“கர்த்தரின் வீட்டுக்கு ஆயத்தமாகுங்கள்

உங்கள் அனுபவத்தை தனிப்பட்டதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குங்கள்

உங்கள் ஆலய வருகைக்காக ஆயத்தமாகுங்கள்.

கோவில் நியமங்கள் மற்றும் உடன்படிக்கை பாதை

“இரட்சகரும் அவருடைய கோட்பாடும் ஆலயத்தின் இருதயமாக இருப்பதால் ஆலயத்தில் நமது விசுவாசத்தையும், ஆவிக்குரிய வலிமையையும் வலுப்படுத்த ஆலயம் மையத்தில் உள்ளது. அறிவுறுத்தலின் மூலமும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் ஆலயத்தில் கற்பிக்கப்பட்ட யாவும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது. பரிசுத்த உடன்படிக்கைகள் மூலமாக அவருடைய பரிசுத்தமான ஆசாரியத்துவ உடன்படிக்கைகள் அவருடன் நம்மைக் கட்டுகிறது. பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய சுகப்படுத்தலுடனும் வல்லமையை பலப்படுத்துவதுடனும் அவர் நம்மைத் தரிப்பிக்கிறார். (President Russell M. Nelson, “The Temple and Your Spiritual Foundation,” General Conference, October 2021)

ஆலய நியமங்களைப் பெறுவதும் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உங்கள் அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு நாள் திரும்பி வந்து அவருடனும் நமது பரலோக பிதாவுடனும் வாழத் தயாராகவும் இது உதவுகிறது. நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் நிறைய செய்ய முடியும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் படிப்பதும், அந்த போதனைகளை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் சேர்க்கப்பட வேண்டும். நீங்கள் ஏற்கனவே செய்துள்ள உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது உங்கள் ஆலயத் தயார்நிலைக்கு முக்கியமாகும்.

இயேசு போதித்தார் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், ஏனெனில் ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:14). நாம் நுழையும் வாயில் ஞானஸ்நானம் மற்றும் நாம் பின்பற்றும் வழி அவருடைய சுவிசேஷம். ஞானஸ்நானம் என்பது சுவிசேஷத்தின் முதல் நியமம் மற்றும் தேவனிடம் திரும்புவதற்கான உடன்படிக்கை பாதையில் தேவையான படியாகும்.

மற்ற நியமங்களும் உங்களுக்கு வழிகாட்டும். பரிசுத்த ஆவியைப் பெறுதல், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்திற்கு (ஆண்களுக்கு) நியமனம் செய்தல், ஆலய தரிப்பித்தலைப் பெறுதல் மற்றும் ஆலயத்தில் முத்திரித்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பரிசுத்த ஆசாரியத்துவ நியமங்கள், நம்முடைய பரலோக பிதா தம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதங்களுக்கு, இந்த பூமிக்குரிய வாழ்க்கைக்குப் பிறகு அவருடனும் நம் குடும்பங்களுடனும் வாழும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன.

நீங்கள் ஆலயம் செல்லத் தயாராகும் போது நீங்கள் நிச்சயமற்றதாகவோ அல்லது மிகுந்த பாரத்தையோ உணரலாம். உங்கள் முதல் வருகைக்கு முன், ஆலய சடங்குகள் எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுவது இயல்பானது. சில விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருக்கும், ஆனால் ஆலயத்தில் நடக்கும் பெரும்பாலானவை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மையமாகக் கொண்டிருப்பதால், அவை மிகவும் பரிச்சயமானதாக உணரப்படும்.

ஆலயத்துக்குப் போகும் போது எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவோ, நினைவில் வைத்துக் கொள்ளவோ தேவையில்லை. உங்களுக்கு உதவி செய்ய ஆலய பணியாளர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இந்த தன்னார்வத் தொண்டர்கள் தயவாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள். கர்த்தருடைய வீட்டில் உங்களை வரவேற்கவும் வசதியாகவும் உணர உதவுவதற்காக அவர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுள்ளதால், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அவை குறியீட்டு மற்றும் ஆவிக்குரிய அர்த்தங்களைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக, ஞானஸ்நானம் ஒரு சுத்திகரிப்பு மற்றும் மறுபிறப்பைக் குறிக்கிறது என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். நீங்கள் வெண்ணிற ஆடை அணிந்து தண்ணீருக்குள் நுழைந்தீர்கள். ஒரு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர் தனது கையை உயர்த்தி, நியமத்தின் வார்த்தைகளைப் பேசினார். நீங்கள் பின்னர் நீரில் புதைக்கப்பட்டு (மூழ்கி) புதிய நபராக எழுந்தீர்கள். நீங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்தீர்கள், இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடராக உங்கள் வாழ்க்கையை வாழத் தயாராக இருந்தீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, உங்கள் தலையில் கைகள் வைக்கப்பட்டதால் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றீர்கள்.

நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது, தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்தீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மீது எடுத்துக்கொள்ளவும், அவரை எப்போதும் நினைவு கூரவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும், இறுதிபரியந்தம் அவருக்கு சேவை செய்யவும் தேவனோடு நீங்கள் உடன்படிக்கை செய்தீர்கள். அவருடைய சபையின் உறுப்பினராக, நீங்கள் திருவிருந்தைப் பெறும்போது உங்கள் ஞானஸ்நான உடன்படிக்கையையும் மற்ற எல்லா உடன்படிக்கைகளையும் அடையாளப்பூர்வமாகப் புதுப்பிக்கிறீர்கள்.

ஆலய நியமங்களும் இதே மாதிரியைத்தான் பின்பற்றுகின்றன. நீங்கள் வெள்ளை உடை அணிவீர்கள், தேவனின் திட்டத்தைப் பற்றி கற்பிக்கப்படுவீர்கள், மேலும் பரிசுத்தமான மற்றும் அடையாளமான சடங்குகளில் பங்கேற்பீர்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் மாதிரியையும் பின்பற்றுவதற்கு நீங்கள் உடன்படிக்கை செய்யும் போது உங்களுக்கு ஆசீர்வாதங்களும் வாக்களிக்கப்படும்.

ஆலயத்தில் உள்ள அனைத்தும் நமக்கு இரட்சகரையும் நமது பரலோக பிதாவையும் சுட்டிக்காட்டுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். எல்லாமே உயர்த்துவதற்கும் உணர்த்துவதற்கும் ஆகும்.

சுத்தமான கைகள் மற்றும் தூய்மையான இருதயம்

சங்கீதப் புத்தகத்தில் நாம் கேட்கப்படுகிறோம், “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனும்” (சங்கீதம் 24:3–4) கர்த்தருடைய பர்வதமே அவருடைய ஆலயம். பிரவேசிப்பதற்கு இரண்டு குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன—சுத்தமான கைகள் மற்றும் தூய்மையான இருதயம்.

இந்தப் பத்தியைப் பற்றிப் பேசுகையில், மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கூறினார்: “சுபாவ மனிதனைத் துறப்பதன் மூலமும், இரட்சகரின் பாவநிவர்த்தி மூலம் நம் வாழ்வில் உள்ள பாவத்தையும் தீய தாக்கங்களையும் வெல்வதன் மூலமும் கைகள் சுத்தமாக இருக்கும் என்று நான் பரிந்துரைக்கிறேன். நல்லதைச் செய்வதற்கும் சிறப்பாக ஆவதற்கும் அவருடைய பலப்படுத்தும் வல்லமையைப் பெறும்போது இருதயங்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நமது தகுதியான ஆசைகள் மற்றும் நற்செயல்கள் அனைத்தும், அவை தேவையான அளவில், சுத்தமான கைகளையும் தூய்மையான இருதயத்தையும் உருவாக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திதான் சுத்திகரிக்கிற மற்றும் மீட்கிற வல்லமையை அளிக்கிறது, அது நமக்கு பாவத்தை மேற்கொள்ள உதவியளித்து, பரிசுத்தமாக்கும் மற்றும் பெலப்படுத்தும் வல்லமையளிக்கிறது, அது நமது சொந்த பெலத்தை மட்டுமே சார்ந்து நாம் சிறப்படைவதைவிட மேலானது எல்லையற்ற பாவநிவர்த்தி நம் ஒவ்வொருவரிலுமுள்ள பாவிக்கும் பரிசுத்தவானுக்குமானதப“ (“Clean Hands and a Pure Heart,” Ensign or Liahona, Nov. 2007, 82).

நீங்கள் ஆலயத்துக்குத் தயாராகும்போது, உங்கள் ஆயருடன்டன் சந்திப்பீர்கள். நீங்கள் உங்கள் தரிப்பித்தலைப் பெறுகிறீர்களானால் அல்லது முத்திரிக்கப்படவிருந்தால், உங்கள் பிணையத் தலைவரையும் சந்திப்பீர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஆலய பரிந்துரை நேர்காணல் நடத்துவார்கள். உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் உணர்த்தப்பட்ட ஆலோசனைகளை வழங்குவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும்போது, ​​உங்களுக்கு “சுத்தமான கைகளும் தூய்மையான இருதயமும்” இருப்பதை உறுதிப்படுத்துவீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் ஆலயத்துக்குள் நுழைவதற்கும், பரிசுத்த நியமங்களில் பங்கு பெறுவதற்கும், உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கும் தகுதியானவர் மற்றும் விருப்பமுள்ளவர் என்று கூறுவீர்கள்.

பரிசுத்த உடன்படிக்கைகள் தனிப்பட்டவை மற்றும் வல்லமைவாய்ந்தவை

நீங்கள் ஆலயத்துக்கு உடன்படிக்கை பாதையில் முன்னேறும்போது, உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த உடன்படிக்கைகளின் ஆசீர்வாதங்களை நீங்கள் இன்னும் அதிகமாகப் பாராட்டத் தொடங்குவீர்கள். உடன்படிக்கைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ:

1. உடன்படிக்கைகள் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவை ஆழமாக்குகின்றன.

ஒரு உடன்படிக்கை பெரும்பாலும் தேவனுக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் இடையே ஒரு பரிசுத்த வாக்குறுதியாக வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறை துல்லியமாக இருந்தாலும், அது முழுமையடையவில்லை. ஒரு உடன்படிக்கை ஒரு ஒப்பந்தத்தை விட அதிகம். இது தேவனுடனான நமது உறவை வரையறுத்து ஆழப்படுத்தும் தனிப்பட்ட அர்ப்பணிப்பாகும். உடன்படிக்கைகள் தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பரிசுத்தமான இணைப்பு. அவை நம் ஆவிகளைப் புதுப்பிக்கின்றன, நம் இருதயங்களை மாற்றுகின்றன, மேலும் அவருடன் ஐக்கியப்பட உதவுகின்றன. உங்கள் உடன்படிக்கைகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதால், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு அதிகரிக்கும். உங்கள் நன்றி உணர்வுகள் அதிகரிக்கும். மற்றவர்களை நேசிக்கும் மற்றும் சேவை செய்யும் திறன் வளரும். ஆலயத்தில் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் பாயும்.

2. உடன்படிக்கைகள் உங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த உதவுகின்றன.

உங்கள் வாழ்க்கையில், உங்கள் நேரம், உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் ஆதாரங்கள் தேவைப்படும் தேர்வுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். பல நல்ல தேர்வுகள் மற்ற பயனுள்ளவற்றுடன் போட்டியிடும். நீங்கள் எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார், “ஒன்று நல்லதாகஇருப்பதாலேயே அதைச் செய்வதற்கு போதுமான காரணம் இல்லை. … சில காரியங்கள் நல்லதை விட சிறப்பானவை, இவைதான் நமது வாழ்க்கையில் முன்னுரிமையான அதிகாரம் பெற வேண்டும். … தனிப்பட்ட மற்றும் குடும்ப நேரத்தின் சில பயன்பாடுகள் சிறந்தவை, மற்றவை மிகச்சிறந்தவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்த்து, நம் குடும்பங்களை பலப்படுத்துவதற்காக, சில நல்ல விஷயங்களை நாம் விட்டுவிட்டு அதைவிட மிகச்சிறந்த விஷயங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.” (“Good, Better, Best,” Ensign or Liahona, Nov. 2007, 104, 107).

உடன்படிக்கைகள் மூலம், தேவன் நமக்கு சிறந்தவை என்று அவர் அறிந்த கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் வாக்குறுதிகளைப் புரிந்துகொள்ள உதவுகிறார். நாம் தேவனுடன் செய்த பரிசுத்த கடமைகளில் முதலில் கவனம் செலுத்தும்போது, முன்னுரிமைகள் பற்றிய கூடுதல் உள்ளுணர்வைப் பெறலாம் மற்றும் புத்திசாலித்தனமான தேர்வுகளை செய்யலாம்.

3. ஆலய நியமங்களும் உடன்படிக்கைகளும் உங்களையும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும்.

நீங்கள் உங்கள் தரிப்பித்கலைப் பெறும்போது அல்லது உங்கள் மனைவி அல்லது குடும்பத்துடன் முத்திரிக்கப்பட்டால், நீங்கள் நேரடியாக கர்த்தரிடமிருந்து உங்களுக்கான வாக்குறுதிகளுடன் ஆலயத்தை விட்டு வெளியேறுவீர்கள். சில பழங்கால தீர்க்கதரிசிகளுக்கோ அல்லது மக்களுக்கோ கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமல்ல, ஆனால் உங்களுக்கு செய்யப்பட்ட வாக்குறுதிகள். உங்கள் வாழ்க்கையில் அவற்றையும் அவற்றின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்காக நீங்கள் நியமங்களைப் பெற்ற பிறகு, இறந்த மற்றவர்களின் சார்பாக நியமங்களைப் பெற நீங்கள் ஆலயத்துக்குத் திரும்பலாம். உங்கள் மூதாதையர்களைத் தேடி, அவர்கள் ஆலய நியமங்களைப் பெறுவதை உறுதிசெய்யும் சிறப்புப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் சேவை அவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கும் மற்றும் உங்கள் சொந்த வாக்குறுதிகள் மற்றும் ஆசீர்வாதங்களை உங்களுக்கு நினைவூட்டும்.

நினைவில் வைத்து திரும்பவும் வர முயற்சி செய்யுங்கள்

ஆலய நியமங்களில் பங்குகொள்ள நீங்கள் தயாராகும் போது, தேவன் உங்கள் நித்திய பிதா என்பதையும் இயேசு கிறிஸ்து உங்கள் மீட்பர் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் அறிவார்கள். அவர்கள் உங்களை முழுமையாக நேசிக்கிறார்கள். நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதால், நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நீங்கள் மிக நெருக்கமாக உணர்ந்த ஒரு காலத்தை உங்களால் நினைவுகூர முடிகிறதா? அந்த உணர்வுகள் ஆலயத்தில் வளரும். வாழ்க்கையின் கவனச்சிதறல்கள், மன அழுத்தங்கள் மற்றும் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து ஆலயம் தனித்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்த இடத்தில், நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் பூமியில் ஒரு மகத்தான மற்றும் உன்னதமான நோக்கத்திற்காக இருக்கிறீர்கள் என்று நினைவூட்டப்படுகிறீர்கள். நீங்கள் அதிக அமைதியையும், ஆறுதலையும், வழிகாட்டுதலையும், நம்பிக்கையையும் காண்பீர்கள்.

ஆலய ஆசீர்வாதங்கள் உங்கள் இருதயத்தில் நுழைந்து உங்கள் ஆத்துமாவை உயர்த்துவதையும் நீங்கள் காண்பீர்கள். உங்களால் முடிந்தவரை அடிக்கடி ஆலயத்துக்குத் திரும்புங்கள். நீங்கள் செய்யும்போது, தேவன் மற்றும் இயேசு கிறிஸ்து உங்கள் மீதும் மக்கள் மீதும் வைத்திருக்கும் அன்பைப் பற்றி நீங்கள் அதிகம் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறிய பிறகும், பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு தொடர்ந்து கற்பிப்பார். நீங்கள் அனுபவித்ததை, நீங்கள் உணர்ந்ததை, தேவன் விரும்பியபடி நீங்கள் எப்படி வாழ முடியும் என்பதை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார்.

நீங்கள் ஆலயத்துக்குத் தயாராகும்போது, தேவன் உங்களை நெருங்க விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தம்மிடம் நெருங்கி வருவதற்கு அவர் தனது ஆலயத்தை ஒரு சிறப்பு இடமாக வழங்கியுள்ளார். உங்கள் நித்திய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சியும் கூட. அவர் நம்மை மீண்டும் அவரிடம் அழைத்துச் செல்ல ஆலயத்தின் ஆசீர்வாதங்களை வழங்கினார். உங்கள் பயணத்துக்குத் தயார் செய்து அவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அவருடைய உதவியைக் கேளுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். அவர் உங்களுக்கு உணர்த்துவார். மேலும் அவர் அவ்விதமாக உங்களுக்கு உதவுவார்.