரிக்காவிலும் இன்னும் அதிகமாக உலகின் பிற பகுதிகளிலும் சபையானது எண்ணிக்கையிலும் பன்முகத்தன்மையிலும் பெரிதும் அதிகரித்துள்ளது.
கர்த்தருடைய உடன்படிக்கை ஜனங்களின் நீண்டகாலமாக தீர்க்கதரிசனம் கூறப்பட்ட பிற்கால கூடுகை வேகமடைகையில், சபை உண்மையிலேயே ஒவ்வொரு தேசத்திலிருந்தும், ஜனம், பாஷை மற்றும் இனத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.1 இது கணக்கிடப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பன்முகத்தன்மை அல்ல, ஆனால் ஒவ்வொரு தேசத்திலிருந்தும், ஜனத்திலிருந்தும் சுவிசேஷ வலை சேகரிக்கிறது என்பதை உணர்ந்து நாம் எதிர்பார்க்கும் இயற்கையாக நிகழும் நிகழ்வு.
ஒவ்வொரு கண்டத்திலும் நமது சொந்த சுற்றுப்புறங்களிலும் ஒரே நேரத்தில் சீயோன் ஸ்தாபிக்கப்படுவதைக் காண நாம் எவ்வளவு பாக்கியசாலிகள். ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி கூறியது போல், ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவஜனம் இந்தநாளுக்காக மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர், மேலும் “பிற்கால மகிமையைக் கொண்டுவர தேவன் தேர்ந்தெடுத்துள்ள விருப்பமான மக்கள் நாம்.”2
இந்த சிலாக்கியம் வழங்கப்பட்டுவிட்டதால், கிறிஸ்துவின் பிற்கால சபையில் எந்த இனவெறி, பழங்குடி தப்பெண்ணம் அல்லது பிற பிரிவுகள் இருப்பதை அனுமதிக்க முடியாது. கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்: “ஒன்றாக இருங்கள்; நீங்கள் ஒன்றாக இல்லையானால் நீங்கள் என்னுடையவர்கள் அல்ல.”3 சபையிலிருந்தும், நம் வீடுகளிலிருந்தும், அனைத்திற்கும் மேலாக நம் இருதயங்களிலிருந்தும் தப்பெண்ணம் மற்றும் பாகுபாடுகளை வேரறுப்பதில் நாம் கருத்துடன் இருக்க வேண்டும். நமது சபையின் மக்கள்தொகை மேலும் பலதரப்பட்டதாக வளரும்போது, நமது வரவேற்பு இன்னும் தன்னிச்சையாகவும் அன்பாகவும் வளர வேண்டும். நமக்கு ஒருவருக்கொருவர் தேவை.4
கொரிந்தியர்களுக்கு எழுதிய தனது முதல் நிருபத்தில், சபையில் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றாயிருக்கிறார்கள் என்று பவுல் அறிவிக்கிறான்:
“எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
“நாம் யூதராயினும், புறஜாதியாராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். …
“… சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று அக்கரையாயிருக்கவேண்டும்,
“ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.”5
நமது சரீர, மன மற்றும் ஆவிக்குரிய நல்வாழ்வுக்கு சொந்தமாகும் உணர்வு முக்கியமானது. ஆயினும்கூட, சில சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் நாம் பொருந்தவில்லை என்று நினைப்பது சாத்தியமாகலாம். அதைரியமளிக்கும் தருணங்களில், கர்த்தரின் உயர்ந்த தராதரங்களுக்கோ மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கோ நாம் ஒருபோதும் ஈடுகொடுக்கமுடியாது என்று உணரலாம்.6 கர்த்தரின் எதிர்பார்ப்புகள் அல்லாத எதிர்பார்ப்புகளை நாம் அறியாமலேயே மற்றவர்கள் மீது அல்லது நம் மீதும் சுமத்தலாம். ஒரு ஆத்துமாவின் மதிப்பு சில சாதனைகள் அல்லது அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் நுட்பமான வழிகளில் வெளிப்படுத்தலாம், ஆனால் இவை கர்த்தரின் பார்வையில் நம் நிலைப்பாட்டின் அளவுகோல் அல்ல. “கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார்.”7 நம்முடைய ஆசைகள் மற்றும் ஏக்கங்கள் மற்றும் நாம் என்னவாகிறோம் என்பதைப் பற்றி அவர் அக்கறையாயிருக்கிறார்.8
சகோதரி ஜோடி கிங் தனது கடந்த வருட அனுபவத்தைப் பற்றி எழுதினார்:
“எனது கணவர் கேமரூனும் நானும் கருவுறாமையுடன் போராடத் தொடங்கும் வரை நான் சபையில் சொந்தமாயிருக்கவில்லை என்று நான் ஒருபோதும் உணரவில்லை. பொதுவாக சபையில் பார்க்க எனக்கு மகிழ்ச்சியைத் தந்த பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இப்போது எனக்கு துக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தத் தொடங்கின.
“என் கையில் குழந்தை இல்லாமல் அல்லது கையில் டயபர் பை இல்லாமல் நான் மலடியாக உணர்ந்தேன். …
“… கடினமான ஞாயிறு ஒரு புதிய தொகுதியில் எங்கள் முதல் நாளாகும். எங்களுக்கு குழந்தைகள் இல்லாததால், நாங்கள் புதுமணத் தம்பதிகளா, எப்போது குடும்பம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகள் என்னைப் பாதிக்க விடாமல் பதிலளிப்பதில் நான் நன்றாக இருந்தேன், அவை புண்படுத்தும் வகையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.
“இருப்பினும், இந்த ஞாயிற்றுக்கிழமை, அந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் நம்பிக்கையுடன் இருந்த பிறகு, நான் மீண்டும் கர்ப்பமாக இல்லை என்று கண்டுபிடித்தோம்.
“நான் தாழ்த்தப்பட்டவளாக உணர்ந்து திருவிருந்து கூட்டத்திற்கு உள்ளே நுழைந்தேன், அந்த வழக்கமான ‘உங்களை அறிந்து கொள்ளுங்கள்’ கேள்விகளுக்கு பதிலளிப்பது எனக்கு கடினமாக இருந்தது. …
“ஆனால் ஞாயிறு பள்ளிதான் என் இதயத்தை உண்மையில் உடைத்தது. தாய்மார்களின் தெய்வீகப் பாத்திரத்தைப் பற்றிய நோக்கமுடைய பாடம், விரைவில் தடயம் மாற்றி ஒரு உணர்வை வெளியேற்றும் அமர்வாக மாறியது. நான் எதையும் கொடுக்க இருக்கும் ஒரு ஆசீர்வாதத்தைப்பற்றி பெண்கள் குறை சொல்வதைக் கேட்டபோது என் இதயம் குமுறியது மற்றும் கண்ணீர் அமைதியாக என் கன்னங்களில் வழிந்தது.
“நான் சபையை விட்டு வெளியேறினேன். முதலில், நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அந்த தனிமை உணர்வை நான் மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை. ஆனால் அன்று இரவு, என் கணவருடன் பேசிய பிறகு, நாங்கள் சபைக்கு தொடர்ந்து செல்வோம் என்று எங்களுக்குத் தெரியும், ஏனென்றால் கர்த்தர் எங்களைக் கேட்டதால் மட்டுமல்ல, உடன்படிக்கைகளைப் புதுப்பிப்பதாலும், சபையில் ஆவியானவரை அனுபவிப்பதாலும் வரும் மகிழ்ச்சி, நான் அன்று உணர்ந்த துக்கத்தை விட அதிகமாக இருப்பதை நாங்கள் இருவரும் அறிந்திருந்தோம்.
“சபையில், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் தனிமையான உறுப்பினர்கள் உள்ளனர்; சுவிசேஷத்திலிருந்து விலகிய குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பவர்கள்; நாள்பட்ட நோய்கள் அல்லது நிதிப் போராட்டங்கள் உள்ளவர்கள்; ஒரே பாலின ஈர்ப்பை அனுபவிக்கும் உறுப்பினர்கள்; அடிமையாதல் அல்லது சந்தேகங்களை போக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள், சமீபத்தில் மனமாறியவர்கள்; புதிதாக நகர்ந்தவர்கள்; வெற்று கூடுகளிலிருப்பவர்கள்; மற்றும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. …
“இரட்சகர் நம்மை தன்னிடம் வரும்படி அழைக்கிறார்—நம் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும். நாம் நமது உடன்படிக்கைகளைப் புதுப்பிக்கவும், நமது விசுவாசத்தை அதிகரிக்கவும், சமாதானம் காணவும், அவருடைய வாழ்க்கையில் அவர் செய்ததைப்போல பரிபூரணமாகச் செய்யவும், தாங்கள் சொந்தமானவர்களல்ல என்று நினைக்கும் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் நாம் சபைக்கு வருகிறோம்.”9
சபையும் அதன் அலுவலர்களும் தேவனால் கொடுக்கப்பட்டவர்கள் என்று பவுல் விளக்கினான்: “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமான சபையானது பக்தி விருத்தி அடைவதற்காகவும்”
“நாம் அனைவரும் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிலும், தேவனுடைய குமாரனை அறிகிற அறிவிலும், ஒரு பரிபூரண மனிதனாக, கிறிஸ்துவின் பரிபூரண வளர்ச்சியின் அளவிற்கு வரும் வரைக்கும்.”10
அப்படியானால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அவர் அல்லது அவள் இலட்சியப்படி இல்லை என்று யாராவது உணர்ந்தால், அவர்கள் இலட்சியத்தை நோக்கி முன்னேற தேவனால் வடிவமைக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று முடிவு செய்வது ஒரு சோகமான முரண்பாடாகும்.
கர்த்தரின் கைகளிலும், அவர் நியமித்தவர்களிடமும் தீர்ப்பை விட்டுவிட்டு, ஒருவரையொருவர் நம்மால் முடிந்தவரை நேசிப்பதிலும் நடத்துவதிலும் திருப்தியடைவோமாக. கர்த்தரின் மாபெரும் விருந்துக்கு “… ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் [அதாவது அனைவரையும்]“ கொண்டு வருவதற்கு, நாளுக்கு நாள் நமக்கு வழி காட்டும்படி அவரிடம் கேட்போமாக.10
சொந்தமாதல் என்ற கோட்பாட்டின் இரண்டாவது அம்சம் நமது சொந்த பங்களிப்புகளுடன் தொடர்புடையது. நாம் இதைப் பற்றி அரிதாகவே சிந்திக்கிறோம் என்றாலும், நமக்குச் சொந்தமான பெரும்பாலானவை நமது சேவையிலிருந்தும், மற்றவர்களுக்காகவும் கர்த்தருக்காகவும் நாம் செய்யும் தியாகங்களிலிருந்தும் வருகிறது. நம்முடைய தனிப்பட்ட தேவைகள் அல்லது நம்முடைய சொந்த வசதியின் மீது அதிக கவனம் செலுத்துவது அந்தச் சொந்தமாதல் உணர்வை விரக்தியடையச் செய்யலாம்.
இரட்சகரின் கோட்பாட்டைப் பின்பற்ற நாம் முயற்சி செய்கிறோம்:
“உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். …
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார். 12
சொந்தமாதல் என்பது நாம் காத்திருக்கும்போது அல்ல, ஆனால் ஒருவருக்கொருவர் உதவி செய்யும்போது வருகிறது.
இன்று, துரதிர்ஷ்டவசமாக, ஒரு காரணத்திற்காக தன்னை அர்ப்பணிப்பது அல்லது யாருக்காகவாவது எதையாவது தியாகம் செய்வது என்பது கலாச்சாரத்திற்கு எதிரானதாகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் Deseret Magazine ஒரு பகுதியில், எழுத்தாளர் ராட் ட்ரெகர், புடாபெஸ்டில் ஒரு இளம் தாயுடன் நடந்த ஒரு உரையாடலை நினைவுகூர்ந்தார்:
“நான் புடாபெஸ்ட்டில் டிராமில் 30 வயதின் முற்பகுதியில் இருக்கும் ஒரு தோழியுடன் இருக்கிறேன்—அவளை கிறிஸ்டினா என்று அழைப்போம்—இப்போது, காலஞ்சென்ற கணவருடன், கம்யூனிஸ்ட் அரசின் துன்புறுத்தலைத் தாங்கிய ஒரு வயதான [கிறிஸ்தவ] பெண்ணை நேர்காணல் செய்யப் போகிறோம். நகரத்தின் தெருக்களில் நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது, கிறிஸ்டினா தனது வயதுடைய நண்பர்களிடம் ஒரு மனைவி மற்றும் சிறு குழந்தைகளின் தாயாக எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பற்றி நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினமானது என்பதைப் பற்றி பேசுகிறார்.
“ஒரு இளம் பெண் ஒரு தாயாகவும் மனைவியாகவும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு கிறிஸ்டினாவின் சிரமங்கள் முற்றிலும் சாதாரணமானவை, ஆனால் அவளது தலைமுறையினரிடையே நிலவும் அணுகுமுறை என்னவென்றால், வாழ்க்கையின் சிரமங்கள் ஒருவரின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகும் மற்றும் மறுக்கப்பட வேண்டும். அவளும் அவளது கணவனும் சில சமயங்களில் வாக்குவாதம் செய்வார்களா? பின்னர் அவள் அவனை விட்டுவிட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவளுடைய குழந்தைகள் அவளைத் தொந்தரவு செய்கிறார்களா? பின்னர் அவள் அவர்களை பகல்நேர பராமரிப்புக்கு அனுப்ப வேண்டும்.
“சோதனைகள் மற்றும் துன்பங்கள் கூட வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும், மற்றும் ஒரு நல்ல வாழ்க்கையின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம் என்பதை தனது நண்பர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கிறிஸ்டினா கவலைப்படுகிறார், அந்த துன்பம் எவ்வாறு பொறுமையாகவும், கனிவாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பித்தால். …
“… நாட்ரே டேம் பல்கலைக்கழக சமூகவியலாளர் கிறிஸ்டியன் ஸ்மித் 18 முதல் 23 வயதுடையவர்களைப் பற்றிய தனது ஆய்வில் கண்டறிந்தார், அவர்களில் பெரும்பாலோர் சமூகம் என்பது ‘வாழ்க்கையை அனுபவிக்கும் தன்னாட்சி பெற்ற நபர்களின் தொகுப்பு’ என்பதைத் தவிர வேறில்லை என்று நம்புகிறார்கள்.13
இந்த தத்துவத்தின் மூலம், ஒருவர் கடினமாகக் காணும் எதுவும் ‘ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகும்.’”14
இதற்கு நேர்மாறாக, நமது முன்னோடியாகிய முன்னோர்கள் கிறிஸ்துவின் மீதுள்ள ஆழமான உணர்வைப் பெற்றனர், அவர்கள் ஊழிய சேவை செய்வதற்கும், ஆலயங்களைக் கட்டுவதற்கும், வசதியுள்ள வீடுகளை நிர்ப்பந்தத்தின் கீழ் விட்டுவிட்டு மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் பல வழிகளில் தங்களையும் தங்கள் வசதிகளையும் சீயோனுக்காக அர்ப்பணித்தனர். தேவைப்பட்டால் உயிரைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். நாம் யாவரும் அவர்களின் சகித்தலின் பயனாளிகள். குடும்பம் மற்றும் நண்பர்களின் தொடர்பை இழக்க நேரிடும், வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும், அல்லது ஞானஸ்நானம் பெற்றதன் விளைவாக பாகுபாடு அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகக்கூடிய பலருக்கும் இன்று இதுவே உண்மை. எவ்வாறாயினும், அவர்களின் வெகுமதி, உடன்படிக்கை மக்களிடையே ஒரு வல்லமையான சொந்தமாதலின் உணர்வு. கர்த்தருடைய காரியத்தில் நாம் செய்யும் எந்த தியாகமும், பலரை மீட்கும் பொருளாகத் தம்முடைய உயிரைக் கொடுத்த அவருடன் நம்முடைய இடத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.
சொந்தமாதல் என்ற கோட்பாட்டின் இறுதி மற்றும் மிக முக்கியமான கூறு இயேசு கிறிஸ்துவின் மையப் பாத்திரமாகும். ஐக்கியத்துக்காக மட்டும் நாம் சபையில் சேர்வதில்லை, அது முக்கியமாக இருந்தாலும்கூட. இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் கிருபையின் மூலம் மீட்பிற்காக நாம் இணைகிறோம். திரையின் இருபுறங்களிலும் நமக்கும் நாம் விரும்புபவர்களுக்கும் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் நியமங்களைப் பாதுகாக்க நாம் இணைகிறோம். கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாக சீயோனை நிறுவுவதற்கான ஒரு பெரிய திட்டத்தில் பங்கேற்க நாம் இணைகிறோம்.
பரிசுத்த ஆசாரியத்துவத்தின் நியமங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கான உடன்படிக்கைகளின் பாதுகாவலராக சபை உள்ளது.15 இந்த உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் நாம் உயர்ந்த மற்றும் ஆழமான உணர்வைப் பெறுகிறோம். தலைவர் ரசல் எம். நெல்சன் அண்மையில் எழுதினார்:
“நீங்களும் நானும் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தவுடன், அவருடனான நமது உறவு நமது உடன்படிக்கைக்கு முன்பை விட மிகவும் நெருக்கமாகிறது இப்போது நாம் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளோம். தேவனுடனான நமது உடன்படிக்கையின் காரணமாக, அவர் நமக்கு உதவி செய்யும் முயற்சிகளில் சோர்வடைய மாட்டார், மேலும் அவருடைய இரக்கமுள்ள பொறுமையை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். நம் ஒவ்வொருவருக்கும் தேவனின் இருதயத்தில் ஒரு தனி இடம் உண்டு.
அந்த உடன்படிக்கைகளுக்கு இயேசு கிறிஸ்து உத்தரவாதம் அளிப்பவர்(எபிரெயர் 7:22; 8:6 பார்க்கவும்).”16
இதை நாம் நினைவில் வைத்துக் கொண்டால், கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் உயர்ந்த நம்பிக்கைகள் நமக்கு உணர்த்தும், அதைரியப்படுத்தாது.
தனித்தனியாகவும் சமூக ரீதியாகவும் நாம் பின்தொடரும்போது மகிழ்ச்சியை உணர முடியும், “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்கதாக.”17 வழியில் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், இது ஒரு பெரிய தேடலாகும். உபத்திரவங்கள் இருந்தாலும், வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களில் தாமதம் ஏற்பட்டாலும், நாம் “ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; [கிறிஸ்து] உலகத்தை ஜெயித்தார்”18 என்பதை அறிந்து, மேல்நோக்கிய பாதையில் செல்வதில் ஒருவரையொருவர் உயர்த்தி உற்சாகப்படுத்துகிறோம். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியுடன் ஒன்றாக இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இறுதியான சொந்தமாதலாகும்.19
இப்படியாக, சொந்தமாதலின் கோட்பாடு இவ்வாறு வருகிறது, நாம் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தலாம்: இயேசு கிறிஸ்து எனக்காக மரித்தார்; அவர் என்னை அவருடைய இரத்தத்திற்கு தகுதியானவன் என்று நினைத்தார். அவர் என்னை நேசிக்கிறார், என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்; நான் மனந்திரும்பும்போது, அவருடைய கிருபை என்னை மாற்றும். சுவிசேஷ உடன்படிக்கையில் நான் அவருடன் ஒன்றாக இருக்கிறேன்; நான் அவருடைய சபைக்கும் ராஜ்யத்துக்கும் சொந்தமானவன்; மேலும் தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் மீட்பைக் கொண்டுவரும் அவரது நோக்கத்தில் நான் சொந்தமானவன்.
நீங்களும் சொந்தமானவர்கள் என நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.